கண்ணதாசன் அவர்களின் கடைசி பேட்டி …

கண்ணதாசன் அவர்கள் கடைசி கட்டத்தில், தீவிர
சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றது நண்பர்களுக்கு
நினைவிருக்கும்.

நேற்று நான் இந்த தளத்தில் கண்ணதாசன் அவர்களின்
நினைவாக எழுதிய பதிவைப் பார்த்து விட்டு,
அமெரிக்காவில் வசிக்கும் நண்பர் மணி ராஜேந்திரன்
அவர்கள் –

கண்ணதாசனின் கடைசி நேரங்களில் நிகழ்ந்த சில
உரையாடல்கள் அடங்கிய தொகுப்பை எனக்கு அனுப்பி
இருக்கிறார்.

அதனை நமது வாசக நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள
விரும்பினேன். அவை கீழே –
(நன்றி – நண்பர் மணி ராஜேந்திரன் அவர்களுக்கு …)

( நகல்களின் தரத்திற்கு மன்னிக்கவும். இதற்கு மேல் சரி செய்ய
எனக்கு தெரியவில்லை..)

k-1

k-2

k-3

k-4

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to கண்ணதாசன் அவர்களின் கடைசி பேட்டி …

 1. selvarajan சொல்கிறார்:

  தமிழ் நாட்டில் …
  //கவியரசு கண்ணதாசனின் கடைசி பேட்டி!http://cinema.dinamani.com/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A/ …… // இது ” தினமணி சினிமா ” இதழுக்கு கவியரசர் அமெரிக்க புறப்படும் முன் ” கடைசியாக ” தமிழகத்தில் அளித்த பேட்டி …. இந்த பேட்டியில் ஒரு இடத்தில் // கேள்வி: தேவருக்குப் பிறகு உங்களுக்கு அதிகம் உதவுகின்றவர்?

  கவிஞர்: நிச்சயம் எம்.ஜி.ஆர்.தான். தேவர் ஸ்தானத்தில் இன்று அவரே நின்று உதவி வருகின்றார்.

  கேள்வி: பாரதி நூற்றாண்டு விழா வருகிறது. அவர் வரலாற்றை நீங்கள் எழுதித் திரைப்படமாக வெளியிட்டால் சிறப்பாக இருக்குமே?

  கவிஞர்: முழு நீள சினிமாவாக எடுக்க முடியாது. சம்பவங்கள் போதாது.

  கேள்வி: ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்? “கப்பலோட்டிய தமிழனை’ பந்துலு எடுக்கவில்லையா?

  கவிஞர்: எடுத்தார். ஆனால் அது ஓடவில்லை. பாரதியின் வரலாற்றை ஒரு “ஆவணத் திரைப்படம்’ ஆக வேண்டுமானால் செய்யலாம். நன்றாக வரும்.// என்று கூறியிருப்பார் —
  இந்த பதிவில் பேட்டி கண்டவர் :– // மருத்துவம் பார்த்துக் கொள்வதற்காக அமெரிக்கா பயணப்படும் வேளையில் அவரைச் சந்திக்கும் தருணத்தை எக்ஸ்பிரஸ் குழுமப் பத்திரிகை 1987-ஆம் ஆண்டில் எனக்குத் தந்தது. நான் அவரைச் சந்தித்து உரையாடியதை, அல்லது பேட்டி கண்டதை அப்படியே கொடுத்திருக்கிறேன். // என்பதில் 1981 – ம் வருடம் என்பதற்கு — 1987 – ஆம் ஆண்டில் என்று தவறாக பதிவு செய்து இருக்கிறார் … இதையும் படித்துப்பாருங்கள் … !!!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   மிக்க நன்றி.

   வியக்க வைக்கும் வெளிப்படைத்தன்மை….!

   இன்றைய தினங்களில், தங்களது சொந்த
   பலவீனங்களைப் பற்றி,
   இந்த அளவிற்கு வெளிப்படையாகப்
   பேசுபவர்கள் யாராவது இருக்கிறார்களா…?

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 2. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  “எவன் எதைச் செய்தாலும் அவன் அதை அறிவான். அந்த எண்ணத்தின் தரம் கண்டு பலன் பெறுவான்” – கண்ணதாசன் மனதளவில் பிறருக்குக் கெடுதல் நினைத்ததில்லை. குழந்தை மனதுள்ளவர். அதனால்தான் அவர் வெளிப்படையாகப் பேசவும் எழுதவும் முடிகிறது. அவருடைய வெளிப்படைத் தன்மையினாலும், அவருடைய அசாத்தியத் திறமையினாலும் அவர் பாடல்கள் மூலமாக நாம் எல்லோரும் அவரை நேசிக்கிறோம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.