பிரதமர் மோடிஜியின் இன்றைய நீண்ட பேட்டி …..!!!

times now interview

இன்று மாலை-இரவு, times now தொலைக்காட்சியின் –
அர்னாப் கோஸ்வாமி,
பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடன் நிகழ்த்திய
நீண்ட பேட்டி – மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு –

ஒரு மன நிறைவைத் தருகிறது….!!!

சொன்னதெல்லாம் உண்மை என்றில்லா விட்டாலும் கூட,
இப்போது சொல்வதெல்லாம் உண்மையாக அமைந்தால்
தேவலையே என்று ஒரு நம்பிக்கையையும்,
எதிர்பார்ப்பையும் ஏற்படுத்துகிறது.

குறுக்குக் கேள்விகள் இல்லாமல்,
கேட்கப்படும் கேள்விகளுக்கு பிரதமர் மோடிஜி
நிதானமாக விவரமாக பதிலளிக்கிறார்.
(கேள்விகள் அனைத்தும் பேட்டிக்கு முன்னதாகவே
பிரதமருக்கு அளிக்கப்பட்டிருக்க வேண்டும்….
பிரதமர் பதிலளித்த விதத்திலிருந்து அது புரிந்தது….)

வெளிநாட்டுக் கொள்கைகள், செயல்பாடுகள்
பற்றிய பிரதமரின் விளக்கம் -திருப்தியாகவே இருந்தது.

ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜனைப்பற்றி
மோடிஜி தெரிவித்த கருத்துக்கள் –
ரகுராம் ராஜனுக்கு சு.சுவாமியால் இழைக்கப்பட்ட
அநீதிக்கு மருந்தாக இருக்கும்.

திரு.சு.சுவாமியின் அடங்காத திமிர்
கொஞ்ச நாளைக்காவது முடங்கி இருக்கும்…

வெளிநாடுகளிலிருந்து கருப்புப் பணத்தை
மீட்டுக் கொண்டு வருவது பற்றிய விளக்கம் –
– just சமாளித்தார்…!!!

மோடிஜி கூறிய சில விஷயங்கள் வெறும் தியரியாகவே
இருந்தன. அவை நடைமுறையிலும் செயல்படுத்தப்பட்டால்
நன்றாக இருக்கும்.

எப்போதும் election mode-லேயே இருப்பது குறித்து,
பிரதமர் கூறிய விளக்கம் ஏற்கும்படி இல்லை.
தேர்தல் கூட்டங்களில் பேசும்போது, அவர் இந்த நாட்டின்
பிரதமர் என்பதை மறந்து விடுகிறார் என்பது தான் உண்மை.

ஜி.எஸ்.டி. உட்பட, மோடிஜி பேசிய கூறிய
பல கருத்துக்கள் விவாதத்திற்குரியவை….

இன்னும், பல விஷயங்கள் குறித்து –
அவரிடம் கேள்விகள் கேட்கப்படவே இல்லை..

ஆனாலும், அவர் முன் வைக்கப்பட்ட
ஒவ்வொரு கேள்வியையும் –
கேட்கப்படும் கோணத்தைப் புரிந்துகொண்டு,
தனது நிலையை, கருத்தை அவர் தெளிவாக விளக்கியது
பாராட்டும் வகையில் இருந்தது.

பதவியேற்ற பின்னர், கடந்த இரண்டு ஆண்டுகளாக,
பல முக்கிய விஷயங்களில், பிரதமரின் கருத்து
என்னவென்பது வெளிப்படுத்தப்படாமலே இருந்த நிலையில்,
இன்றைய பேட்டி, பல விஷயங்களில்
அவரது கருத்துக்களை வெளிப்படுத்துகிறது….

Anyway – நாளை காலையில், இந்த இடுகையை
படிக்கும்போது, பேட்டி, செய்தித்தாள்களில்
இன்னும் விவரமாக வெளிவந்திருக்கும்….
பின்னால், இவற்றை குறித்து விவரமாக
விவாதிக்கக்கூடிய சூழ்நிலை உருவாகும்போது,
விவாதிக்கலாம்.

இப்போதைக்கு, தொலைக்காட்சி பேட்டி
முடிவடைந்தவுடன்
ஏற்படுகிற மனநிலை –

கொள்கைகள், நடைமுறை செயல்பாடுகள்
ஆகியவற்றை ஒரு புறம் ஒதுக்கி விட்டு பார்த்தால் –

ஒரு விஷயம் தெரிந்த, தன்னம்பிக்கையுள்ள மனிதர்
நாட்டுக்கு தலைமை வகிக்கிறார் என்கிற ஒருவித
நம்பிக்கையை தருவதாக இருக்கிறது.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

13 Responses to பிரதமர் மோடிஜியின் இன்றைய நீண்ட பேட்டி …..!!!

 1. CHANDRAA சொல்கிறார்:

  JI Modijis interviw should be an eye opener to dr swamy who had crossed
  the limit of decency in criticising raguram ji aravind ji and shakthi ji
  Dr swamy should concentrate on the development of bjp……..
  At the same time Modi and his team should also utilise the
  knowledge and experience of Dr swami
  After all a school drop out mrs irani has been given
  a very important portfolio of education
  WHY NOT DR SWAMY……

 2. vignaani சொல்கிறார்:

  //….ஒரு விஷயம் தெரிந்த, தன்னம்பிக்கையுள்ள மனிதர்
  நாட்டுக்கு தலைமை வகிக்கிறார் என்கிற ஒருவித
  நம்பிக்கையை தருவதாக இருக்கிறது.//

  ஒரு விஷயம் தெரிந்த நாட்டு நலம் பேணும் நல்லவரின் பதிவு.

 3. LVISS சொல்கிறார்:

  It is a long interview — This is the third interview the PM is giving after assuming power — I think in these interviews the questions are given to the persons in advance because they have to prepare answers –Some supplementary questions are added during the interview — Mr. Arnab has tried to cover most of the subjects without sticking onto one subject —This is the second interview Arnab managed to get from Mr Modi —
  Cant say how long Mr Swamy will be able restrain himself –Let us see –He is expected to take on the opposition parties —
  The PM always looks confident and assured of himself —
  I think he spoke about black money abroad as it stands today and how it is used to fund terrorism — No govt can get black money kept in a foreign country in a short time –It will be a long drawn out process whoever is at the helm — We have to get the other country to do what we want without hurting their self pride — Some headway has been made in the talks with Swiss govt —
  About elections he said that many parties want to end this non stop election from one state to another –There is a talk of holding simultaneous elections for the states and LS —

 4. selvarajan சொல்கிறார்:

  // ரகுராம் ராஜன் பற்றி கமெண்ட்.. சு.சுவாமியை டிவி பேட்டியில் வறுத்தெடுத்த மோடி! அர்ணாப்பிடம் ஆவேசம்
  Read more at: http://tamil.oneindia.com/news/india/modi-slams-subramaniyan-swamy-over-rbi-governor-issue-256942.html // அடுத்து // சு.சுவாமி விமர்சனத்தால் கடும் அதிருப்தி…. சீனா பயணத்தை பாதியிலேயே முடித்த அருண்ஜேட்லி
  Read more at: http://tamil.oneindia.com/news/india/arun-jaitley-cuts-short-china-visit-256967.html // இதற்கு சு.சுவாமியின் பதில் என்னவாக இருக்கும் … ? மோடிஜியே நேரிடையான பதிலடி கொடுத்துள்ளாதால் — மௌனம் தானே …?

 5. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  ‘நேற்றைய பேட்டி நன்றாகவே இருந்தது. இந்தியா, குஜராத் போல் ஒரு மானிலமல்ல. ஏகப்பட்ட மானிலங்கள், ஏகப்பட்ட அரசியல் தளங்கள். ஆனாலும், மோடிஜி அவர்கள் அவருக்கு முடிந்த அளவில் நேர்மையாக செயல்படுவதுபோல்தான் தெரிகிறது. அவருக்கு ராஜ்ஜிய சபாவில் தேவையான வாக்குகள் இருந்தால், அவரால் 5 வருடத்தில் என்ன செய்யமுடிந்தது என்று சரியான முடிவுக்கு வரமுடியும். அவர் செயல்படுத்த எண்ணியிருப்பது, சரியோ தவறோ, அவற்றைச் செயல்படுத்தும் வாய்ப்பை வழங்கவேண்டும். அவரது திட்டங்களில் நமக்குக் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனாலும், அவரைப் பிரதமராகத் தேர்ந்தெடுத்துள்ளோம். அதனை அவர் சரியாக உபயோகிக்கும்படி, அவருக்கு ராஜ்ஜியசபாவில் தேவையான வாக்குகள் இருக்க வேண்டும். அது இல்லாமல், மோடி அரசால் என்ன செய்யமுடிந்தது என்று பேசுவது சரியாக இருக்காது என்று நினைக்கிறேன்.

  காங்கிரஸ், மானிலக் கட்சிகளை சி.பி.ஐ, வழக்குகள் என்ற லகானில் வைத்திருந்து அது எண்ணிய திட்டங்களைச் செயல்படுத்தியது. ஆனால் மோடிஜி அவ்வாறு எதிர்மறையாக இதுவரை செயல்பட்டதுபோல் தெரியவில்லை.

  ஒரே நாளில் சாதனை செய்துவிடுவார் என்ற அதீத எதிர்பார்ப்புதான் அவர் ஒன்றும் செய்யாததைப்போல் தோன்றுகிறது. மற்ற நாடுகளைப் பற்றியும் அவர் நன்றாகக் குறிப்பிட்டார்.

  பாஜக இந்தியாவை அடுத்த 3 ஆண்டுகளில் இன்னும் முன்னேற்றும் என்று நம்புவோம். நம்பிக்கைதானே வாழ்க்கை.

 6. vignaani சொல்கிறார்:

  in the passing, Modi said, “…incidentally, if BJP is in Opposition in 2040,…” REPEAT: 2040! I appreciate his confidence!

 7. mdsalih1993 சொல்கிறார்:

  ” விஷயம் தெரிந்த, தன்னம்பிக்கையுள்ள மனிதர்
  நாட்டுக்கு தலைமை வகிக்கிறார் என்கிற ஒருவித
  நம்பிக்கையை தருவதாக இருக்கிறது”

  நண்பரின் நடுநிலை கேள்விக்குறி?
  தாங்கள் காவிவயபட்டுவீட்டிரோ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப mdsalih1993,

   // நண்பரின் நடுநிலை கேள்விக்குறி?
   தாங்கள் காவிவயபட்டுவீட்டிரோ?//

   உணர்ச்சி வசப்பட்டு நீங்கள் இந்த கேள்வியை கேட்கும் முன்னர்
   அறிவுபூர்வமாக இடுகையை ஆழ்ந்து படித்துப் பார்த்திருக்கலாம்….!!

   பரவாயில்லை – இன்னுமொரு தடவை படித்துப் பாருங்கள்….

   இந்த தடவை படிக்கும்போதாவது –
   கீழ்க்கண்ட கருத்துக்களும் மேற்கண்ட இடுகையில் தான்
   இருக்கின்றன என்பது தெரிய வரும் –

   ———————————-

   சொன்னதெல்லாம் உண்மை என்றில்லா விட்டாலும் கூட,
   இப்போது சொல்வதெல்லாம் உண்மையாக அமைந்தால்-

   தேவலையே…!

   வெளிநாடுகளிலிருந்து கருப்புப் பணத்தை
   மீட்டுக் கொண்டு வருவது பற்றிய விளக்கம் –

   – just சமாளித்தார்…!!!

   எப்போதும் election mode-லேயே இருப்பது குறித்து,
   பிரதமர் கூறிய விளக்கம் ஏற்கும்படி இல்லை.
   தேர்தல் கூட்டங்களில் பேசும்போது, அவர் இந்த நாட்டின்

   பிரதமர் என்பதை மறந்து விடுகிறார் என்பது தான் உண்மை.

   ஜி.எஸ்.டி. உட்பட, மோடிஜி பேசிய கூறிய
   பல கருத்துக்கள் –
   ” விவாதத்திற்குரியவை…”.

   இன்னும், பல விஷயங்கள் குறித்து –
   அவரிடம் கேள்விகள் கேட்கப்படவே இல்லை..

   கொள்கைகள், நடைமுறை செயல்பாடுகள்
   ஆகியவற்றை ஒரு புறம்
   ” ஒதுக்கி விட்டு பார்த்தால் –”

   ———————————–

   காவியா, கருப்பா, சிவப்பா, மஞ்சளா என்பதெல்லாம் –
   நீங்கள் அணிந்திருக்கும் கண்ணாடியின் வண்ணத்தை பொருத்தது….. 🙂 🙂

   இனியொரு முறை – யோசிக்காமல் இந்த குற்றச்சாட்டை
   என் மீது வைக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • mdsalih1993 சொல்கிறார்:

    என்னுடைய விமர்சனம் உங்களின் ” விஷயம் தெரிந்த, தன்னம்பிக்கையுள்ள மனிதர்
    நாட்டுக்கு தலைமை வகிக்கிறார் என்கிற ஒருவித
    நம்பிக்கையை தருவதாக இருக்கிறது”
    பற்றி மட்டும் தான் ஏனென்றால் இந்த பதில்கள் எல்லாவற்றையும் கைதேர்ந்த குழு ஒன்றுதான் தயாரிப்பு செய்து அவருக்கு புகட்டிருக்கும் இதில் ஆச்சரியபடுவதற்கு ஒன்றுமில்லை.

 8. gopalasamy சொல்கிறார்:

  காவியா, கருப்பா, சிவப்பா, மஞ்சளா, include green also.

 9. Sundar Raman (@JwmarriottRaman) சொல்கிறார்:

  I have been reading your articles , on facts subramanya swami is right – RR talked about intolerance ( not tolerance) , one eyed king , and security job is the only job secured in India. Future will tell what is the extend of NPA’s damage and as a reserve bank governor ,except to classify them and reporting them what else he did to reduce the NPA’s. None of it sanctioned or paid during Modi’s rule. ( I think the pepper spray reddy has 9,000 crore NPA..but he is very rich). So despite your anti swami stand, you will see merit in his arguments , but not now later.

  I always maintain one thing Modi did not do and should have done is ….go after economic and other offenders , atleast he should have jailed Maran and Jagan Reddy – but some will say that it is the job of court, and courts are very slow – despite Gurumurthy’s writing and all other evidences , nothing is happening ( today ED has attached Jagan’s properties – ).Bhujpal is the only person behind the bars . In that aspect Jayalalitha has lots of courage , and doesn’t hesitate to take action. Modi is held back mainly by Arun Jaitley – who sleeps with these offenders. ( like NDTV, India today TV_)

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.