“வருமான வரித்துறை அதிரடி” – பணம் யாருக்கு சொந்தமானது…?

.

.

contact-banner


இரண்டு நாட்களுக்கு முன்னர் பத்திரிகைகளில் ஒரு பரபரப்பு
செய்தி வந்தது… முதலில் வந்த செய்தி –

புதுச்சேரியிலும், தமிழ்நாட்டிலும், “தனியாருக்குச் சொந்தமான”
மருத்துவ கல்லூரிகளில் “ரெய்டு” நடந்தது. சுமார் 100 கோடி
ரூபாய்க்கும் மேலாக கட்டு கட்டாக 500 மற்றும் 1000 ரூபாய்
நோட்டுகளாக, “ரொக்கம்” கைப்பற்றப்பட்டது என்று சொல்லியது.
இந்த கல்லூரிகளின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.

அடுத்த நாள் “ஒரே நிர்வாகத்தின் கீழ், மகாத்மா காந்தி
மருத்துவ கல்லூரி, ராஜிவ்காந்தி பொறியியல் கல்லூரி,
கஸ்தூரிபாய் செவிலியர் கல்லூரி” என்று ஒரு பட்டியல்
வந்தது. ( மகாத்மா காந்தியும், கஸ்தூரிபாயும் இவர்களுக்கு
எந்த விஷயத்திற்கு தேவைப்படுகிறார்கள் பாருங்கள்….! )

பின்னர், சென்னையில் உள்ள சத்யசாயி மருத்துவ
கல்லூரியும், திருப்போரூர் ஒன்றியம், அம்மா பேட்டையில்
இயங்கி வரும், தனியார் மருத்துவ கல்லுாரியும் –
இத்துடன் சேர்க்கப்பட்டன.

இத்தனை அதிரடி ரெய்டுகள் நடத்தப்பட்டது பற்றியோ,
கைப்பற்ற ரொக்கப்பணம் பற்றியோ, வருமான வரித்துறை
இதுவரை எந்த செய்தி அறிக்கையும் வெளியிட்டதாகத்
தெரியவில்லை….!!

சரி, இந்த அளவிற்கு செய்தியை வெளியிட்ட பத்திரிகைகள்,
இந்த நிறுவனங்கள் யாருக்குச் சொந்தமானவை என்கிற
விவரத்தை ஏன் வெளியிடவில்லை….?

( ஒரு சிறிய தேடுதலுக்குப் பிறகு, இதில் சம்பந்தம்
உடையவர்களின் பெயர்களை,
( ஒரு முக்கிய தமிழக அரசியல்வாதியும் இதில் இருக்கிறார் ) –
நான் கண்டு பிடித்து விட்டேன்..! )

ஆனால், என் கேள்வி – இந்த கல்லூரிகளின்
உரிமையாளர்களின் பெயர்களை செய்தித்தாள்கள்
வெளியிடாமல் இருப்பதன் பின்னணி என்ன….? )

இதற்கு முன்னதாக கூட, பலமுறை வருமான வரி
இலாகாவின் “ரெய்டு”கள் நிகழும்போதெல்லாம்
அதிகாரபூர்வமாக செய்திகள் வெளியிடப்படுவதே இல்லை…
ஏன் இந்த ரகசியம்…?

யார் வருமான வரி ஏய்ப்பு செய்கிறார்கள் என்று
தெரிந்து கொள்ள பொதுமக்களுக்கு உரிமை இல்லையா …?

நூறு ரூபாய் பிக்பாக்கெட் அடிப்பவனின் சரித்திரமே
பத்திரிகைகளில் வெளிவரும்போது, கோடிக்கணக்கான
ரூபாய்கள் வருமான வரி ஏய்ப்பு செய்பவர்களின் பெயரை
வெளியிடுவது ஏன் தவிர்க்கப்படுகிறது /தடுக்கப்படுகிறது…?

எனது இந்த கேள்வி – “ரெய்டு” நடத்தியவர்களுக்கு
மட்டும் அல்ல – அனைத்து மீடியாக்களுக்கும்
சேர்த்து தான்…!

———————————————————————–

மேலேயுள்ள செய்திக்கு நேரடியாக தொடர்பு
இல்லையென்றாலும், அவசியம் தெரிந்திருக்க வேண்டிய
ஒரு பழைய செய்தி –

நண்பர் செல்வராஜன் பின்னூட்டத்தில் எழுதியதை
பல நண்பர்கள் தேடி எடுத்து படிப்பதை தளத்தில் பார்த்தேன்….!!!
( செல்வராஜன், சரியான சமயத்தில், சரியான back reference-ஐ
தேடிக்கொடுப்பதில் கில்லாடியாக
இருக்கிறார்…. 🙂 🙂 )

தேடியெடுக்க வேண்டிய அவசியம் இல்லாமல்,
நண்பர்களுக்கு வசதியாக, அந்த இடுகையை கீழேயே
நேரடியாக, மறுபதிவு செய்திருக்கிறேன்.

————————————————————————–

லாட்டரி -கிங் PLUS வரி கட்ட விரும்பாத பாரி வள்ளல்…!!!
Posted on ஓகஸ்ட் 26, 2013 by vimarisanam – kavirimainthan

—————-

இரண்டு நாட்களுக்கு முன்னர், பல நாளிதழ்கள்,
வார இதழ்களில் – முழுப்பக்க விளம்பரங்கள். பிறந்த தின வாழ்த்துக்களைத் தெரிவித்து.. !!
அதில் ஒரு சாம்பிள் கீழே –

Doctor 

pari venthar

வாழ்த்துபவர் -லாட்டரி கிங் என்று
அழைக்கப் படும்

சந்தியாகு மார்ட்டின் அவர்களின் துணவியார்.

மார்ட்டின் சிறைக்குச் சென்ற பிறகு, தங்களை
நிலைப்படுத்திக்கொள்ள அவரது துணைவியார்
அரசியல் பலம் பெற விரும்பினார். தமிழ்நாட்டின்
முக்கிய கட்சிகள் அவரை ஏற்றுக் கொள்ள தயங்கியபோது,
அதை வரவேற்று, இந்திய ஜனநாயக கட்சியின்
தலைவர் டாக்டர் பாரி வேந்தர் அவர்கள்
பெருமகிழ்வுடன் அவரை அந்தக் கட்சியின்
துணைப் பொதுச் செயலாளராக நியமனம்
செய்திருக்கிறார். மேற்கண்ட புகைப்பட விளம்பரம்
அதன் நன்றியறிதலாக கூட இருக்கலாம்.

வாழ்த்தப்படுபவர், தமிழ் மக்களுக்கு
இரண்டு பெயர்களில் பரிச்சயமானவர்.
டாக்டர் பாரி வேந்தர்
மற்றும் டாக்டர் டி.ஆர்.பச்சமுத்து.
முதலில் இவர்கள் தொடர்புடைய,
அண்மையில் செய்தித் தாள்களில் வெளிவந்த சில
தகவல்களை கீழே தருகிறேன்.

—————–

Central Crime Branch of Chennai police
arrested alleged lottery kingpin
Santiago Martin’s wife Leema Rose
in Coimbatore on Friday –
after the seizure of `7.2 crore from
the house of one Nagarajan, Martin’s
alleged accomplice, police said.

…..”He earns around Rs.8 crore
through illegal sale of lottery in
Tamil Nadu every day,”

(http://newindianexpress.com/states/
tamil_nadu/article1513248.ece)

—————-

The income-tax (I-T) department has
seized Rs 6.75 crore in cash

and incriminating documents —
receipt of donations,
inflating expenditure,
diverting funds of trusts and
evading income tax —
from the SRM Group of Companies.
(http://www.sify.com/finance/i-t-sleuths-
raid-srm-group-s-premises-news-default-
ngucO2bhceg.html)
In the case of SRM group of institutions,
the extent of evasion was around Rs.200
crore, a sum that would mean a tax of
Rs.60 crore.

(http://www.thehindu.com/news/national/tamil
-nadu/it-searches-in-state-yield-taxable-
income-of-over-rs-150-
crore/article4928714.ece )

———————-
சாதாரண கணித ஆசிரியராக ஒரு

பாலிடெக்னிக்கில்
தன் வாழ்க்கையைத் துவக்கிய ஒருவர், இன்று
பல்லாயிரக்கணக்கான கோடிகள் பெறுமானமுள்ள
ஒரு மிகப்பெரிய கல்வி நிறுவனத்திற்கு

சொந்தக்காரராக
ஆகி இருப்பது அவரது மறுக்க முடியாத,
வியக்கத்தக்க திறமைக்கு அசைக்க முடியாத சான்று ..!

இப்பேற்பட்ட சாதனையைப் புரிந்திருப்பவர்
எப்பேற்பட்ட திறமை பெற்றிருக்க வேண்டும் ..!

ஆனால் – இந்த சாதனை நேர்மையான வழியில்
நிகழ்த்தப்பட்டதா என்று நினைக்கும்போது …..

இந்திய ஜனநாயக கட்சியைத் துவக்கியதும்,
புதிய தலைமுறை தொலைக்காட்சியை,
வார இதழை, துவக்கியதும் அடுத்தடுத்த
சாதனைகள்.

latest சாதனை திரைப்படத் துறையில் இறங்கி,
ஒரே சமயத்தில் 4 திரைப்படங்களின் தயாரிப்பில்
முத்திரை பதிக்கக் கிளம்பியிருப்பது !

புத்திசாலியான மனிதர் – அடுத்து மத்தியில்
எந்த கட்சி ஆட்சிக்கு வர வாய்ப்பு உள்ளது

என்பதை
கணக்குப் போட்டு, பாஜக வுடன் கூட்டணி சேர
டில்லியில் தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்.
பாஜக தலைமை எந்த முடிவுக்கு வரும் என்பதை யூகிக்க
முடியவில்லை.

ஆனால் – தமிழக பாஜக இவருடன் கூட்டு சேருவதை

ஒரு பரவச நிலையில் பார்க்கிறது. பாரி வள்ளலின்
“பசை” தேர்தலுக்கு அளப்பிலா உதவியாக
இருக்கும் அல்லவா !
பல சமயங்களில் தகுதியும், திறமையும்
இல்லாதவர்களிடம் –
பதவியும், அதிகாரமும் இருப்பதைக் கண்டு
நான் ஆதங்கப்பட்டிருக்கிறேன்.
இப்போதோ – “இப்பேற்பட்ட”

திறமைசாலிகளிடம்

ஆட்சியும் அதிகாரமும் கிடைத்தால் -என்ன
விளைவுகள் நிகழுமோ என்று நினைத்து
அஞ்சுகிறேன் …!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to “வருமான வரித்துறை அதிரடி” – பணம் யாருக்கு சொந்தமானது…?

 1. இளங்கோ சொல்கிறார்:

  கே.எம்.சார்,

  நீங்கள் ஆழம் தெரியாமல் காலை விடுகிறீர்கள்.
  பெரிய மனிதர்களைப் பகைத்துக் கொண்டால்
  கங்கையில் ஜலசமாதி அடைய நேரிடும்.
  எதற்கும் ஜாக்கிரதையாக இருங்கள்.

 2. selvarajan சொல்கிறார்:

  ரெய்டில் — யாருக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள் — அவைகளை நடத்தும் ” கல்வித் தந்தைகள் ..? ” யார் என்பதை மக்களுக்கு வெளிப்படையா தெரிவிக்க அரசுத் துறைகளுக்கு ஏன் இந்த கூச்சம் … என்பது புரியாத புதிராகத்தான் இருக்கிறது … இந்த குறிப்பிட்ட ரெய்டில் உள்ள அனைத்து கல்லூரிகளின் தலைவர் திரு M. K . ராஜகோபாலன் … என்பவரை பற்றி மாணவர்களின் புகாரே ஏகப்பட்டது இருக்கிறது … // http://www.consumercomplaints.in/education/sathya-sai-medical-university-chennai-c822662 //
  மேலும் பல வழக்குகளும் சி .பி.ஐ .யால் இவர்மீது போடப்பட்டது என்பதும் அனைவரும் அறிந்ததே … என்னமோ நடக்குது — மர்மமா இருக்குது … !!! கல்வித் தந்தைகள் என்று உலா வருகின்ற பலரின் “முகமூடிகளை ” கிழித்து காட்டவேண்டிய பொறுப்பு உள்ளவர்களே — அவர்களை காப்பாற்றுவது தான் வேடிக்கை … !!!

 3. இளங்கோ சொல்கிறார்:

  யார் இந்த ராஜகோபால்..?

  தமிழக அரசியல் மற்றும் பொதுவாழ்வில் மக்களால் அறியாதப்படாதவர் இராஜகோபால்.. இவர், சென்னை அசோக்நகரில் உள்ள கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் ரோட்டில் ஆரம்ப காலத்தில் மருந்து டிஸ்டிபியூட்டராக இருந்து வந்தவர். அதில் கிடைத்த வருமானத்தில், 2008ல் பாண்டிச்சேரியில் மெடிக்கல் கல்லூரியை தொடங்கினார். அதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள சத்யசாய் மருத்துவக்கல்லூரியை ஆரம்பத்தார்.

  கடந்த தி.மு.க. ஆட்சியில் இந்தக் கல்லூரியின் பங்குகள் தி.மு.க.வின் முக்கிய புள்ளி ஒருவருக்கு கைமாறி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், நெடுஞ்சாலைத்துறையின் மூலம் அவசர அவசரமாக அந்த கல்லூரிகளுக்கு சாலைவசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. மேலும், ராஜகோபாலின் மறுபக்கம், மர்மங்கள் நிறைந்ததாகவே இருக்கும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

  http://www.vikatan.com/news/tamilnadu/65563-raid-by-income-tax-department-rajagopal-in-revenue.art?artfrm=news_most_read

 4. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  Behind a successful businessman, there would be a hidden crime. இதற்கு விதிவிலக்குகள் இருக்க முடியாது.

  இந்தியாவிலும், மேற்கத்தைய நாடுகள் போன்று, எந்தச் சொத்தும் 99 வருடங்களுக்குமேல் கிடையாது என்ற சட்டம் வந்தால்தான், நமக்கு நல்லது. நீ உழைத்து பணம் சேர். Enjoy. உன் பணத்தில் 50%, உன் குழந்தைகளுக்குப் போகும். (மீதி வரியில் செல்லும்). அவ்வளவுதான். அதற்குமேல் ஏன் பேரன், அவன் குழந்தைகள் என்று அவர்களுக்குப் பணம் சேர்க்கவேண்டும்? இதுதான் ஊழலின் ஊற்றுக்கண். இதைக் களைந்தாலே, அரசியல் மாஃபியாக்களும் (கருணானிதி உள்பட), தொழிலதிபர் மாஃபியாக்களும், டிரஸ்டுகளும் மறைந்துவிடும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.