இனி என்ன செய்வார் திரு.சுப்பிரமணியன் சுவாமி ….?

.

.

நேற்று மோடிஜி கொடுத்த சூட்டுக்கு பதிலாக
திரு.சு.சுவாமி எப்படி re-act செய்யப்போகிறார் என்பதை
அறிய அரசியல் உலகம் ஆர்வமாக இருக்கிறது…!

உடனடியாக மோடிஜியுடன் மோத விரும்ப மாட்டார்
சு.சுவாமி. சுவாமிக்கு இருக்கும் பலம், தைரியம் எல்லாம்
ஆர்.எஸ்.எஸ்., மற்றும் விஸ்வ ஹிந்து பரீஷத்தில்
உள்ள அவரது ஆதரவாளர்களே….

ஆனால், ஆர்.எஸ்.எஸ்.-ஐ பொருத்தவரையில்,
பாஜக அரசை பலவீனப்படுத்த அது விரும்பவில்லை.
எனவே, சு.சுவாமியை அடங்கி இருக்கும்படி தான்
ஆலோசனை கிடைக்கும்…

ஆனாலும், சூடு பட்டவர் சும்மா இருப்பாரா…?
அவரது இயற்கையான குணம் அவரை விட்டு போகுமா…?

அருண் ஜெட்லியை வெளியேற்ற எந்த விதத்திலும்
இனி மோடிஜி இடம் கொடுக்க மாட்டார் என்பது
இப்போது அவருக்கு உறுதியாகி விட்டது….

எனவே, எதிரிகள் லிஸ்டில் மோடிஜியும் சேர்க்கப்படுவார்…
ஆனால், தான் பலவீனமான நிலையில் இருக்கும்போது,
மோதுவதால் தனக்குத்தான் நஷ்டம் உண்டாகும்
என்பதை உணராதவரா சு.சுவாமி…?

சரியான பிடி கிடைக்கும் வரை கோபத்தை
வெளியே காட்ட மாட்டார்…. உள்ளுக்குள்ளேயே
குமுறிக்கொண்டிருப்பார்…. இப்போதைக்கு பம்முவதே
அவரது tactics….!

இனி, மறைமுகமாக
மோடிஜிக்கான கணைகள் உருவாகும்…..

இப்போதைக்கு அவரது செய்திகள் கீழே –
மோடிஜியின் பேட்டிக்கு பிறகு ஒரே
தத்துவ போதனை தான்……!!!

susut-1

su.su.tweet-3a

su.su.tweet-2a

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to இனி என்ன செய்வார் திரு.சுப்பிரமணியன் சுவாமி ….?

 1. srimalaiyappan சொல்கிறார்:

  என்ன செய்யப்போகிறார் என்று பார்த்துவிடுவோம்

 2. LVISS சொல்கிறார்:

  Probably he may have a direct talk with the PM before saying anything —

 3. chandramouly venkatasubramanian சொல்கிறார்:

  once bitten twice shy, no other go

 4. selvarajan சொல்கிறார்:

  // டாக்டர் சு.சுவாமி பொன்னாடை கொண்டு ( தற்காலிகமாக …! ) வாயடைக்கப்பட்டார்….!!!
  Posted on ஒக்ரோபர் 15, 2015 by vimarisanam – kavirimainthan // — அன்று பொன்னாடை கொண்டு வாயடைக்கப்பட்டார் … இப்போது தொலைக்காட்சி பேட்டி மூலம் வாய் — அடக்கப்பட்டு இருந்தாலும் — முன்பு அய்யா … எழுதியதைப் போல // இன்னும் கொஞ்ச நாளைக்கு குறைகூறல்கள் குறைந்திருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.//…. என்பது தான் தற்போதைய நிலைமை … !!! தற்போது ” தத்துவத்தின் ” பக்கம் சார்ந்திருப்பது — பின்னாளில் தர்க்கம் பண்ணுவதற்கோ … ? யார் … அறிவார் .. பராபரமே …. ?

 5. selvarajan சொல்கிறார்:

  // சுவாதி படுகொலை.. ஒய்.ஜி.மகேந்திரனின் பேஸ்புக் “பகிர்வால்” கிளம்பிய பரபரப்பு.. மன்னிப்பு கேட்டார்!
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/y-g-mahendra-s-fb-post-creates-flutter-257039.html // …. அய்யா … ! இந்த ஒய்.ஜி.மகேந்திரனின் பேஸ்புக் விவகாரம் … ? அடுத்தடுத்து அவர் கூறியுள்ள காரணங்கள் … ? பின் மன்னிப்பு — ஒரே வேடிக்கையா போய் விட்டதா– விஞ்ஞான வளர்ச்சி …. ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   முதலில் எஸ்.வி.சேகர்,
   அதனைத் தொடர்ந்து ஒய்.ஜி.மகேந்திரா –
   வயதிற்கேற்ற பக்குவம் சிறிதுமற்ற
   இரண்டு வடிகட்டிய
   முட்டாள் பிரபலஸ்தர்களின் உளறல்கள்.

   பொறுப்பற்ற செயல்.
   மன்னிப்பு கேட்டால் தீர்ந்ததா …?

   “தீயினாற் சுட்ட புண் உள்ளாறும் –
   ஆறாதே நாவினாற் சுட்ட வடு ”

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 6. N.S.M. Shahul Hameed சொல்கிறார்:

  இந்திய அரசியலின் வாய்ச்சொல் வீர்ரும், ஊழல் வாதிகளை மெய்யாகவே பெண்டெடுத்து ப்ளாக் செய்யும் ரோம்போவுமான டாக்டர் சுப்ரமண்ய சுவாமிக்கு பிரதமர் மோடி கொடுத்த சூடான(?) மயிலிறகடிக்குப் பின் விளைவு என்னவாக இருக்கும் என்ற பயங்கர எதிர்பார்ப்பில் இருக்கும் சிலருக்கு!:

  ‘ஒரு தட்டு தட்டிவிட்டு, பின் அரவணைத்துக்கொண்டால் அது தட்டிக்கொடுத்ததுபோல!’ என்ற தத்துவம் புரிந்துகொள்ளுங்கள்! 😀

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.