2005-ல் சுஜாதா அவர்கள் சொன்னது ….!!!

Sujatha-Rangarajan

2005-ஆம் ஆண்டில், “கற்றதும், பெற்றதும்” தலைப்பில்
பல விஷயங்களைப்பற்றி சுவையாக தொடர்ந்து
எழுதிய சுஜாதா அவர்கள் –

ஒரு கட்டுரையில், 2010-ஆம் வருடத்தில்,
இந்தியா / உலகம் எப்படி இருக்கும் என்பது பற்றி,
கிண்டலாக ஆருடம் ( ! ) கூறி இருந்தார்….

அதைப்படிக்கும்போதே – கூடவே,

சுஜாதாவின் கற்பனையும், நையாண்டியும்
எந்த அளவிற்கு இன்று – 2016-ல் உண்மையாகி இருக்கின்றன
என்பதையும் யோசித்துப் பார்ப்போமே… !

—————–

2010 என்பது அருகிலும் இல்லாத,
தூரத்திலும் இல்லாத
ஒரு ரெண்டுங்கெட்டான் எதிர்காலம்.

அதைப் பற்றி எழுதுவது
‘நிஜமாவதற்கும் பொய்த்துப் போவதற்கும்’
சம சாத்தியங்கள் உள்ளன.

புள்ளி விவரங்களை மட்டும் கவனித்து
எதிர் நீட்டினால் 2010ல் –

– செல் போன்கள் இரட்டிப்பாகும் ….
( பலமடங்கு …?)

– மக்கள் தொகை 118 கோடியாகும் ….
( 130 கோடி…)

– போக்குவரத்து அதிகரித்து நகரங்களில்
அனைவரும் மாஸ்க் அணிவோம் ….
( உண்மை – இருசக்கர வாகனங்களில் போகிறவர்கள்
அதைத்தான் இப்போது செய்கிறார்கள்…!! )

– பெண்கள் வருஷம்
மூன்று தினம் புடவை கட்டுவார்கள்…
( 🙂 🙂 … !!! )

– ஆண்கள் அதிக அளவில்
தலை முடியை இழப்பார்கள்….
(அவ்வளவு மோசமில்லை….! )

– ஒரு பெரிய மதக் கலவரம் இந்தியாவில் வரும்..
( நல்ல வேளை – அப்படியேதும் நடக்கவில்லை…)

– ராகுல் பிரதமர் ஆவார்…
(சுஜாதா இங்கே ஏமாந்து விட்டார்….
ராகுலை அவர் over estimate செய்து விட்டார்…)

– தமிழ்நாட்டில் அ.தி.மு.க அல்லது
தி.மு.க கூட்டணி ஆட்சி நடக்கும்.
( கூட்டணி இல்லை…மற்றபடி சரியே … !! )

– தயாரிப்பாளர்கள் பலரின் பிள்ளைகள்
படம் எடுப்பார்கள்…
(ஒன்றிரண்டு பேர் தான் தேறி இருக்கிறார்கள்…)

– அலுவலகத்தில் செய்வது அத்தனையும்
செல்போனில் செய்ய முடியும்.
(இன்னும் கொஞ்ச நாள்…. போக வேண்டும்…)

– கவிதைத் தொகுப்புகளில் காதல் குறையும்..
(கவிதைத் தொகுப்புகளையே காணோம்….)

– வாரப் பத்திரிகைகளில் தொடர்கதைகளும்
சிறுகதைகளும் அறவே நீக்கப்பட்டு,
முழுக்க முழுக்கப் பெண்கள் படங்களாக, ஒரிரண்டு

வாக்கியங்களுடன் வெளிவரும்….
( கிட்டத்தட்ட அந்த நிலைக்கு தான்
போய்க் கொண்டிருக்கின்றன….)

– செய்தித்தாள்கள் படிப்பதற்குக் காசும்,
இலவச பிஸ்கட் பாக்கெட்டும் கொடுப்பார்கள்.
(இங்கே என்றும் அது நடக்காது என்று நினைக்கிறேன்…)

– தமிழ் படிக்கத் தெரிந்தவர்கள்
வெளிநாட்டில் அதிகம் இருப்பார்கள்.
( விரைவில் அதுவும் நடக்கலாம்….)

– அரசியல் மேடைகளில் மட்டும்
தமிழ் உணர்வு மிச்சமிருக்கும்…
( அதுவும் தேர்தல் அறிக்கைகளில் மட்டும்….)

– மற்றொரு சுனாமி வரும்;
ஒரு கடலோர நகரம் அழியும்.
( தப்பினோம் – இயற்கைக்கு நன்றி…)

– முடிவெட்டுக்கு ஆயிரம் ரூபாய்
கொடுக்க வேண்டி வரும்….
( அந்த நிலை வர இன்னும் நீண்ட நாள் ஆகலாம்…)

– புத்தகங்கள் குறையும்.
(அவ்வளவு மோசம் இல்லை…)

– மருத்துவமனைகளில் இடம் போதாது…
( மருத்துவம், ஒரு வெற்றிகரமான வியாபாரம்
ஆகி விட்டதால், நிறைய மருத்துவமனைகள்
தோன்றிக்கொண்டே இருப்பதால் – இது நடக்கவில்லை…)

இவ்வாறு சொல்லிக் கொண்டே போகலாம்….
பிரச்சனை என்னவென்றால் –
2010ல் நான் பிழைத்திருந்து,

‘என்னய்யா.. அப்படிச் சொன்னார்,
நடக்கவில்லையே’

என்று என் வார்த்தைகளை
சர்பத்தில் கரைத்து குடிக்கக் காத்திருபார்கள்.
வயிற்றைப் புரட்டும்.

—————–

இந்த வார்த்தைகளைப் படிக்கும்போது மட்டும்,
அடடா இப்போது சுஜாதா சார் இல்லாமல்
போய் விட்டாரே – என்று நமக்குத்தான்
வயிற்றைப் புரட்டுகிறது.

சுஜாதா – சுஜாதா தான் –
அவர் போல் இன்னொருவர் மீண்டும்
என்றைக்கும் வர முடியாது…

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to 2005-ல் சுஜாதா அவர்கள் சொன்னது ….!!!

 1. selvarajan சொல்கிறார்:

  2005 — ல் ” சுஜாதா சொன்னது மட்டும் போதுமா … ! எனக்கு போதாது … ? அதனால் — அய்யா … ! சுஜாதா பற்றி உங்கள் நினைவுகளும் — நீங்கள் சொன்னதும் — அவருடைய நெருங்கிய நண்பருமான தேசிகன் அவர்கள் கூறியதும் — சுஜாதா அவர்களுக்கு ” ஒரு திருவரங்கம் கோயில் ” என்றால் — உங்களுக்கு தஞ்சை பெரிய கோயிலில் பவுர்ணமியில் ரசித்தது போன்றவற்றை மீண்டும் — மீண்டும் படித்து உணர்வுபூர்வமான ரசனையில் ஈடுபட …. // சுஜாதா – சில நினைவுகள் ….
  Posted on ஓகஸ்ட் 26, 2014 by vimarisanam – kavirimainthan // ….. இந்த இடுக்கையும் — தேவைதானே … ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   மீண்டும் உங்களுக்கு நன்றி சொல்வதைத்தவிர
   நான் வேறென்ன செய்ய முடியும்…?

   எப்படி கண்டுபிடிக்கிறீர்கள் – தொடர்புள்ள பழைய இடுகைகளை…?

   நிறைய புதிய வாசக நண்பர்கள் இந்த வலைத்தளத்திற்கு
   வந்து கொண்டே இருப்பதால், சில சமயங்களில், தொடர்புடைய
   பழைய இடுகைகளை நினைவுபடுத்திக் கொள்வது
   மிகவும் பயனுள்ளதாகவே இருக்கிறது.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 2. LVISS சொல்கிறார்:

  Sujatha was a wonderful writer-I have read some short articles written by him — There was a touch of P G Wodehouse in his writing –He must have been Wodehouse’s ardent reader — Once I remember reading the phrase written by Sujatha ” thappi odi vandha kaidhi pol irundhan” PG Wodehouse used to write “he looked like an escaped convict” —
  Most of the things he has said has come about — From the look of things we may go completely digital if not in our times —

 3. CHANDRAA சொல்கிறார்:

  JI Yes sujatha was a baffling genius
  Amomg his best creations i consider
  his thirukkural ….
  All verses of thirukkural were translated in
  his own grand style…….
  The rich meaning of thirukkurals one thousand three hundred and thirty verses were given sharply >>>>
  Book available in bharathi pathippagam chennai

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.