டாக்டர் சு.சுவாமியின் பக்தர்களுக்கு அவர் ஊட்டும் புதிய போதையும், அதன் “தரமும்” …!!!

.

.

வரிசையாக மோடிஜியின் வலதிலும், இடதிலும் இருந்த
ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், பொருளாதார
ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன் மற்றும் நிதியமைச்சர்
அருண் ஜெட்லி ஆகியோரை தனிப்பட்ட முறையில்
தாக்கி வசைமாரி பொழிந்த திருவாளர் சு.சுவாமியை,
மோடிஜி தனது தொலக்காட்சி பேட்டியில் வறுத்தெடுத்தார்…

சுயவிளம்பர மோகத்தினால், சு.சுவாமி இப்படியெல்லாம்
நடந்து கொள்வது, கட்சிக்கு கேடு விளைவிக்கும்….
தனி நபர் யாரும், ஸ்தாபனத்தை விட பெரியவராகி
விட முடியாது என்றெல்லாம் கண்டித்த மோடிஜியை
எதிர்க்க தனக்கு துணிவில்லை என்பதை செயலில்
ஒப்புக் கொண்டுள்ளார் சு.சுவாமி.

விஷயத்தை திசை திருப்பி,
மீடியாக்கள் – தனக்கும்,
“ஒப்பற்ற தலைவர்” ( !!! ) மோடிஜிக்கும் இடையே
பிளவை ஏற்படுத்தும் தீவிர முயற்சியில்
ஈடுபட்டிருக்கின்றன என்கிறார்…

தனது மூக்குடைப்பை, தோல்வியை மறைக்கவும்,
விஷயத்தை திசை திருப்பவும்,
தனது பக்தர்களை தொடர்ந்து வசை போதையில்
திளைத்திருக்கச் செய்யவும்,

திருவாளர் சு.சுவாமி அடுத்த சேனலை திறந்து விட்டார்…!
அடுத்த அட்டாக் – வரிசையாக,

திரு.ப.சி.
திருமதி பிரியங்கா வாத்ரா,
திரு.ராபர்ட் வாத்ரா
ஆகியோரை வசைபாடி நேற்று வெளியிட்டிருக்கும்
ட்விட்டர்கள் கீழே –

( குறிப்பு – இதில் bottle என்று அவர் குறிப்பிடுவது
திருமதி பிரியங்கா வாத்ராவை….!!! )

ss on pc twitter -latest

ss twitter on vadera and co

அத்தோடு நில்லாமல் –
முன்பொரு தடவை
அவர் ஒரு இந்தி செய்தி தொலைக்காட்சிக்கு
திருவாளர் ப.சி.அவர்களைப்பற்றி ஆபாச
வர்ணனைகளுடன் கொடுத்த ஒரு பேட்டியையும்
quote செய்திருக்கிறார்….

அந்த இந்தி பேட்டியை கீழே பதிவிட்டிருக்கிறேன்…
அதன் மொழிபெயர்ப்பை இங்கே தருவது,
தரக்குறைவாக இருக்கும்
என்பதால், தரவில்லை…
தாங்களாகவே புரிந்துகொள்ள முடிந்தவர்கள்
புரிந்து கொள்ளவும் –

(வீடியோவின் மீதுள்ள ஆங்கிலத்தலைப்பே,
செய்தியை புரிந்து கொள்ள போதுமானது…. )

எண்பது வயதை நெருங்கப்போகும்
இந்த தரங்கெட்ட மனிதர் தான்,

கொலைகார, கற்பழிப்பு சாமியார் ஆசாராமை
வெளியே கொண்டுவர விடாமல் போராடும் இவர் தான்,

கிரிக்கெட் சூதாட்ட சக்ரவர்த்தி, சிமெண்ட் சீனுவை
மீண்டும் பதவியில் அமர்த்த சுப்ரீம் கோர்ட்டில்
போராடும் இந்த மனிதர்தான் –

இந்து மதத்தை மீட்டெடுக்கப்போகிறார் என்று
அவரது பக்தர்கள் உறுதியாக நம்புகிறார்கள்….!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to டாக்டர் சு.சுவாமியின் பக்தர்களுக்கு அவர் ஊட்டும் புதிய போதையும், அதன் “தரமும்” …!!!

 1. இளங்கோ சொல்கிறார்:

  நீங்கள் என்ன தான் சொன்னாலும்,
  (சு) சுவாமி பக்தர்கள் மனம் மாற மாட்டார்கள்….

  அவர்களுக்கு தேவை
  சுவாமி கொடுக்கும் அந்த போதை தான்.

 2. Sundar Raman (@JwmarriottRaman) சொல்கிறார்:

  I have been reading your articles , on facts subramanya swami is right – RR talked about intolerance ( not tolerance) , one eyed king , and security job is the only job secured in India. Future will tell what is the extend of NPA’s damage and as a reserve bank governor ,except to classify them and reporting them what else he did to reduce the NPA’s. None of it sanctioned or paid during Modi’s rule. ( I think the pepper spray reddy has 9,000 crore NPA..but he is very rich). So despite your anti swami stand, you will see merit in his arguments , but not now later.

  I always maintain one thing Modi did not do and should have done is ….go after economic and other offenders , atleast he should have jailed Maran and Jagan Reddy – but some will say that it is the job of court, and courts are very slow – despite Gurumurthy’s writing and all other evidences , nothing is happening ( today ED has attached Jagan’s properties – ).Bhujpal is the only person behind the bars . In that aspect Jayalalitha has lots of courage , and doesn’t hesitate to take action. Modi is held back mainly by Arun Jaitley – who sleeps with these offenders. ( like NDTV, India today TV

 3. Sundar Raman (@JwmarriottRaman) சொல்கிறார்:

  pardon me for repeating the above comment .
  If some one is drinking , what is the harm in calling so, or we should leave it as its something a personal habit. ( after all we forgive even leaders with multiple wife).
  Regarding PC, it looks like a un-substantiated allegation …but there seems to be no doubt about his fraud of recounting – his dress appears too much white to be true. ( his financials doesn’t appear clean).

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.