பற்றிக் கொள்வோம் “துளசி”யை ….!!!

thulasi

இன்று புதிதாகப் படித்தேன் –
புற்று நோயை எதிர்க்கும் சக்தி துளசிக்கு இருப்பதாக
கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது என்கிற செய்தியை…..!

நம்மில் பலர் துளசியை பயன்படுத்துபவர்கள் தான் –
ஆனால், அந்த அளவிற்கு அல்ல… எப்போதாவது தான்…
இது குறித்து சீரியசாக யோசித்ததில்லை…!

இந்த செய்தி வெளிவந்த பிறகு,
துளசியின் மகத்துவம் பற்றி
சில முக்கிய தகவல்களை சேகரித்தேன்.

வாசக நண்பர்களுக்கும் பயன்படட்டும் என்று
கீழே தொகுத்து அளித்திருக்கிறேன்…

————————–

“துளசியில் வைட்டமின் ஏ, சி, கே சத்துகள் உள்ளன.
அதோடு மினரல்ஸ், பொட்டாசியம், மெக்னிசியம், கால்சியமும்
அடங்கியுள்ளது.

உடம்பில் ஏற்படும் புற்றுநோய் செல்களின் வீரியத்தைக்
குறைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன்
துளசிக்கு உள்ளதால் தினசரி துளசியைச்
சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய் ஆபத்து குறைகிறது.

அதுமட்டுமல்லாமல், துளசியில் உள்ள தாவர ரசாயனங்கள்
உடலில் உள்ள ஆன்டி-ஆக்சிடெண்டின்
அளவை அதிகரித்து உடல்வலுவாக இருக்க உதவுகிறது.

ஹார்மோன்களைச் சரிசமமாக வைத்திருக்க உதவுகிறது.
சுவாசம் மற்றும் நுரையீரல் தொடர்பான கோளாறுகளைச்
சரி செய்ய உதவுகிறது.

துளசியில் உள்ள காம்ஃபீன் மற்றும் யூஜநோல்
சுவாசக்குழாயில் சிறந்த செயல்பாடுகளை
ஏற்படுத்துகிறது.
யூஜினாலை நீராவி மூலம் துளசியில் இருந்து
பிரித்தெடுப்பார்கள். துளசி உஷ்ண வீரிய தாவரம்.
இது திசுக்களை உலர செய்யும் இயல்புடையது.
திசுக்களில் ஆழமாக சென்று நீர் தன்மையை
குறைக்கும். அதனால் உடலில் கபமும்,
வாதமும் சீராகும்.

துளசி வயிற்றில் உள்ள புண்களை ஆற்றும்.
ஈரலில் உள்ள ஜீரண நீர்களை தூண்டி
நஞ்சுகளை வெளியேற்றும்.
கெட்ட கொழுப்பை நீக்கும்.
ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும்.

துளசி இருபது மணிநேரம் பிராணவாயுவையும்
நான்கு மணி நேரம் ஓசோன் வாயுவையும்
வெளியேற்றுகிறது.

ஓசோன் வாயு பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகளை
அழிக்கும் தன்மை கொண்டது.

சூழலை மாசுபடுத்தும் கரியமிலவாயு மற்றும்
கந்தக வாயுக்களை கிரகித்து சுத்தமான
பிராணவாயுவை வெளியேற்றும்.

மாசு கட்டுப்பாட்டு வல்லுனர்களும் துளசி செடிகளை
வீட்டை சுற்றிலும் வளர்க்க வலியுறுத்துகின்றனர்.

துளசி செடி இருக்கும் இடங்களில்
கொசு தொந்தரவும் இருக்காது.

பத்து காசு செலவில்லாமல்
சுலபமாக வீட்டிலேயே வளர்க்கக்கூடிய
துளசியால் இவ்வளவு பயன்கள் கிடைக்கின்றன
என்று தெரிந்த பின்னரும் சும்மா இருக்கலாமா…?

Gallery | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

பற்றிக் கொள்வோம் “துளசி”யை ….!!! க்கு 6 பதில்கள்

 1. nparamasivam1951 சொல்கிறார்:

  படிக்க ஆச்சரியமாக உள்ளது. தெரிந்து இருந்தால், தோட்டத்தில் வளர்த்து இருக்கலாம், தினமும் சிறிது பறித்து சாப்பிட்டு இருக்கலாம். ஆனால் என்ன, இந்த சனி மற்றும் ஞாயிறு அன்று, இருபது செடிகளை வாங்கி பயிரடப்போகிறேன். நல்ல ஒரு செய்தி.

 2. selvarajan சொல்கிறார்:

  துளசி யின் மகிமைகள் நிறைய உண்டு
  துளசியின் வேறு பெயர்கள்
  ” பிருந்தாவனி,விஸ்வபாவனி, புஷ்பசாரை, நந்தினி, கிருஷ்ணஜீவனி, விஸ்வபூஜிதா.கிருஷ்ணதுளசி, ஸ்ரீதுளசி, ராமதுளசி துழாய், திவ்யா, பிரியா, துளவம், மாலலங்கல், விஷ்ணுபிரியா, பிருந்தா,என்பதும் …. துளசியில் பலவகைகள் இருப்பதும் அவை :
  நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி (கஞ்சாங்கோரை, திருத்துழாய்) என்பதும் …..
  நாட்டு மருத்துவத்தில் :
  துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும் என்றும் பல தகவல்கள் உள்ளன ….. அது போக
  ஆன்மீகத்தில் —- துளசி மட்டுமிருந்தால் அது சிறந்த நந்தவனம் என்றும்
  * துளசி படர்ந்த இடம் பிருந்தாவனமாகும்.
  * துளசி மாலை அணிந்தோ, துளசி மாலையை கையில் பிடித்தோ பூஜிப்பவர்களுக்கு, 1000 அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.
  * மரண காலத்தில் துளசி தீர்த்தம் அருந்துபவர்களை பெருமாள் தன்னுடன் சேர்த்து கொள்கிறார்என்றும்
  * பவுர்ணமி, அமாவாசை, சஷ்டி, தீட்டு காலங்கள், துவாதசி, மாதப்பிறப்பு, உச்சி வேளை, இரவு வேளை, எண்ணை தேய்த்து கொண்டு துளசி பறிக்க கூடாது.
  * அதிகாலைப்பொழுதும், சனிக்கிழமைகளிலும் விரல் நகம் படாமல் விஷ்ணு பெயரை உச்சரித்து கொண்டு துளசி பறிக்க வேண்டும்.
  * துளசி பறித்த 3 நாள் வரை உபயோகப்படுத்தலாம்.
  * விரதநாள், மூதாதையரின் திதி நாள், தெய்வ பிரதிஷ்டை நாள், இறைவனை வணங்கும் வேளை, தானம் செய்யும் போது ஆகிய இடங்களில் துளசி பயன்படுத்துவதால் அந்த செயல் பரிபூரண பலன் கொடுக்கும் …. என்றும் இன்னும் அதிகமான தகல்வல்களும் இருக்கின்றன

  அன்று ” துளசி மாடம் “இல்லாத வீடுகள் சொற்பமாக இருந்தன — இன்று துளசிமாடம் இருக்கின்ற வீடுகள் சொற்பமாக இருக்கின்றன — இயற்கையின் கொடைகளை உரிய முறையில் நம்முடைய மூதாதையர்களை போல பயன் படுத்தியதைப் போல நாம் பயன் படுத்துகிறோமா …. ?

 3. Nagendra Bharathi சொல்கிறார்:

  அருமை

 4. srimalaiyappan சொல்கிறார்:

  எனக்கு இப்பொழுது கண்டிப்பாக தேவைப்படுகிறது

 5. Sharron சொல்கிறார்:

  I have 2 in my back yard. One is Lavender and the other ordinary. The lavender one smells very good.

 6. ஸ்ரீனிவாசன் சொல்கிறார்:

  செம்புக்குடத்தில் தண்ணீரை 8 மணி நேரம் வைத்திருந்து குடித்தால், அந்த நீருக்கு இணையானது வேறு நீரில்லை. அதில் ஒரு கைப்பிடியளவு துளசியையும் போட்டு வைத்து குடித்தால் மேலும் சிறப்பு.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.