ஆபத்தான விஞ்ஞான வளர்ச்சி – ” Facebook ” …!!! பக்குவப்படாதோரை மீட்பது எப்படி…..?

facebook -logo

facbook-like-and-share-thumbs-up

தமிழ்நாட்டையே குலுக்கிய ஒரு மரணத்தின் முடிச்சு
ஒருவழியாக அவிழ்க்கப்பட்டுள்ளது.

எத்தனை பேருக்கு மன உளைச்சல்…
எத்தனை பேருக்கு வசவு …
எத்தனை பேருக்கு உறக்கம் போனது….
எத்தனை பேர் மீது சந்தேக வலைவிரிப்பு …
எத்தனை ஜாதிகள் / மதங்கள்
வம்புக்கு இழுக்கப்பட்டன, வசை பாடப்பட்டன …

இத்தனைக்கும் இறுதியில் காரணமானது எது….?

இளம் வயது – பெண்களோ, ஆண்களோ,
பருவ உணர்வுகளின் காரணமாகவும்,
ஹார்மோன்களின் தூண்டுதல்கள் காரணமாகவும்,
தங்களைத் தாங்களே ரசிக்கும் மனநிலையிலிருந்து
சற்று பிசகிப் போய், தங்களை மற்றவரும் பார்த்து,
ரசித்து, புகழ வேண்டும், பாராட்ட வேண்டும் என்கிற
மனோ நிலைக்கு ஆளாகின்றனர்….

ஒருத்தருக்கொருத்தர் அறிமுகம் ஆகாத நிலையிலேயே,
ஒருவரோடு இன்னொருவர் பழகாத நிலையிலேயே,
ஒருத்தரின் உண்மையான வயது, படிப்பு,
தொழில் ( ஜாதி, மதம்….? )
இன்னவென்று தெரியாத நிலையிலேயே –
அவருடன் நட்பு கொள்ள வேண்டும் என்று எந்தவித
அவசியமும் இல்லாத நிலையிலேயே –

இளம் பெண்களின் புகைப்படங்கள் வெகு சுலபமாக
அனைவரின் பார்வைக்கும் கிடைக்கின்றன…
Just like that – ஒரு ” like ” போட்டுவிட்டு,
உடனடியாக நட்பை துவங்கவும், தொடர்ந்து
சம்பாஷனைகளை மேற்கொள்ளவும் வாய்ப்புகள்
வெகு சுலபமாக ஏற்படுத்தித் தரப்படுகின்றன.

இளைஞர்களின் விபரீத உணர்வுகளுக்கு, ஆசைகளுக்கு –
தெரிந்தோ, தெரியாமலோ –
இவை தூண்டில் போடுகின்றன…

இளம் பெண்கள் சற்று தீவிரமாகவே யோசிக்க வேண்டும்…

அவர்களுக்கு Facebook அவசியம் தேவையா..?
அது இல்லாமலே, மற்ற gadget-களின் உதவியுடன்
அவர்களது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள
முடியாதா…?

சரி ஒருவேளை அப்படி அவசியம் என்று தோன்றினாலும்
கூட – முன்பின் அறிமுகமில்லாதவர்களின் பார்வைக்கு,
இவர்கள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் எடுத்துக் கொண்ட
விதம் விதமான புகைப்படங்கள் போவது அவசியமா ..?
அந்த புகைப்படங்களை அங்கே வெளியிடுவதால்,
அவர்களுக்கு ஏற்படும் சுயதிருப்தியை விட –

வேண்டாத, தவிர்க்கப்பட வேண்டிய நட்புகளும்,
உறவுகளும், ஏற்பட்டு அதனால் விளையக்கூடிய
தொந்திரவுகளே அதிகம் என்கிற நிலையில்
இது தேவையா…?

ஒருவேளை facebook account தேவை என்று
தோன்றினாலும் கூட, அதில் சொந்த பெயரையோ,
புகைப்படங்களையோ – போடவேண்டியதன் அவசியத்தை
பற்றி, அதனால் ஏற்படக்கூடிய சாதக பாதகங்களை பற்றி
கொஞ்சம் யோசிக்க வேண்டாமா…?

சேலை முள்ளில் சிக்கினாலும், முள் சேலையில்
சிக்கினாலும் – இறுதியில் பாதிப்பு சேலைக்கு தானே…?
இந்த உணர்வு இளம் பெண்களுக்கு இருக்க வேண்டாமா…?
அதுவும் இத்தகைய அசட்டு ஆசைகள் – விபரீதங்களில்
கொண்டு போய் விடுவதை அண்மைக்காலங்களில்
கண்கூடாக பார்த்த பின்னராவது …?

இதைப்பற்றியெல்லாம் யோசிக்கும் திறன் இல்லாத,
பக்குவப்படாத இளம் வயதினரிடையே facebook
அனுமதிக்கப்பட வேண்டுமா என்கிற கேள்வியையே
இத்தகைய சம்பவங்கள் விதைக்கின்றன….?

சமுதாய அக்கரையுடைய அமைப்புகள்,
இந்த பிரச்சினையிலிருந்து, இன்றைய இளைஞர்களை
வெளியே கொண்டு வருவது எப்படி என்று அவசரமாக
யோசிக்க வேண்டும்.

 

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to ஆபத்தான விஞ்ஞான வளர்ச்சி – ” Facebook ” …!!! பக்குவப்படாதோரை மீட்பது எப்படி…..?

 1. Parthiban சொல்கிறார்:

  திரு காவிரிமைந்தன்,

  பலரும் இதை ஒரு பரபரப்பான செய்தியாகவே
  பார்த்து வருகிற வேளையில், நீங்கள் இதை ஒரு
  சமூகக் கண்ணோட்டத்தோடு அணுகுவது
  பாராட்டத்தக்கது.

  நீங்கள் சொல்வது போல், இது ஒரு மிகவும் கவலைக்குரிய
  விஷயம் தான். இப்படியே இதனை விட்டு விட்டால்,
  இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து, எதிர்கால
  இளைஞர்களின் வாழ்க்கையை சின்னாபின்னமாக்கி விடும்.

  சீனாவில் பேஸ் புக் முற்றிலுமாக தடைசெய்யப்பட்டிருக்கிரது.
  வளைகுடா நாடுகளில் கூட, வாட்ஸப் போன்றவற்றில்
  சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

  இந்தியாவிலும், பேஸ்புக் பயன்பாட்டில் சில கட்டுப்பாடுகளை
  கொண்டுவர வேண்டிய அவசியமும், அவசரமும் இப்போது
  ஏற்பட்டிருக்கிறது.

  எனக்கு தோன்றும் ஒரு யோசனை :

  பேஸ்புக்கின் கவர்ச்சியும், அதே சமயத்தில் அதன்
  பிரச்சினையும் – அதில் புகைப்படங்களை பதிவு
  செய்ய முடிகிறது என்பது தான். இந்தியாவில்
  குறைந்த பட்ச கட்டுப்பாடாக பேஸ்புக்கில் புகைப்படங்களை
  பதிவுசெய்ய, வெளியிட முடியாதபடி, தொழில் நுணுக்கதடை
  ஏற்படுத்தி விட்டால், பெரும்பாலான பிரச்சினைகள்
  தவிர்க்கப்பட்டு விடும் என்று தோன்றுகிறது.

  இதை எந்த அளவிற்கு சாத்தியமாக்க முடியும் என்பது
  குறித்து, சமுதாய அமைப்புக்களும், தொழில்னுட்ப
  வல்லுனர்களும் தீவிரமாக யோசிக்க வேண்டும்.
  நன்றி.

 2. seshadri சொல்கிறார்:

  Smart phone + Internet + social free media applications are like both edge swards. if we are not handled properly face the effect without doubt. now the situation is horse already out. we cannot catch easily….distance is too much.

  until individual discipline we cannot do…..

  seshan/duabi

 3. NS RAMAN சொல்கிறார்:

  Your article is well timed. Just for a fun adding unknown FB friends is the beginning of all problems when the unknown friend become your enemy. This is one of the reasons for recent times cyber related cheating and murder cases.

  Even well educated!!!! People updating their status in every hour uploading the photos is nothing but throwing your personal diary to public notice.

  Social networking sites can be used well for sharing public info education, knowledge sharing rather than sources of the individual information.

  Basic knowledge should be given to users of FB by parents and teachers.

 4. surya சொல்கிறார்:

  நல்ல பதிவு. எந்நேரமும் முக புத்தகம் கதியாய் இருக்கும் இளம் பெண்கள், ஏராளம். என்ன பயன் இருக்கிறதோ, ஒருத்தர் போட்டோ போடுவதும், எல்லாரும் அதை விரும்புவதும், வேலை அத்த வெட்டி பயல்கள். சுயமோகம்
  டம்பம், தன்னை அதிகமாக பிரஸ்தாபித்து கொள்ளும் (பொய்கள்) நபர்கள் முக புத்தகத்தில் அதிகம்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   இன்றைக்கு வெளிவரும் வாக்குமூல விவரங்கள் மீண்டும்
   உறுதி செய்கின்றன. பிரச்சினை ஆரம்பித்த இடம் பேஸ்புக் தான்…
   அதிலிருந்த புகைப்படங்கள் தான்…

   சட்டம் வருகிறதோ இல்லையோ, சமூகம் உணர்கிறதோ இல்லையோ, பெண்கள் அனைவருக்கும்,
   முக்கியமாக இளம் பெண்களுக்கு,
   என் சார்பில் ஒரு வேண்டுகோள் –

   தயவு செய்து, உங்கள் சொந்த நலன், பாதுகாப்பு ஆகியவை கருதியாவது, பேஸ்புக் போன்ற பொது இடங்களில் உங்கள் புகைப்படங்களை பகிர்ந்து கொள்வதை தவிருங்கள்…

   பெற்றோர்களும் தங்கள் பெண்களுக்கு இதை அவசியம்
   சொல்லுங்கள்….

   இந்த செய்தியை நண்பர்கள் அனைவரும்
   தங்களால் இயன்ற அளவு தூரம் கொண்டு செல்லுமாறு
   வேண்டுகிறேன்.
   (அது பேஸ்புக் மூலமாக இருந்தாலும் கூட – சரியே…! )

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • selvarajan சொல்கிறார்:

    அய்யா … ! பேஸ்புக் , வாட்ஸ் அப் போன்றவைகளை உபயோகிக்க ” கட்டணம் நிர்ணயித்தால் ” ஓரளவு இவற்றின் மூலம் ஏற்படும் // வேண்டாத, தவிர்க்கப்பட வேண்டிய நட்புகளும்,
    உறவுகளும், ஏற்பட்டு அதனால் விளையக்கூடிய
    தொந்திரவுகள் // …. குறையுமல்லவா … ?

 5. ns raman சொல்கிறார்:

  Video for your fb post

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.