தேளிடம் இருப்பது ….!!!

thel...

ஒரு கதை படித்திருக்கிறேன்…..

நதிக்கரை ஓரம்… சந்நியாசி ஒருவர் மரத்தடியில் அமர்ந்து
தியானத்தில் ஆழ்ந்திருந்தாராம். கண் விழித்துப் பார்த்தபோது,
மரத்திலிருந்து, தேள் ஒன்று தண்ணீரில் விழுந்து
தத்தளித்துக் கொண்டிருந்ததை பார்த்தாராம்.

பாவம் என்று பரிதாபப்பட்டு, தேளை கையால் பிடித்து தூக்கி,
தண்ணீரில் இருந்து எடுத்து தரையில் விட்டாராம். உடனே,
தேள் அவரை கையில் கொட்டியதாம். வலியுடன் அருகே
அமர்ந்து கொண்டாராம் சந்நியாசி.

அதற்குள், மீண்டும் அந்த தேள் நிலை தடுமாறி, நீரில்
விழுந்திருக்கிறது. சந்நியாசி மீண்டும் எழுந்துபோய்
அந்த தேளை எடுத்து தரையில் விட்டிருக்கிறார். மீண்டும்
அந்த தேள் அவரை கொட்டி விட்டது….

இதையெல்லாம் அருகிலிருந்து கவனித்துக் கொண்டிருந்த
ஒரு மனிதர் “சாமி, தேளை தொட்டால் கொட்டுமென்று
உங்களுக்கு தெரியாதா…? திரும்ப திரும்ப அதைக்
தூக்கி, ஏன் வலியை வாங்கிக் கொள்கிறீர்கள்” என்று
கேட்டிருக்கிறார்.

அதற்கு சந்நியாசி,

” கொட்டுவது தேளின் சுபாவம்….
எத்தனை முறை தண்ணீரில் விழுந்து தவித்தாலும்,
அது தன் சுபாவத்தை கை விடுகிறதா…?

கஷ்டத்தில் இருப்பவருக்கு உதவி செய்வது,
செய்ய வேண்டியது மனிதரின் சுபாவம்…
அந்த தேளே எந்த சூழ்நிலையிலும் தன் சுபாவத்தை
கைவிடாமல் தொடரும்போது, மனிதனாகிய நான்
உதவி செய்யும் என் சுபாவத்தை கைவிடலாமா ..? ”

என்று கேட்டாராம்….

————————-

சில உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு
சில சமயங்களில், உதவி எதாவது செய்யும்போது,
அதை கவனமாக குடும்பத்தினருக்கு தெரியாமல்,
செய்ய வேண்டியிருக்கிறது… இந்த நிலை
எனக்கு மட்டுமல்ல – உங்களிலும் நிறைய பேருக்கு
ஏற்பட்டிருக்கும்…

ஏன் அப்படி ….?
தெரிந்தால் – உடனடியாக
அவர்களிடமிருந்து எழும் கேள்வி –

“நீ என்ன லூசா…நீ கஷ்டப்படும்போதெல்லாம்
அவர்கள் உனக்கு என்ன உதவி செய்தார்கள்…? ”

– என்று உடனடியாக “லூசு” பட்டம்
வாங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது.

திருமதி பாரதி பாஸ்கர் அவர்கள் ஒரு அருமையான
பேச்சாளர்… பல பட்டிமன்றங்களில் அவர் பேசுவதை
நண்பர்கள் கேட்டிருக்கலாம்…

இங்கு அவரது ஒரு நல்ல உரை – கேளுங்களேன்…

சென்ற தலைமுறையிடம் இருந்த பல நல்ல பண்புகள்

நம்மிடமிருந்து நழுவிப் போய்க்கொண்டே
இருக்கின்றன.. அடுத்த தலைமுறைக்கு சொல்லிக்
கொடுக்க வேண்டிய நாமே அந்த பண்புகளிருந்து
விலகி விட்டால் –
அடுத்த தலைமுறை எப்படி இருக்கும்….?

யோசியுங்கள்…..

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to தேளிடம் இருப்பது ….!!!

 1. Srini சொல்கிறார்:

  Respected KM Sir,

  Good Morning!. Happy to see continuous 4 posts that are non-political. We would like to see more of these types and less of politics. God Bless you sir

  Srini

  • விவேக் காயாமொழி சொல்கிறார்:

   பொதுவான பதிவுகள் ஓகே தான்.. ஆனால் அரசியல், சமூக கேடுகள் குறித்த நேர்மையான, நடுநிலை பதிவுகளை தான் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்.
   ஏனெனில் அறிவுரை, அறவுரை பல இடங்களில் கிடைக்கலாம்.
   உண்மையைச்சொல்லத்தான் இங்கு ஆட்கள் அபூர்வம்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   அன்புள்ள ஸ்ரீநி,

   நன்றி…. ஐந்தாவதும் அப்படியே…. !!!

   நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களை இங்கே பார்க்கிறேன்…
   நடுவில் மோடிஜி பேட்டியை பாராட்டி எழுதி இருந்தேனே … 🙂 🙂
   படித்தீர்களா…?
   நீங்கள் ஒன்றும் எழுதவே இல்லையே….!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • Srini சொல்கிறார்:

    Dear Sir,

    I never missed a single post from you sir… the way I respect you, your experience and your views.. I also have lot of respects for Modiji. To balance between both, I stopped commenting for some time… Last five posts are very good. ovvunrundrum oru vidham..Seeing the Old KM sir back with a bang… super sir. Your post also was equally good like modi’s interview…

    It s Gods gift to you that you are able to write in a flow on what u think. not every one can do that… please write more on social issues… politics is anyway there anytime…

    Pranams,
    Srini

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     ஸ்ரீநி,

     உங்கள் அன்புக்கு
     என் நெஞ்சார்ந்த நன்றி…

     -வாழ்த்துக்களுடன்,
     காவிரிமைந்தன்

 2. vignaani சொல்கிறார்:

  Thanks for posting the speech of M.Bharati

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.