” மண்டை மூடிகள் ” ……

.

.

” மண்டை மூடிகள் ” என்று எழுதி கூகுள் தேடுதலில்
போட்டதற்கு கிடைத்த சில சுவாரஸ்யமான
புகைப்படங்கள் கீழே –

mandai-3

mandai-2

mandai-4

நான் சொல்ல வருவது எதைப்பற்றி என்பதை
இந்த இடுகையை படிக்கும்போதே – நீங்களே உணர்ந்து
கொள்வீர்கள்… அது போதும்…!

மது அருந்துவது உடல் நலத்துக்கு கேடு….
எல்லா இடத்திலும் விளம்பரம் போடுகிறார்கள்..

திரையரங்குகளில் –
துவக்கத்திலும்,
இடைவேளையிலும்,
திரைப்படத்துக்குள் – சாராயக்கடை தோன்றும்போதெல்லாம்,
கதாபாத்திரங்கள் தண்ணி அடிக்கும் போதெல்லாம் –

தானாகவே ஸ்லைடு போடத் தவறுவதில்லை….
அதற்காகவே மிகவும் மெனக்கெட்டு,
தனி மென்பொருள் வடிவமைத்திருக்கிறார்கள்…!!!

சிகரெட் பிடிப்பது – உடல் நலத்துக்கு கேடு
கேன்சரை உண்டாக்கும்….. உயிரைப் போக்கும் ….!!!

அதே கதை தான். சகல சந்து பொந்துகளிலும் விளம்பரங்கள்.
திரும்ப திரும்ப விளம்பரங்கள்….
பயன்படுத்துபவனுக்கு குற்ற உணர்ச்சி ஏற்பட வேண்டும்
என்பது அவர்கள் எதிர்பார்ப்பு…!!!
குற்ற உணர்வு மட்டுமா ஏற்படுகிறது …?

இதில் தவறு கண்டு பிடிக்கவில்லை நான்…
ஆனால், இந்த பழக்கத்தை தவறு என்று சொல்லிக்கொண்டே,
இதற்கான விற்பனையை அனுமதிப்பது ஏன் என்று தான்
கேட்கிறேன்..

எது எதற்கோ, தாமாகவே முன்வந்து கேள்வி கேட்டு,
விசாரணையை மேற்கொள்ளும் அமைப்புகள் –
உடலுக்கு, உயிருக்கு –
தீங்கு உண்டாக்கும் இந்த பொருட்களை
விற்பனை செய்யக்கூடாது என்று தடையுத்தரவு
பிறப்பிக்க மறுப்பது ஏன்….?

இது அரசின் கொள்கை முடிவு –
நாங்கள் தலையிட முடியாது என்று சொல்லுபவர்கள் –

காரில் வரும்போது பார்க்கிறேன் –
எல்லா மண்டைகளும் திறந்தே இருக்கின்றன…
அவற்றை ஏன் மூடவில்லை …?
மூடாதவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை
என்று, காவலர்களை துரத்தி துரத்தி விரட்டுவதேன்…?

மூடாமல் பயணித்தால் – உயிருக்கு ஆபத்து …
ஆமாம்…நிறைய சொல்லி விட்டீர்கள்..
விளம்பரங்களும் பண்ணியாகி விட்டது.

ஆனால், அதற்கும் மேலாக –
பீடி சிகரெட்டு விற்பனை மீது இல்லாத அக்கரை,
சாராய விற்பனை மீது இல்லாத அக்கரை –

மண்டை மூடி இல்லாதவர்கள் மீது மட்டும் ஏன்…?
மண்டை மூடி போட்டுக் கொண்டால் – அது
மண்டையை மட்டும் தானே காக்கும்….
விபத்தில் ஏற்படும் மற்ற ஊனங்களை எது காக்கும்…?
ஓட்டுபவர்களின் ஜாக்கிரதை உணர்வு மட்டும் தானே…?

பீடி, சிகரெட் குடித்து –
கேன்சர் வந்து சாகப்போகிறவனை
நீங்கள் தடுப்பதில்லை.

சாராயம் குடித்து,
குடல் வெந்து சாகப்போகிறவனையும்
நீங்கள் தடுப்பதில்லை..

ஆனால்,
எனக்கும், பிறருக்கும்
எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாமல் –
ஜாக்கிரதையாக,
கவனமாக ஓட்டுகிறேன்
என்று சொல்லி ஓட்டிக் கொண்டு போகிற –

முகமூடி அணிவதால்,
கழுத்தின் மீது ஏகப்பட்ட கனத்தை சுமந்துகொண்டு,
அக்கம் பக்கம் சரியாகப் பார்க்க முடியாமல்,
வாகனங்களின் ஓசைகள் சரியாக காதில் விழாமல்,
வேர்க்க விருவிருக்க –
அவஸ்தைப்படுகிற
முதியவர்களையும், பெண்களையும் –

விரட்டி விரட்டி பிடிப்பது எந்த விதத்தில் நியாயம்…?

அவர்களின் உயிர் மீது அவர்களையும் மீறிய
அக்கரை உங்களுக்கு ஏன் …?

மக்கள் உயிரை, உடல்நலத்தை காப்பது
எங்கள் கடமை, எங்கள் உரிமை –
என்று சொல்லும் கனவான்களே ( your honour…? )

ஊரில் எத்தனை அரசியல்வாதிகள்
காரின் பயணிப்பதை பார்க்கிறோம்…
தேர்தல் நேரத்தில் அத்தனை தலைவர்களையும்
பார்த்தோமே…அவர்கள் எங்கே அமர்ந்திருந்தனர்…?

நான்கு சக்கர வாகனங்களில்,
முன் இருக்கைகளில் அமர்ந்து பயணம் செய்பவர்கள்
கட்டாயம் “சீட் பெல்ட்” அணிய வேண்டும் என்கிற உத்திரவை
எந்த அரசியல் தலைவராவது பின்பற்றினாரா…?

அவர்களின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது..?
ஆதாரம் வேண்டுமானால், அத்தனை தலைவர்களும்
தேர்தல் சமயத்தில் ஓட்டுநர் அருகே முன் இருக்கையில்
அமர்ந்து பயணம் செய்யும் காணொலிகள் (வீடியோக்கள்)
ஏராளம் இணையத்திலேயே இருக்கின்றன.

அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை…
என்றும் இந்த கனவான்கள் கேள்வி கேட்டிருக்கலாமே…?
ஏன் கேட்கவில்லை…?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to ” மண்டை மூடிகள் ” ……

 1. jksmraja சொல்கிறார்:

  ஏன் ஐயா அடிமடியில் கை வைக்கிறீர்கள். புகையிலை ஆயுர்வேத தன்மை கொண்ட மருந்து என்று ப ஜா க வின் ஐந்து பேர் குழு அறிக்கையை நீங்கள் இவ்வழுவு சீக்கிரம் மறந்துவிட்டிர்கள் . எல்லாம் பணம் படுத்தும் பாடு. ஒன்று தொடர்வதில் பணம் இன்னொன்றில் ஆரம்பிப்பதில் பணம்.

 2. vignaani சொல்கிறார்:

  …//உடலுக்கு, உயிருக்கு –
  தீங்கு உண்டாக்கும் இந்த பொருட்களை
  விற்பனை செய்யக்கூடாது என்று தடையுத்தரவு
  பிறப்பிக்க மறுப்பது ஏன்….?//
  சிக்கிம் மாநிலத்தில் புகை பிடிப்பது முற்றிலுமாகத் தடை செய்யப் பட்டு உள்ளது என்று அறிகிறேன். ஆறு மாதத்திற்கு முன்பு அங்கு போயிருந்த போது நான்கு நாட்களில் புகை பிடிப்பதை எங்கும் பார்க்கவில்லை. (ஒரே ஒரு REPEAT ஒரு தடவை கண்டேன்).

 3. 'நெல்லைத்தமிழன் சொல்கிறார்:

  “இந்த பழக்கத்தை தவறு என்று சொல்லிக்கொண்டே, இதற்கான விற்பனையை அனுமதிப்பது ஏன் ” – இது புரியவில்லை சார். பான் பராக், சிகரெட், மது இவற்றையெல்லாம் தடை செய்யலாம். ஆனால் ஜன’நாயக நாட்டில் இவை தடை செய்யப்படமுடியாதவை என்று நினைக்கிறேன். இல்லாட்டா, சாராய ஆலைக்கு அனுமதி கொடுக்கும்போதே அரசுக்கு சாராய சப்ளையை நிறுத்தவேண்டும் என்ற எண்ணம் இருக்காதா?

  “முகமூடி அணிவதால் கழுத்தின்மீது” – இது சரியான கருத்தாகத் தெரியவில்லை. ஹெல்மெட் அணிவது சட்டம். கழுத்தைத் திருப்ப முடியவில்லை, முடி கொட்டுகிறது என்றெல்லாம் சொல்வதைவிட, வண்டி ஓட்டாமல் இருந்தால் என்ன? என்னைப் பொறுத்தவரை, காரில் சீட் பெல்ட் அணியாமலும், பைக் ஓட்டும்போது ஹெல்மெட் போடாதவர்களும், அவர்கள் யாராக இருந்தாலும், சட்டத்தை மதியாதவர்கள். அவர்கள் மற்றவர்களைக் குறைகூற எந்த அருகதையும் கிடையாது. இந்தியாவில்மட்டும்தான் சட்டத்தை மதியாமை சாத்தியம். ஒபாமாவே ஆனாலும், அவரும் வரிசையில் நின்று மெக்டொனால்ட்ஸில் உணவு வாங்குவது அமெரிக்காவின் பெருமை.

  நம்ம தேசத்தில் மட்டும்தான் கடமையைச் செய்யும் காவலர்கள் மதிக்கப்படுவதில்லை. கடமையைச் செய்யத் தவறுபவர்கள் கண்டிக்கப்படுவதில்லை (மக்களால், அது அரசியல்வாதிகளாகட்டும், அதிகாரிகளாகட்டும்). மக்கள் இப்படி இருக்கும்போது, எத்தனை காலம்தான் நேர்மையாக ஒருவர் இருந்து கஷ்டப்படுவார்? அதனால்தான் கயவர்கள் அதிகாரத்தில் பெருகுகின்றனர். மக்கள் எவ்வழி… அரசு அவ்வழி.

  • Ns raman சொல்கிறார்:

   Excellent reply. Instead of punishing mistakes and unlawful activities just comparing with bigger mistake and justifying our mistakes is not a correct approach.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.