சென்னை அருகே 30,000 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் வசித்ததற்கான ஆதாரங்கள்…..

.

.

நம்ம ஊர் தொலைகாட்சிகளுக்கு ஆர்வம், அவசரம், போட்டி –
அனைத்துமே – கொலை, தற்கொலை, கொள்ளை,
கற்பழிப்பு, தகாத உறவுகள் – இவற்றை யார் முதலில்
மக்களுக்கு காட்டுவது என்பதில் மட்டும் தான்….

மிக அற்புதமான வரலாற்றுச் செய்திகள் அண்மையில்
தலைநகர் சென்னைக்கு அருகிலேயே
கிடைத்திருக்கும்போது, அதை எந்த தமிழ் தொலைக்காட்சியும்
இதுவரை கண்டுகொள்ளவில்லை என்பது மிகக் கேவலமான
விஷயம்.

—————————————

சென்னையை அடுத்த திருவள்ளூரை ஒட்டியுள்ள
பட்டரைபெரும்புதுாரில் உள்ள, கோவில்களில் பல்லவர்,
சோழர் மற்றும் விஜயநகர பேரரசு காலத்தைச் சேர்ந்த
கல்வெட்டுகள் இருக்கின்றன.

இதையடுத்து, அப்பகுதியில் அகழாய்வு செய்தால், பண்டைய
தமிழர்களின் வரலாற்றை மீட்டெடுக்க வாய்ப்பு இருக்கிறது
என தொல்லியல் துறை, தமிழக அரசுக்கு கடிதம்
அனுப்பியது.

கடந்த, 2015 – 16ம் ஆண்டு நடந்த, மானியக் கோரிக்கையில்,
பட்டரை பெரும்புதுாரில் அகழாய்வு மேற்கொள்ள, தமிழக அரசு
10 லட்சம் ரூபாயை, ஒதுக்கீடு செய்தது.

இதனைக் கொண்டு மூன்று மாதங்களுக்கான ஒரு
அகழ்வாராய்ச்சி திட்டம் துவங்கியது. பட்டரைபுதூரில்
நத்த மேடு, ஆனைமேடு மற்றும் இருளந்தோப்பு ஆகிய
பகுதிகளில் 12 ஆய்வுக் குழிகளை தோண்டி,
தமிழக தொல்லியல் துறையினர்
கடந்த ஏப்ரல் 22 முதல் ஜூலை 1 வரை ஆய்வுகளை
மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில், 500-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள்
கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த 3 மாத ஆராய்ச்சியின் முடிவில் –
கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கற்கருவிகள்,
இரும்புக் காலத்தைச் சார்ந்த கருப்பு சிவப்பு மட்கலன்கள்,
மெருகூட்டப்பட்ட கருப்பு மட்கலன்கள், காவி வண்ணம்
பூசப்பட்ட மட்கலன்கள், வழவழப்பான சிவப்பு மட்கலன்கள் ஆகியவை கிடைத்துள்ளன.

மேலும், இரும்புப் பொருட்கள், கல்மணிகள், செம்புப்
பொருட்கள், கண்ணாடி வளையல் துண்டுகள், யானை
தந்தத்தினால் ஆன கழுத்து ஆபரணம், சுடுமண்ணால் ஆன
மணிகள், பல்வேறு குறியீடுகள் கொண்ட பானை ஓடுகள்
உள்ளிட்டவையும் இந்த அகழாய்வில் கிடைத்துள்ளன.

வித்தியாசமான ஒரு விஷயம் –

சென்னைக்கு மிக அருகே – இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும்
முன்னதாக ரோமானியர்கள் வந்து தங்கியிருந்து வர்த்தக
நடவடிக்கைகளை மேற்கொண்டதற்கான அடையாளங்கள் முதல்
முறையாக கண்டறியப்பட்டுள்ளன.

ரோமானியர்கள் வருகையைப் பறைசாற்றும் ரவுலட்டட்
மட்பாண்டங்கள், ரோமானியர்கள் வாசனை
புகைக்காக பயன்படுத்தும் சந்தனம் உள்ளிட்ட வாசனை
கட்டைகளை எரிக்கும் கூம்பு வடிவ ஜாடிகள்,
துளையிடப்பட்ட கூரை ஓடுகள் ஆகிய முக்கிய
தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மிக அதிக
எண்ணிக்கையிலான “உறை”களை கொண்ட உறை கிணறு
ஒன்றும் இந்த அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

pattaraipadur excavations

வரலாற்றுத் தொடக்க காலத்தை பதிவுசெய்யும் தமிழ் பிராமி
எழுத்துக் கொண்ட பானை ஓடுகள் இங்கு கிடைத்துள்ளன.

இந்த அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்கள் யாவும்,
30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை குறிக்கும்

பழங்கற்காலத்தின் கடைக் காலம் மற்றும் இடைக் கற்காலம்,
புதிய கற்காலம், இரும்புக் காலம், வரலாற்றுத் தொடக்க காலம்
ஆகிய காலங்களைச் சேர்ந்தவை என்று தெரிகிறது.

இந்த அகழாய்வில் கிடைத்த சான்றுகள் யாவும், பட்டரைபெரும்
புத்தூரில் 30 ஆயிரம் ஆண்டு களுக்கு முன்பிருந்து தொடர்ச்சியாக
மனிதர்கள் வாழ்ந்து வந்துள்ளனர் என்பதை சொல்கின்றன –
என்று தொல்லியல் துறை மண்டல துணை இயக்குநர்
ஆர்.சிவானந்தம் அவர்கள் கூறுகிறார்.

தமிழக தொல்லியல் துறையினர், பட்டரைபெரும்புதூரில்
மேற்கொண்ட அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்களில்
200 பொருட்களை அண்மையில் பட்டரை பெரும்புதூர்
அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் காட்சிப் படுத்தி
அதனை பள்ளி மாணவ – மாணவிகள் மற்றும் பொதுமக்கள்
பார்வையிட வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்திருந்தனர்.

pattaraipadur excavations.2

நமது தொலைக்காட்சிகள் இதையெதுவும்
கண்டு கொள்ளாமல் தமது வழக்கம் போல்,
கொலை, கற்பழிப்பு காட்சிகளை விரிவாக விஸ்தரித்து
காட்டுவதில் ஈடுபட்டிருக்கின்றன…..

யார், எதை, முதலில் காட்டினார்கள் என்று சொல்லி
பெருமைப் பட்டுக் கொண்டிருக்கின்றன….!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to சென்னை அருகே 30,000 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் வசித்ததற்கான ஆதாரங்கள்…..

 1. Karthik சொல்கிறார்:

  ayya
  ungalukku visayam therintha sollavum. Why Tamil thai valtu is reduced to short version? is id due to language comparision in second half? But thats fact.
  Link:
  https://cherishthememories.wordpress.com/2016/06/27/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   கார்த்திக்,

   நீங்கள் தப்பான ஆளைக் கேட்டு விட்டீர்கள்….!

   தமிழ்த் தாய் வாழ்த்தாக, இதனைத் தேர்ந்தெடுத்ததே
   தவறு என்பது என் அபிப்பிராயம்.
   அப்புறம் அதை சிதைத்ததைப்பற்றி
   நான் என்ன சொல்ல …?

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • Karthik சொல்கிறார்:

    ஐயா
    இருந்தாலும் உங்களது பொன்னான கருத்து எனக்கு முக்கியமானது. இதை பற்றி ஒரு இடுகை நீங்கள் செய்தால் காலத்தால் அழியாமல் இருக்கும். வருங்காலத்தில் உதவியாக இருக்கும்.
    மிக்க நன்றி

 2. srimalaiyappan சொல்கிறார்:

  இன்று தொலைக்காட்சி செய்திகளில் பார்த்தேன் அருமை அருமை …

 3. rathnavelnatarajan சொல்கிறார்:

  சென்னை அருகே 30,000 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் வசித்ததற்கான ஆதாரங்கள்…..=
  அற்புதமான தகவல். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் வி ம ரி ச ன ம் –
  காவிரிமைந்தன்

  2016-07-05 12:40 GMT+05:30 “வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்” :

  > vimarisanam – kavirimainthan posted: “. . நம்ம ஊர் தொலைகாட்சிகளுக்கு
  > ஆர்வம், அவசரம், போட்டி – அனைத்துமே – கொலை, தற்கொலை, கொள்ளை, கற்பழிப்பு,
  > தகாத உறவுகள் – இவற்றை யார் முதலில் மக்களுக்கு காட்டுவது என்பதில் மட்டும்
  > தான்…. மிக அற்புதமான வரலாற்றுச் செய்திகள் அண்மையி”
  >

 4. Siva சொல்கிறார்:

  If medium of communication tools in Tamil Nadu are capable of doing good job, Our people might be living a good standard life! Because of these media, whole society is becoming foolish and slaves!

 5. selvarajan சொல்கிறார்:

  அய்யா … ! நல்ல பதிவு — இன்னும் நிறைய இடங்களை அகழ்வாராய்ச்சி மூலம் கண்டுபிடிக்கலாம் — அதற்கான தொகையை ஒதுக்கினால் … ? ராஜ ராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரியக் கோயில் இன்றும் இருக்கிறது — ஆனால் அவன் வாழ்ந்த அரண்மனை எங்கே இருந்தது என்று சரியான சுவடுகளோ தகவல்களோ இல்லை என்பது வருத்தம் தரக்கூடியது தானே … ? சோழனின் அரண்மனை சீனிவாசபுரத்திலும், வல்லத்திலும் இருந்திருக்கலாம் என்றும், அதற்கான சுவடுகள் ஆராய்ச்சியில் தென்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்…. அதை வெளிக்கொணர போவது யார் — எப்போது … ? தமிழர்களின் இதுபோன்ற பழம் பெருமைகளை நினைத்துப்பார்க்க கூட நேரம் இல்லாத மக்களும் — ஊடகங்களும் வேதனையானது தான் … ஆனாலும் நீங்கள் அவ்வப்போது இது போன்றவற்றை பதிவு செய்வது மனதுக்கு இதமளிக்கிறது — ” அன்றைய தமிழன் ” எல்லாவற்றிலும் சிறந்து விளங்கினான் — பல நாடுகளுக்கு சென்று நமது பெருமையை அங்கோர் வாட் கோயில் மூலமாக நிரந்தரமாக்கியது மட்டுமின்றி — நம்நாட்டின் கலை — தற்காப்பு கலை — மருத்துவ முறைகள் என்று பலவற்றையும் வெளிநாட்டினருக்கு கற்றுக் கொடுத்து நமது பெருமையை நிலைநாட்டியுள்ளனர் — அதற்கு நீங்கள் முன்னர் பதிவிட்ட ஒரு இடுக்கையே சான்று — // 7ஆம் அறிவு போதி தருமனும் – இயக்குநர் A.R.முருகதாஸும் ….
  Posted on ஒக்ரோபர் 21, 2011 by vimarisanam – kavirimainthan // ஆனால் இன்று இவைகளை செயதியாக்க கூட கையாலாகாமல் — அரசியலையும் — ஊழலையும் — கொலைகளையும் — கற்பழிப்பு செய்திகளையும் ” முதன்மை படுத்துபவனும் ” — முக்கியத்துவம் கொடுத்து திரிபவனும் கூட — தமிழன் தானே … ?

  • nparamasivam1951 சொல்கிறார்:

   திரு செல்வராஜன் அவர்கள் கூறுவது மிக மிக பொருத்தம். எது எதற்கோ நிதி ஒதுக்குபவர்கள் தமிழ் நாட்டின் வரலாறு அறிய நிதி ஒதுக்கினால் எவ்வளவு நன்றாக இருக்கும். போனது போகட்டும், இப்போதாவது செய்யலாமே.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   என்ன காரணமோ தெரியவில்லை…
   பண்பாடு, கலாச்சாரம் குறித்து அதிகம்
   கவலைப்படும் பாஜக அரசும் இதில் அக்கரை
   காட்டவில்லை….

   மாநில அரசும் – எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும்,
   இந்த விஷயத்தில் முனைவு காட்டுவதாக இல்லை.

   காவிரிபூம்பட்டினம் சென்று பார்த்தால், ரத்தக்கண்ணீர்
   வருகிறது…. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே
   சிலப்பதிகாரத்தில் கோலாகலமாக இடம் பெற்ற
   ஒரு கடற்கரை நகரம் – இப்படியா நாற்றமெடுத்து சிதறிக்கிடக்கும்…?
   அதே நிலை தான் நாகப்பட்டினத்திலும்….

   முசிறியில், தொண்டியில், உறையூரில், மதுரையில்
   வைகை நதிக்கரையில், அமராவதி ஆற்றங்கரை ஓரத்தில் –
   எத்தனையோ பழந்தமிழர் வாழ்ந்த வரலாறுகள்
   கண்டுகொள்ளப்படாமல் புதைபட்டுக் கிடக்கின்றன…

   மாமல்லபுரம் அருகே, கடலுக்குள் ஐந்து கிலோமீட்டர்
   தூரத்துக்குள்ளாகவே பல கட்டிட சிதைவுகள்
   இருப்பதாகத் தெரிகிறது….

   ஒரு வேளை அரசியல் கட்சிகள் இதில் அக்கரை
   காட்டாமல் போனாலும் கூட, நமது தமிழ்
   அறிஞர் பெருமக்கள் கூட இதில் அக்கரை
   காட்டாமல் இருப்பது ஏன் என்று தான் புரியவில்லை…

   கல் தோன்றி, மண் தோன்றா காலத்தே
   முன் தோன்றிய மூத்த குடி – என்றெல்லாம்
   பட்டிமன்றங்களில், மேடைப்பேச்சுகளில்
   எதுகை, மோனையுடன் பேசுவதோடு சரி….

   ஒவ்வொரு பல்கலைக்கழகமும் ஒவ்வொரு
   இடத்தை தத்து எடுத்துக் கொள்ளலாம்…
   பணம் போதவில்லை என்றால் – வெளியிலிருந்து
   நிதி திரட்டலாம். பெரும் தொழில் அதிபர்களும்,
   நட்சத்திரங்களும், கலைஞர்களும் –
   ஏன், ஒவ்வொரு தொலைக்காட்சி நிறுவனமும்
   ஒரு இடத்தை தத்து எடுத்துக் கொண்டு அதற்கான
   செலவை sponsorship மூலம் திரட்டலாம்.

   மனமிருந்தால் வழி நிச்சயம் உண்டு…

   இனியாவது முன்வர வேண்டும்…
   துவக்கி வைக்க யாராவது முன்வருவார்கள்
   என்று நம்புவோம்….

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • செ. இரமேஷ் சொல்கிறார்:

    ஐயா கா.மை-க்கு வணக்கம். இந்த விடயத்தில் மத்திய அரசின் சூழ்ச்சி இருப்பதாக நான் முன்னர் கேள்விப்பட்டுள்ளேன். மகாபலிபுரத்தில் ஆராய்ச்சி செய்ய தடை உள்ளது எனவும் அறிந்துள்ளேன். தமிழ் ஆர்வலர்கள் மட்டும் இதற்கு களத்தில் இறங்க முடியும் என்று எனக்கு தோன்றவில்லை. அரசின் ஒத்துழைப்பும் இதற்கு மிக முக்கியம். இந்த காணொளியை நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அவ்வாறு இல்லையெனில் ஒரு முறை பார்க்கவும்.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     மிக்க நன்றி ரமேஷ்.

     நல்ல காலத்துக்காக காத்திருப்போம்…!

     -வாழ்த்துக்களுடன்,
     காவிரிமைந்தன்

     2016-07-07 9:53 GMT+05:30 வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் :

     >

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.