இந்த முண்டங்களுக்கு – ஒரு சின்ன பனிஷ்மெண்ட் போதும்….

gautam dog 1

அந்த வீடியோவை இங்கே போட்டு
பார்ப்பவர்களையும் வருத்தி, நானும் மீண்டும்
வருந்த விருப்பமில்லை. எனவே போடவில்லை…

மண்டை இருந்தும் அதில்
மூளை இல்லையென்றால்…? முண்டங்கள் தானே…?
ஆள் மட்டும் வளர்ந்திருந்து,
அறிவு வளரவில்லை என்றால்..?

கௌதம் சுதர்சன்,
ஆசிஷ் பால் –

– ஒருத்தன் தூக்கிப்போட,
இன்னொருவன் வீடியோ எடுத்திருக்கிறான்.

நாலாவது மாடியிலிருந்து அந்த அப்பாவி பிராணியை
தூக்கிப் போட்ட இந்த இரண்டு முண்டங்களுக்கும்
ஒரு சின்ன பனிஷ்மெண்ட் போதுமானது…

அதே நாலாவது மாடியிலிருந்து,
அதே கைப்பிடி சுவரிலிருந்து,
அதே மாதிரி இந்த இரண்டு முண்டங்களையும்
தூக்கிப் போட வேண்டும்…

நிச்சயமாக சாக மாட்டார்கள்….
என்ன – எட்டு பத்து எலும்புகள் உடையும்…
எழுந்து நடக்க ஆறேழு மாதங்கள் ஆகும்…
அந்த சின்ன பனிஷ்மெண்ட் போதும்…
இந்த வக்கிரங்களுக்கு….. !

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to இந்த முண்டங்களுக்கு – ஒரு சின்ன பனிஷ்மெண்ட் போதும்….

 1. LVISS சொல்கிறார்:

  These two should get the maximum punishment —
  Some time back there was a video of a man throwing dog against the wall —
  Any ill treatment to animals which can never retaliate should be punished severely –

 2. CHANDRAA சொல்கிறார்:

  There exists a section of people who enter into proffessional colleges at their parents authority
  here also one offenders parents are doctors
  Strict punishment together with an immediate dismissal of these scoundrels
  should be done
  by the appropriate authorities

 3. selvarajan சொல்கிறார்:

  நாயை தூக்கி வீசிய இருவரையும் அவர்களது பெற்றோரே கொண்டு வந்து போலீசில் ஒப்படைத்து விட்டனர். இருவரையும் கைது செய்த போலீஸார் ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஆனால் இருவருக்கும் உடனடியாக ஜாமீனும் தரப்பட்டு விட்டது…. ! நம்முடைய சட்டத்துறை படு வேகம் — ஒரு சில விஷயங்களில் மட்டும் … ? அய்யா … ! இந்த ராம்குமார் விவகாரத்தில் ஒருசில அரசியல் தலைவர்களும் – ஊடகங்களும் — திசை திருப்ப நினைப்பதும் — வக்காலத்தில் கையெழுத்து வாங்காமலேயே ” ஜாமீனுக்கு ” அடிகோலிய ஒரு புண்ணாக்கும் — அதையும் ஏற்றுக் கொண்டு வழக்கை மறு தேதிக்கு ஒத்தி வைத்து உள்ளவர்களும் இருக்கின்ற போது — சிரம பட்டு விசாரணையை துரித கதியில் செய்த காவல் துறையினரை குறை கூற நினைப்பதும் — என்னதான் நடக்கிறது என்று புரியாமல் குழம்பி போய் உள்ள பொது ஜனமும் — என்னத்தை சொல்றது … ?
  அடுத்து ” மாதொருபாகன் ” புகழ் திரு பெருமாள்முருகன் அவர்கள் மீதான வழக்கின் தீர்ப்பு பற்றிய செய்தியில் // http://www.vikatan.com/news/coverstory/65895-resurrection-madhorubagan-ban-and-judgement.art?utm_source=newsletter&utm_medium=content&utm_campaign=3966 // நீதிபதிகள் கூறியுள்ளது — பற்றி … ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   மாதொருபாகன் குறித்து –

   இது அதே செய்தியின் கீழே சுந்தர் என்பவர்
   எழுதியிருக்கும் கருத்து :-

   ————————-
   Sundar
   satanic verses , Da Vinci Code பற்றி எழுதும்போது
   இந்த freedom of expression பற்றி தெரிவிக்கப்பட்ட
   கருத்துக்கள் வேறு மாதிரி இருந்தனவே. அது ஏன்?

   கதை எழுதுவது வேறு. நிகழ்வுகளை பதிவது வேறு.
   கதை என்றால் தெளிவாக தெரிவித்து விட வேண்டும்.
   நிகழ்வுகள் என்றால் அதற்கான ஆதாரங்களை
   மேற்கோளிட்டுக்காட்ட வேண்டும்.
   இவற்றை செய்ய முடியவில்லை என்றால்
   எதிர்ப்புகள் வருவது நியாயம். எழுத்துலகில் உள்ள
   நடைமுறைகள் பற்றி விகடனுக்கு தெரியாமல்
   எப்படி போனது. விகடனின் புதிய
   தலைமுறைக்கு இவற்றை தெரிவிக்க விகடன்
   தவறி விட்டதா?

   freedom of expression என்பதற்கும்
   Rumour என்பற்கும்
   வட தென் துருவ வித்தியாசம்.

   இது தெரிந்தவர் வாயில் பாயசம்.
   தெரியாமல் போனால் பாய்சன்.

   ———————

   இந்த கருத்தை எவ்வளவு பேர் ஏற்பார்களோ
   எனக்குத் தெரியாது.
   ஆனால் -நான் ஏற்கிறேன்.

   ஆமாம் – நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்…?

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • selvarajan சொல்கிறார்:

    அய்யா .. ! நீங்கள் கேட்டிருந்த … // ஆமாம் – நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்…? // என்பதற்கு உங்களின் நிலைப்பாடு தான் என்னுடையதும் —- மேலும் திரு .எஸ். குருமூர்த்தி அவர்களின் எழுத்து கருத்தில் : …. // இதே கதைக்கருவை சற்று மாற்றி, கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள், பெருமாள் முருகனுக்கு குறிப்பிடும் இன்னொரு சமுதாயப் பெண்களைக் கருத்தரிக்கச் செய்வதாக இருந்திருந்தால், இதே பிரச்னை மிகப்பெரிய வன்முறையைத் தமிழகம் முழுவதும் கட்டவிழ்த்து விட்டிருக்கும். அப்போது, இதே முற்போக்கு வாதிகள் பெருமாள் முருகன் ஆதரவுக் குரல் எழுப்பியிருப்பார்களா? நீதிமன்றம் அதைக் குறித்து ஏன் சிந்திக்கவில்லை என்று தெரியவில்லை.// என்று குறிப்பிட்டுள்ளதில் எனக்கு மாற்றுக கருத்து இல்லை— அவர் தினமணியில் அவர் தீட்டியுள்ளது … // கருத்துச் சுதந்திரம் கட்டற்றது அல்ல!
    By எஸ். குருமூர்த்தி
    First Published : 08 July 2016 12:44 AM IST …..http://www.dinamani.com/tamilnadu/2016/07/08/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1/article3518647.ece // படித்தால் பல வித ” தெளிவு ” கிடைக்கும் ….. !!!

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     செல்வராஜன்,

     தினமணியில் பார்த்தவுடன்,
     சுடச்சுட பார்வைக்கு கொண்டு வந்து
     கொடுத்தமைக்கு மிக்க நன்றி.

     இந்த கட்டுரை நமது விமரிசனம் தள
     நண்பர்களின் பார்வைக்கு அவசியம் போய்ச்சேர
     வேண்டும் என்பதால்,
     தனியே இடுகையாகவே பதிவிடுகிறேன்.

     -வாழ்த்துக்களுடன்,
     காவிரிமைந்தன்

 4. ravi சொல்கிறார்:

  மனிதர்களின் ஆழ் மன வக்கிரங்களுக்கு எல்லையே கிடையாது.. இப்படி செய்தவர் ஒரு மருத்துவ மாணவர் வேறாம்.. பாவம் இவர் கையால் வைத்தியம் பார்க்க வேண்டியவர்கள்

 5. chandramouly venkatasubramanian சொல்கிறார்:

  He should not be allowed to continue his medical education,no moral rights for him,saddist.

 6. Arun சொல்கிறார்:

  we should find these bastards and arrest them.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.