திரு.கார்த்தி ப.சிதம்பரம் – முன் ஜாமீன் பெற வேண்டி இருக்குமா….?

karti -pc

அமலாக்கத்துறை ( Enforcement Directorate ) செவ்வாயன்று
(நேற்று) அனைத்து ஆவணங்களுடன் நேரில் ஆஜராகும்படி
திரு.கார்த்தி ப.சி. அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி
இருந்ததையொட்டி,

அவரும் திரு.தயாநிதி மாறன் போல முன் ஜாமீன் பெற
வேண்டியிருக்குமோ என்று ( கைது செய்யப்படுவதை
தவிர்க்க ) சில செய்தி நிறுவனங்கள் கேள்வி எழுப்பி
இருக்கின்றன….!

திரு.கார்த்தி அவர்களின் விஷயத்தில் அந்த அவசியம்
உடனடியாக ஏற்படவில்லை… திரு.ப.சி.அவர்களுக்கு
விசுவாசமான மூத்த அதிகாரிகள் நிறைய பேர்
இந்த இலாகாவில் இருப்பதால், மோசமான நிலை
எதுவும் ஏற்பட அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்று
நம்பலாம். மேலும், ஈ.டி நோட்டீசிலேயே, அவர்
நேரில் வந்தாலும் சரி அல்லது அவரது ஒப்புதல் பெற்ற
சட்ட நிபுணர் யாரையாவது ஆவணங்களுடன்
அனுப்பினாலும் சரி என்று மிகவும் தாராளம் காட்டி
இருக்கிறார்கள்.

இருந்தாலும், கார்த்தி அவர்கள், தான் வெளிநாட்டில்
இருப்பதால், தனக்கு கால அவகாசம் தேவை என்று
தெரிவித்திருப்பதாக மேல் தகவல் வந்திருக்கிறது.
எவ்வளவு நாட்கள் என்று குறிப்பிட்டிருப்பதாக
தெரியவில்லை….!!!

எதற்காக இந்த விசாரணை எல்லாம் என்பது தெரியாமல்
சிலர் குழம்பக்கூடும்….

அவர்களுக்காக சிறிய சுருக்கம் –

இது ஏர்-செல் மேக்சிஸ் ஊழல் குறித்தது. திரு.தயாநிதி
மாறன் அவர்கள் மீது நடந்து வரும் விசாரணையுடன்
தொடர்பு உடையது. அப்போது நிதியமைச்சகம் ஒப்புதல்
அளித்தத விவகாரமாக, ஏர்-செல் நிறுவனத்திடமிருந்து
கார்த்தி அவர்கள் தொடர்புடைய Chess Management Services
நிறுவனம் சுமார் இரண்டு லட்சம் டாலர் பெற்றது குறித்து,
அமலாக்கத்துறை நிறைய கேள்விகளை எழுப்பி
இருக்கிறது.

திரு கார்த்தி ப.சி.அவர்களின் Advantage Strategic Consulting
நிறுவனத்தின் 2005-ஆம் ஆண்டு முதலான வரவு செலவு
தொடர்பான ஆவணங்களை நேரில் சமர்ப்பித்து,
எழுப்பப்படும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும்படி –

– இப்போதைக்கு அமலாக்கபிரிவு
சொல்லி இருக்கிறது….

இதையெல்லாம் பார்த்து யாரும் அதிர்ச்சியடைந்து
விட வேண்டாம். இதே மாதிரி எத்தனையோ
நோட்டீஸ்களை பார்த்து விட்ட திரு.தயாநிதி அவர்கள்
எவ்வளவு சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருக்கிறார் –
எப்படி தாத்தாவுடன் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஊர் ஊராக
வந்தார் என்பதை பார்த்திருப்பீர்களே… பின் என்ன….?

இது இந்தியா ….
இது ஒரு ஜனநாயக நாடு….
இங்கு எல்லாம் முறைப்படி ( sorry – சட்டப்படி ) தான்
நடக்கும்….!!!

யாரும் வேறு எந்தவிதமாகவும் யோசிக்க வேண்டாம்…!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to திரு.கார்த்தி ப.சிதம்பரம் – முன் ஜாமீன் பெற வேண்டி இருக்குமா….?

 1. " அக்கா தங்கையுடன் பிறந்த ஒரு வெளியூர் சகோதரன் " சொல்கிறார்:

  செய்தி –
  ” சுவாதி கொலை வழக்கில் ராம்குமாருக்கு
  ஜாமீன் வழங்க பெண் வக்கீல்கள் எதிர்ப்பு ”

  பெண்களுக்கு ஒரு வேண்டுகோள் –
  ராம்குமாருக்கு ஜாமீன் கேட்கும் வக்கீல் கோர்ட்டுக்கு வரும்போது –
  சாணி, துடப்பக்கட்டை, செருப்பு ஆகியவற்றை
  நினைவில் கொள்ளுங்கள்.

  செய்தி –
  ” சுவாதி கொலை வழக்கில் ராம்குமாருக்கு
  ஜாமீன் வழங்க பெண் வக்கீல்கள் எதிர்ப்பு ”

  பெண்களுக்கு ஒரு வேண்டுகோள் –
  ராம்குமாருக்கு ஜாமீன் கேட்கும் வக்கீல் கோர்ட்டுக்கு வரும்போது –
  சாணி, துடப்பக்கட்டை, செருப்பு ஆகியவற்றை
  நினைவில் கொள்ளுங்கள்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   அழுத்தந்திருத்தமாக –
   ஒரு தடவைக்கு இரண்டு தடவையாக –
   சொன்ன அந்த வெளியூர் சகோதரனை –
   நான் மனதார வழிமொழிகிறேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 2. CHANDRAA சொல்கிறார்:

  JI i however sincerely wish a vanchinathan type hero should emerge and wipe these
  >>>>>>>>>>>>>>>>>>>>

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.