இவர் ஒரு வக்கீல் ….!!!

.

.

இவர் ஒரு வக்கீல்.
இவர் பெயர் கிருஷ்ணமூர்த்தி….

vakkeel

அதற்கென்ன இப்போது என்கிறீர்களா…?
இவர் ஒரு முக்கியமான வழக்கில் வாதாடுவதாக
செய்தி பார்த்திருப்பீர்கள்.
ஆனால், செய்தியோடு புகைப்படத்தை
போடத்தவறி விட்டார்கள்.

இவருக்கு கிடைக்க வேண்டிய புகழ்
கிடைக்காமல் போகலாமா….?
அதான் நம் பங்குக்கு புகைப்படத்தை
போட்டாகி விட்டது.

வாழ்க வளமுடன்…!!!

——————————————————————-

செய்தி நாளிதழ்களில், லேடஸ்டாக கிடைக்கும் செய்திகளை கடைசியில் சேர்த்து late city edition என்று போட்டு, அச்சாகும் நகரத்தில் மட்டும் வெளியிடுவார்கள்….

இந்த தளத்தில் காமெடி கட்டுரை வெளியிட்டு
நீண்ட நாட்களாகி விட்டன…

மேற்கண்ட இடுகையை பதிவிட்ட பிறகு இன்னமும்
சில அருமையான புகைப்படங்கள் கிடைத்தன…

அவற்றையும் பதிவிட்டால் தான் இந்த இடுகை நிறைவு
அடையுமென்று தோன்றியது.

செய்வன திருந்தச் செய் என்று பெரியவர்கள் சொல்லி
இருக்கிறார்கள் அல்லவா …?
எனவே, மேற்கொண்டு கிடைத்த புகைப்படங்களையும்
இங்கே பதிவிடுகிறேன்.

கடைசி புகைப்படம் – ஒரு மிகப்பெரிய சஸ்பென்ஸ்….!!!

innoru-4

innoru-5

innoru-6

innoru-8

innoru-10

innoru-11

innoru pukaippadam-1

கீழே உள்ள புகைப்படத்தை பார்த்தால்
சார் பாஜக முக்கியஸ்தர் என்பது போன்ற
அபிப்பிராயத்தை உண்டாக்குகிறது…!!!

with raja

கட்சி உடனடியாக தங்களுக்கும் இவருக்கும் எந்தவித
சம்பந்தமும் இல்லை என்பதை தெளிவுபடுத்தி விடுவது நல்லது…!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

13 Responses to இவர் ஒரு வக்கீல் ….!!!

 1. B.Venkatasubramanian சொல்கிறார்:

  face book-ல் புகைப்படங்களை பதிவு செய்தால்
  அது எங்கே கொண்டு போய் விடுமென்பது
  மிகவும் நன்றாகவே புரிகிறது.

  • B.Venkatasubramanian சொல்கிறார்:

   கே.எம்.சார்,

   நீங்கள் சில நாட்களுக்கு முன்பாக வக்கீல்களைப்பற்றி
   ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தீர்கள்.
   அதில் இப்போது சிறிது மாற்றம் செய்ய வேண்டும் போல்
   தோன்றவில்லை ?

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நண்ப வெங்கடசுப்ரமணியன்,

    இப்படி வேண்டுமானால் திருத்திக் கொள்ளலாம் –

    மனசாட்சியுள்ள ஒரு சில
    நேர்மையானவர்களைத் தவிர –
    பெரும்பாலானோர்கள்
    கீழ்க்கண்ட பிரிவுகளுக்குள்
    வந்து விடுகிறார்கள் –

    பொய்யர்கள்,
    புரட்டர்கள் (உண்மையை பொய்யாகவும்,
    பொய்யை உண்மையாகவும்
    புரட்டிப் போடுபவர்கள்…),
    காமெடியன்கள்,
    வில்லன்கள்,
    காமெடி வில்லன்கள்…

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

 2. CHANDRAA சொல்கிறார்:

  JI i honestly do not understand your views about this advocate shri krishnamoorthy
  some of his press interviews are really good……..
  he wears normal advocate dress with slight vibhudhi or namam in his forehead
  WELL dravidian ruling for more than sixty years in tamil nadu
  had changed persons like KM JI
  Do you know that NEERAVI MURUGAN the notorious rowdfy
  whose video THREATENING A TEACHER to part her chain
  is always impeccably dressed looking very smart…..
  SO JI let us not decide people by…………………………………………….

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப சந்திரா,

   கடைசி புகைப்படம் உங்களைத்
   தடுமாற வைத்து,
   ஒரு தகுதியற்றவருக்கு ஆதரவாக எழுத வைக்கிறது
   என்று நினைக்கிறேன்.

   குற்றம் சாட்டப்பட்டவரையோ,
   அவருடன் சம்பந்தப்பட்டவர்களையோ
   பார்க்காமலே, பேசாமலே,
   அவர்கள் அனுமதி இல்லாமலே –
   ஒரு பரபரப்பைக் கிளப்பி,

   அவர் குற்றம் செய்யவில்லை,
   போலீஸ்காரர்களுடன் கூட வந்தவர்கள் தான்
   அவரது கழுத்தை அறுத்தனர் என்றெல்லாம்
   தொலைக்காட்சிகளில் பேட்டி கொடுத்து,

   தானாகவே கோர்ட்டில் முன்வந்து ஆஜராகி
   வழக்கை திசை திருப்ப முயன்ற ஒரு
   விபரீதமான ஆசாமியை,
   அவர் பாஜக மேடையில் இருக்கிறார் என்பதை
   பார்த்து விட்டு மட்டும் நீங்கள் ஆதரித்து எழுதுவது
   எப்படி என்பது தான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • Ganpat சொல்கிறார்:

    எனக்கு இந்த வக்கீலை பார்த்து கூட பயம் வரவில்லை ஆனால் இவரை நார்மல் என்று நினைப்பவர்களை பார்த்தால்தான் அதிக பயம் வருகிறது

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     வருக கண்பத்,

     நமது ஊடகங்கள் படுத்தும் பாடு தாங்க முடியவில்லை.
     ஒரு அரைக்கிறுக்கை, ஹீரோவாக்கி, தலைப்புச் செய்திகளாக
     கொடுத்து, வறுத்தெடுத்து விட்டன….!!!

     அது ஹீரோ அல்ல என்பதைச் சொல்ல நமக்கு
     இவ்வளவு மெனக்கெட வேண்டியதாகி விட்டது…!

     -வாழ்த்துக்களுடன்,
     காவிரிமைந்தன்

     • Ganpat சொல்கிறார்:

      நன்றி சார்!
      மிக கடினமான/ ஆபத்தான காலத்தில் போய்கொண்டிருக்கிறோம் என்பது நிச்சயம்

  • Parthiban சொல்கிறார்:

   Mr.chandraa,

   //some of his press interviews are really good……..//

   will you please elucidate abt which
   interviews you are stating ?

 3. jksm raja சொல்கிறார்:

  அப்பாவி சுவாதி கொலை வழக்கை வைத்து பா .ஜ.க அரசியல் ஆதாயம் தேட முயற்சி செய்வதின் நீட்சி தான் இந்த அயோக்கியனின் ஜாமீன் மனு . பா .ஜ.க இந்த வழக்கை திசை திருப்பி பிலால் மாலிக் தான் குற்றவாளி என ஜோடித்து இந்து முஸ்லிம் பகை உண்டாக்க முயற்சிப்பது புரியவில்லையா.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப ராஜா,

   பாஜக வக்கீல்களின்… ( இதில் திரு.ஹெச்.ராஜாவையும் சேர்க்க
   வேண்டுமே…) இன மோதலை உருவாக்கும் முயற்சியும் புரிகிறது…

   திரு.திருமாவளவன் சிபிஐ விசாரணை கேட்டு ஜாதி அரசியலை
   மெள்ள உள்ளே நுழைப்பதும் புரிகிறது.

   அப்பட்டமான குற்றச்செயல்களில் கூட அரசியல்வாதிகள்
   புகுந்து ஆதாயம் தேட முயற்சிப்பது மகா கேவலம்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • Parthiban சொல்கிறார்:

    கே.எம்.சார்,

    அப்பட்டமாகத் தெரியும் ஒரு கொலைக்குற்றத்தை,
    தங்கள் சுயநலத்திற்காகவும், கட்சி நலத்திற்காகவும்,
    திசை திருப்பும்
    இந்த மாதிரி கேவலமான அரசியல்வாதிகளின்
    போக்கை பார்க்கும்போது
    “என்கவுண்டர்களின்” அவசியம் னன்றாகவே
    உணறப்படுகிறது.

 4. Narasimhan சொல்கிறார்:

  ஒரு பொது வெளியில் ஆள் நடமாட்டம் அவ்வளவாக இல்லாத வேளையில் கொலை நடந்ததை நேரில் பார்த்தவர் யாரும் இல்லையென்று (?) இதுவரை அறியப்படுகிறது . இந்த சம்பவம் என்னென்ன சாயம் பூசப்பட்டு என்னயென்ன முலாம் பூசப்பட்டு இறுதி நிலையை அடையுமோ ? ஆண்டவனே யாருக்கு மன நிம்மதி அளிப்பீரோ ,யாருக்கு மனத்துயரத்தை அளிப்பீரோ ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.