” துக்ளக் ” ஆசிரியர் சோ – “மாதொரு பாகன்” – தீர்ப்பு குறித்து…..

cho image

துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள், சர்ச்சைக்குரிய
“மாதொருபாகன்” நாவல் மீதான நீதிமன்ற தீர்ப்பு
குறித்த தன் கருத்துக்களை இன்று வெளிவந்துள்ள
துக்ளக் வார இதழின் தலையங்கத்தில்
வெளிப்படுத்தியுள்ளார்.

அதனைப்படிக்க வாய்ப்பில்லாத நமது நண்பர்களுக்காக
கீழே தந்திருக்கிறேன் –

thug-1e

 

 

இது போனஸ் – துக்ளக் கார்ட்டூன்ஸ்…..!!!

 

bonus-1

bonus-2

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

One Response to ” துக்ளக் ” ஆசிரியர் சோ – “மாதொரு பாகன்” – தீர்ப்பு குறித்து…..

 1. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்ப ஜோஹன் பாரிஸ்,

  நான் இங்கு பின்னூட்டங்களை எந்தவித
  முன் (அதாவது prior ) மட்டறுத்தலும் இன்றி அனுமதிப்பதால், இதைப் பயன்படுத்திக் கொண்டு,
  இந்த வலைத்தளத்திற்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும்,
  படிக்கிறவர்களை உணர்ச்சி வசப்பட வைத்து பதிலெழுத
  வைக்க வேண்டும் என்கிற தீய எண்ணத்துடன் ஒரு நண்பர்
  KS என்கிற பெயரில் ஒரு பின்னூட்டம் போட்டிருக்கிறார்.
  அவர் யார் என்பதை இதுவரை இல்லாவிடினும் இனி
  நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.

  அவர் எதிர்பார்த்தது போலவே நீங்களும் பதிலுக்கு உணர்ச்சி
  வசப்பட்டு ஒரு பதில் பின்னூட்டம் எழுதினீர்கள்.
  kS என்கிற போலிப் பெயரில் எழுதிய அந்த நபரின் எதிர்பார்ப்பும் இதுவே தான்.

  அவருடைய பின்னூட்டத்தை நான் பார்த்தது,
  நீங்களும் பதில் எழுதிய பிறகு தான். முதலாவது
  பின்னூட்டத்தை நீக்கிய பிறகு உங்கள் பின்னூட்டம்
  மட்டும் இருந்தால் அது –
  தொடர்பின்றி இருக்கும் என்பதால் –
  அதையும் விலக்கி விட்டேன்.

  இங்கே பின்னூட்டம் போட்டு விட்டு, அங்கே தன் வலைப்பதிவில், காவிரிமைந்தன் தனது தளத்தில் வன்முறையை தூண்டுகிறார் என்று
  ஒரு பதிவும் போட்டு விளம்பரம் தேடுகிறார்….

  இவரைப்போன்ற ஆசாமிகளின் பின்னால் போய்
  என் நேரத்தையும் உழைப்பையும் வீணடிப்பதில்
  எனக்கு விருப்பமில்லை.

  அவரை தெய்வம் / இயற்கை பார்த்துக் கொள்ளும்.

  நான் முக்கியமாக இதை இங்கு எழுதுவது,
  உங்களுடைய பின்னூட்டத்தையும் சேர்த்து நான் நீக்கி இருப்பதன் காரணத்தை உங்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

  இந்த வலைத்தளத்தை நீங்கள் தொடர்ந்து படித்து வருபவர்
  என்பதால், என்னை நீங்கள் ஏற்கெனவே உணர்ந்து தான்
  இருப்பீர்கள். எனவே என்னைப் பற்றிய எந்த விளக்கங்களையும் நான் உங்களுக்கு புதிதாகச் சொல்லி புரிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்.

  ——————————

  மற்றவர்கள், தங்களது வலைத்தளத்தில்
  தங்கள் கருத்தை வலியுறுத்தி எழுதும்போது,
  அவரவர் தாம் விரும்புவதை தங்கள் தளத்தில்
  எழுதும் சுதந்திரம் எல்லாருக்கும் உண்டு என்பதை
  அவர்கள் உணற வேண்டும்.

  நான் இந்த வலைத்தளத்தில் அவர்களுக்கு பிடிக்காத கருத்துக்களை எழுதுகிறேன் என்பதற்காக,

  முறைகேடான வழிகளில் எனக்கு கேடு செய்ய முனைபவர்களை அந்த இயற்கையே
  பார்த்துக் கொள்ளும்.

  விமரிசனம் வலைத்தள நண்பர்கள் என்னை நன்கு
  அறிவார்கள். எந்தவித விளக்கமும் கொடுக்க
  வேண்டிய அவசியம் இல்லாமலே அவர்களுக்கு
  இதெல்லாம் என்ன, ஏன் இப்படி நடக்கிறது
  என்பதெல்லாம் நன்றாகவே புரியும்….

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.