மீடியாக்களின் அக்கரை எதில்….?

mettur dam

இன்றைய தினத்தில் யார் யார் – யார் யாரை
அரிவாளால் வெட்டினார்கள்….?

யார் யாருடன் சேர்ந்து கொண்டு – புருஷனை
அல்லது பெண்டாட்டியை கொன்றார்கள் ..?

– இந்த மாதிரி விஷயங்களின் லேடஸ்ட் விவரங்களை
தேடித்துருவி எடுத்து வந்து, மற்ற தொலைக்காட்சிகளை
விட முந்திக் கொண்டு தருவது தான் –
அதை அரை மணிக்கொரு தடவை திரும்ப திரும்ப
ரிபீட் பண்ணுவது தான் ஒவ்வொரு தொலைக்காட்சிக்கும்
உள்ள மிக முக்கியமான கடமை –

இது நமக்கு நன்றாகவே புரிகிறது…!!!

இருந்தாலும் மனதில் ஒரு ஏக்கம் –

தொலைக்காட்சிகளாக இருந்தால்,அரை மணி நேர செய்தி
ஒளிபரப்பில் ஒரு அரை நிமிடம் ஒதுக்கி –

நாளிதழ்களாக இருந்தால், பதினெட்டாம் பக்கத்தில்
ஏதோ ஒரு மூலையிலாவது –


மேட்டூர் அணைக்கு எப்போது தண்ணீர் வரும்…?
கர்நாடகா அணைகளின் நீர் மட்டம் எப்படி ?
அவற்றிற்கு எந்த அளவில்
நீர் வந்து கொண்டிருக்கிறது …?
அணை எப்போது நிரம்ப வாய்ப்பு …?

– போன்ற விஷயங்களுக்காக
காத்திருப்பவர்களின் கவலைகளையும் மனதில்கொண்டு –
சிறிதளவாவது செய்தி சேகரித்து போடக்கூடாதா….?

————————————-
இன்றைய நிலவரம் –

கேரளா, கர்நாடகாவில் பெய்யும் தென்மேற்கு பருவமழை
மூலம் கர்நாடகத்தில் உள்ள கே.ஆர்.எஸ், மற்றும் கபினி
அணைகள் நிரம்பிய பின் தான் அதன் உபரி நீர் மேட்டூர்
அணைக்கு வரும்.

கடந்த ஆண்டு கர்நாடகத்தில் தொடக்கத்திலேயே
பருவமழை கனமாக பெய்தது. இந்த ஆண்டு சில நாட்கள்
கனமழை பெய்தது. பெரும்பாலான இடங்களில் சுமாரான
மழையே பெய்து வருகிறது. கடந்த ஆண்டை
ஒப்பிடும்போது கர்நாடகத்தில் இதுவரை கனமான மழை
இல்லை.

ஆனாலும் தென்மேற்கு பருவமழை செப்டம்பர் கடைசி
வரை நீடிக்கும். எனவே கர்நாடக அணைகளுக்கு
நீர்வரத்து அதிகரிக்க இன்னும் வாய்ப்புகள் உள்ளன.

கர்நாடகாவில் உள்ள ஹேரங்கி அணையின் மொத்த
உயரம்(கடல் மட்டத்தில் இருந்து) 2,859 அடி.
அணையில் நேற்று காலை நிலவரப்படி 2857.27 அடி
தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 15,223 கனஅடி
தண்ணீர் வந்தது. ஹேரங்கியின் மொத்த கொள்ளளவு 8.50
டிஎம்சி. அதில் நேற்று காலை நிலவரப்படி 7.92 டிஎம்சி
தண்ணீர் இருந்தது. இன்று அதிகாலை அணை முழு
கொள்ளளவை எட்டியது.

ஹேரங்கியில் இருந்து நேற்று காலை முதல் வினாடிக்கு
5,072 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீர்
அங்குள்ள கே.ஆர்.எஸ். அணையை வந்தடைகிறது.

கே.ஆர்.எஸ். அணையின் மொத்த உயரம் 124.80 அடி.
நேற்று காலை நிலவரப்படி 91.65 அடி தண்ணீர் இருந்தது.
மொத்த கொள்ளளவு 49.45 டிஎம்சி. அதில் தற்போது 16.95
டிஎம்சி தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 6,381
கனஅடி தண்ணீர் வருகிறது.3,766 கனஅடி
திறக்கப்படுகிறது.

கபினி அணை மொத்த உயரம் 2,284 அடி. நேற்று காலை
2,267.16 கனஅடி தண்ணீர் இருந்தது. மொத்த கொள்ளளவு
19.52 டிஎம்சி. தற்போது 10.34 டிஎம்சி தண்ணீர் உள்ளது.

வினாடிக்கு 6,431 கனஅடி தண்ணீர் வருகிறது. 3,500
கனஅடி திறக்கப்படுகிறது.

கே. ஆர்.எஸ், கபினி அணைகளில் இருந்து திறக்கப்படும்
தண்ணீர் தான் மேட்டூர் அணைக்கு வருகிறது. எனவே
மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு நாளுக்கு
நாள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது.
நேற்று காலை வினாடிக்கு 5,936 கனஅடி தண்ணீர் வந்தது.

இன்று காலை 6,051 கனஅடி தண்ணீர் வருகிறது.
அணை நீர்மட்டம் 46.300 அடி. குடிநீருக்காக 2 ஆயிரம்
கனஅடி திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 15.562 டிஎம்சி.

ஹேரங்கியில் உபரி நீர்தொடர்ந்து வந்தால் கே.ஆர்.எஸ்.
விரைவில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.சம்பா
பருவத்திற்கு இப்போதைக்கு மேட்டூர் அணை திறக்க
முடியாத நிலை தான் காணப்படுகிறது.

இருந்தாலும், ஆடிப்பெருக்கு பண்டிகையையொட்டி
20ந்தேதிக்கு மேல் மேட்டூர் அணையிலிருந்து ஓரளவு
தண்ணீர் காவிரியில் சில நாட்களுக்கு மட்டும்
திறந்து விட வாய்ப்பு இருக்கிறது.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

18 Responses to மீடியாக்களின் அக்கரை எதில்….?

 1. selvarajan சொல்கிறார்:

  மீடியாக்களின் வியாபார போக்கு — பொறுப்பற்ற தன்மை — காசுக்கு மாரடிக்கும் பொழப்பு என்பதுதான் ஊரறிந்த விஷயமாச்சே — தன் ஜாதிக்கார கொலைகாரனையும் — கொள்ளையனையும் தாங்கிப் பிடிக்கும் ஜாதிக் கட்சிகளும் — அரசைக் குறைகூற காரணத்தை தேடும் மற்ற கட்சிகளும் — இவற்றை மட்டும் ரசித்துக்கொண்டு கொட்டாவி விடுபவர்களும் நிறைந்துள்ளதில் — நதி நீர் பிரச்சனை பற்றி எப்பவாவது ஞாபகம் வருவதே — நாம் செய்த பாக்கியம் ….. ! செய்தித்தாள் – செய்தி ஒன்று ……. // காவிரி நீர் பிரச்சினை: வெங்கய்ய நாயுடுவுக்கு விவசாயிகள் கண்டனம்…http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/article8837923.ece // —- திரு வெங்கய்ய நாயுடுவுக்கு … என்னதான் ஆயிற்று … ? ஏன் இந்த ஒரவஞ்சனையான போக்கு — அவ்வப்போது மத்திய மந்திரிகளுக்கு – தாங்கள் அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானவர்கள் என்பது நினைவில் இருப்பதில்லையோ … அல்லது தங்களின் ” சாம்ராஜ்ய ” விரிவாக்கத்திற்க்காக கர்நாடக ஆதரவு — தமிழகத்திற்கு எதிர்ப்பு நிலையா … ? ஒன்றும் புரியலையே … பிரதமருக்காவது ….?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   தன்னை ராஜ்ய சபாவிற்கு உறுப்பினராக
   தேர்ந்தெடுத்த கர்நாடகா மாநிலத்திற்கு
   அவரது “நன்றிக் கடன்” இது.

   நமது மாநிலம் சார்ந்த பிரச்சினைகளுக்கு
   இந்த அகில இந்திய கட்சிகள் எதுவுமே உதவா –
   என்பது என் அபிப்பிராயம்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 2. R.Gopalakrishnan சொல்கிறார்:

  U R right Mr. KM. I am observing this trend of reporting for the past one month in news papers
  (even in TOI) and also in TV channels. Why this sort of reporting is clearly understandable. I feel that it will end in counter productivity of their expectation.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   கோபாலகிருஷ்ணன்,

   உண்மை. நம்மைப்போல் உணர்பவர்களின் எண்ணிக்கை
   அதிகமாகும்போது இது நடக்கும்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 3. ரிஷி சொல்கிறார்:

  //மீடியாக்களின் அக்கரை எதில்….?//

  அக்கறை என்பதே இவ்விடத்தில் சரியான சொல் ஆகும்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி ரிஷி…

   “அக்கறை”யின்றி எழுதி உங்களிடம் மாட்டிக் கொண்டு விட்டேன்.. 🙂

   ஏதோ – இந்தப்பிழையாவது உங்களை இங்கே இழுத்து வந்ததே – நீண்ட நாட்களுக்குப் பின் உங்களைக் காணும் மகிழ்ச்சியை கொண்டு வந்ததே …!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   -வாழ்த்துக்களுடன்,

 4. LVISS சொல்கிறார்:

  another disturbing aspect is showing military operations like a cricket match and inviting reps from Pakistan to air their comments –it is better to watch the national tv —

 5. AMS சொல்கிறார்:

  Please write article about kashmir its correct time for that.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப AMS,

   மன்னிக்கவும். காஷ்மீர் பிரச்சினை பற்றி
   எழுதுவதற்கான தகுதியோ, பின்னணியோ,
   எழுதக்கூடிய மனநிலையோ எனக்கு இல்லை.

   ஆனால், தீவிரவாதம் இதற்கான தீர்வாக இருக்க முடியாது
   என்பது எனது கருத்து.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 6. mdsalih1993 சொல்கிறார்:

  பிரான்ஸ் தாக்குதலுக்கு ஆறுதல் தெரிவிக்கும் நாடோடி பிரதமருக்கு காஷ்மீர் கலவரத்தில் கண்களை பரிகொடுத்த மக்களை பற்றி ஒரு வார்த்தைகூட வாய்த்திறக்கவில்லை ஏன்? நீங்களும் தான்?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பரே,

   தீவிரவாதத்திற்கு துணை போகின்றவர்களுக்கு
   என்னிடம் எந்தவித ஆதரவையும் எதிர்பார்க்க வேண்டாம்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • mdsalih1993 சொல்கிறார்:

    ஈழம் பற்றிய தங்களின் கருத்து என்ன? சொந்த மண்ணிர்க்காக போரடுபவர்கள் எப்படி தீவிரவாதியாக இருக்க முடியும்?

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     நண்பரே,

     தயவு செய்து ஈழத் தமிழர்களின் போராட்டத்தை
     இத்துடன் ஒப்பீடு செய்து, அதனை கொச்சைப்படுத்த
     வேண்டாம். அது வேறு – இது வேறு.

     ஈழப்போராட்டம் குறித்து நான் நிறைய இடுகைகளை
     இதே வலைத்தளத்தில் முன்னதாக எழுதி இருக்கிறேன்.
     என் கருத்துக்களைப் பற்றி விவரமாக அறிய விரும்பினால்
     நீங்கள் அவற்றில் பார்க்கலாம்.

     -வாழ்த்துக்களுடன்,
     காவிரிமைந்தன்

 7. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  mdsalih1993,

  நீங்கள் இந்த தளத்தை உங்களது தவறான பிரச்சாரங்களுக்கு
  பயன்படுத்திக் கொள்வதால், உங்களுடைய கடைசி பின்னூட்டம்
  நீக்கப்பட்டுள்ளது.

  இனி இந்த தளத்தில் நீங்கள் பின்னூட்டம் எதுவும் எழுத வேண்டாம்
  என்று அறிவுருத்தப்படுகிறீர்கள்.

  நீங்கள் எதுவும் பிரச்சாரம் செய்ய விரும்பினால், அதனை
  உங்கள் சொந்த தளத்தில் வைத்துக் கொள்ளவும்.
  இங்கே அதற்கு இடமில்லை.

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

 8. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்பரே,

  நீங்கள் தவறான பிரச்சாரங்களில் மயங்கி இருக்கிறீர்கள்.
  அவற்றை இந்த தளத்திலும் ஏற்றும் முயற்சியை
  இனி மேற்கொள்ள வேண்டாம்.

  நான் காஷ்மீருக்கு நேரில் சென்றிருக்கிறேன்…
  உள்ளூர்வாசிகளுடன் பேசி, பழகி இருக்கிறேன்.
  நீங்கள் குறிப்பிடும் புத்தகத்தில் உள்ள விஷயங்கள்
  குரோத மனப்பான்மையுடன்
  மிகைப்படுத்தி எழுதப்பட்டுள்ளன.
  இதெல்லாம் சுயநலவாதிகளின் வேலை…

  தவறான வழியில் செல்ல வேண்டாம் என்று
  உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.
  நிஜத்தை தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

 9. Seshan சொல்கிறார்:

  need clarification….

  why we need Kashmir….from the day one it is troubling in the form of spending money and other state people (soldier) life.

  example last 68 years (min. we were spending INR 50 / month crore means inr 40,800 crores we would have spent and all are for nothing (no return to country ). why my neighbors/ brothers die in the non returnable / non profitable / no use the to the nation job. i could not under stand. last month my friend’s brother lost his life in baramulla at cross fire with local people. his entire family in the road now.

  we have to cut and remove the cancer once for all to better save other parts…..

  expecting your valuable comment.

  seshan/duabi.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப சேஷன்,

   காஷ்மீர் நமக்கு வேண்டுமா வேண்டாமா
   என்று தீர்மானம் செய்யக்கூடிய
   கால கட்டத்தில் நாம் இல்லை.

   காஷ்மீரில் அமைதி நிலவ,
   மக்கள் நிம்மதியாக வாழ –
   என்ன செய்ய வேண்டுமோ
   அதை செய்யக்கூடிய வழிகளைப் பற்றித் தான்
   யோசிக்க வேண்டும்.

   எதையும் உணர்ச்சி வசப்பட்டு பேசுவதும்
   எழுதுவதும் நிலைமை சீர்பட
   எந்தவகையிலும் உதவாது.

   அமைதி திரும்பக்கூடாது என்றே
   சில சுயநலவாதிகள் கங்கணம்
   கட்டிக் கொண்டு செயல்படுகிறார்கள்.

   எனக்கு உணர்வுபூர்வமாகத் தெரியும்…
   அங்கு – பெரும்பாலான, சாதாரண மக்கள்
   அமைதியையே விரும்புகிறார்கள்.
   ஆனால், அவர்கள் தூண்டி விடப்படுகிறார்கள்.
   பாகிஸ்தான் தீவிரமாக பின்னணியில்
   செயல்படுகிறது.

   அரசியல்வாதிகளோ ( அனைத்து கட்சியினரையும்
   சேர்த்து தான் சொல்கிறேன் ) தங்களுக்கு
   எது லாபம் என்பதிலேயே குறியாக
   இருக்கிறார்கள்.

   இதில் பலியாவது அப்பாவி பொது மக்கள்,
   ராணுவ வீரர்கள் – இரண்டு தரப்பினருமே தான்.

   அங்கே நிறைய இளைஞர்கள் போதிய
   வேலை வாய்ப்பின்றி அவதிப்படுகிறார்கள்.
   அவர்கள், மாநிலத்திற்கு வெளியே வர
   விரும்புவதில்லை.

   நிறைய வேலைவாய்ப்புகளை அங்கேயே
   உருவாக்கி, அவர்களது வாழ்க்கைத் திறனை
   மேம்படுத்தினால், அவர்களது கவனம்
   சுயமுன்னேற்றத்தின் பக்கம் திரும்பும்.
   பிரச்சினையின் உக்கிரம் குறையும்.

   மாநிலத்திலும், மத்தியிலும் –
   அதிகாரத்தில் இருப்பவர்கள் –
   தங்களது, தங்கள் கட்சியினது வளர்ச்சியை
   மறந்து விட்டு, மக்களின் அமைதிக்கும்,
   நல் வாழ்வுக்கும் உழைத்தால் –
   நிலைமை நிச்சயம் மாறும்.

   எதிர்காலம் இந்த மாற்றத்தைக்
   கொண்டு வரும் என்று நம்புவோம்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.