பொறுப்புள்ள சாரு நிவேதிதா…..!!!

charu-nivedita-

இப்போதெல்லாம் எழுத்தாளர் சாரு நிவேதிதா மிகவும்
மாறி விட்டார். சமூகப் பொறுப்புணர்வுடன் நிறைய
விஷயங்கள் குறித்து எழுதுகிறார். எக்கச்சக்கமான
அனுபவம், நினைப்பதையெல்லாம் அப்படியே எழுத்தில்
கொண்டு வரக்கூடிய திறமை, படிப்பவர்களை
வசப்படுத்தும் எழுத்து நடை – இவையெல்லாம் அவரது
ப்ளஸ் பாயிண்டுகள்….

அவை சமூகத்திற்கு பயன்படும் விதத்தில் உருவெடுப்பது
எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

அண்மையில் அவர் எழுதி இருக்கும்
மிக அவசியமான ஒரு கட்டுரை கீழே –

———————————————————————–

இணையம் தரும் கட்டற்ற சுதந்திரம்!

எந்த ஒரு விஞ்ஞான வளர்ச்சியுமே அதற்கு உரிய சாதக
பாதகங்களோடுதான் வரும். அதைப் புரிந்து கொண்டு பாதகங்களை அடையாளம் கண்டு, சாதகங்களைத் தனதாக்கிக் கொள்பவரே அதில் வெற்றி அடைய முடியும்.

காலையில் தன்னுடைய அழகான தோற்றத்தை, ‘செல்பி’ மூலம் படம் பிடித்து முகநுாலில் போடுகிறார் ஒரு இளம்பெண்.

பிறகு ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை, கைபேசியை எடுத்து,
‘ஸ்டேட்டசை’ப் பார்த்தபடி இருக்கிறார். வெறும், 100, ‘லைக்’
மட்டுமே வந்தால் மனம் பதறுகிறது; முகம் வாடுகிறது.

‘தோற்றத்தில் ஏதும் பிரச்னையோ…
நாளையே பார்லருக்குப் போக வேண்டும். எப்போதும் படத்தைப் போட்ட அரை மணி நேரத்தில், 900 லைக்கைத் தாண்டி விடுமே! இப்போது ஏன், 100லேயே நிற்கிறது?’

ஆனால், அந்தப் பெண் நினைப்பது போல் அப்படியெல்லாம்
நடப்பதில்லை. எந்தப் பெண்ணின் புகைப்படம் வரும் என்று,
தவமாய்க் கிடக்கிறது மாபெரும் இளைஞர் கூட்டம்.

ஒரு பெண்ணின் புகைப்படம் வந்தவுடன், மாறி மாறி,
‘சரசர’ வென்று லைக்குகள் குவிகின்றன.
வெறும் லைக்குகள் மட்டுமல்ல. ‘ஆசம்…
அடடா என்ன அழகு, மனம் கிறங்குகிறது,
அழகே உன்னை வர்ணிக்க வார்த்தை இல்லை,
உன்னைப் பார்த்ததால் நான் கவிஞ னானேன்…’
என, நுாற்றுக்கணக்கான, ‘கமென்டு’கள்.

இவ்வளவுக்கும் அந்தப் பெண் செய்த சாதனை என்னவென்று
பார்த்தால், காலையில் எழுந்து தன் புகைப்படத்தைப் போட்டு, ‘குட் மார்னிங்’ சொன்னார்; அவ்வளவு தான்.

இத்தனை லைக்குகளையும், கமென்டுகளையும் பார்த்த பெண்ணின் மனம் குதுாகலிக்கிறது. சில பெண்கள், சில முக்கியமான கமென்டுகளுக்கு நன்றியும் தெரிவிக்கின்றனர்.

இங்கிருந்து தான் தொடங்குகிறது ஆபத்தின் இருள் பாதை.
நுாற்றுக்குத் தொண்ணுாறு பெண்களுக்கு, இந்தப் பாதையின்
பிரச்னைகள் தெரிந்தே இருப்பதால், இதோடு நிறுத்திக்
கொள்கின்றனர்;

நிறுத்தாதவர்களுக்கு ஏற்படும் சிக்கல்களைத் தான், நாம் தினசரி படித்துக் கொண்டிருக்கிறோம்.

ஒரு விஷயம் ஏன் பிரச்னையாகிறது என்பதற்கு,
அது பற்றிய தெளிவான புரிதல் தேவை. எதார்த்த உலகில் ஒரு
பெண்ணை, ஆண் எப்படி எதிர்கொள்கிறான்?
எந்தப் பெண்ணிடமும் ஒரு ஆண் எடுத்த எடுப்பில்,
‘நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்!’ என்று சொன்னால்,
உதை தான் விழும்.

ஏன்… முன்பின் தெரியாத பெண்ணிடம் நாம் செல்லும் இடத்துக்கு வழி கூட கேட்க முடியாது. எதார்த்தத்தில் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும், அவ்வளவு பெரிய இடைவெளி இருக்கும் போது –

இணையம் என்கிற,
‘சைபர்’ உலகில் மட்டும், ஏன் இடைவெளியே
இல்லாமல் போகிறது?

ஒரு நண்பர் என்னிடம் சொன்னார். ‘சாட்டிங்’கில் முன்பின்
தெரியாத ஒரு பெண்ணிடம் பழகி ஒரே மணி நேரத்தில் அவளை, ‘வாடி, போடி’ என்று அழைக்க முடியும்.

அவர் சொன்னதை என்னால் நம்ப முடியவில்லை.
‘செய்து காண்பிக்கவா?’ என்றார். ஒரே மணி நேரத்தில்,
அந்தப் பெண்ணே இவரை, ‘வாடா, போடா’ என்று
சொன்னாள். இவரும் அதற்கு ஏற்றாற்போல், ‘வாடி, போடி!’
ஆனால், வெறும் நட்பு தான்; தப்புத் தண்டா பேச்சு
எதுவும் இல்லை. நண்பருக்கு, 30 வயது இருக்கும்;
முகநுாலில் பிரபலமான ஆளும் இல்லை.
வெறுமனே புகைப்படத்தையும், தன் பயோடேட்டாவையும்
மட்டுமே கொடுத்திருந்தார்.

நண்பர் திருமணமானவர் என்ற விபரமும், அதில் இருந்தது. அந்தப் பெண் திருமணம் ஆகாதவர். இப்படியாக திருமணமான ஒரு ஆணோடு ஒரு பெண் ஒரே மணி நேரத்தில், ‘வாடி, போடி’ அளவுக்குப் பேசி விட முடிகிறது.

‘சாட்டிங்’கின் முடிவில் அது, ‘செல்லம்’ வரை போய் விட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இதற்கு ஒரே காரணம், இணையம் கொடுக்கும் கட்டற்ற சுதந்திரம்.

அந்த சுதந்திரம் எப்படி உருவாகிறது என்பதைப் புரிந்து கொண்டால் இந்த வலைப்பின்னலில் மாட்டிக் கொள்ளாமல் பாதுகாப்பாக இருக்கலாம்.

‘ரியாலிட்டி’ என்றால் நமக்குத் தெரியும்; எதார்த்தம்!
அதேபோல் இன்னொரு, ‘ரியாலிட்டி’ இருக்கிறது.
அதன் பெயர், ‘ஹைப்பர் ரியாலிட்டி!’ அதாவது,
‘ரியாலிட்டி’ போல் இருக்கும்;
ஆனால், ‘ரியாலிட்டி’ இல்லை.

சினிமாவில் நாம் சில உருவங்களைப் பார்க்கிறோம்.
அந்த உருவங்கள் நமக்குப் பரிச்சயமானவை.
உருவங்கள் நகர்கின்றன; பேசுகின்றன; அழுகின்றன;
சிரிக்கின்றன. ஆனால் அவற்றை நாம் தொட முடியாது.
இது தான், ‘ஹைப்பர் ரியாலிட்டி!’

சாட்டிங்கின் போது, ‘வாடா போடா, செல்லம்’
என்று சொல்லத் தயக்கம் அடையாத பல பெண்கள் நேரில் முகம் பார்த்துப் பேசுவதற்குக் கூட தைரியம் இல்லாதவர்களாக இருப்பர்.

காரணம், இணையம், நிழல்; நேர் சந்திப்பு, நிஜம்.

இந்த நிழலுக்கும் நிஜத்துக்கும் உள்ள வித்தியாசத்தைப்
புரிந்து கொண்டால், இணையம் தரும் சுதந்திரத்தை,
நாம் மேலும் நல்ல முறையில் பயன்படுத்திக்
கொள்ள முடியும்

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

14 Responses to பொறுப்புள்ள சாரு நிவேதிதா…..!!!

 1. Vishnu சொல்கிறார்:

  The list of people you follow or support are awesome..
  Charu, Cho, Jeya, Tamilnadu police, Indian army…

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப விஷ்ணு,

   நீங்கள் என் பதிவுகளை தொடர்ந்து படித்து வருபவராக
   இருந்திருந்தால், இந்த கருத்தை பதிவிட்டிருக்க
   மாட்டீர்கள்.

   நான் யாரையும் கண்களை மூடிக்கொண்டு “follow”
   பண்ணுவதும் இல்லை; support பண்ணுவதும் இல்லை.
   (ஆசிரியர் சோ அவர்களையும், திரு.சாரு நிவேதிதாவையும்
   கடுமையாக விமரிசித்து நான் எழுதியவை எல்லாம் இந்த
   தளத்திலேயே இன்னும் இருக்கிண்றன….!!! )

   நான் சுதந்திரமானவன் –
   எந்தவித கட்டுப்பாடும் இல்லாதவன்…
   மனதில் சரியென்று தோன்றுவதை,
   நினைப்பதையெல்லாம் எழுதுபவன்…
   அது தான் என் பலம்….

   இருந்தும், நான் சொல்வதை ஏற்க மறுத்து,
   நீங்கள் சொன்ன கருத்திலேயே நின்றால் –
   தாராளமாக நில்லுங்கள் –
   அது உங்கள் உரிமை…!

   (ஆமாம், இந்த கட்டுரைக்காக, நான்
   சாரு நிவேதிதாவை பாராட்டியது தவறு
   என்று உங்களுக்கு தோன்றுகிறதா என்ன…? )

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 2. மணிச்சிரல் சொல்கிறார்:

  Root Cause. படங்களை பதிவிறக்கம் செய்யும் போது படத்தின் அளவுகளை( resolution) குறைத்தால் நன்றாக இருக்கும். சேமித்த/பதிவிறக்கிய படங்கள் Thumbnails ஆக இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். மனித முகங்கள் இருக்கும் படங்களுக்கான விருப்பம் மற்றும் பகிர்தலை தடை பண்ணினால் பிரச்சனைகளை தவிர்க்க வசதியாக இருக்கும். முகநூல் நிறுவனம் நினைத்தால் பண்ண முடியும்.
  காலத்திற்கேற்ற நல்ல பதிவு. தங்களுக்கும், பதிவை எழுதிய எழுத்தாளருக்கும் நன்றி.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப மணிச்சிரல்,

   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ..!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 3. Srini சொல்கிறார்:

  Sir, எக்கச்சக்கமான
  அனுபவம், நினைப்பதையெல்லாம் அப்படியே எழுத்தில்
  கொண்டு வரக்கூடிய திறமை, படிப்பவர்களை
  வசப்படுத்தும் எழுத்து நடை – இவையெல்லாம் அவரது
  ப்ளஸ் பாயிண்டுகள்….It is also your strength and that’s why you have so many readers for your posts…

  Yes Charu has changed… I have his some old novels… some are “oouve” ragam…. that needs a different mindset… But his blessings are what you have stated above… his style of writing and he can capture in B/W all that he thinks…

  God bless you sir
  Srini

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி ஸ்ரீநி.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 4. Karthik சொல்கிறார்:

  Western World is doing and we are following it. there are always culprits and innocents. Law and enforecement has to be upgraded technically as Western country. Otherwise, it will be difficult.

 5. 'நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  சாரு அவர்கள் நன்றாக எழுதுவார். ‘நிறைய இலக்கியங்கள் படித்தவர். அவர் எழுதிய இக்கட்டுரை போன்று நிறைய ‘நல்லனவற்றை எழுதியுள்ளார். உங்கள் பாராட்டை இந்தக் கட்டுரையைப் பற்றிய விமரிசனம் என்று எல்லோரும் புரிந்துகொள்ளவேண்டும். கடந்த சில வருடங்களாக அவர் மிகவும் மெச்சூர்டாக எழுதுகிறார் எனத் தோன்றுகிறது. எழுத்தை நேசிப்பதற்கும், எழுத்தாளனை நேசிப்பதற்கும், எழுத்தாளனின் சொந்த வாழ்க்கையைப் படித்து அதைவைத்து எழுத்தைப் பற்றிய ஒரு பிம்பத்திற்கு வருவதற்கும் நிறைய வேறுபாடு உள்ளது. சாரு அவர்கள் பாராட்டுக்குரியவர்.

  இருந்தபோதும், அவருடைய விசாலமான அறிவிற்கு, அவர், புதிய தலைமுறை விவாதங்களில் (பெரும்பாலும் நிறையபேர் கும்மியடிக்கும்) கலந்துகொள்வது பயனற்றது எனத் தோன்றுகிறது. அவர் ‘நேருக்கு நேர்’ போன்ற பேட்டிகளில் கலந்துகொண்டால் அவரது பரந்துபட்ட அறிவும் எக்ஸ்பீரியன்ஸும் தெரியவரும்.

 6. நரசிம்மன் சொல்கிறார்:

  இதே சாரு தான், facebook மூலம் தான் பேத்தி வயதில் இருக்கும் பெண்ணிடம் ஆபாசமான பாலியல் வக்கிரத்துடன் பேசியது என்பது இங்கு பலருக்கும் தெரியும். அது ஆதாரப்பூர்வமாக நிரூபணமாகிய பிறகு முன்னுக்குப் பின் முரணாக பேசி சமாளிக்க முயன்று கடைசியில் அதனை நியாயப் படுத்த முயன்றதையும் பார்த்தோம். இப்போது இந்த “சாத்தான்” மறுபடியும் வேதம் ஓதுகின்றது.

 7. selvarajan சொல்கிறார்:

  சாரு : பற்றி பல சமயங்களில் பல்வேறு கருத்துக்கள் — அந்தந்த காலத்திற்கு ஏற்ப வந்துக் கொண்டுதான் இருக்கின்றன — ஆறு ஆண்டுகளுக்கு முன் அப்போதைய சாருவின் நிலைப்பாட்டிற்கு ஏற்ப வந்த இடுக்கையும் … //சாரு நிவேதிதா என்கிற ……. பச்சையாகச் சொல்வதானால் “அயோக்கியத்தனம்”
  Posted on மார்ச் 15, 2010 by vimarisanam – kavirimainthan // — என்றும் —தற்போது அவரிடம் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்த இடுக்கையும் வெளிவருகிற ஒரே தளம் இதுதான் — என்பதை எண்ணி பெருமைப்படலாம் — ” நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் — குற்றமே ” என்பதில் பாகுபாடு காட்டாமல் –வெளிப்படையாக { ஒரே நிலைபாட்டைப் பிடித்து தொங்கி கொண்டு இருக்கும் பலரில் } பதிவிட்டு மற்றவர்களிடமிருந்து ” நிறைய வித்தியாசப்படும் ” திரு .கா.மை . அவர்களும் இந்த தளமும்தான் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது ….
  நாளை { ஜூலை — 15 } — பல உன்னத — உபயோகமான மக்களுக்கு நிரந்தர நன்மையளிக்கும் பல திட்டங்களை போராடி பெற்று ” வளப்படுத்திய ” மாபெரும் தலைவர் — கர்ம வீரர் { அவர் தமிழக மக்களின் நலனில் கருமமே கண்ணாயிருந்தவர் } திரு காமராஜர் அவர்களின் பிறந்த நாள் — அதை நினைவூட்டவும் — அவர் எவ்வளவு எளிமையானவர் என்பதற்கும் — மாபெரும் பொதுக் கூட்டத்தில் யார் ஒருவர் கேட்கும் கேள்விகளுக்கும் தயங்காமல் — தக்க பதிலை அப்போதே கூறும் தன்மையுடையவர் என்பதற்கும் — அய்யா … கா.மை . அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை ” நண்பர்கள் தெரிந்துக் கொள்ள :– இந்த இடுகையை வாசிக்கவும் …. // கடற்கரை கூட்டத்தில் தலைவர் காமராஜரிடம் நான் கேட்ட கேள்வியும், அவர் சொன்ன பதிலும் !
  Posted on ஜூலை 15, 2012 by vimarisanam – kavirimainthan //
  இன்று தமிழகத்தில் உள்ள காங்கிரசார் ” காமராஜர் ஆட்சி அமைப்போம் ” என்று கூறிக் கொண்டே — கூட்டணி வைக்கும் கட்சிகளை — பார்த்தால் …. ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   உங்கள் நினைவூட்டல்களுக்கு மிக்க நன்றி…

   ஆமாம் – காமராஜர் ஆட்சி குறித்து நினைவுபடுத்துகிறீர்களே –
   அடுத்த த.நா. காங்கிரஸ் கட்சித் தலைவர் யாராக
   இருப்பார் – சொல்லுங்கள் பார்ப்போம்… !!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • 'நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

    அனேகமாக திருனாவுக்கரசராக இருக்கலாம். ப.சி. தமிழகத் தலைவராகவும், ராஜ்ஜிய சபா எம்.பியாகவும் ஒரே சமயத்தில் பணியாற்றுவது இயலாது என்பதாலும், ப.சியின் பேச்சு ராஜ்ஜிய சபாவிலும், இந்திய அளவிலும் ஒலிக்கவேண்டும் என்பதாலும் அவருக்குக் கொடுக்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன். பீட்டர் அல்போன்ஸ் இப்போதுதான் தாவி வந்திருப்பதால் உடனடியாகக் கிடைக்காது. வருங்காலம் குஷ்பு கையில்தான். (ஸ்டாலின் தலைவரானால், நிச்சயமாக குஷ்புதான் காங்கிரஸ் தலைவர்). மற்றவர்களை நியமித்தால் அது ஒரு டெம்ப்ரவரி பதவியாகத்தான் இருக்கும். (திருப்பி 6 மாதத்தில் மற்ற கோஷ்டிகள் குற்றப் பத்திரிகை வாசிப்பார்கள்). ஜோதிமணிக்கும் விஜயதரணிக்கும் நல்ல எதிர்காலம் இருக்கிறது. வசந்தகுமார் வருவது, தமிழிசைக்கு அப்புறம்தான்.

   • selvarajan சொல்கிறார்:

    காங்கிரசின் தலைமை – ஒரு பெண் … தமிழக முதல்வர் – ஒரு பெண் … காங்கிரசின் ” பினாமி ” கட்சியின் தமிழகத்து தலைமை – ஒரு பெண் — எனவே தமிழக காங்கிரஸ் தலைமை – ஒரு பெண்ணாகத்தான் இருக்குமோ …. ?

 8. R.Gopalakrishnan சொல்கிறார்:

  Some how my mind is yet to accept that the said person is changed because of his past
  nasty writings. Let us wait.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.