பதவியேற்ற 24 மணிநேரத்தில் 110 பேர் என்கவுண்டர்..!!! இங்கு ஒரு ரோட்ரிகோ டுடேர்தே உருவாக முடியுமா ..!

160517094608_philippines_duterte_512x288_reuters_nocredit

” நான் பதவிக்கு வந்தால் – இந்த அயோக்கியர்கள்
அத்தனை பேரையும் சுட்டுத் தள்ளுவேன் –
அவர்களின் பிணத்தை கடலில் தூக்கி எறிவேன்..
ஆயிரம் பேராகட்டும், பத்தாயிரம் பேராகட்டும் எனக்கு
கவலை இல்லை ”

Rodrigo_Duterte_campaign

– என்று தேர்தலின் போதே வெளிப்படையாக கூறி,
பலமடங்கு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று
அதிபர் பதவிக்கு வந்து –

அடுத்த 24 மணி நேரத்தில் 110 போதை மருந்து
விற்பனையாளர்களை சுட்டுத்தள்ளியதன் விளைவு –

ஆயிரக்கணக்கான ரவுடிகளும், போதைமருந்து
வியாபாரிகளும் – இரண்டு கைகளையும்
தூக்கிக்கொண்டு போய் காணும் இடங்களில் எல்லாம்
போலீசிடமும், ராணுவத்திடமும் சரணடைகிறார்கள்…!!!

– வித்தியாசமான ஒரு தலைவர் – பிலிப்பைன்ஸ்நாட்டின்
புதிய ஜனாதிபதியாக ஜூலை 1-ந்தேதி பதவியேற்ற
ரோட்ரிகோ டுடேர்தே….!!! ( Rodrigo Duterte )

rodrigo-duterte-sworn-in

” பொருளாதாரம் பற்றி எனக்குத் தெரியாது…
இந்த நாட்டின் அறிஞர்களும், பொருளாதார நிபுணர்களும்
அடங்கிய குழுவிடம் அந்த பொறுப்பை விட்டு விடுவேன்.

என் பொறுப்பு – லஞ்சம், கொலை, கொள்ளை, போதை
மருந்து விற்பனை – ஆகியவற்றை அடியோடு ஒழித்து
பெண்கள் சுதந்திரமாக நடமாடக்கூடிய ஒரு பத்திரமான
நாட்டை உருவாகுவதே.

போதை மருந்தை உற்பத்தி செய்பவர்கள்,
விற்பனை செய்பவர்கள் –
பயன்படுத்துபவர்கள்
அத்தனை பேருக்கும் நான் எமனாக இருப்பேன்….

சட்டமன்றங்களோ,
மனித உரிமை அமைப்புகளோ என்ன சொன்னாலும்
அதை நான் பொருட்படுத்தப்போவதில்லை. மக்கள்
எனக்கு அளிக்கும் ஆறு ஆண்டுக்கால அவகாசத்தில்
முதல் ஆறு மாதத்திலேயே, பிலிப்பைன்ஸ் நாட்டை
உலகிலேயே அமைதியான, பத்திரமான இடமாக்குவதே
என் லட்சியம்….!!! ”

அவரது இந்த வாக்குறுதிகளை ஏற்றுக் கொண்டு தான்
பிலிப்பைன்ஸ் மக்கள் தங்கள் ஜனாதிபதியாக
டுடேர்தே-யை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

இந்த டுடேர்தையை அவரது மக்கள் எப்படி
புரிந்து கொண்டார்கள்…?

கேட்கவே வித்தியாசமாக இருக்கும் அவரது பின்னணி –
நாம் அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள
வேண்டிய ஒன்று..

71 வயதாகும் டுடெர்தே, பிலிப்பைன்ஸில் –
நாட்டுப்புறத்தில், எளிய குடும்பத்தில் பிறந்தவர்.
தட்டுத்தடுமாறி, உருண்டு புரண்டு – எப்படியோ
ஒரு வக்கீல் பட்டம் பெறும் அளவிற்கு படித்து விட்டார்.

5-6 ஆண்டுகள் வெவ்வேறு தொழில்களில் ஈடுபட்டிருந்தவர்,
பின்னர் அரசியலில் நுழைந்தார். தனது ஏரியாவான
மின்டனாவோ-வில், Davao என்கிற ஊரின் மேயராகப்
பொறுப்பேற்றார். மீண்டும் மீண்டும், மீண்டும் மீண்டும்
அந்த ஊர் மக்களால் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட
டுடெர்தே, 22 ஆண்டுகளுக்கு அவரது மக்களால் விரும்பி
தேர்ந்தெடுக்கப்பட்டு மேயர் பதவியில் இருந்தார்.

போதை மருந்து வியாபாரிகளும், சூதாட்ட கிடங்குகளும்,
ரவுடிகளுமாக நிறைந்திருந்த ஊரை சுத்தம் செய்ய
ஆரம்பித்தார். குறி பார்த்து சுடக்கூடிய ஷார்ப் ஷூட்டர்களை
தன் காவல் படையில் சேர்த்துக் கொண்டார். பல சமயம்
அவரே தனது மோட்டார் பைக்கில், இரவு நேரங்களில்
ரோந்து வருவார். கண்ணில் படும் போதை வியாபாரிகள்,
ரவுடிகள் அனைவரும் குறி பார்த்து சுடப்பட்டு
கொல்லப்பட்டனர். குற்றவாளிகள் நடுத்தெருவில்
வேட்டையாடப்பட்டனர். தப்பிக்க முயன்றவர்கள்,
பிடிபட்ட பிறகு நரக வேதனைக்கு உள்ளாயினர்.

அவரது பதவிக்காலத்தில் சுமார்
1400 பேர் என்கவுண்டர்களில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
விளைவு – ஊர் சுத்தமாகியது. டுடெர்தேயின் புகழ்
பிலிப்பைன்ஸ் நாடு முழுவதும் பரவியது…!!!

உலகிலேயே பத்திரமான ஊர்களில் 4வது இடமாக
மின்டனாவோ-Davao நகரம் பெயர் பெற்றது.

சொந்த ஊரில் அவர் நிகழ்த்திய சாதனைகளின்
விளைவாக, பிலிப்பைன்ஸ் நாட்டின்
மத்திய அரசில் அமைச்சராக சேரும்படி
அவருக்கு பலமுறை அழைப்பு விடுக்கப்பட்டது.
குறைந்த பட்சம் 4 வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அத்தகைய
அழைப்புகளை நிராகரித்தார் டுடெர்தே.

இறுதியில், என்ன தோன்றியதோ தெரியவில்லை –
கடந்த ஆண்டு 2015-ல் அடுத்த ஜனாதிபதி தேர்தலில்
தான் நிற்கப்போவதாக அறிவித்தார்…

அவரது அறிவிப்பை கேட்டதுமே பிலிப்பைன்ஸ் நாடே
பரபரப்பினால் பற்றிக் கொண்டது. கருப்பு சந்தைக்காரர்கள்,
லஞ்ச ஊழல் சக்கரவர்த்திகள், அரசியல்வாதிகளின்
பின்னால் நிற்கும் ஊடகங்கள் – அத்தனையும் அவரின்
நெகடிவ் பக்கத்தை விரிவாக்கி காண்பித்தன –
மக்களை பயமுருத்தின…

டுடெர்தே சட்டத்தை மதிக்க மாட்டார்…
நீதிமன்றங்களை மதிக்க மாட்டார்…
சட்டவிரோதமான கொலைகள் நிகழும் ….
மனித உரிமைகள் நசுக்கப்படும் –
என்றெல்லாம் பிரச்சாரம் செய்யப்பட்டது.

தன் பங்குக்கு டுதெர்தே – நேரிடையாகவே இதை
உறுதிசெய்வது போல் பேசினார்….ஆறு மாதங்களில்
அத்தனை கொடியவர்களும் சுட்டுக் கொல்லப்படுவார்கள்…
அவர்கள் பிணங்கள் சமுத்திரத்தில் விட்டுக் கடாசப்படும்
என்றெல்லாம் பேசினார்….

பரபரப்பாக நிகழ்ந்த தேர்தலின் முடிவில் –
எதிர் வேட்பாளரான அன்றைய ஜனாதிபதியை விட
இரண்டு மடங்கு ஓட்டு பெற்று வெற்றி பெற்றார்
டுடெர்தே….

ஜூலை 1 – பதவி ஏற்றார் –
முதல் தகவல் – 110 போதை மருந்து விற்பனையாளர்கள்
சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஆயிரக்கணக்கான போதை மருந்து விற்பனையாளர்களும்,
ரவுடிகளும், முன்னாள் குற்றவாளிகளும் –
போலீசில் சரணடந்தனர்….

இன்னமும் கணக்கெடுப்பு முடியவில்லை….
கவலைப்படாமல் சுடுங்கள் –
நாட்டை சுத்தம் செய்யுங்கள் –
உங்கள் செயலின் விளைவுகளுக்கு
நான் பொறுப்பேற்கிறேன்…என்று
காவல் படைக்கும், ராணுவத்திற்கும்
உறுதி அளித்திருக்கிறார் டுடெர்தே…!

வழக்கமாக ஆடம்பரமாக நடைபெறும் ஜனாதிபதியின்
பதவியேற்பு விழா – இந்த முறை வித்தியாசமாக
வெகு எளிமையாக நடந்தது. வெறும் 600 பேர் மட்டுமே
பங்கேற்ற விருந்தில், மது பரிமாற்றம் கிடையாது.
மிகச்சாதாரணமான மெனு.

டுடெர்தே – மிக எளிமையாகவே உடையணிபவர்.
பதவியேற்பின் போதும் – ஜனாதிபதிக்கான பாரம்பரிய
எம்பிராய்டரி உடை, டை – ஒன்றுமே கிடையாது.

ஜனாதிபதிக்குரிய புல்லெட் ப்ரூப் காரோ, காவலர்களோ
தனக்கு தேவையில்லை என்று கூறி விட்டாராம்.
ஒரு சாதாரண பிக்கப் வேன் தனக்கு போதுமானது
என்று கூறி விட்டார்….

பிலிப்பைன்ஸ் பொருளாதார ரீதியாக வளர்ச்சி
அடைந்து கொண்டிருந்தாலும் கூட, அந்த வளர்ச்சியின்
பலன் ஒரு சில செல்வந்தர் குடும்பங்களையே
சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையை நான்
அனுமதிக்கப்போவதில்லை. நாட்டின் வளர்ச்சியின் பலன்
அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டும்.
நாட்டின் செல்வங்கள் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட
வேண்டும். ஊர்ப்புறங்களில் நிறைய வேலை வாய்ப்புகள்
உருவாக்கப்பட வேண்டும் – இதெல்லாம் டுடெர்தே-யின்
கனவுகள்….

பிலிப்பைன்ஸின் எதிர்காலம் – நாம் ஆவலுடன்
உற்று கவனிக்க வேண்டிய ஒன்றாக இருக்கும்.

( ஆமாம் – நம்ம ஊர்ப்பக்கம் எல்லாம் டுடெர்தே மாதிரி
யாராவது உருவாக வாய்ப்பு உண்டா…?…..

நான் இந்த கேள்வியை கேட்டதற்கே எத்தனை
மனித உரிமை ஆர்வலர்கள் என் மீது பாயப்போகிறார்களோ
தெரியவில்லை…. 🙂 🙂 )

 

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

13 Responses to பதவியேற்ற 24 மணிநேரத்தில் 110 பேர் என்கவுண்டர்..!!! இங்கு ஒரு ரோட்ரிகோ டுடேர்தே உருவாக முடியுமா ..!

 1. 'நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  மூன்று வாரங்களுக்கு முன்னால் நான் மனிலாவில் இருந்தேன். எனக்கு ஒரு நாள் முழுவதும் டாக்ஸி ஓட்டிய நல்ல மனிதர் என்னிடம் இவருடைய படத்தைக் காட்டி அவருடைய பதவி ஏற்பை எந்த அளவு எதிர்பார்க்கிறார்கள் என்று சொன்னார். அங்கே சிக்னலில், நம் ஊரைப்போன்று நிறைய குழந்தை, பெண் ஒரு குழந்தையோடு பிச்சை எடுத்துக்கொண்டிருந்ததைப் பார்த்தேன். அவர் அதைக்காட்டி, இதெல்லாம் மாஃபியா (நம் ஊரில் நடப்பதைப் போன்றே). புது அதிபர் வந்தவுடன் இதையெல்லாம் களையெடுத்துவிடுவார் என்று நம்பிக்கையோடு சொன்னார். இதுபோன்றே கடுமையாக இருந்த முன்னாள் அதிபர் மார்கோஸ் காலப்போக்கில் சர்வாதிகாரியாக ஆகி, 20+ வருடம் பிலிப்பைன்ஸில் கோலோச்சினார் (கடைசியில் சேர்த்த சொத்தையெல்லாம், அதாவது கொள்ளையடித்த, எடுத்துக்கொண்டு அமெரிக்கா ஓடினார். அவர் மனைவி இமெல்டா மார்கோசின் சுருட்டல்களெல்லாம் வெளிவந்து, பின்பு சில வருடங்களாக அவர் பிலிப்பைன்ஸிலேயே கட்சிப் பதவியில் இருந்ததெல்லாம் வரலாறு). ஆனாலும் 40% மக்கள் மார்கோசின்மேல் இன்னமும் மதிப்பு வைத்துள்ளனர். அவர் காலத்தைவிட இப்போது சீரழிந்துவிட்டதாக எண்ணுகின்றனர். மார்கோஸ் இறந்தபின்பு அவர் உடல் பிலிப்பைன்ஸ் வந்தது. (அவர் ஆதிகாலத்தில் ராணுவத்தில் இருந்தவர்). அவரது உடலை ராணுவச் சேவை புரிந்தவர்களுக்கு உரிய இடத்தில் புதைப்பதற்கு அரசாங்கம் வெகு காலமாக அனுமதி தரவில்லை. உடலை அவரது கிராமத்தில் பாடம் செய்து இதுவரை வைத்திருந்தார்கள். இந்தப் புதிய அதிபர், தேர்தலின்போதே, மார்கோஸை ராணுவச் சேவை புரிந்தவர்களுக்கு உரிய இடத்தில் புதைப்பதற்கு அனுமதி வழங்குவேன் என்று சொல்லியிருந்தார். அனேகமாக இந்த மாதத்தில் மார்கோஸைப் புதைத்து கல்லறை எழுப்புவார்கள். Means, புதிய அதிபர் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு காட்டுவதில்லை என்ற பிம்பம், எதிர்பார்ப்பு மக்களிடம் இருக்கிறது. இவருடைய ஆறு வருட சேவை, பிலிப்பைன்சுக்கு நலம் புரிவதாக இருக்கட்டும்.

  மார்கோஸுக்கு அப்புறம், கொரஸா அகினோ அதிபராகப் பதவி ஏற்றதும் (அதற்கு முன்பு பிலிப்பைன்ஸில் பயங்கரக் கலவரம் எல்லாம் நடந்தது. மக்கள் மார்கோசுக்கு எதிராகத் திரண்டனர். மார்கோஸ் முடிவில் அமெரிக்காவில் தஞ்சம் புக வேண்டி வந்தது) எந்த அதிபரும் ஒரு முறை மட்டுமே பதவி வகிக்க முடியும், அதுவும் 6 வருடங்களுக்கு என்று சட்டத்தைத் திருத்தினார். ஆனால், பையனோ அல்லது உறவினர்களோ பதவிக்கு நிற்பதில் தடையில்லை. தேர்ந்தெடுக்கப்பட்டால் ஒரே ஒரு முறைதான் அதிபர் பதவி. அமெரிக்காவில், 2 முறை மட்டுமே. நமக்கும் ஒரு முறையே என்று எல்லா மட்டத்திலும் (பிரதமர், முதலமைச்சர்) சட்டம் வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இது உண்மையிலேயே மிகவும் நல்ல திட்டம். இதே போன்று, முதலமைச்சருக்கு 65 வயது, பிரதமருக்கு 70 வயது என்று வயது வரம்பும் கண்டிப்பாகக் கொண்டுவரவேண்டும். (பிரதமர் என்பவர் நாடறிந்தவராவதற்கும், மெச்சூரிட்டிக்காகவும்தான் 70. அதையும் 65 ஆக்கினால் தவறில்லை).

  Sorry to deviate from your article’s theme.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நெல்லைத்தமிழன்,

   உங்கள் நேரடி அனுபவம் சுவையாக இருக்கிறது.
   நீங்கள் தந்துள்ள தகவல்களுக்கு நன்றி.
   நீங்கள் திசை மாறவில்லை….
   இத்தகைய மேலதிக தகவல்கள் படிப்பவர்கள் அனைவருக்குமே
   உதவியாக இருக்கும். ….!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

  • நல்ல தகவல்கள்தான் இமெல்டா மார்க்கோஸ் செருப்பு மட்டும் 2000 ஜோடிகள் வைத்திருந்து மிக மிக ஆடம்பரமாக வாழ்ந்தவர் ஆகவே முடிவில் மக்கள் அவரை கல்லால் அடித்து நாட்டை விட்டு விரட்டினார்கள்

 2. Parthiban சொல்கிறார்:

  Dear K.M. sir,

  Last week I also heard the news about new President taking over
  charge in Phillippines. But I never knew that the background
  will be this much interesting. You have a different view of
  approaching things. Thanks a lot for the information.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   பார்த்திபன்,

   எனக்கு என்னவோ இந்த கேரக்டரை (டுடெர்தே )
   மிகவும் பிடிக்கிறது.
   சாதாரணமாக நாமெல்லாம் சினிமாக்களில் தான்
   இத்தகைய கேரக்டர்களைப் பார்க்க முடியும்.

   இது போல் செயல்படுவதற்கு அசாதாரண துணிச்சல்
   தேவைப்படும். எக்கச்சக்கமான பின் விளைவுகளை
   சந்திக்க நேரிடும்… ஏகப்பட்ட மாஃபியா கும்பல்களின்
   எதிர்ப்புகளால், எப்போது வேண்டுமானாலும்
   உயிருக்கு ஆபத்து ஏற்படும்.

   சும்மா ஜம்பத்திற்காகவும், வறட்டு கவுரவத்திற்காகவும்,
   கமாண்டோ படையை புடைசூழ நிகழ்ச்சிகளில்
   கலந்து கொள்ளும் நம் தலைவர்களைப் பார்க்கும்போது
   எரிச்சலாக இருக்கிறது.

   நிஜமான ஹீரோக்களை நாம் இங்கு பார்க்க முடிவதில்லை….!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 3. Sridhar சொல்கிறார்:

  http://www.dinamalar.com/news_detail.asp?id=1563137

  The video in the news shows what was done by டுடெர்தே can be done here also if one has the will to discharge the duty for which he/she is appointed diligently.

 4. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  ஐயா
  கற்பழிச்சா தையல் மெஷினும் பணமும் கொடுக்கும் சமுதாயம்
  25 ஆண்டுகளாக எதற்காக ஜெயிலில் இருக்கிறார்கள் என்பதே தெரியாமல் இருக்கும் சமுதாயம்
  சிறுவர் சிறுமியர்களுக்கு போதை மிட்டாய் விற்கும் சமுதாயம்
  ஆன்லைனில் சீட்டு விளையாடி கை நிறைய சம்பாதிக்கலாம் என்று தொகா-வில் விளம்பரம் பார்க்கும் சமுதாயம்
  தூக்கியெறியப்பட்ட நாயை தத்தெடுக்க போட்டிபோடுபவர் அதிகம் ஆனால் முதியோரை தத்தெடுக்கவோ, அரவணைக்கவோ அல்லது வீட்டிலேயே வைத்துக்கொள்ள எண்ணமில்லாத சமுதாயம்
  வீட்டை சுத்தமாக்கி தெருக்களை அசுத்தமாக்கும் சமுதாயம்
  எனக்கு இரண்டு கண்கள் போனாலும் பரவாயில்லை அடுத்தவனுக்கு ஒரு கண்ணாவது பாதிக்கவேண்டும் என்று எண்ணும் சமுதாயத்தில்…
  காந்தியும் வந்தார் சென்றார்
  ஹிட்லரும் வந்தார் சென்றார்
  அன்னை தெரஸாவும் வந்தார் சென்றார்
  “இற்றில்லாவிட்டாலும் நாளையாவது மாறும்”
  நம்பிக்கைதான் வாழ்க்கை!

 5. Jayakumar சொல்கிறார்:

  அதாவது டுடெர்தே பிலிப்பைன்ஸ் நாடு ரஜினி.

  Jayakumar

 6. bandhu சொல்கிறார்:

  பார்ப்பதற்கு சரி போல தோன்றினாலும், நாளை இவரும் மார்கோஸ் போல மாறமாட்டார் என்று என்ன நிச்சயம்? அப்போது இதே என்கௌண்டர் ஆயுதம் அரசியல் எதிரிகளுக்கு எதிரானதாக மாறிவிடாதா?

 7. LVISS சொல்கிறார்:

  Here even a genuine encounter with a terrorist gets politicised – You need a person with political will to do the things the Philipines President is doing –Even in an issue as serious as terrorism our we do not speak in one voice–

 8. புது வசந்தம் சொல்கிறார்:

  /*டுடெர்தே – மிக எளிமையாகவே உடையணிபவர்.
  பதவியேற்பின் போதும் – ஜனாதிபதிக்கான பாரம்பரிய
  எம்பிராய்டரி உடை, டை – ஒன்றுமே கிடையாது.*/ – போகிறபோக்கில் நாசுக்காக ஒன்றை தெரியப்படுத்தி விட்டர்கள். இங்கே, வெறும் பேச்சும்,நாளுக்கு ஐந்து சட்டையும்….

 9. Seshan சொல்கிறார்:

  Guns,Goons & Presidency…..good AV…….real hero……………………………..not a reel hero …

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.