“ஜெகத்” தில் தேள் கொட்டினால் – கோபாலபுரத்தில் நெறி கட்டுவதேன்…?

.

.

முதலில் ஒரு “தமிழ் ஒன்-இந்தியா” செய்தி –

ஜெகத்ரட்சகன் வீட்டில் 40 கிலோ தங்கம், ரூ18 கோடி
பறிமுதல்- ரூ600 கோடி சொத்து குவிப்பு….

ஜெகத்ரட்சகன் வீட்டில் கடந்த 3 நாட்களாக நடைபெற்ற
வருமான வரி சோதனை நிறைவடைந்தது. இச்சோதனையில்
கணக்கில் வராத 40 கிலோ தங்கம் மற்றும் ரூ18 கோடி
ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

( கீழேயுள்ள சொத்து பட்டியலைப் பார்த்து அதிர்ச்சியடைய
வேண்டாம் என்று படிப்பவர்களுக்கு முன்னதாகவே
எச்சரிக்கை செய்யப்படுகிறது…! )

இவருக்கு சொந்தமான சென்னை
மற்றும் புதுச்சேரியில் உள்ள –

கல்வி நிலையங்கள்,
மருத்துவ கல்லூரிகள்,
ஓட்டல், வீடுகள்
ஆகியவற்றில் வருமானவரி துறை அதிகாரிகள் கடந்த
3 நாட்களாக அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். 100க்கும்
மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் பல்வேறு
குழுக்களாக பிரிந்து கடந்த 3 நாட்களாக சோதனை நடத்தினர்.

சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள –
ஜெகத்ரட்சகன் வீடு
மற்றும் அடையாறில் உள்ள
வீடு, அலுவலகம், தி.நகரில் உள்ள
அக்கார்டு மெட்ரோபாலிட்டன் நட்சத்திர ஹோட்டல்,
குரோம்பேட்டையில் உள்ள
பாலாஜி மருத்துவ கல்லூரி மருத்துவமனை,
கிழக்கு தாம்பரத்தில் உள்ள பாரத் பல்கலைக்கழகம்,
புதுச்சேரியில் உள்ள லட்சுமி நாராயணன் மருத்துவக்கல்லூரி

மற்றும்
காஞ்சிபுரத்தில் உள்ள மதுபான ஆலை
உள்ளிட்ட 40 இடங்களில் வருமான
வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இச்சோதனையில் கணக்கில் வராத ரூ18 கோடி ரொக்க
பணம் கைப்பற்றப்பட்டது. மேலும் 40 கிலோ தங்க நகைகளும்
கைப்பற்றப்பட்டுள்ளன.

( http://tamil.oneindia.com/news/tamilnadu/i-t-raids-yield-rs-18-crore-unaccounted-cash-40-kg-gold-258153.html )

அடுத்து இந்த ரீ-ஆக் ஷன் செய்தி –

ஜெகத்ரட்சகனை வீட்டில் சிறைக் கைதி போல அடைத்து
வைத்தது முறைதானா ? கருணாநிதி

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஜெகத்ரட்சகன் இல்லத்தில் கடந்த மூன்று தினங்களாக
வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவதாகக்
கூறி மூன்று நாட்களாக அவரை சிறைக் கைதி போல
வீட்டிலேயே அடைத்து வைத்திருப்பதாகச்
செய்திகள் வெளிவந்துள்ளன.

கடந்த மூன்று நாட்களாக ஜெகத்ரட்சகனை,
அவருடைய உடல் நிலையைக் கூட கருத்தில்
கொள்ளாமல் வீட்டிலேயே அடைத்து வைத்திருப்பது
சட்டத்துக்குப் புறம்பான வகையில், ஒருவருடைய
அன்றாடச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவதாகும்
(illegal Detention).

வருமான வரித்துறையினரின் நடவடிக்கை
வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

( http://tamil.oneindia.com/news/tamilnadu/karunanidhi-statement-about-on-jagathrakshakan-residence-it-258143.html )

————————————————————————

ஒரு இடத்தில் வருமான வரித்துறையினர்
“ரெய்டு” நடத்தும்போது, சம்பந்தப்பட்ட இடத்திலிருந்து
யாரும் வெளியே செல்வதோ, வெளியிலிருந்து
யாரும் உள்ளே வருவதோ –
சட்டப்படியே தடை செய்யப்படுகிறது.

இதை யாரேனும் மீற முயற்சி செய்தால்,
அவர்களை உடனடியாக கைது செய்யவும்
அதிகாரிகளுக்கு சட்டப்படியான அதிகாரம் இருக்கிறது.

– வருமான வரியே கட்டாத பிச்சைக்காரருக்கு கூட
தெரிந்திருக்கும் இந்த சாதாரண விதிமுறைகள் –

5 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக
பதவியில் இருந்த கலைஞருக்கு தெரியாதா என்ன …?

பின் ஏன் இப்படி பதறித் துடிக்கிறார்…..?

யோசித்தால் புரிகிறது ….!
தன் முதலீட்டுக்கு ஆபத்து வந்தால்,
எந்த முதலாளியும் பதறத்தானே செய்வார்….?

தனக்கு வேண்டப்பட்டவர் ஒருவர் வீட்டிலிருந்து
கோடிக்கணக்கில் கருப்புப்பணம்
கண்டுபிடிக்கப்படும்போது,
வெட்கப்பட வேண்டிய ஒருவர் –

ரெய்டு நடந்து கருப்புப்பணம் கைப்பற்றப்படும்போது,
பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் என்கிற
முறையில் அதனை வரவேற்க வேண்டிய ஒருவர் –

இப்படி பதறித்துடிக்க காரணம் என்ன ?
அவர் என்ன இவருக்கு சொந்தமா பந்தமா –
என்று யோசிக்கும்போது – தோன்றுவது

சொந்த பந்தமில்லை –
ஆனால் ஒருவேளை –

சொத்தில் பந்தம் இருக்கலாமோ என்கிற ஐயம்….

———————————–

இந்த வீடியோவை பார்த்தால் “பந்தம்” ஓரளவு புரியலாம்….
” கோபாலபுரத்தில்ஏழுமலையானே எழுந்தருளி
இருக்கிறார் ” என்று சொல்லி –
இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்தவர் மேற்படி “பக்தர்” தான்…!!!

இப்போது ரெய்டு செய்தி வெளிவந்த பிறகு,
ஏழுமலையானைப் பற்றி
நிறைய பேருக்கு ” புதிய சிந்தனைகள் ” ஏற்படுமே…!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to “ஜெகத்” தில் தேள் கொட்டினால் – கோபாலபுரத்தில் நெறி கட்டுவதேன்…?

 1. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  பார்ட்னருக்கு கஷ்டம் வரும்போது இன்னொரு பார்ட்னர் குரல்கொடுப்பது இயல்புதானே. எப்படி பார்ட்னர்ஷிப் என்பது ஆராய்ச்சிக்கு உரியது. அது சாராய ஆலையில் பிரெசென்டேஜாக இருக்கலாம், அல்லது கப்பம் கட்டுவதாக இருக்கலாம். தெரிந்தவர்கள் சொல்லலாம்.

 2. selvarajan சொல்கிறார்:

  அன்று ஒரு பெண் என்றும் பாராமல் ” சிறையில் அடைத்துவிட்டு ” – அவரது வீட்டில் சோதனை போட்டதை ரசித்த தலைவர் —
  தற்போது என்னமா .. பொங்குறார் … ” பாசக்கார தலைவர் ” … ? அய்யகோ … என்ன செய்வேன் — பொறுப்பாக சமஸ்கிருத மந்திரங்களை ஓத — திருப்பதியில் இருந்து ஆட்களை பிடித்து வந்து — எனது மனம் குளிர — கண்மூடி ரசிக்க வைத்த எனது தொண்டன் — ஜெகஜ்ஜால கில்லாடிக்கா — இந்தநிலைமை — ? அராஜகம் தலைத் தூக்கி ஆடுகிறது — துளி அளவு கணக்கு காட்டாதது — தப்பா … ? // தேவையான எண்ணிக்கையில் அதிகாரிகளை அனுப்பி சோதனையை விரைவுபடுத்தாமல் // இருந்தது தான் — பெரும் கவலையாக தெரிகிறது — தலீவருக்கு ….!!!

 3. Ilango சொல்கிறார்:

  இதுவும் ஒரு செய்தி –

  ‘வருமானவரித் துறையினர் ஜெகத்ரட்சகனை யாரும் சந்திக்கவிடவில்லை. அவரை சந்திக்கச் சென்றவர்களிடம்,
  ’நீங்கள் உள்ளே சென்று சந்திக்கலாம். ஆனால் வெளியே
  திரும்பி வரமுடியாது’ என்று கூறியுள்ளனர். ஜெகத்ரட்சகனிடம் கருணாநிதி தொலைபேசிமூலம் பேச முற்பட்டார். ஆனால் முடியவில்லை. ஜெகத்ரட்சகனை சந்திக்க ஒருவரை நேரில் அனுப்பினார். அவரிடமும் போனால் திரும்ப வெளிய வர அனுமதியில்லை என்று வருமானவரித் துறையினர்
  கூறிவிட்டனர். அதன்பின் தான் காட்டமாக அறிக்கை
  வெளியிட்டார் கருணாநிதி.

 4. paamaranselvarajan சொல்கிறார்:

  அஞ்சலகத்தில் ” கங்கா தீர்த்தம் ” விற்பது ….?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   “அசட்டுத்தனம்” …
   அதை நான் வேறு
   சொல்ல வேண்டுமா நண்பரே.. ? ….? 🙂 🙂

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 5. CHANDRAA சொல்கிறார்:

  JI of late kalaignar and stalin have been lamenting the defeat in the elections
  even though two months were over after the elections
  better kalaignar and stalin consult a psychiatrist for their depressions
  And jagat has been the TRUSTED TREASURER
  So karunas grief increases tremendously

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.