திரு.சுப்ரமணியன் சுவாமியின் ஒரு நியாயமான கோபம்…!!!

.

.

சில நாட்களுக்கு முன்னர் –
” சு.சுவாமியின் அடுத்த அட்டாக் – குறி யார் –
கலைஞர்..?, ப.சி..?, ஷக்திகாந்த தாஸ் ….? (11/07/2016)
என்கிற தலைப்பில் இந்த தளத்தில் ஒரு இடுகை வந்தது.

அதில் சு.சுவாமிக்கு திரு.ஷக்திகாந்த தாஸ் மீது
ஏன் கோபம் என்று லேசாக சுட்டிக் காட்டி இருந்தேன்…

ஏன் அந்த கோபம் என்பது குறித்த இன்னும் சில
விவரங்கள் இங்கே –

ஏர்செல்-மேக்சிஸ் விவகாரத்தில், மாறன் சகோதரர்களின்
மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை
நீண்ண்ண்ண்ண்ண்ட காலமாக நடந்து வருகிறது.

இதில் ஒரு பகுதியாக, இந்தியாவில் FIPB -( வெளிநாட்டு
நிறுவனங்களின் முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கும்
குழுவி ) தலைவராக பொறுப்பு வகித்து வந்த –
அக்கால நிதியமைச்சர் திரு.ப.சி.அவர்கள் மீதும் சில
முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார் கூறி இருந்தார்
திரு.சு.சுவாமி.

2006-ல் FIPB Chairperson என்கிற பொறுப்பில், அவருக்கு –
600 கோடி ரூபாய் வரையிலான திட்டங்களுக்கு மட்டும்
தான் அனுமதியளிக்க சட்டப்படியான அதிகாரம் இருந்தது.

ஆனால், அந்த முதலீட்டின் மதிப்பு 3600 கோடிக்கு மேல்
என்பதால், அந்த திட்டம் (CCEA) Cabinet Committee on
Economic Affairs என்கிற கேபினட் அமைச்சர்கள்
அடங்கிய உயர் அதிகாரமுள்ள குழுவிற்குத்தான்
அனுமதிக்காக அனுப்பப்பட்டு இருக்க வேண்டும்.
அப்படிச் செய்யப்படவில்லை… திரு.ப.சி. தன் சொந்த
விருப்பங்கள் காரணமாக, உயர் மட்ட கமிட்டிக்கு
அனுப்பாமல், அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி,
தானே, தன் அளவிலேயே அனுமதியளித்து விட்டார்
என்பது திரு.சு.சுவாமியின் புகார்.

இந்த புகார் பரிசீலிக்கப்பட வேண்டுமென்றால், இது குறித்த
ஆவணங்கள், மத்திய அரசின் Department of Economic
Affairs-ல் இருந்து தான் பெறப்பட வேண்டும்.
நீதிமன்றத்திற்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பில்
இருந்த சிபிஐ, இது குறித்த ஆவணங்களை அனுப்பச்
சொல்லி திரும்பத் திரும்ப Department of Economic
Affairs-யிடம் வற்புறுத்திக் கொண்டே இருந்தது.
ஆனால், எதுவும் நகரவில்லை ( பழைய boss- க்கு
எதிரான விஷயங்களில் உதவ அவர்களுக்கு
விருப்பமில்லை போலும்…. )

அலுத்துப்போன சிபிஐ, Department of Economic
Affairs-ன் செயலாளராக பொறுப்பு வகித்து வந்த
திரு.ஷக்திகாந்த தாஸ் அவர்களுக்கு ஒரு கடிதத்தை
அனுப்பி விட்டு, கோர்ட்டில் தாமதம் எங்களால் அல்ல
என்று சொல்லி தப்பித்துக் கொண்டது.

கடிதத்தின் நகல் கீழே –

letter to shri SK das

இப்படி ஒரு கடிதம் போயும், திரு.ஷக்திகாந்த தாஸ் –
தனது பழைய “எஜமானருக்கு ” துணையாகவே
நின்றதால் ஏற்பட்ட கடுப்பு தான் திரு.சு.சுவாமிக்கு –

அதன் விளைவே 100 ஏக்கர் நில விவகாரம்
வெளிச்சத்திற்கு வந்தது….இந்த புகார், மேற்கொண்டு
எந்த அளவிற்கு வளர்ச்சி பெறும் என்பது திரு.சு.சுவாமியின்
விருப்பு, வெறுப்புகளை பொருத்தே இருக்கும்….!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

One Response to திரு.சுப்ரமணியன் சுவாமியின் ஒரு நியாயமான கோபம்…!!!

 1. srinivasanmurugesan சொல்கிறார்:

  நமக்கு இப்படி ஒரு ஆட்சியாளர் கிடைப்பாரா என்றுதான் நினைக்க தோன்றுகிறது.
  இன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா ?

  பதவியேற்ற 24 மணிநேரத்தில் 110 பேர் என்கவுண்டர்..!!! இங்கு ஒரு ரோட்ரிகோ டுடேர்தே உருவாக முடியுமா ..!

  ” நான் பதவிக்கு வந்தால் – இந்த அயோக்கியர்கள்
  அத்தனை பேரையும் சுட்டுத் தள்ளுவேன் –
  அவர்களின் பிணத்தை கடலில் தூக்கி எறிவேன்..
  ஆயிரம் பேராகட்டும், பத்தாயிரம் பேராகட்டும் எனக்கு
  கவலை இல்லை ”

  – என்று தேர்தலின் போதே வெளிப்படையாக கூறி,
  பலமடங்கு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று
  அதிபர் பதவிக்கு வந்து –

  அடுத்த 24 மணி நேரத்தில் 110 போதை மருந்து
  விற்பனையாளர்களை சுட்டுத்தள்ளியதன் விளைவு –

  ஆயிரக்கணக்கான ரவுடிகளும், போதைமருந்து
  வியாபாரிகளும் – இரண்டு கைகளையும்
  தூக்கிக்கொண்டு போய் காணும் இடங்களில் எல்லாம்
  போலீசிடமும், ராணுவத்திடமும் சரணடைகிறார்கள்…!!!

  – வித்தியாசமான ஒரு தலைவர் – பிலிப்பைன்ஸ்நாட்டின்
  புதிய ஜனாதிபதியாக ஜூலை 1-ந்தேதி பதவியேற்ற
  ரோட்ரிகோ டுடேர்தே….!!! ( Rodrigo Duterte )

  ” பொருளாதாரம் பற்றி எனக்குத் தெரியாது…
  இந்த நாட்டின் அறிஞர்களும், பொருளாதார நிபுணர்களும்
  அடங்கிய குழுவிடம் அந்த பொறுப்பை விட்டு விடுவேன்.

  என் பொறுப்பு – லஞ்சம், கொலை, கொள்ளை, போதை
  மருந்து விற்பனை – ஆகியவற்றை அடியோடு ஒழித்து
  பெண்கள் சுதந்திரமாக நடமாடக்கூடிய ஒரு பத்திரமான
  நாட்டை உருவாகுவதே.

  போதை மருந்தை உற்பத்தி செய்பவர்கள்,
  விற்பனை செய்பவர்கள் –
  பயன்படுத்துபவர்கள்
  அத்தனை பேருக்கும் நான் எமனாக இருப்பேன்….

  சட்டமன்றங்களோ,
  மனித உரிமை அமைப்புகளோ என்ன சொன்னாலும்
  அதை நான் பொருட்படுத்தப்போவதில்லை. மக்கள்
  எனக்கு அளிக்கும் ஆறு ஆண்டுக்கால அவகாசத்தில்
  முதல் ஆறு மாதத்திலேயே, பிலிப்பைன்ஸ் நாட்டை
  உலகிலேயே அமைதியான, பத்திரமான இடமாக்குவதே
  என் லட்சியம்….!!! ”

  அவரது இந்த வாக்குறுதிகளை ஏற்றுக் கொண்டு தான்
  பிலிப்பைன்ஸ் மக்கள் தங்கள் ஜனாதிபதியாக
  டுடேர்தே-யை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

  இந்த டுடேர்தையை அவரது மக்கள் எப்படி
  புரிந்து கொண்டார்கள்…?

  கேட்கவே வித்தியாசமாக இருக்கும் அவரது பின்னணி –
  நாம் அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள
  வேண்டிய ஒன்று..

  71 வயதாகும் டுடெர்தே, பிலிப்பைன்ஸில் –
  நாட்டுப்புறத்தில், எளிய குடும்பத்தில் பிறந்தவர்.
  தட்டுத்தடுமாறி, உருண்டு புரண்டு – எப்படியோ
  ஒரு வக்கீல் பட்டம் பெறும் அளவிற்கு படித்து விட்டார்.

  5-6 ஆண்டுகள் வெவ்வேறு தொழில்களில் ஈடுபட்டிருந்தவர்,
  பின்னர் அரசியலில் நுழைந்தார். தனது ஏரியாவான
  மின்டனாவோ-வில், Davao என்கிற ஊரின் மேயராகப்
  பொறுப்பேற்றார். மீண்டும் மீண்டும், மீண்டும் மீண்டும்
  அந்த ஊர் மக்களால் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட
  டுடெர்தே, 22 ஆண்டுகளுக்கு அவரது மக்களால் விரும்பி
  தேர்ந்தெடுக்கப்பட்டு மேயர் பதவியில் இருந்தார்.

  போதை மருந்து வியாபாரிகளும், சூதாட்ட கிடங்குகளும்,
  ரவுடிகளுமாக நிறைந்திருந்த ஊரை சுத்தம் செய்ய
  ஆரம்பித்தார். குறி பார்த்து சுடக்கூடிய ஷார்ப் ஷூட்டர்களை
  தன் காவல் படையில் சேர்த்துக் கொண்டார். பல சமயம்
  அவரே தனது மோட்டார் பைக்கில், இரவு நேரங்களில்
  ரோந்து வருவார். கண்ணில் படும் போதை வியாபாரிகள்,
  ரவுடிகள் அனைவரும் குறி பார்த்து சுடப்பட்டு
  கொல்லப்பட்டனர். குற்றவாளிகள் நடுத்தெருவில்
  வேட்டையாடப்பட்டனர். தப்பிக்க முயன்றவர்கள்,
  பிடிபட்ட பிறகு நரக வேதனைக்கு உள்ளாயினர்.

  அவரது பதவிக்காலத்தில் சுமார்
  1400 பேர் என்கவுண்டர்களில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
  விளைவு – ஊர் சுத்தமாகியது. டுடெர்தேயின் புகழ்
  பிலிப்பைன்ஸ் நாடு முழுவதும் பரவியது…!!!

  உலகிலேயே பத்திரமான ஊர்களில் 4வது இடமாக
  மின்டனாவோ-Davao நகரம் பெயர் பெற்றது.

  சொந்த ஊரில் அவர் நிகழ்த்திய சாதனைகளின்
  விளைவாக, பிலிப்பைன்ஸ் நாட்டின்
  மத்திய அரசில் அமைச்சராக சேரும்படி
  அவருக்கு பலமுறை அழைப்பு விடுக்கப்பட்டது.
  குறைந்த பட்சம் 4 வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அத்தகைய
  அழைப்புகளை நிராகரித்தார் டுடெர்தே.

  இறுதியில், என்ன தோன்றியதோ தெரியவில்லை –
  கடந்த ஆண்டு 2015-ல் அடுத்த ஜனாதிபதி தேர்தலில்
  தான் நிற்கப்போவதாக அறிவித்தார்…

  அவரது அறிவிப்பை கேட்டதுமே பிலிப்பைன்ஸ் நாடே
  பரபரப்பினால் பற்றிக் கொண்டது. கருப்பு சந்தைக்காரர்கள்,
  லஞ்ச ஊழல் சக்கரவர்த்திகள், அரசியல்வாதிகளின்
  பின்னால் நிற்கும் ஊடகங்கள் – அத்தனையும் அவரின்
  நெகடிவ் பக்கத்தை விரிவாக்கி காண்பித்தன –
  மக்களை பயமுருத்தின…

  டுடெர்தே சட்டத்தை மதிக்க மாட்டார்…
  நீதிமன்றங்களை மதிக்க மாட்டார்…
  சட்டவிரோதமான கொலைகள் நிகழும் ….
  மனித உரிமைகள் நசுக்கப்படும் –
  என்றெல்லாம் பிரச்சாரம் செய்யப்பட்டது.

  தன் பங்குக்கு டுதெர்தே – நேரிடையாகவே இதை
  உறுதிசெய்வது போல் பேசினார்….ஆறு மாதங்களில்
  அத்தனை கொடியவர்களும் சுட்டுக் கொல்லப்படுவார்கள்…
  அவர்கள் பிணங்கள் சமுத்திரத்தில் விட்டுக் கடாசப்படும்
  என்றெல்லாம் பேசினார்….

  பரபரப்பாக நிகழ்ந்த தேர்தலின் முடிவில் –
  எதிர் வேட்பாளரான அன்றைய ஜனாதிபதியை விட
  இரண்டு மடங்கு ஓட்டு பெற்று வெற்றி பெற்றார்
  டுடெர்தே….

  ஜூலை 1 – பதவி ஏற்றார் –
  முதல் தகவல் – 110 போதை மருந்து விற்பனையாளர்கள்
  சுட்டுக் கொல்லப்பட்டனர்.
  ஆயிரக்கணக்கான போதை மருந்து விற்பனையாளர்களும்,
  ரவுடிகளும், முன்னாள் குற்றவாளிகளும் –
  போலீசில் சரணடந்தனர்….

  இன்னமும் கணக்கெடுப்பு முடியவில்லை….
  கவலைப்படாமல் சுடுங்கள் –
  நாட்டை சுத்தம் செய்யுங்கள் –
  உங்கள் செயலின் விளைவுகளுக்கு
  நான் பொறுப்பேற்கிறேன்…என்று
  காவல் படைக்கும், ராணுவத்திற்கும்
  உறுதி அளித்திருக்கிறார் டுடெர்தே…!

  வழக்கமாக ஆடம்பரமாக நடைபெறும் ஜனாதிபதியின்
  பதவியேற்பு விழா – இந்த முறை வித்தியாசமாக
  வெகு எளிமையாக நடந்தது. வெறும் 600 பேர் மட்டுமே
  பங்கேற்ற விருந்தில், மது பரிமாற்றம் கிடையாது.
  மிகச்சாதாரணமான மெனு.

  டுடெர்தே – மிக எளிமையாகவே உடையணிபவர்.
  பதவியேற்பின் போதும் – ஜனாதிபதிக்கான பாரம்பரிய
  எம்பிராய்டரி உடை, டை – ஒன்றுமே கிடையாது.

  ஜனாதிபதிக்குரிய புல்லெட் ப்ரூப் காரோ, காவலர்களோ
  தனக்கு தேவையில்லை என்று கூறி விட்டாராம்.
  ஒரு சாதாரண பிக்கப் வேன் தனக்கு போதுமானது
  என்று கூறி விட்டார்….

  பிலிப்பைன்ஸ் பொருளாதார ரீதியாக வளர்ச்சி
  அடைந்து கொண்டிருந்தாலும் கூட, அந்த வளர்ச்சியின்
  பலன் ஒரு சில செல்வந்தர் குடும்பங்களையே
  சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையை நான்
  அனுமதிக்கப்போவதில்லை. நாட்டின் வளர்ச்சியின் பலன்
  அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டும்.
  நாட்டின் செல்வங்கள் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட
  வேண்டும். ஊர்ப்புறங்களில் நிறைய வேலை வாய்ப்புகள்
  உருவாக்கப்பட வேண்டும் – இதெல்லாம் டுடெர்தே-யின்
  கனவுகள்….

  பிலிப்பைன்ஸின் எதிர்காலம் – நாம் ஆவலுடன்
  உற்று கவனிக்க வேண்டிய ஒன்றாக இருக்கும்.

  ( ஆமாம் – நம்ம ஊர்ப்பக்கம் எல்லாம் டுடெர்தே மாதிரி
  யாராவது உருவாக வாய்ப்பு உண்டா…?…..

  நான் இந்த கேள்வியை கேட்டதற்கே எத்தனை
  அரசியல் ஆர்வலர்கள் என் மீது பாயப்போகிறார்களோ
  தெரியவில்லை….
  நன்றி :எனது முகநூல் பக்கம்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.