கண்ட விஷயங்களில் கவனத்தை செலுத்தாமல் …..

.

.

கண்ட விஷயங்களில் கவனத்தைச் சிதறடித்து,
தங்கள் சொந்த வாழ்வையும், எதிர்காலத்தையும்
பாழடித்துக் கொள்வதோடு –
பெற்றோருக்கும் தீராத துன்பத்தை
தேடித்தரும் இந்தக் கால இளைஞர்களிடையே-

மகிழ்ச்சியையும், நெகிழ்ச்சியையும் ஒருசேர
உண்டு பண்ணும் விதிவிலக்குகளாகத் தெரியும்
ஒரு இரட்டைச் சகோதரிகளின் கதை கீழே –

இத்தகைய பின்னணியில் பன்னிரெண்டு வருடங்கள்
படித்து, மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத்தேர்வில்
198.5 -ம், 196-ம் – பெற வேண்டுமானால்,
அந்த பெண் குழந்தைகள் என்ன பாடு பட்டிருக்க வேண்டும்…
எவ்வளவு முயற்சிகளை மேற்கொண்டிருக்க வேண்டும்…?
நன்றாகப் படித்து, முன்னுக்கு வந்து –
தாய்-தந்தையரின் துன்பத்தை களைய வேண்டும்
என்கிற அந்த குழந்தைகளின் லட்சியம் அற்புதம்…!
அவர்களின் உழைப்பும், விடாமுயற்சியும் –
இன்றைய சிறுவர்கள் அனைவரும் உணற வேண்டிய ஒன்று.

இதில் கொடுத்து வைத்தவர் யார்….?

அந்த பெண் செல்வங்களா அல்லது
அவர்களைப் பெற்ற தாய், தந்தையா….?

அவர்கள் வாழ்வில் நல்ல எதிர்காலமும்,
எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துவோம்…

twins-1

twins-2

twins-3

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to கண்ட விஷயங்களில் கவனத்தை செலுத்தாமல் …..

 1. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  எளிய சுற்றுச்சூழலில் இருந்துகொண்டு (relatively simple background) நன்றாகப் படிக்கின்ற குழந்தைகள் மனத்தை உருக்குகிறார்கள். அவர்கள் முன்னேறும்போது, அவர்கள் குடும்பம் மட்டுமல்ல, அவர்கள் கிராமமே முன்னேறும். இவர்களைப்பார்த்து கிராமத்திலுள்ள மற்ற குழந்தைகளும் உத்வேகம் பெறும். I hope இவர்கள் இன்னும் படித்து, தன் பெற்றோரைக் கண்கலங்காமல் வைத்துக்கொள்வார்கள் என்று. பெரும்பாலும் எளிமையிலிருந்து suddenஆக சமூக அந்தஸ்து உள்ள இடத்துக்கு வருபவர்கள் பழசை மறந்துவிடுகின்றனர்.சமூக அந்தஸ்துக்காக They compete with peers .

  இந்தக் கட்டுரையில், அவர்கள் எந்தப் பள்ளியில் படித்தார்கள் (‘நிச்சயமாக அரசுப் பள்ளிதான், அதுவும் மிகவும் சாதாரண நிலையில்தான் இருக்கும்), அவர்களுக்குத் தூண்டுகோலாக இருந்த ஆசிரியர்களைப் பற்றியும் விவரம் சேர்த்திருந்தால், கட்டுரையின் நோக்கம் சரியாக இருந்திருக்கும். பள்ளிமாணவ/மாணவியர்களுக்கு எப்படித் தெரியும், எப்படி எழுதினால் நல்ல மதிப்பெண்கள் வாங்கலாம் என்று. அதுவும் தவிர, ஆசிரியர்கள் பொதுவாகவே, மிக நன்றாகப் படிக்கும் 10 சதவிகித மாணவர்களிடம் கூடுதல் கவனம் செலுத்தி அவர்கள் நட்சத்திர performerஆக வரவைப்பதற்கு கூடுதலாக உழைப்பார்கள்; சமயத்தில் மற்ற மாணவர்களைப்போல காலத்தை enjoy செய்ய அனுமதிக்கமாட்டார்கள். அத்தகைய ஆசிரியர்களையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவருவது நம் சமூகத்தின் கடமை.

 2. YESSEN சொல்கிறார்:

  இம்மாதிரியான செய்திகள் எனக்கு வியப்பை ஏற்படுத்துகின்றன. ஒரு பக்கம் படிப்பு என்பதை தன வாழ்கையை மாற்றும் சக்தி என்று உணர்ந்து வெற்றி பெறும் ஏழை மாணவர்கள் . இவை மிகவும் குறைவானவை . மறுபுறம் சினிமா , காதல் , வெட்டி சண்டைகள் என்று வாழ்வின் எதிர்காலத்தை பற்றி சிறிதும் சிந்தனையின்றி உலவும் ஏழை மாணவர்கள் . இதில் உந்து சக்தி எதிலிருந்து பிறக்கிறது. ஆசிரியர்களிடமிருந்தா அல்லது குடும்ப சூழ்நிலையா .

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப எஸ்ஸென்,

   நல்ல எண்ணங்கள் …. positive energy …
   பெற்றோர்களும் வீட்டில் சொல்லிக் கொண்டு
   இருந்திருப்பார்கள்…
   நல்ல ஆசிரியர்களும் அமைந்திருப்பார்கள்…
   முக்கியமாக, இந்த சிறுமிகள் தொலைக்காட்சி
   சானல்களால் தொல்லைப்படுபவர்களாக
   இல்லாமல் இருப்பார்கள்…

   இன்று பாதிப்பேரிடையே எதிர்மறை எண்ணங்கள்
   (negative thinking ) வளர்வதற்கு இந்த
   தொலைக்காட்சிகளே காரணம்.

   நமது தொலைக்காட்சிகள் –
   நல்ல செய்திகளுக்கோ, வாழ்க்கையில்
   பயன்படக்கூடிய விஷயங்களுக்கோ
   முக்கியத்துவம் கொடுப்பதே இல்லை.
   பரபரப்பு, பரபரப்பு, அரசியல், கொலை, கொள்ளை,
   கற்பழிப்பு, பொய், ஏமாற்றுதல் –
   சுற்றிச் சுற்றி இதே தான் –
   நாள் முழுவதும், 24 மணிநேரமும் இதே தான்.

   இந்த தொலைக்காட்சிகளுக்கு சென்சார்
   கொண்டு வர வேண்டிய கால கட்டாயம் வந்து விட்டது
   என்று தோன்றுகிறது.

   முக்கியமாக, இந்த குடும்பம், நகரத்தின்
   பயங்கரங்களிலிருந்து தள்ளி எங்காவது
   தொலைதூர குக்கிராமத்தில் இருக்கும்…..

   இந்த குடும்பம் இனியாவது வாழ்க்கையில்
   இனிமையை சுவைக்கட்டும்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 3. selvarajan சொல்கிறார்:

  // மருத்துவ படிப்பு: கலக்கும் அரசு பள்ளி ….http://www.dinamalar.com/news_detail.asp?id=1549560&Print=1// ராமநாதபுரம் நகராட்சி வள்ளல் பாரி நடுநிலைப்பள்ளியில் நடந்த எலைட் வகுப்பில் பயின்று 2014–15 கல்வி ஆண்டில் மருத்துவம், பொறியியல் படிப்புகளில் தலா இரண்டு மாணவர் தகுதி பெற்றனர். 2015–16 கல்வி ஆண்டில் இங்கு பிளஸ் 2 பயின்ற 10 மாணவ, மாணவிகள் நடப்பு கல்வி ஆண்டில் ஆயிரத்து 100 மதிப்பெண்களுடன் மருத்துவ படிப்பில் சேர ‘கட் ஆப்’ பெற்றனர் என்று இந்ததினமலர் செய்தியில் வந்துள்ளது …. தற்போதைய அரசு— பள்ளிகளின் கல்வி தரத்தை உயர்த்த பலவித சிறப்பு திட்டங்களை கொண்டுவந்து உள்ளது — ஆசிரியர்களின் ஒத்துழைப்பு அதிகளவில் கிடைக்குமானால் — அரசு பள்ளி மாணவர்கள் எப்போதுமே ” தூள் ” கிளம்புவார்கள் — இந்த மாணவிகள் இருவரும் அரசை நாடினால் கண்டிப்பாக உதவி கிடைக்கும் — நேற்றுக்கூட முதல்வர் 11 — ஏழை மாணவர்களின் மருத்துவ கல்விக்கு கட்டணத்தை வழங்கியுள்ளதாக செய்தி …. !!!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   உண்மை.
   அண்மைக் காலங்களில் இந்த மாதிரி செய்திகள்
   அடிக்கடி வருகின்றன. பொறுப்பான நபர்கள்
   இவற்றை கவனித்துச் செயல்படுகிறார்கள் என்று
   நினைக்கிறேன். இது தொடர வேண்டும்…
   தகுதியானவர்களுக்கு தக்க சமயத்தில்
   உதவியும், பக்க பலமும் போய்ச்சேர வேண்டும்.

   அதே போல், நல்ல ஆசிரியர்கள் அடையாளம்
   காணப்பட்டு, அத்தகையவர்களுக்கு
   ஊக்கம் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு
   தேவையான உதவிகளை செய்து கொடுக்க வேண்டும்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 4. Pingback: கண்ட விஷயங்களில் கவனத்தை செலுத்தாமல் ….. — வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் | மழைத்துளி!!!!!

 5. Pingback: வாழ்த்திடுவோம் இரட்டை மருத்துவமாணவிகளை! | மழைத்துளி!!!!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.