23,000 கோடிக்கு எள்ளும், நீரும் – கொலைப்பழியை சுமக்கும் மத்திய அரசு…

423429-suicide-representational-2

இது இன்றைய தலைப்புச் செய்தி –

dinamalar block-1

dinamalar block-2

ராஜ்யசபாவில் நேற்று, மத்திய நிதியமைச்சர்
அருண் ஜெட்லி பேசுகையில், ”நாடு முழுவதும்
வங்கிகளில், 76 ஆயிரத்து, 685 கோடி ரூபாய் கடன்
வாங்கி,அதை செலுத்தாத, 8,167 பேர், கடன்
ஏய்ப்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்,” என்றார்.

( யார் இந்த கடன் ஏய்ப்பாளர்கள்…?
மால்யா, அம்பானி, அதானி ….போன்ற
பெருந்தொழிலதிபர்கள்….)

மிகப் பெரிய தொழில் அதிபர்கள்,
வங்கிகளில் கடன் வாங்கி, அவற்றை திருப்பிச்
செலுத்தாமல் ஏமாற்றுவதால், வங்கிகள் தங்கள்
அன்றாட வணிகத்திற்கே திணறுகின்றன….

எனவே, நசிந்து வரும் பொதுத்துறை வங்கிகளுக்கு
புத்துயிர் அளிக்கும் நோக்கில், மத்திய அரசு,
22 ஆயிரத்து, 915 கோடி ரூபாய் நிதியை,
இப்போது அவற்றுக்கு வழங்கியுள்ளது.

அடுத்த நான்கு ஆண்டுகளில், பொதுத்துறை வங்கிகளுக்கு,
மத்திய அரசு, இந்த வகையில் மொத்தம் 70 ஆயிரம் கோடி
ரூபாய் வழங்கும்.

————————-

பெருந்தொழிலதிபர்கள் கோடிக்கணக்கில் கடன் வாங்கி
அதனை திரும்பச் செலுத்தாததால் வாராக்கடன்
நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
வங்கிகள் தங்கள் முதலை இழந்து தவிப்பதால் –
மத்திய அரசு அத்தகைய வங்கிகளுக்கு புது ரத்தம்
பாய்ச்ச, வருடா வருடம் இந்த நஷ்டங்களை
ஈடுகட்ட “கொடை ” அளிக்கிறது. இந்த வருட
கொடை தான் மேற்கண்ட 23,000 கோடி.

பெருந்தொழிலதிபர்கள் கடனை ஏய்த்தால் –
வருடாந்திர “கொடை” அளித்து,
அதனை பூசி மெழுகும் மத்திய அரசு –

படிப்புக்காக கல்விக்கடன் வாங்கும் ஏழை மாணவர்கள்
அதனை உரிய சமயத்தில் திரும்பக் கொடுக்கத்
தவறும்போது எடுக்கும் நடவடிக்கை என்ன …?

பட்டப் படிப்பை முடித்து விட்டு, வேலை கிடைக்காமல்
வீட்டில் தண்டச்சோறு சாப்பிடுகிறோமே என்று
ஏற்கெனவே கழிவிரக்கத்தில் வாடும் மாணவர்களின்
கல்விக்கடனை –

” நீ எப்படி வேண்டுமானாலும் வசூலித்துக்கொள் ”

என்று கூறி 45 % க்கு ரிலயன்ஸ் நிறுவனத்திற்கு
வங்கிகள் விற்று விட அனுமதி தந்திருக்கிறது.

“எப்படி வேண்டுமானாலும் வசூலித்துக் கொள்”ள
மத்திய அரசிடமிருந்தே அதிகாரம் பெற்றுள்ள
இந்த ரிலையன்ஸ் கடங்கார நிறுவனத்தின்
“வசூல்” நடவடிக்கை –

முதல் பலியாக மதுரையில் ஒரு மாணவனின்
உயிரை வாங்கி இருக்கிறது….

இந்த புதிய வசூல் வழியை –
எதிர்த்து எத்தனை பேர் குரல் கொடுத்தாலும் –

செவிட்டுக் காதினராக வங்கிகளால்
இருக்க முடிவது எப்படி …?
அவர்கள் பின்னால், மத்திய அரசின்
“கொள்கை முடிவு”
இருப்பதால் தானே…?

இந்த விஷயம் பெரிய அளவில் உயிர்களை
பலி வாங்கும் முன்னர்,
கலவரம் வெடிக்கும் முன்னர் –
மத்திய அரசு விழித்துக் கொள்வது அவசியம்…

உயிர் போனது போனது தான் –
திரும்ப வரப்போவதில்லை…
ஆனால், இதுவே முதலும் கடைசியும் ஆக இருக்கட்டும்.

ரிலையன்ஸுக்கு கொடுத்த “வசூல் ராஜா” உரிமையை
உடனடியாக வாபஸ் பெற வேண்டும் மத்திய அரசு.

மாணவர்கள் வாங்கிய கல்விக்கடனை
திரும்பச் செலுத்த, எதாவதொரு
உருப்படியான வேலையில் அவர்கள் சேரும் வரை
கால அவகாசம் கொடுத்து,
காத்திருக்கும்படி வங்கிகளுக்கு உத்திரவு
இடப்பட வேண்டும்….

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to 23,000 கோடிக்கு எள்ளும், நீரும் – கொலைப்பழியை சுமக்கும் மத்திய அரசு…

 1. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  ‘நாம ஒருத்தனுக்கு (அல்லது பலருக்கு) கடன் கொடுக்கறோம். அவர்களில் பலர் திருப்பித்தரவில்லை. ஏய்க்கிறார்கள். நாம, மேல்மாடி காலியாக இல்லைனா, என்ன செய்வோம்? இனி கடன் தராதவர்களுக்கோ அவர்களைச் சார்ந்தவர்களுக்கோ கடன் கொடுப்பதில்லை என்று முடிவு செய்வோம். நாட்டுக்கும் பெரிய நிறுவனங்களுக்கும் இந்த முடிவு பொருந்தாதா?

  1000 ரூபாய் கடன் ‘நிலுவைக்காக ஏழைகள் கழுத்தில் கத்திவைப்பவர்கள் பெரும் பணக்காரர்களை ஏன் கண்டுகொள்வதில்லை? ஏழைகள் அல்லது ஏதிலிகள் எல்லோரும் நல்ல குடிமகன்’களாக (டாஸ்மாக்கைச் சொல்லலை) இருக்கவேண்டும், பணக்காரர்கள் எப்படி ஏய்த்தாலும் பரவாயில்லை என்று ஏன் இருக்கிறார்கள்?

  நம்ம 6000+ கோடி ஏய்த்தவர், தன் மகனை ஒன்றும் சொல்லாதீர்கள் என்று சொல்கிறார். ஊடகங்களோ, அரசோ அதைக் கண்டுகொள்ளாமல், அவர் மகனை நெருக்கினால், தானாகவே அவன் தந்தை பணத்தைத் திருப்பித்தர முயலமாட்டாரா? கொள்ளைபோனது யாருடைய பணம்?

  எனக்குத்தான் புரியலையா

 2. Tamilian சொல்கிறார்:

  You can not say education loans should not be recovered.in fact banks should have recovery mechanism like un
  der writing. Just because big fish cheat,it can not be argument for all and sundry failing. Failing banks will be bad for economy. Don’t you agree? It can not be a water mark for willful default by all. Government should pay E l if they want to help.

 3. jksm raja சொல்கிறார்:

  மிஸ்டர் tamilian இந்த இடுக்கையில் எங்குமே கல்வி கடனை வசூலிக்க வேண்டாம் என்று சொல்லவில்லையே. கால அவகாசம் வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது . கல்வி கடன் லட்ஷங்களில் தான் .இதற்கே இப்படி வக்காலத்து வாங்கும் மோடி பக்தர்கள் கோடி களில் கடன் வாங்கி ஏப்பம் விடுபவர்களை பற்றி கண்டுகொள்ளாதது ஏனோ. ஏன் என்றால் அதில் ஒரு பங்கு அரசியல் வியாதிகள் மற்றும் அதிகாரவர்க்கம் மற்றும் கைக்கூலிகளுக்கு சென்றுவிடுவதுதான்.

  • Tamilian சொல்கிறார்:

   BEFORE P CHIDAMBARAM MEDDLED WITH education loans for favoring the Private college owners to make money, banks had their own scheme and there was not intention to default. In order to fill up seats in those colleges he eased the norms and made banks to lend forcibly under mass educational loans instead of footing the burden himself. Banks are not for such mass lending easing the conditions including marks. If goal was for making college education reachable for all, then government should have formulated loan schemes from their own funds. Simply because government has control over banks, it is not correct to dilute and do mass lending as it is bad for banking. In 2008 India could wither economic crisis unlike west, due to our strength of banking industry. But can you say the same now?
   The major borrowers have political backing and have a battery of lawyers to help them. Banks need special powers to corner them and law suits also should end (including appeal procedure) in 6 months like in USA But the politicians are unwilling to do it as they are the major borrowers.
   Good banks are needed for healthy economy and with present state of affairs it is a far cry.

 4. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  வங்கிகள் கொடுத்த கடனை திரும்ப கேட்கக்கூடாது
  என்று நான் சொல்லவில்லை…
  மனிதாபிமானத்தோடு, பிராக்டிகலாக நடந்து
  கொள்ள வேண்டும் என்று தான் சொல்கிறேன்.
  கடன் வாங்கிய மாணவன் ஒரு நல்ல வேலையில்
  சேர்ந்து சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் தாராளமாக
  வசூலிக்கலாம்.

  ஆனால், ரிலையன்ஸ் கடன் வசூல் நிலையம் போன்று
  ரவுடித்தனமாக நடந்து கொள்ளும் நிறுவனங்களிடம்,
  அந்த மாணவர்கள் பெற்ற கடனை விற்பது எந்த
  விதத்தில் நியாயம்…?

  வங்கிகள் பொதுவுடைமை ஆக்கப்பட்டது எதற்காக …?
  55 % நஷ்டத்தில் கல்விக்கடன்களை அவ்வளவு
  அவசரமாக தனியார் கம்பெனியான ரிலையன்ஸ்
  கடன் வசூல் கம்பெனியிடம் ஒப்படைக்க வேண்டிய
  அவசியம் என்ன…?

  அரசு வங்கிகள் பெரும் முதலாளிகளுக்கு
  கொடுத்து இன்னமும் திரும்ப வராத கடன்
  விவரங்களை பாருங்கள் –

  கடந்த ஆண்டின் அறிக்கையின்படி –

  அதானி குழுமம் ரூ.96,031 கோடி கடன்
  எஸ்ஸார் குழுமம் ரூ.1,00,100 கோடி,
  ஜிஎம்ஆர் குழுமம் ரூ.47,976 கோடி,
  ஜிவிகே குழுமம் ரூ.33,933 கோடி,
  ஜேபி குழுமம் ரூ.75,163 கோடி,
  ஜேஎஸ்டபிள்யு குழுமம் ரூ.58,171 கோடி,
  லான்கோ குழுமம் ரூ.47,102 கோடி,
  ரிலையன்ஸ் குழுமம் ரூ. 1,25,000 கோடி,
  வேதாந்தா குழுமம் ரூ.1,00,300 கோடி
  வீடியோ கான் குழுமம் ரூ.45,405 கோடி

  மத்திய அரசு / வங்கிகள் மாணவர்களின் கல்விக்கடனை வசூலிக்க அவசர அவசரமாக ரிலையன்ஸ் கடங்காரர்களிடம்
  கொடுத்ததே –

  மேற்படி கடங்கார பெரு முதலாளிகளிடமிருந்து
  கோடிக்கணக்கான ரூபாய் வாராக்கடன்களை வசூலிக்க
  என்ன நடவடிக்கை எடுத்தது….?

  பிரச்சினைகள் எழும்போது பேச வேண்டும் –
  தவறு என்று தெரிந்தால், திருத்திக் கொள்ள வேண்டும்…
  மத்திய அரசு உடனடியாக இதற்கான
  தீர்வுகளை கண்டறிய வேண்டும்..

  – காவிரிமைந்தன்

 5. Tamilian சொல்கிறார்:

  You have to unload the NPAs and selling to an underwriter/collector is an accepted practice globally but new in India., That is globalization. Banks do not have the warewithal to follow up such huge numbers nor spend money on cases on these loans (NPAs). They have to draw the line when they follow NPA norms strictly. Not like before. Shortly big borrowers will also start facing the music but they can fly away in disgrace like Mallya thumbing their nose.
  Government will have to take a decision about that.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.