” தாய்வான் ” – க்கும் நமக்கும் என்ன வித்தியாசம்…?

nt-3

.

சில நாட்களுக்கு முன், ஒரு இடுகையில், தேவையே
இல்லாதவர்கள் கூட, கருப்புப்பூனைகளை
( black cats – commando force )
ஒரு கவுரமாக, status symbol-ஆக நினைத்து கூடவே
வைத்துக்கொண்டு வலம் வரும் இந்திய
அரசியல்வாதிகளைப்பற்றி குறிப்பிட்டிருந்தேன்.

அப்போது நமது நண்பர் நெல்லைத்தமிழன் அவர்கள்
(விமரிசனம் வலைத்தளத்தில் அவ்வப்போது வரும்
அருமையான பின்னூட்டங்களின் மூலம் அவரை நீங்கள்
சந்தித்திருப்பீர்கள்… ! ) தனது ‘தாய்வான்’ பயணத்தின்போது
நிகழ்ந்த ஒரு அனுபவத்தைப் பற்றி குறிப்பிட்டார்.
உங்கள் அனுபவத்தை கொஞ்சம் விரிவாக எழுதி
அனுப்புங்களேன் – விமரிசனம் வாசக நண்பர்களுடன்
பகிர்ந்து கொள்ளலாம் என்று அவருக்கு எழுதி இருந்தேன்.
அவரிடமிருந்து கிடைத்த அருமையான பல
விவரங்களை கீழே பதித்திருக்கிறேன்…

இனி – நண்பர் நெல்லைத்தமிழன் எழுதி இருப்பது –
——————————————————————————-

“சும்மா ஜம்பத்திற்காகவும், வறட்டு கவுரவத்திற்காகவும்,
கமாண்டோ படையை புடைசூழ நிகழ்ச்சிகளில் கலந்து
கொள்ளும் நம் தலைவர்களைப் பார்க்கும்போது
எரிச்சலாக இருக்கிறது”

நம்ம தலைவர்களெல்லாம், ஆகாயத்திலிருந்து
குதித்ததுபோல் நடந்துகொள்கிறார்கள். ஒருவேளை,
மக்களே அவர்களைத் தங்களில் ஒருவராகக் காண
விரும்புவதில்லையோ என்ற ஐயம் எனக்கு உண்டு.

மக்களோடு மக்களாக இருந்த ஜீவா, கக்கன், இப்போதுள்ள
நல்லக்கண்ணு போன்றவர்களை மக்கள் உயர்ந்த இடத்தில்
வைக்கத் தவறிவிட்டார்களோ என்று நினைக்கிறேன்.

அதனால்தான் இப்போதுள்ள தலைவர்கள் தாங்கள்
எதோ வானத்திலிருந்து குதித்தவர்கள் போன்று
நடந்துகொள்கிறார்கள்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு தாய்வான் சென்றிருந்தேன்
என்று உங்களிடம் தெரிவித்திருந்தேன் (பின்னூட்டம் மூலமாக).

அங்கு ஒரு சிம்பொனி concert-க்குச் சென்றிருந்தேன்.
(இது ஜப்பான் கலைஞர்கள் நிகழ்த்தியது) நிகழ்ச்சிக்கு
½ மணி நேரம் முன்பாக ஆடிட்டோரியத்தில் அனுமதித்தனர்.

ஒவ்வொருவராக அமைதியான முறையில் அவரவர்
இடங்களில் சென்று அமர்ந்தார்கள். புகைப்படம்
எடுப்பதற்குத் தடையில்லை (‘நிகழ்ச்சி ஆரம்பிக்கும்
வரையில்).

‘நான் என்னுடைய வாயிலில் நுழையும்போது,
ஸ்டேடியத்தின் பின்புற வரிசையில் 4 காவலர்களைப்
பார்த்தேன். அவர்களும் ஆடிட்டோரியத்தில்
அமர்ந்துகொண்டிருந்தவர்களையும், நுழைபவர்களையும்
surf செய்துகொண்டிருந்தார்கள்.

சிறிது நேரத்தில் தாய்வான் பிரெசிடெண்ட் அவரது
இரண்டு சகாக்களுடன் நுழைந்தார். ஆரவாரமில்லை.
பின் வரிசையில் அமர்ந்தார். சிலர் அவர் இருந்த
வரிசைக்கு 2 வரிசை கீழே வந்து செல்ஃபி
எடுத்துக்கொண்டனர். அவரும் அவ்வப்போது
மக்களைப் பார்த்து கையை ஆட்டினார் அல்லது மக்கள்

கையாட்டுவதை acknowledge செய்தார். இதற்குமேல்
ஒரு ஆரவாரத்தையும் பார்க்கவில்லை.
‘தலைவா’ (தலைவி?) என்றெல்லாம் கூச்சலில்லை.

பிரெசிடென்ட்டும் தானும் மக்களில் ஒருவர்தான்
என்பதை எல்லோருக்கும் (எனக்கு) உணர்த்தும்படியாக
நடந்துகொண்டார். நம் ஊரில்தான், கவுன்சிலர்கூட
சிவப்புவிளக்கு வைத்த காரில் செல்லவிரும்புவதும்,
அரசு செலவில் பூனைப்படையைக் காவலுக்குக்
கேட்பதும் நடக்கும்.

தலைவர்கள் சட்டத்தைக் கடைபிடிக்காமல்,
நாட்டின் பணம் மக்களுடையது என்று எண்ணாமல்
தன் விளம்பரத்துக்காகச் செலவு பண்ணி, மக்களை மட்டும்
ஒழுக்கசீலர்களாகவும், சட்டத்தை மதிப்பவர்களாகவும்
இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது எப்படிச் சரியாகும்?

நிகழ்ச்சி ஆரம்பமாவதற்கு ஒரு நிமிடம் முன்பு,
இடையில் வெளியே செல்லக்கூடாது என்று
auditorium officer ஒலிபெருக்கியில் சொன்னார். எல்லோரும்
கேமரா, செல்போன்’களை அவரவர் பைக்குள் வைத்தனர்.
Pin drop silence. கலைஞர்கள் மேடைக்கு வரும்போது,
2 நிமிடம் எல்லோரும் கைதட்டினர்.
அப்புறம் Pin drop silence.

ஒவ்வொரு இசைக்கோப்பு முடிந்ததும், 2 நிமிடம்
எல்லோரும் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.
நிகழ்ச்சியின்போது ஒரு சத்தம்கூட இல்லை.
இது நான் கலந்துகொண்ட இரண்டாவது concert
சென்ற நான்’கு வருடங்களில் (தாய்வானில்).

நான் இதைப்போன்ற discipline உள்ள citizenகளைப்
பார்த்ததில்லை. எல்லா வளர்ந்த தேசங்களிலும் மக்கள்
இத்தகைய ஒழுங்கைக் கடைபிடிப்பார்கள் என்பதில்
எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. இந்தியர்களான
நாம் மட்டும் ஏன் இப்படி இருக்கிறோம்?

See the mark below

nt-1

nt-2

முதல் படத்தில் மேலே பிரெசிடென்ட் உட்கார்ந்திருக்கும்
இடத்தை மார்க் செய்துள்ளேன். இரண்டாவது படம்,
நிற்கும் காவலரின் இடது பக்கத்தில் beige கலர் சூட்டில்
பிரெசிடென்ட்.

nt-4

காலையில் (7 மணியிலிருந்து 10 வரை), தெருக்களின்
ஓரத்தில் உணவு வேன் (தனியார்) சிற்சில இடங்களில்
வந்து நிற்கிறது. மற்றவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல்,
அவற்றில் உணவு வாங்கி அங்கேயே பலர் உண்கிறார்கள்.

10 மணி ஆனபின்பு, வேன் சாலை ஓரத்தைவிட்டுக்
கிளம்பிவிடுகிறது. இதுபோன்று சாலை ஓரங்களில்
(pavement side, without disturbing walking citizens)
நிறைய கடைகள் (temporary) காலையிலோ அல்லது
மக்கள் வீடுதிரும்பும் மாலையிலோ முளைக்கின்றன.

எல்லாவற்றிற்கும் சக்கரம் இருக்கிறது. அந்த நேரம்
கடந்தபின்பு, கடைகள் இருந்த இடமே தெரியாது.
மக்கள் பொது இடங்களை ஆக்கிரமிப்பு செய்வதில்லை.
இந்த ஒழுக்கத்தை நான் பல ‘நாடுகளில் பார்த்துள்ளேன்.
இது ஏன் நம்மிடம் இல்லை? மக்களை மட்டும்
குறைசொல்லக்கூடாது. அவர்களை வழி நடத்துபவர்கள்
நம் தலைவர்கள். அவர்களுக்கு உதவுவதற்கு போலீஸ்
இருக்கிறது. ஆனாலும் நம்மால் நம் மக்களிடம் discipline
கொண்டுவரமுடியாததற்கு யார் காரணம்?

nt-5

சாலையோர உணவு வேன் (காலையில்).
மக்கள் நடமாடும் இடங்களில் முளைக்கும் கடைகள்
அந்த நேரத்திற்குப் பின்பு சாலை சுத்தமாக இருக்கிறது.

nt-6

மெட்’ரோ ஸ்டேஷனில் மட்டுமல்ல, எல்லா இடத்திலும்
மக்கள் ஒரு வரிசையில் நிற்பதைப் பார்க்கலாம்.
கடைகளும் first come first served என்ற ஒழுக்கத்தைக்
கடைபிடிக்கின்றன. இதற்கு எந்த போலீஸும் கிடையாது.

nt-7

அதேபோன்று, எஸ்கலேட்டரில் செல்லும்போதும்
ஒரு ஒழுங்கு கடைபிடிக்கப்படுகிறது. (வலது ஓரம்,
நின்றுகொண்டே செல்பவர்கள் நிற்பார்கள். இடதுபக்கம்,
எஸ்கலேட்டரிலும் ஏறிக்கொண்டு செல்பவர்கள் செல்வார்கள்).

ஒழுக்கத்தையும், பொது ‘நடத்தையையும் கற்றுத்தராமல்
வெறும்னே பிஸிக்ஸ், கெமிஸ்ட்ரி என்று பாடங்களை
மனப்பாடம் பண்ணிப் படிக்கும் கல்வி என்ன
மாறுதலை நாட்டில் கொண்டுவந்துவிடும்?

————————————————————————–

இந்த கட்டுரையையும், புகைப்படங்களையும் பார்க்கும்
ஒவ்வொருவரிடம் எழக்கூடிய கேள்வி தான் இது….!

எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் –
இந்த அரசியல்வாதிகளை திருத்த வேண்டுமானால்,
மக்கள் மனநிலை முதலில் மாற வேண்டும்.

மன்னன் எவ்வழியோ – அவ்வழியே மக்களும் என்று
நம்மால் சொல்ல முடியாது என்பதால் பழமொழியை
மாற்ற வேண்டியிருக்கிறது.
“குடி எவ்வழி – கோன் அவ்வழி “….!!!

நிறைய தொண்டு நிறுவனங்கள் ( NGO-க்கள் ) நம்மிடையே
இருக்கின்றன. அவற்றில் சில சுத்தத்தை கற்பிக்க,
வலியுறுத்த, வழிநடத்த முயற்சி செய்யலாம்.
சிறு சிறு குழுக்களாக தங்களை பிரித்துக் கொண்டு
அவர்கள் செயல்படலாம்.

சில நிறுவனங்கள் – பஸ் நிறுத்தங்களிலும், இதர மக்கள்
கூடும் இடங்களிலும் Q வரிசையை மேற்கொள்ள
உதவலாம்.

இந்த தொண்டு நிறுவனங்களுக்கான badge-களை
அணிந்து கொண்டு அவர்கள் பணி செய்ய ஆரம்பித்தால்,
மக்கள் நிச்சயம் ஒத்துழைப்பார்கள்.

சில மாதங்கள் இதை ஒழுங்குபடுத்தி, வழிநடத்தினால்
போதும்…. பின்னால், எல்லாம் தன்னாலேயே நடக்கும்.
எல்லாவற்றிற்கும் பழக்கம் தான் காரணம். மற்றவர்களும்
Q வரிசையில் நிற்பார்கள் என்னும் நம்பிக்கை இல்லாததால்
தான் இந்த கும்பல்கள்….

சில மாதங்கள் ஒரு ஏரியாவை சரி செய்து விட்டு,
பின்னர் அடுத்த ஏரியாவிற்கு போகலாம்.

மக்கள் சுத்தமாக இருக்கப் பழக வேண்டும்.
தெருமுனைக்கடைகள் (இட்லி, டீ – கடைகள் )
இங்கும் நிறைய இருக்கின்றன.
அந்தக் கடைகளைச் சுற்றியுள்ள இடங்களை
சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியதை
அந்த கடைக்காரர்களிடம் கட்டாயமாக்க வேண்டும்.

இவை எல்லாமே மாநகராட்சிகளின் தயவில் தான்
காலம் தள்ளுகின்றன. எனவே, சுத்தமாக இல்லாத
கடைகள் தங்கள் வியாபாரத்தை தொடர முடியாது
என்று மாநகராட்சி சுகாதார இலாகா வலியுறுத்தினால்-
இதில் நிச்சயம் முன்னேற்றத்தைக் காணலாம்.
( சென்னை மரீனா கடற்கரையில், இது ஓரளவு
நடைமுறை சாத்தியமாகி இருக்கிறது…. )

பள்ளிக்கூடங்களில் – சுத்தம், Q வரிசை இரண்டையும்
வெகு சுலபமாக அறிமுகப்படுத்தி, பழக்கப்படுத்தி
விடலாம்….

இங்கே இருப்பது starting problem தான்.
ஒரு ஆறு மாதங்கள் பழக்கப்படுத்தி விட்டால் –
நெல்லத்தமிழன் மனம் குளிரும்படியான மாறுதல்கள்
இங்கேயும் வந்து விடும்.

என்ன தோழர்களே – நம்மால் முடிந்ததை,
நம்மைச்சுற்றியுள்ள இடங்களில்
செய்யத் துவங்கலாமா….?

Exnora, Rotary Club, Lions Club உறுப்பினர்கள் சிலராவது
இந்த தளத்தை படித்துக்கொண்டிருப்பார்கள் என்றே
நம்புகிறேன். இந்த இடுகையின் மூலமாக அவர்களுக்கும்
நமது வேண்டுகோள் சென்றடையட்டும்….
முழு பலன் கிடைக்க கொஞ்சம் நாள் பிடிக்கும் என்றாலும் –
ஒரு துவக்கமாவது ஏற்படட்டுமே…!

இன்றில்லா விட்டாலும் –
நாளையாவது,
நாளை மறுநாளாவது –
நமது மக்கள் மாறத்துவங்குவார்கள்
என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது …!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to ” தாய்வான் ” – க்கும் நமக்கும் என்ன வித்தியாசம்…?

 1. Yogi சொல்கிறார்:

  Sir

  We call it

  Crisis in our civilisation

  See how our people behave in temples

  Thotil pazhalakkam. …..

  Yogi

 2. R.Gopalakrishnan சொல்கிறார்:

  A sales man in TASMAC whose monthly legitimate salary is around Rs.6000/- per month.But
  he is earning appx. Rs.40000/- pm. How? Because of the extra money he collects from every
  buyer. Can this be changed.Never.

  .

  • Yogi சொல்கிறார்:

   Sir

   That means our Tamil land is rich

  • நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

   1. ஒரு நாடு வளம் பெற, மக்கள் மாறவேண்டும். அரசும் அதற்குத் துணை நிற்கவேண்டும். இதில் நாம் ‘பாவம்’ பார்க்கிறோம். ஒரு ரயில் பயணத்தில் (பாரிஸ்லிருந்து லில் என்ற இடத்துக்கு) நான் மடிக்கணிணியில் ஒரு பாடல் வைத்தேன். (சத்தம் மிகவும் குறைவாகத்தான். அப்போது ஹெட் செட் எடுத்துக்கொண்டு செல்லவில்லை) சக பிரயாணி என்னிடம் வந்து தொந்திரவாக இருக்கிறது. நிறுத்தவும் என்றார்(ள்). Means, one needs to be strict and tell others, if they deviate from rule or disturb. நான் உண்மையாகவே தவறாக நினைக்கவில்லை, but learnt something (in 2005)
   2. டாஸ்மாக்கில் விற்பனை நேரம் 12லிருந்து 10 வரை என்றால், அதற்கு முன் ஏன் வாங்க நினைக்கவேண்டும். விற்பனை நேரத்தில் யாரும் அதிகமான பணம் வைத்து விற்றால், போராட்டம் நடத்துவது கடமை (டாஸ்மாக் மட்டுமல்ல, எங்கேயும். இதைத்தான் பலர் கேட்டால் கிடைக்கும் என்று எழுதுகிறார்கள்).
   3. We pity people based on their social status and allow them not to follow rule. இதுவும் நம்முடைய தவறான அணுகுமுறை. மேம்பாலம் கட்டினால், உடனே அதன் கீழே கடைபோட்டு இடத்தை ஆக்கிரமிப்பது. சப்.வே வைத்தால், அதனுள் கடை போட்டு ஆக்கிரமிப்பது. இதில் கண் தெரியாதவர், ஏழை என்றெல்லாம் பார்க்காமல், சட்டத்தை மட்டும் பார்க்கவேண்டும். அவர்களிடம் எந்தக்காரணம் கொண்டும் பொருட்களை வாங்கக்கூடாது. (ஆனா மனசு கேட்கிறதா?)

   யோகி எழுதியதும் சரிதான். கோவிலில் ராஜா (owner), தெய்வம். அந்த சன்னிதியிலேயே அதற்குரிய மாண்பை நாம் பேணுவதில்லை என்பது வருத்தத்துக்குரியது. அதற்கு நம் மன’நிலை (சுய’நலம்) தான் காரணம். அதனால்தான், எதற்கும் முண்டியடிப்பதும், தெய்வ சன்னிதானத்திலேயே பிரசாதக் கையைத் தடவி தூண்களை நாசப்படுத்துவதும், குங்குமம் போன்றவை நிறைய வாங்கி, கொஞ்சம் இட்டுக்கொண்டு மீதியை அங்கேயே ஓரமாகக் கடாசுவதும்.

   நம்ம எல்லோரும் (என்னையும் சேர்த்துத்தான்) சட்டத்தை மதிக்காமல், மற்றவர்கள் எல்லோரும் சட்டப்படி நடக்கவேண்டும் என்றோ, அல்லது, இதுதான் நம் விதி என்றோ நினைப்பதால்தான் நாம் இப்படி இருக்கிறோம். யாராவது பூனைக்கு மணி கட்டவேண்டும். பிரதமர் ‘ஸ்வச் பாரத்’ என்று ஆரம்பித்திருக்கிறார். இது ஆரம்பமாக இருக்கட்டும் என்று நினைப்பதைத் தவிர வேறு ஒன்றும் தோன்றவில்லை.

 3. Mahesh Thevesh சொல்கிறார்:

  நான் கனடாவில் ஸ்காபரோ என்ற நகரில் குயாரத்திகள் மத்தியில் வாழ்கிறேன்.இங்கும் அவர்கள் இந்தியாவில் வாழ்வதுபோல் ஒழுங்கில்லாமல்தான் வாழ்கிறார்கள்.அவர்களால் நடத்தப்படும் சுப்பர் மார்க்கற் முன்னால் மாலைநேரங்களில் கையேந்தி பவான் ஒன்று நடைபெறுகிறது. நடபாதையை மறித்தே அவர்கள் வியாபாரம் நடைபெறுகிறது.போக்குவரத்திற்கு இடஞ்சலாகவே செயல் படுகிறார்கள். இன்னும் யாரும் compliant பண்ண வில்லை ஆனால் இது பல நாள் செல்லாது. கூடிய சீக்கிரம் சட்டம் அவர்கள் மேல்பாயும். ஒழுங்குமுறையைக் கற்றுக்கொடுக்கமுடியாத மக்கள்தான் இவர்கள். பொது அறிவு இன்றி இவர்கள் வாழ்வதற்கு யார் பொறுப்பு. இதவே என்னுள் தோன்றும் கேழ்வி.

 4. Pingback: ” தாய்வான் ” – க்கும் நமக்கும் என்ன வித்தியாசம்…? — வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் | மழைத்துளி!!!!!

 5. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்பர்களுக்கு,

  ” இதெல்லாம் இங்கு நடக்கவே நடக்காது –
  நம் மக்கள் என்றைக்கும் மாறவே மாட்டார்கள்…”

  – என்று நினைக்க என் மனம் மறுக்கிறது.
  இந்த தள வாசகர்கள் நிறைய விஷயம் தெரிந்தவர்கள்.
  அவர்களுக்குத் தெரியாததல்ல… நான் just நினைவூட்டவே
  முயற்சி செய்கிறேன்.

  1965-க்கு முன்னதாக,
  திரு.லீ குவான் யூ பொறுப்பேற்பதற்கு
  முன்னதாக சிங்கப்பூர் எப்படி இருந்தது….?
  இன்றைய சிங்கப்பூரை அன்று யாரும் நினைத்தும்
  பார்த்திருக்க முடியுமா….?
  கனவிலும் கண்டிருக்க முடியுமா…?

  அதே நாடு தான்….
  அதே மக்கள் தான்….
  மாறினார்களே….!!!

  தகுந்த தலைமையும், சூழ்நிலையும் உருவானால் –
  நம் மண்ணும் நிச்சயம் மாறும். ஆனால், சிங்கப்பூர்
  மிகச்சிறிய நாடு… நயத்தாலும், பயத்தாலும்
  கட்டுப்பாட்டை கொண்டு வர முடிந்தது.

  நம் பூமி மிகப்பெரியது… எக்கச்சக்கமான மக்கள் தொகை.
  இருந்தாலும், இங்கும் மாற்றம் வரலாம்…

  மக்களின் அன்பையும், நம்பிக்கையையும் பெற்ற –
  சுயநலமற்ற சிலர் பொதுவாழ்வுக்கு வர வேண்டும்.

  மாற்றங்களை அரசு கொஞ்சம் கொஞ்சமாக –
  முன் கொண்டு வர வேண்டும்….
  மக்களும் அதை மனமுவந்து ஏற்று நடக்க
  முயற்சி செய்ய வேண்டும்….

  நம்புவோம்…. நிச்சயம் ஒரு நாள் நடக்கும்….
  நம்மால் முடிந்ததை நாமும் செய்வோம்…

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

  • Yogi சொல்கிறார்:

   Sir

   Hope and pray

   Yogi

   • Yogi சொல்கிறார்:

    Sir

    Lee was going to London for hire studies

    Those days ships stop in Colombo harbour

    Lee is walking into the city of Colombo

    He was attracted by colombos beauty and cleandiness

    He is writing to his mother

    One day I will make Singapore into a Ceylon

    Rest is history

    Now our political goons are telling they want to make Sri Lanka into singspore

    Nambhikkai than vazhkai

 6. Darren சொல்கிறார்:

  Taiwan has also known for disciplined Taxi drivers. They will find the shortest path for your destination.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.