“கபாலி” யின் கொள்ளுப்பாட்டன் – 1898-ஆம் ஆண்டின் மௌனப்படங்களின் தொகுப்பு ……..!!!

.

.

முதல் முதலாக மௌனப்படம் தயாரிக்கப்பட்டு
வெளிவந்தது இன்றைக்கு 122 வருடங்களுக்கு முன்பு
1894-ஆம் ஆண்டு…. ஆனால், அந்நாட்களில்
தயாரிக்கப்பட்ட படங்களில் பெரும்பாலானவை
தகுந்த முறையில் பாதுகாக்கப்படாமல் அழிந்து விட்டன.

வயதில், இன்றைய “கபாலி”யின் கொள்ளுப்பாட்டன்
என்று சொல்லக்கூடிய, 1898-ஆம் ஆண்டு
தயாரிக்கப்பட்ட ஃபிரென்சு ( மவுனப்படத்திற்கு
மொழி ஏது….) மௌனப்படங்களின் தொகுப்பு ஒன்று –
நண்பர் சேஷன் அவர்களின் தயவினால் கிடைத்தது.

நமது வலைத்தள நண்பர்கள் அனைவரும் கண்டு
ரசிக்க அதனை கீழே பதிவிட்டிருக்கிறேன்.

நமது நன்றிகள் – இதனை நமக்கு
அறிமுகப்படுத்திய நண்பர் சேஷனுக்கு…!!!

just 120 years before…..awesome direction …

பின் குறிப்பு –

அத்தனை துண்டுப் படங்களையும் மொத்தமாகப்
பார்க்க நேரம் இல்லையென்றால் – கவலை வேண்டாம்…
எட்டு எட்டாக பிரித்து (… 🙂 🙂 ) பின்னர் நேரம்
கிடைக்கும்போது மீண்டும் இங்கு வந்து தொடர்ச்சியை
பாருங்கள்….!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to “கபாலி” யின் கொள்ளுப்பாட்டன் – 1898-ஆம் ஆண்டின் மௌனப்படங்களின் தொகுப்பு ……..!!!

 1. Jagannathan chellappa சொல்கிறார்:

  Mr.K.M,

  Nowadays your Blog looks like a Readers Digest.
  A welcome change. More interesting; More useful;
  Please continue. All the Best.

 2. selvarajan சொல்கிறார்:

  // கபாலி மோசடி! http://www.dinamani.com/editorial/2016/07/23/%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF/article3543323.ece //…. பல பேர்களின் ” ஆதங்கத்தை ” கொட்டி தீர்த்துள்ளார் ஆசிரியர் .. சமீபக் காலங்களில் – தமிழகத்தில் ஒரு படம் வெளிவருவதற்கு முன்பே அதைப் பற்றி பலவித ” பில்டப் ” களை உருவாக்கி — ஏதாவது ஒரு காரணம் சொல்லி படத்துக்கு தடை கேட்டு ஒரு புரளியை உருவாக்குவது — செலவுகளை அதிகமாக கூறி ஒரு ஆவலை தூண்டுவது — போன்ற பலவித காரணங்களை கற்பனையாக உலாவ விட்டு — ஒரு சில வாரங்களில் பல நூறு கோடி வசூலை லாபமாக்க — குறுக்கு வழியை தேடுகின்ற திரைப்பட துறையினரை என்னவென்று — கூறுவது … ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   மிகச்சுலபமாக இந்த ரக கொள்ளைகளை முடிவிற்கு
   கொண்டு வர முடியும்.

   1) திரைப்படங்களுக்கு (கேளிக்கை) வரி விலக்கு
   கொடுப்பதை முதலில் நிறுத்த வேண்டும்.

   2) புதிய படங்கள் எதுவாக இருந்தாலும்,
   முதல் 3 நாட்களுக்கு தியேட்டர்கள் தாமே
   விலை நிர்ணயிக்க (at premium rates )
   அனுமதிக்கப்பட வேண்டும்.
   கட்டணம் அதிகாரபூர்வமாக டிக்கெட்டில்
   காட்டப்பட வேண்டும்… அதில் 20 % வரியும்
   அதிகாரபூர்வமாக விதிக்கப்பட வேண்டும்.
   ரெவெனியூ துறை இதை மேற்பார்வையிட
   வேண்டும்.

   3) நான்காவது நாளிலிருந்து, அரசால் வழக்கமாக
   நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கட்டணம் மட்டுமே
   வசூலிக்கப்பட வேண்டும்.
   எந்த நடிகர் நடித்த படமாக இருந்தாலும் சரி,
   எந்த தயாரிப்பாளர் எடுத்த படமாக இருந்தாலும் சரி –
   இது அரசு அதிகாரிகளாலும், காவல்துறையாலும்
   உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

   யோசித்துப் பாருங்கள்…..
   இது இந்த கொள்ளையை கட்டுப்படுத்துமா இல்லையா…?

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 3. Tamilian சொல்கிறார்:

  இதற்கு நான் ரசிகர்களைத்தான குற்றம் சொல்வேன் . எதற்காக அதிக விலை கொடுத்து டிக்கட வாங்கவேண்டும? படம் எடுப்பவர்கள் (கொள்ளை) லாபம் பார்க்கிறார்கள் .

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.