கூகுள் பார்வையில் ” கைலாச பர்வதம் ” எப்படி இருக்கிறது…?

.

.

கைலாசம், மானசரோவர் பயணம் போக வேண்டுமென்று
துடித்துக் கொண்டிருப்பவர் எத்தனையோ பேர்….
( சில வருடங்கள் முன்பு வரை இதில் நானும்
ஒருவனாக இருந்தேன்…)
நேரே போக வழி இல்லாதவர்களுக்கு இன்றைய
தொழில் நுட்பங்கள் ( டெக்னாலஜி ) உதவுகின்றன.

கைலாசம், மானசரோவர் பயணம் குறித்த
வீடியோக்கள் நிறைய வெளி வந்திருக்கின்றன…
யூட்யூபிலும் கிடைக்கின்றன.

கூகுள் பார்வையில் கைலை மலையை காண முடியுமா
என்று முயற்சி செய்தேன்…
அற்புதமான வீடியோ ஒன்று கிடைத்தது…
உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்…

கீழே –
தரைவழியே, மலையைச் சுற்றி வரும் பாதை –
விரிவான வீடியோக்கள் நிறைய இருக்கின்றன.
இது மிகச்சுருக்கமான ஒன்று….

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to கூகுள் பார்வையில் ” கைலாச பர்வதம் ” எப்படி இருக்கிறது…?

 1. selvarajan சொல்கிறார்:

  ” ஓம் பர்வதம் ” — என்கின்ற ஒரு அதிசயமும் அங்கே உண்டு — பார்த்து ரசியுங்கள் — இறைவனின் படைப்பில் எத்தனையோ — அற்புதங்கள் … !!!…

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   மிக்க நன்றி செல்வராஜன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 2. நெல்லைத்தமிழன் சொல்கிறார்:

  காணொலி அருமை. எதுவும் ரொம்பப் பக்கத்தில் செல்லும்போது இருக்கும் sacredness அதன் அருகாமையில் இழந்துவிடுகிறோமோ? அதாவது புனித மலையைத் தொட்டுவிடும் தூரத்தில் இருக்கும்போதோ அல்லது சிலாரூபத்தைத் தொட்டு வழிபடும்போதோ அதன் தூய்மைக்குப் பங்கம் விளைவிக்கிறோமா அல்லது இது மனத்தின் எண்ணத்தைப் பொறுத்ததா? வட நாட்டில் பிரதிமையைத் தொட்டு வழிபடுவது இயல்பு. தென்நாட்டில் பிரதிமைக்கும் நமக்கும் நிறைய இடைவெளி இருக்கிறது. அதுவும்தவிர தெய்வத்திருஉருவைத் தொடுவது பாவம் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. உங்கள் எண்ணம் என்ன?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நெல்லைத்தமிழன்,

   நீங்கள் சொல்லும் இந்த விஷயத்தைப்பற்றி
   நான் கூட பலமுறை யோசித்திருக்கிறேன்.

   என் அனுபவத்தில் உணர்வது –
   கோவில்களில் உள்ள மூர்த்திகளை தொடாமலே,
   சற்று தூரத்திலிருந்து தரிசிப்பதும்,
   வீட்டிலிருக்கும் – நாம் பூஜை
   செய்யக்கூடிய படங்கள், விக்கிரகங்களை
   தொட்டு வணங்குவதும்
   மன நிறைவு தரக்கூடியதாக இருக்கிறது என்பதே.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 3. Seshan சொல்கிறார்:

  I used to go Girivalam at Thiruvannamalai through Google earth like this from Dubai so many years………….

  (parrot at golden cage!!)

  thanks for showing kailash

 4. chandramouly venkatasubramanian சொல்கிறார்:

  GREAT MOTHER NATURE

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.