” சவம் அல்ல அய்யா – சிவம் ” …!!!

.

.

“கப்பலோட்டிய தமிழன்” படத்தில் வீரம் கொப்பளிக்க
டி.கே.ஷண்முகம் அண்ணாச்சி அவர்கள் இந்த
வார்த்தையை உச்சரித்தது இன்றும் காதில் ஒலித்துக்
கொண்டே இருக்கிறது.

இன்று வீரத்தியாகி சுப்ரமணிய சிவா அவர்கள்
மறைந்த நாள்… அவரது நினைவு நாள்..

சுப்ரமண்ய பாரதி, வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்ரமண்ய சிவா –
இவர்கள் மூவரும் சமகாலத்தவர், மிக நெருங்கிய நண்பர்கள் –

தேசபக்தர்கள் – அதாவது பிழைக்கத் தெரியாதவர்கள்…!!!

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு, சொந்த வாழ்வில்
சொல்லொணாத் துயரங்களுக்கு உள்ளானவர்கள்.

பாரதியையும், வ.உ.சி.யையும் பற்றி அனைவரும் அறிவர்.
ஆனால் சுப்ரமண்ய சிவா பற்றி அதிகம்பேருக்குத் தெரியாது.

“கப்பலோட்டிய தமிழன்” திரைப்படம் பார்த்த யாரும்
டி.கே.ஷண்முகம் அண்ணாச்சி ஏற்று நடித்த இந்த
பாத்திரத்தை மறந்திருக்க மாட்டார்கள்.

அந்தப் படத்திலிருந்து, ஒரு மலரும் நினவாக,
வ.உ.சி.யாக சிவாஜியும், சுப்ரமணிய சிவமாக
டி.கே.ஷண்முகம் அவர்களும் தோன்றும் ஒரு
உணர்ச்சிகரமான பாரதி பாடல் காட்சி கீழே –

மிகக் குறுகிய காலமே வாழ்ந்தார் சுப்ரமண்ய சிவா.
மதுரை அருகே வத்தலகுண்டு – பிறந்த இடம்.

பிறந்ததே வறுமையில் தான் –
இலவச உணவு, இருப்பிடம் எங்கு கிடைத்ததோ –
அங்கு படிப்பு – அதாவது மதுரையிலும், திருவனந்தபுரத்திலும்…!

அக்டோபர் 4, 1884 முதல் ஜூலை 23, 1925 வரை –
– ஆக மொத்தம் 41 வருடங்கள் கூட வாழவில்லை.

இதிலும் 1908 முதல் 1922 வரையிலான 14 வருடங்களில்
பெரும்பாலான சமயங்களில் வெஞ்சிறைக்குள் தானிருந்தார்.
(1899-ல் இவருக்கு மீனாட்சி என்கிற பெண்மணியுடன்
திருமணம் நடந்தது. குறுகிய காலமே இல்லறம்.
1915-ல் மனைவியும் மறைந்தார் – இவரும் துறவறம்
பூண்டு தேசாந்திரி ஆனார் – சந்நியாசி ஆனால் சுதந்திர
போராட்ட வீரர்….!!! )

சென்னையில் “ஞானபானு” என்கிற பெயரில் மாத இதழ்
ஒன்றை நடத்தினார். பாண்டிச்சேரியிலிருந்து பாரதி எழுதி
அனுப்பிய பல படைப்புகள் இதில் பல்வேறு பெயர்களில்
வெளிவந்தன.

சிறை அவருக்குக் கொடுத்த பரிசு வெண்குஷ்டம்.
விளைவு – பஸ், ரயில் எதிலும் பயணம் செய்ய தடை.
பெரும்பாலும் கால்நடையாகவே தமிழ்நாடு முழுதும் பயணம்.

அற்புதமாக உணர்ச்சிப்பெருக்குடன் வீராவேசமாக
உரை நிகழ்த்தக்கூடியவர் சுப்ரமண்ய சிவா.
அவரது ஆவேசமான பேச்சைக் கேட்க, அவர் போகும்
இடங்களில் எல்லாம் மக்கள் திரண்டனர்.
தனியே பொதுக்கூட்டம் என்று போடாமல்,
மக்கள் கூடும் இடங்களில் எல்லாம்
வெள்ளையரிடமிருந்து சுதந்திரம் வேண்டி
மக்களிடையே சுதந்திர வேட்கையை உண்டுபண்ணிப்
பேசினார் சிவா.

சுப்ரமண்ய சிவா காந்திஜியைப் போற்றினார்
என்றாலும் கூட-
அஹிம்சையில் முழுவதுமாக நம்பிக்கை இல்லை அவருக்கு.
வெள்ளைக்காரன் அடித்தானென்றால், அடித்த கையை உடை
என்று ஆவேசத்துடன் கூறியவர் அவர்.

– ஒரு வியாழன் அதிகாலையில் (23/07/1925)
தர்மபுரி அருகேயுள்ள பாப்பாரப்பட்டியில் உள்ள அவரது
ஆசிரமத்தில் சுப்ரமண்ய சிவாவின் இறுதி மூச்சு பிரிந்தது.

வாழ்ந்த காலத்தில் வ.உ.சி., பாரதி, சுப்ரமண்ய சிவா –
இந்த மூன்று சுதந்திரப் போராட்ட வீரர்களையுமே
தமிழகம் போற்றிப் பாதுகாக்கத் தவறியது.
மூவரும் சாகும் வரை வறுமையில் வாடினர்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் துவக்க காலங்களில்,
துணிவுடன் நின்று போராடிய இந்த தியாகிகளின்
இறுதிக்காலம் மிகவும் கொடுமையாக இருந்தது.

SubramaniyaSiva-3

bharathi alone

voc

அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாம் வாழவில்லை.
ஆனால், இன்று நாம் வாழும் இந்த சுதந்திர இந்தியா
அவர்கள் உருவாக்கிக் கொடுத்தது.

மகாகவி சுப்ரமண்ய பாரதி…
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி…
சுத்த வீரன் சுப்ரமண்ய சிவா….

சுப்ரமணிய சிவா அவர்களது நினைவு நாளான
இன்று இந்த பெருந்தகைககளை எல்லாம் நினைத்து
வணங்குவோம்.

நண்பர்களே – உங்கள் வழித்தோன்றல்களுக்கு
நேரம் வாய்க்கும்போதெல்லாம் இத்தகைய தியாகிகளைப்
பற்றியும், பகத் சிங் போன்ற சுதந்திரப் போராட்ட
வீரர்களைப் பற்றியுமான செய்திகளைச் சொல்லிக் கொடுங்கள்.

அவர்கள் காலத்திலாவது – நல்ல மனிதர்கள்,
நல்ல அரசியல்வாதிகள் உருவாகட்டும்…..
இந்த நாடு உருப்படட்டும்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to ” சவம் அல்ல அய்யா – சிவம் ” …!!!

 1. Yogi சொல்கிறார்:

  Sir

  When v.ò.c was released he had expected a great welcome

  But the one and only person to greet him was

  Subrsmaniya Siva

  Nandri ketta ulagam

 2. ravikumar சொல்கிறார்:

  Sir
  Good Write up as you said we have to narrate to our youngsters about value of Independence

 3. Srini சொல்கிறார்:

  Dear Sir,
  A very nice and heart touching article sir. In today’s world no one remembers these people. We need people like you to remind us..otherwise all are forgotten in kabali fever…

  regards
  srini

 4. நெல்லைத்தமிழன் சொல்கிறார்:

  ராஜாஜி, an abnormal பாரதியை ஆதரிக்கவில்லை என்று படித்துள்ளேன். பாரதியின் சொந்தங்களும் அவரின் அருமையை அவர் வாழ்ந்த காலத்தில் புரிந்துகொள்ளவில்லை. காலம் அவர்களுக்கு எம.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் பொற்கிழி வழங்கிற்று. பாரதியும் யுக கவியை மணந்த அவர் மனைவியும் வறுமையில் வாடினார். வ.உ.சியைத்தான் வாழ்ந்த காலத்தில் போற்றவில்லை. சுதந்திர இந்தியாவில் அவருடைய வாரிசை அரவணைப்பதற்கு என்ன தடை? பெரும் பணக்கார்ர், வசதி படைத்தவர். காசு சம்பாதிக்க அவர் கப்பல் ஓட்டவில்லை. அவருடைய வாரிசு சாதாரணமாக இருந்து மதுரையில் மறைந்தார். மக்கள்தான் சுயநலமுள்ளவர்கள். அவர்களால் நல்லது கெட்டது பகுத்துணரமுடியாது. அரசுக்கு அரசு அதிகாரிகளுக்கு, தானே முன்வந்து உதவ்வேணுமென்று தோணாமல் போய்விட்டதே. வாலேஸ்வரன் அவர்கள் மறைந்தபோது (வ.வு.சி புதல்வர்) வைகோ அவர்கள் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டார். (சமீபத்தில்தான்) நம் மக்கள், மற்றவர்களெல்லாம் பலனை எதிர்பாராது கடமையைச் செய்யட்டும் தாங்கள் மட்டும் கடமையைச் செய்யாது பலனை மட்டும் எதிர்பார்ப்போம் என்று சுதந்திரம் பெற்றபின்னர் எண்ண ஆரம்பித்ததுதான் எல்லாக் கோளாறுகளுக்கும் காரணம். இப்போதும் ஒன்றும் கெட்டுப்போய் விடவில்லை. இருக்கும் வாரிசுகளுக்கு உதவலாம். இது சிலை அமைப்பது மணிமண்டபம் கட்டுவதைவிட உயர்வானது. லஞ்சம் வாங்காமல் மக்களுக்காக உழைக்கும் நல்லக்கண்ணு போன்றவர்களுக்காவது அரசு அவர்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அவர்களின் வாரிசுகளுக்காவது அரசு வேலை போன்றவற்றைத் தாமாக முன்வந்து செய்யலாம். (கருணாநிதியைப்போல் மொழிப்போர் தியாகிகள் என்றபேரில் தகுதி இல்லாதவர்களுக்கெல்லாம் அரசுப் பணத்தை அளிக்காமல், ஒரு சிறு உதவி செய்தாலும் எப்போதும் அதைசன் சொல்லிக்காட்டி உதவி பெற்றவரைச் சிறுமைப் படுத்தாமல் இருப்பது அதைவிட முக்கியம்)

 5. selvarajan சொல்கிறார்:

  திரு சுப்பிரமணிய சிவா அவர்கள் வீரத்தியாகி மட்டுமல்ல — அவர் ஒரு ” வீரத்துறவி ” யும் கூட — ஆன்மீகத்தையும் — அரசியலையும் இரு கண்ணாக பாவித்தவர் …
  23.7.1925-ல் தனது 41-வது வயதில் இயற்கை எய்தினார். இதைப்பற்றி பாரதியார் கூறுகையில் .’வீர சுதந்திரம் வேண்டி நின்றார் – பின்னர்வேறொன்று கொள் வாரோ?- என பாடினார் .
  விடுதலைப் போராட்டத்தில் இவர்களைப் போன்றவர்களின் ரத்தமும் தியாகமும் அடங்கியுள்ளது என்பதே யாராலும் மறுக்கமுடியாத உண்மை !
  ஆனால் இன்று இதைப் பற்றியெல்லாம் அறியாவண்ணம் ஒரு சமுதாயத்தை உருவாக்கி — ஊழல் தலைவர்களின் — துதிப்பாடும் கூட்டமாக உருவாக்கி — பிழைப்பை ஓட்டும் நயவஞ்சகர்களிடம் இருந்து அவரவர் சந்ததியினரை கண்டிப்பாக மீட்க வேண்டிய சரியான தருணம் — விரைவில் ஏற்படும் என்பது — நிதர்சனம் !!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.