திரு.எல்.கே.அத்வானி – டாக்டர் சு.சுவாமியின் அடுத்த standby முயற்சி…..???

advani with the author

முன்னாள் துணைப்பிரதமரும்,
மூத்த பாஜக தலைவரும்,
மோடிஜி group-ஆல் ஒதுக்கப்பட்டவருமான –

திரு.எல்.கே.அத்வானியைப் பற்றிய
“அத்வானி கே சாத் 32 சால் ” (அத்வானியுடன்
32 வருடங்கள் ) என்கிற ஒரு புத்தகத்தை
வெளியிட்டு வைத்தும், அத்வானிஜியை புகழ்ந்து
“பிரதமர் பதவியை விட்டுக் கொடுத்தவர்” என்று
பாராட்டிப் பேசியும், டாக்டர் சு.சுவாமி தனது
அடுத்த சர்ச்சைக்கு அடிக்கல் நாட்டி இருக்கிறார்.

திரு.அத்வானியுடன் 30 ஆண்டுகள், அவரது
உதவியாளராக பணி புரிந்த விஸ்வாம்பர் ஸ்ரீவஸ்தவா
எழுதிய ‘அத்வானியுடன் 32 ஆண்டுகள்’ என்ற
புத்தகம் டெல்லியில் வெள்ளிக்கிழமை
வெளியிடப்பட்டது.

இந்தப் புத்தகம் குறித்து இதனை எழுதிய விஸ்வாம்பர்
ஸ்ரீவஸ்தவா, பேசும்போது –

‘இந்தப் புத்தகத்தின் முதல் கையெழுத்துப் பிரதி
அத்வானியிடம் காண்பிக்கப்பட்டு, அவரது
ஆலோசனையின்படி சில திருத்தங்களும் செய்யப்பட்டன.
கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பு 2013ஆம்
ஆண்டில் நடைபெற்ற பாஜக நாடாளுமன்றக் கூட்டத்தில்

பங்கேற்க அத்வானி தயாராகி காரிலும் ஏறி அமர்ந்து
விட்டார். எனினும், பிரதமர் வேட்பாளராக
நரேந்திர மோடி அறிவிக்கப்பட உள்ளதாக செய்தி வந்ததும்
அத்வானியின் வீட்டில் இருந்த சிலர் அவரை கூட்டத்துக்குச்
செல்லாமல் தடுத்து நிறுத்தினர்….என்றெல்லாம்
பேசி இருக்கிறார்.

இந்த புத்தகத்தில் என்னவெல்லாம் எழுதப்பட்டிருக்கின்றன
என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
இருந்தாலும், அத்வானிஜி குறித்த பல செய்திகளுடன்,
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் இன்னாள் பிரதமர்
மோடிஜி ஆகியோருடன் அவருக்கிருந்த உணர்வுகள்
பற்றியும் எழுதப்பட்டிருக்கிறது என்று காற்று வாக்கில்
தகவல்கள் உலா வருகின்றன.

இந்த புத்தகத்தை முதலில் வெளியிடுவதாக இருந்த
பாஜக பிரமுகரும் பீஹார் எம்.பி.யும் ஆகிய ஆர்.கே.சின்ஹா
கடைசி நேரத்தில் பயந்து பின் வாங்கியதால் –
வெளியிடும் தேதியும், இடமும் மாற்றப்பட்டு,
டாக்டர் சு.சுவாமியால் வெளியிடப்பட்டிருக்கிறது.

ss with advani book

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இன்னொரு பாஜக
மூத்த தலைவராகிய ராம் பஹதூர் ராய், இந்த புத்தக
வெளியீட்டை துணிந்து செய்ய முனைந்ததற்காக,
(பாஜகவில்…? )இன்னும் மிச்சமிருக்ககூடிய வெகு சில
துணிச்சல்காரர்களிடையே டாக்டர் சு.சுவாமியும் ஒருவர்
என்று கூறி பாராட்டி இருக்கிறார்….!!!

புத்தகத்தை வெளியிட்டு பேசிய டாக்டர் சு.சுவாமி –
‘அத்வானியைப் பற்றிய அழகிய பிம்பத்தை இந்தப் புத்தகம்
அளித்துள்ளது. (அத்வானி) அவராக எதுவும் கூறவில்லை.
அதனால் அவரது உதவியாளர்கள்தான் கூற வேண்டும்.
அத்வானி, அனுபவம் கூடிய ஒரு அறிவுப் பெட்டகம்…
அத்வானி விரும்பியிருந்தால் பிரதமராக இருந்திருக்க
முடியும். ஆனால், அவரோ அடல் பிகாரி வாஜ்பாயை
பிரதமராக அறிவித்தார்’ என்றார்

இந்த புத்தக வெளியீட்டைப் பற்றி,
” அத்வானியின் ஒப்புதலைப் பெறாமலும்,
அவரது விருப்பமின்றியும் இந்த புத்தகம்
வெளியிடப்பட்டுள்ளது” என்று அத்வானியின் செயலர்
தீபக் சோப்ரா வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில்
கூறியிருந்தார்.

இதில் விசேஷம் என்னவென்றால் –
இந்த மறுப்பு அறிக்கை பாஜக தலைமையகம் மூலமாக
வெளியிடப்பட்டிருக்கிறது….!!!

தான் ஒரு potential trouble creator என்பதை
டாக்டர் சு.சுவாமி அடிக்கடி நினைவுபடுத்திக் கொண்டே
இருப்பது எதற்காக – தெரிகிறதா….?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to திரு.எல்.கே.அத்வானி – டாக்டர் சு.சுவாமியின் அடுத்த standby முயற்சி…..???

 1. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  அத்வானி எப்போதும் தீவிர இந்துத்வா கொள்கை கொண்டவராகப் பார்க்கப்படுகிறார். அவர் விட்டுக்கொடுத்தார் என்பது சரியல்ல. அவர் normal transition processசுக்கு இடைஞ்சல் தருமாறு நடந்துகொள்ளவில்லை. இது அவரின் மாண்பைக் காண்பிக்கிறது.

  இப்போதெல்லாம் சு.சுவாமிக்கு இழவு வீட்டில் பிணமாகவும், கல்யாணவீட்டில் மணமகனாகவும் ஆக ஆசை வந்திருக்கிறது. மற்றபடி, அரசியல் கொள்கைப்படி, fade out ஆனவர்களை மறப்பதும் இப்போது lime lightல் இருப்பவர்களை அண்டியிருப்பதும்தான் நல்லது. இதைத்தான் துரைமுருகன், டி.ஆர்.பாலு போன்றோர் செய்கிறார்கள். அப்படி ஜிங்க் சக்கை மாற்ற இயலாதவர்கள் அரசியல் வானில் மறைகிறார்கள். பழனி மாணிக்கம், நெல்லை கருப்பசாமி, கே கே எஸ் எஸ் ஆர், நேரு போன்றோர்.

 2. LVISS சொல்கிறார்:

  Mr Advani had no other alternative at that time —-He was seen as a hardliner so Vajpayee was made the PM — it was Advani’s campaign that saw the possibility of a BJP led govt — But he had to give up in favour of Mr Vajpayee — If the BJP got a majority of its own at that time perhaps Mr Advani would have become the PM –The allies had a hand in making Vajpayee the PM–This is as far as I could remember of those days —Advani had lot of respect for Vajpayee —
  We have to see what things are told in the book —

 3. chandramouly venkatasubramanian சொல்கிறார்:

  just missed

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.