ஆளும் கட்சியின் அரவணைப்பில் – டெல்லி மீடியாக்கள் …!!!

 
crony media includes d of ss also

( நின்று கொண்டிருப்பவர்களில் முதலாவது பெண்மணி
திருமதி சுஹாசினி ஹைதர்,   திரு.சு.சுவாமி அவர்களின் மகள்….)

most-crony-channel

தகவல் அறியும் உரிமை (RTI) சட்டத்தின் கீழ்
பெறப்பட்ட சில தகவல்களை அழகாகக் கோத்து
கொடுக்கக்கூடிய ஒரு சந்தர்ப்பம் ….

திரு.மன்மோகன் சிங் தலைமையிலான, காங்கிரஸ்
கூட்டணி அரசு மத்தியில் 2004 முதல் 2014 வரை
ஆண்ட காலங்களில், மத்திய அரசிடமிருந்து –
டெல்லி தொலைக்காட்சி சேனல்கள், அகில இந்திய
அளவிலான செய்தி நிறுவனங்கள் பெற்ற சலுகைகள் –
பிரமிக்க வைக்கின்றன.

பிரதமர் வெளிநாடு செல்லும் போதெல்லாம்,
பயங்கர டென்ஷனிலும், வேலைப்பளுவிலும்
அவரது அலுவலக உதவியாளர்கள்
திண்டாடும் அதே நேரத்தில்,
மீடியாக்காரர்களோ, எப்போது பயணம் என்று
துடித்துக் கொண்டிருப்பார்கள்.

திரு.மன்மோகன் சிங் பிரதமராக பதவி வகித்த வரையில்,
அவர் வெளிநாட்டுப்பயணம் போகும்போதெல்லாம்,
பெரிய பத்திரிக்கை நிறுவனங்களைச் சேர்ந்த மூத்த
செய்தியாளர்களும், தொலைக்காட்சி சேனல்களின்
மூத்த நிருபர்களும், ராஜ (அரசு) மரியாதைகளுடன்
பிரதமருக்குரிய “பிரத்தியேக விமானத்திலேயே”
அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள்.

பயணங்களின்போது ( போகும்போதும் சரி,
திரும்ப வரும்போதும் சரி )

பிரதமருக்கு கிடைக்கக்கூடிய
உபசாரங்கள், உணவு வகைகள், வசதிகள் –
அத்தனையும் இந்த மூத்த ஊடகவியலாளர்களுக்கும்
உண்டு.

மக்களின் வரிப்பணத்தில், ஆளும் அரசு அள்ளி விடும்
சலுகைகளில், உல்லாசப்பயணம் சென்று –
இத்தனை வசதிகளுடன், பல வெளிநாடுகளைச் சுற்றிப்
பார்க்கும் வாய்ப்பை பெற்ற ஊடகவியலாளர்கள் –
எந்த அளவிற்கு அரசின் / பிரதமரின் செயல்பாடுகளை
விமரிசிக்க முடியும்…..?
மீடியாக்களின் விமரிசனங்கள் மழுங்கிப் போவதற்கான
முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்று.

எனவே தான் பல்வேறு சமயங்களிலும்,
துவக்கத்தில் அரசுக்கு எதிராக – விவாதத்தை
சூடாக நடத்திச் செல்வது போல் “பாவ்லா” காட்டினாலும்,
இறுதியில், சவ சவவென்று,
விளைவுகள் அரசுக்கு ஆதரவாக இருக்கும்படியே
balance செய்து கொள்வதைப் பார்த்திருக்கலாம்.
விவாத பேனல்களில், அரசு எதிர்ப்பாளர்களை விட
முகம் தெரியாத ஆதரவாளர்களை அதிகமாக
சேர்த்துக் கொள்வது இன்னொரு உத்தி….

திரு.நரேந்திர மோடி அவர்கள் பிரதமராக பதவியேற்ற
பிறகு, பிரதமர் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும்போது,
செய்தியாளர்களை, பிரதமருடன் அழைத்துச் செல்லும்
வழக்கம் நிறுத்தப்பட்டு விட்டது.

(ஆனால், வெளியுறவுத்துறையின் சார்பில், இவர்களை
அழைத்துச் செல்வதற்காக, தனியே – அரசு செலவில்
வேறு எதாவது ஏற்பாடு செய்யப்படுகிறதா ? – என்கிற
விஷயம் இப்போதைக்கு தெரியவில்லை….!
தெரிய வரும்போது எழுதுகிறேன்…)

இந்த சலுகைகளை அனுபவித்தவர்களில் திருவாளர்
“ஹிந்து” என்.ராம், திருமதி பர்கா தத், ஆகியோரும்
முக்கியமானவர்கள்.

இதை படிப்பவர்களில் சிலருக்கு இது
புது செய்தியாக இருக்கலாம் – பிரதமர் ம.மோ.சி.
காலத்தில் இந்த சலுகைகளை அனுபவித்தவர்களில்,
டாக்டர் சு.சுவாமியின் மகள் சுஹாசினி ஹைதரும்
அடக்கம்.

காங்கிரஸ் கூட்டணி அரசின் காலத்தில், பிரதமர்,
ஜனாதிபதி, வெளியுறவு அமைச்சர் ஆகியோர் மேற்கொண்ட
91 பயணங்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டதில்
பல சுவையான (பிறகு நமக்கென்ன – அதிர்ச்சியாகவா
இருக்கும்….? ) விவரங்கள் தெரிய வருகின்றன.

இவற்றில் பிரதமர் ம.மோ.சி. மேற்கொண்ட 67 வெளிநாட்டு
பயணங்களுக்கான மொத்த செலவு சுமார் 642 கோடிகள்.
இதில் 44 தடவை NDTV, மற்றும் 43 தடவை CNN news 18
தொலைக்காட்சிகளின் மூத்த ஆசிரியர்கள் ஓசி பாஸ்
வாங்கி இருக்கின்றனர். செய்தி நிறுவனங்களில் – ஹிந்து
அதிகபட்சமாகவும், ஹிந்துஸ்தான் டைம்ஸ் அதற்கடுத்த
படியாகவும், ஓசி பாஸ் வாங்கி இருக்கின்றன.

இனி –
கிடைத்துள்ள புள்ளி விவரங்கள் சுலபமாக புரிந்து
கொள்ளும்படியான வடிவத்தில் கீழே –

pm meeting media while on travel
 

most-crony-tv-journalist

most enjoyed - crony media editors

most-daliy- crony media

most-print-editor-crony media

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to ஆளும் கட்சியின் அரவணைப்பில் – டெல்லி மீடியாக்கள் …!!!

 1. Jagannathan சொல்கிறார்:

  K.M.sir,

  Your articles are always dependable
  and worth reading. thanks for sharing.

 2. Seshan சொல்கிறார்:

  You cover me with money…i cover you with news articles….

  Worldwide Journalist current moto….

  Seshan/Dubai
  Ex- New Indian Express/Dinamani – staff

 3. Srini சொல்கிறார்:

  sir, suhasini hyder is always an anti-national – pro-left – ndtv trained jouno. You can read her blogs that comesout very clearly on the same. For her career is very important than dad’s party affiliation….
  second…. off late – Modi-Ji’s trips are covered only by DD channels and these private channels are using only the video courtesy from dd…

 4. LVISS சொல்கிறார்:

  Now only DD news is accompanying the PM on foreign tours — Sometimes private channnels also go to countries visited by the PM –Probably they are spending their own money — There are many private channels- If you favour one the others may feel left out -That is why using DD NEWS wont give room for any misunderstanding– The private channels must have got used to this new arrangement – As a result of more exposure one could see improvement in the quality of reporting in DD —
  Mr Modi has also done away with addressing media in flight —

 5. Tamilian சொல்கிறார்:

  The reason for so much anti publicity, the reason for blowing up very trivial matters nation wide by ,media not mentioning anything positive about ruling party always projecting leftist anti national views is because of this policy by Modi government.

 6. selvarajan சொல்கிறார்:

  ஒரு பொது ஜனத்தின் — ” அங்கலாய்ப்பு ” : …… மனசுக்கு ரொம்ப வருத்தமா இருக்குது — என்னன்னா …. அனைத்து மாநில மீடியாக்களுக்கு ” இந்த அரவணைப்பு கிடைக்கவில்லையே — என்று நினைக்கும் போது …. ?
  ஆமாம் .. அய்யா … ! விமரிசனம் — இடுக்கை — பதிவு போன்ற வார்த்தைகளுக்கு ” ஆங்கிலத்தில் ” எப்படி கூறுவது … ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.