நகைக்கடை முதலாளியின் ஒரு கோடி ரூபாய்….

1024px-Sathya_gnana_sabha,_vadalur_1

ஒரு செய்தி படித்தேன் –

சென்னையை சேர்ந்த ஒரு பிரபல நகைக்கடை முதலாளி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஒரு கோடி ரூபாய்
பெறுமானமுள்ள “வைரக்கிரீடத்தை ” நன்கொடையாக
கொடுத்திருக்கிறார்…..

எனக்கு ஒரு நண்பர் மூலமாக வந்த இன்னொரு
தகவலையும் இங்கு தர விரும்புகிறேன் –

————

ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகில் வாணியம்பாடி
செல்லும் சாலையோரத்தில் இருக்கிறது ஏலகிரி ஓட்டல்.

அங்குச் சாப்பிட்டுவிட்டுச் சிலர் பணம் கொடுக்காமல்
வணக்கம் மட்டும் தெரிவித்து விட்டுச் செல்கின்றனர்.
கல்லாவில் இருந்தவரும் காசு கேட்பதில்லை. அதென்ன –
இங்கு பணத்துக்குப் பதில் வணக்கம் மட்டும் செலுத்தினால்
போதுமா என்ன ?

விசாரித்தபோது மேலே தொங்கிக்கொண்டிருந்த
சிலேட்டுப் பலகைகளைக் காட்டினார். விஷயம் புரிந்தது.

‘முதியோர், ஊனமுற்றோர்களுக்கு
காலை 8 முதல் 11 மணி வரை இலவச உணவு’
(100 பேர் வரை),

‘பால் வாங்கப் பணமில்லையென்றால்
குழந்தைகளுக்கு இலவசமாகப் பால்’,

‘வாரம் 100 மாணவர்களுக்கு இலவசமாக பேனா
அல்லது பென்சில்’,

‘1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு
காலை முதல் மாலை வரை பாதி விலையில் உணவு’

இந்த அறிவுப்புகள் சிலேட்டுப் பலகைகளில் சாக்பீஸால்
எழுதப்பட்டிருந்தன.

ஆச்சரியத்துடன் கேட்டால் –

“பணத்துக்காக வாழ்றதில்லிங்க;
வாழ்றதுக்குதாங்க பணம்”

பெரிய தத்துவத்தை எளிதாகச் சொல்கிறார்
இந்த ஓட்டலின் உரிமையாளர் நாகராஜ். அவர் இந்தச்
சேவையை 25 ஆண்டுக்கும் மேலாகச் செய்துவருகிறார்.
ஒரு நாளைக்கு ஏறக்குறைய 100 பேர் வரை இந்த
ஓட்டலை நம்பியே காலம் தள்ளுகின்றனர்.

ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வட மற்றும்
தென் தமிழகம், கர்நாடகம் மற்றும் ஆந்திரத்தை
இணைக்கும் முக்கியச் சந்திப்பு. இந்த நிலையத்தைக்
கடந்ததுதான் அனைத்து ரயில்களும் பயணிக்கின்றன.

பயணத்தின்போது காலி தண்ணீர் பாட்டிலை ஜன்னல்
வழியே வீசுவதைப்போல – குடும்பத்தில் பாரமென
கருதப்படும் மனிதர்களை ரயிலில் அழைத்து வந்து
இங்கே இறக்கிவிட்டுச் சென்று விடுகின்றனர்.

அவர்கள் பெரும்பாலும் முதியவர்கள் மற்றும்
மனநிலை பாதிக்கப்பட்டவர்கள். மாதந்தோறும்
குறைந்தபட்சம் 15 பேராவது இப்படி அனாதைகளாகத்
தனித்து விடப்படுகின்றனர்.

திக்குத் தெரியாமல் தவிக்கும் அவர்கள்
ஜோலார்பேட்டையிலேயே சுற்றித்திரிகின்றனர்.
இவர்களுக்கு இந்த ஓட்டல் ஒரு அன்னச் சத்திரமாக
இருக்கிறது.

“பசி என்ற உணர்வு மட்டும்தான் சுயநினைவு
இல்லாத வருக்குக்கூட உணவு நமக்கு தேவை
என்பதை உணர்த்துகிறது” என்கிறார் நாகராஜ்.
சத்தியமான வார்த்தை

இவர்கள் தவிர சுற்றுவட்டாரங்களில், வீடுகளில்
கவனிக்க முடியாத நிலையில் இருக்கும்
முதியவர்களுக்குத் தேவையான உணவை அவர்களது
குடும்பத்தினர் வந்து இலவசமாக பார்சல் வாங்கிச்
செல்லலாம். நாகராஜின் மனைவி சுஜாதாவும்
தன் கணவரின் இந்தத் தொண்டுக்குப் பக்கபலமாக
இருக்கிறார்.

மிகச் சின்ன வருமானத்தில் இதையெல்லாம் எப்படிச்
சமாளிக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, “இவர்களுக்கென்று
தனியாக உலை வைக்கப்போதில்லை. வழக்கமாக
சமைக்கும் அளவோடு கொஞ்சம் கூடுதலாக சமைக்கிறேன்.
5 கிலோ மாவு புரோட்டோ போட்டாலும் 10 கிலோ மாவு

போட்டாலும் மாஸ்டருக்கு ஒரே கூலிதான்.
எரிபொருளும் ஏறக்குறைய ஒரே அளவில்தான்
செலவாகிறது.

சில ஆயிரம் ரூபாய் வருவாய் இழப்புதான் என்றாலும்
எனக்கு குடும்பம் நடத்தத் தேவையான லாபம்
கிடைக்கிறது. மனதுக்கும் சந்தோஷமாக இருக்கிறது”
என்கிறார் “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்”
வாடி நிற்கும் நாகராஜ்.

———————-

நண்பர்களே, கொஞ்சம் யோசித்துப் பார்ப்போமே –
எல்லையில்லா பெருங்கருணையான அந்த கடவுள்
இந்த இரண்டு செய்கைகளில், எதைக்கண்டு மனம்
மகிழ்வார்…?

“ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறேன்”
என்று ஒரு நாத்திக அறிஞர் சொன்னார்.

” இயலாதவருக்கு உதவும் உள்ளங்களை
இறைவன் விரும்புவான் ” – என்று ஆத்திகனாகிய
நான் சொல்ல விரும்புகிறேன்.

கோவிலுக்குச் செய்வது தவறு என்று நான்
சொல்ல மாட்டேன்…. ஆனால், அதைவிட முக்கியம்
பசித்தவனுக்கு சோறு இடுவது – இயலாதவர்களுக்கு,
இல்லாதவர்களுக்கு உதவுவது;

பசித்தவருக்கு சோறு போடுவதை விடச்
சிறந்த சந்தோஷம், புண்ணியம் இந்த உலகில் உண்டா..?

“கடவுள் உள்ளமே – கருணை இல்லமே ”


Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

14 Responses to நகைக்கடை முதலாளியின் ஒரு கோடி ரூபாய்….

 1. Ganesan சொல்கிறார்:

  I totally agree with your views.

 2. LVISS சொல்கிறார்:

  I salute this great soul-What is really admirable is that the man is not very rich . but his mind is –

 3. Mahesh Thevesh சொல்கிறார்:

  ஒரு கோடி கிரீட தானம் அவரின் சுய விளம்பரம் அதை இறைவன்
  அறிவான் கொடுப்பினுள் சிரித்துக்கொள்வான்.திரு நாகராஜ் ன் தன்னலம் அற்ற சேவையை ஏற்று அருள்புரிவான்

 4. selvarajan சொல்கிறார்:

  அய்யா … !
  திருமூலரின் திருமந்திரத்தில் ஒரு பாடல் : அதில் அனைவருக்கும் எளிமையான — செய்யக்கூடிய சில செயல்களை ” தானம் ” என்பதற்காக கூறியிருப்பார் — ஆழ்ந்து சிந்தித்தால் தானம் செயதால் என்ன பயன் என்கிற பொதுவான கேள்விக்கு விடை — ” புண்ணியம் ” கிடைக்கும் — புண்ணியம் கிடைத்தால் அதன் பயன் அடுத்த கேள்விக்கு விடை ” நற்கதி [ முக்தி — மோட்சம் ] ” கிடைக்கும் என்று பொருள்கொள்ளலாம் —
  அந்த பாடல் ” யாவர்க்கும் ஆம் இறைவற்கொரு பச்சிலை ”
  யாவர்க்கும் ஆம் பசுவுக்கொரு வாயுறை
  யாவர்க்கும் ஆம் உண்ணும்போதொரு கைப்பிடி
  யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரை தானே “…. என்று பாடலில் கூறியிருப்பார் …
  நகைக்கடை முதலாளி செய்ததைப் போல செய்ய மக்களை ஏமாற்றி கொள்ளையடிக்க வேண்டும் — அந்த பாவத்தைப் போக்க இறைவனின் தலைக்கு கிரீடம் போடலாம் …
  தானத்தில் சிறந்தது அன்னதானம் — அதை வள்ளலார் வழியில் திரு நாகராஜ் அவர்கள் செய்கிறார் … பாராட்ட வார்த்தைகளே இல்லை ….
  திருமூலர் சொல்லியபடி செய்வது எளிமையாக இருந்தாலும் — வில்வம் – துளசி – பூ போன்றவற்றை இறைவனுக்கு சமர்ப்பிக்க முடியாதவர்களும் — கோயிலுக்கு செல்லாதவர்களும் என்ன செய்வது … ? அடுத்ததாக உள்ள பசுவுக்கு கொஞ்சம் புல்லோ — கீரையோ கொடுக்கலாம் என்றால் — தற்காலத்தில் பசு — புல் போன்றவற்றை பார்ப்பதே அரிதாக இருக்கும் போது என்ன செய்வது … ?
  மூன்றாவதாக கூறியபடி சாப்பிடும் போது கொஞ்சம் – ஒரு கைப்பிடி மீதி வைத்தால் ” வறியவர்களோ — ஏதாவதொரு உயிரினமோ ” உண்ணும் அல்லவா .. என்றால் — அய்யா … எனக்கே அரை வயிற்று கஞ்சிக்கு அல்லாடுகிறேன் — கிடைக்கும் சொற்ப வருமானத்தில் ” அம்மா உணவகத்தில் ” ஒரு சாதம் வாங்கி சாப்பிடுகிறேன் — நான் எப்படி மீதம் வைப்பது என்பவர்கள் என்ன செய்வது … ?
  கடைசி வரியில் உள்ள மற்றவர்களிடம் ” இனிய முகத்தோடு ” நாலு நல்ல வார்த்தைகளை பேசவோ — சொல்லவோ முடியும் அல்லாவா … அதை செய்யுங்கள் — அப்பாடா ,,, நம்மளால முடிந்தது இது மட்டும் தான் ….
  எனவே நல்லதை சொன்னாலே … ” நற்கதி ” அதாவது புண்ணியம் தானே … ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   நல்லதை சொன்னாலும், (எழுதினாலும்… 🙂 🙂 )
   நிச்சயமாக “புண்ணியம்” தான்.

   இது தான் இந்த தளத்தின் விசேஷம்….
   இது போன்ற சிறந்த பின்னூட்டங்களின் மூலம்
   சில இடுகைகள் ” value addition ”
   பெறுகின்றன…

   நன்றி நண்பரே.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 5. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  தானத்தில் சிறந்தது அன்னதானம். (கர்ணன் கதையெல்லாம் படித்துவிட்டு அதன்படி நடந்துகொள்ள மறந்துவிடுகிறார்களே) இதற்கு அடுத்தபடியானது, “ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்” – அதாவது கல்விக்காகக் கொடுக்கும் பணம். தானத்தில் உயர்ந்தது, கிடைத்தவன் யார் கொடுத்தது என்று அறியாமல் இருப்பது. (திரு நாகராஜன் (மற்றும் பலர்), தாங்கள் செய்வதைப் பார்த்து பிறர்க்கும் அது உத்வேகமாக இருக்கவேண்டும் என்பதற்காக, பத்திரிகைகளில் இந்தச் செய்தி வருவதற்கு அனுமதி அளித்திருப்பார்கள்.) இதற்கு அப்புறம்தான் மற்ற எல்லாம் என்பது என் அபிப்ராயம். இதைத்தான் எல்லா மத நூல்களும் சொல்கின்றன. (இஸ்லாமில், இஃப்தாரின்போது, பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் சாப்பிட்டார்களா என்பதைப் பார்த்துவிட்டு நீ சாப்பிடு என்பதைக் கடமையாகச் சொல்கிறது)

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நெல்லைத்தமிழன்,

   மிகச் சரியாக சொல்கிறீர்கள்.
   இஸ்லாத்தில் தானமும் கூட மிகவும்
   வலியுறுத்தப்படுகிறது.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

    அன்னதானம் என்பதால் மற்றவற்றைப்பற்றி எழுதவில்லை. வருட இறுதியில் தனக்கு உள்ள சொத்தில் ஒரு பகுதி (2 1/2 சதவிகிதம் மொத்த சொத்தில்) ஸ்சகத் என்ற பெயரில் தானமாகச் செலுத்தக் கடமைப்பட்டவர்கள். எனக்குத் தெரிந்து நிறையபேர், இதனை புனித ரமலான் மாதத்தில் செய்வார்கள். (அதைத் தனதாக்கிக்கொள்ள பள்ளிவாசல் கட்டுகிறேன், இந்த விதத்தில் ஏழைகளுக்கு உதவுகிறேன் என்று பொய்க் கணக்கு, போட்டோ காட்டி, இந்தியாவிலிருந்து, அதுவும் ஹைதராபாத்திலிருந்து நிறைய பேர் குவைத்துக்குச் சென்று ஹோட்டலில் தங்கி, ஷேக் மற்றும் பணக்காரர்களை ரமலான் மாதத்தில் பார்த்து பணம் திரட்டுவார்கள். இது ஒரு புறம். இது எல்லா மனிதர்களிடமும் எல்லா மதங்களிலும் உள்ள பழக்கம்தான்). என்னுடைய பாஸிடம், இதை எப்படிக் கணக்கு பண்ணுகிறீர்கள் என்று கேட்டேன். (அவர் கடமைகளை அவருக்குத் தெரிந்த அளவில் சரியாக ஃபாலோ செய்பவர்). அது எங்க அப்பாவின் வேலை. அவருக்குத் தெரியும் யார் யாருக்கு எவ்வளவு பணம் சேர்ந்திருக்கிறது, சொத்து மதிப்பு எல்லாம். அவர் இந்த அளவு பணம் தந்துவிடு என்பார். அதை அவரே சரியான நபர்களிடம் சேர்த்துவிடுவார் என்றார். தமிழர்களுக்கு மண்டையில் அடிக்கும்படியாக இதைத்தான் பாரதி, “தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்” என்றான். சுற்றியிருப்பவர்கள் பசித்திருக்க நாம் உண்ணுவதே பாவம் என்று மத நூல்கள் சொல்கின்றன. அதனால்தான் பொது இடங்களில் உண்ணுவதும் தவறு (என்று எங்களுடைய பெரியவர்கள் சொல்வார்கள்). இப்போ காலம் மாறிவிட்டாலும், அதன் அர்த்தம் மாறிவிடவில்லை.

 6. drkgp சொல்கிறார்:

  ஜெயமோகனின் அறம் – அதன் சோற்றுக்கணக்கு பகுதியில் வரும் கெத்தேல் சாகிப்.
  அதனை வாசித்தவர்களுக்கு திரு நாகராஜ் அவர்கள் கெத்தேல் சாகிப்பின் மறு உருவம்
  போலவே தோன்றும்.

 7. Yogi சொல்கிறார்:

  Sir

  God bless

  Vaadiya payirai Kanda podhelam vaadinen

  Vallal ramalinga adihal

  Dheivam manushya rubayaha nama

  Maindhan sir special thanks

 8. gopalasamy சொல்கிறார்:

  I also wanted to mention about “கெத்தேல் சாகிப்”. Salute to Sri Nagaraj and his wife.

 9. gopalasamy சொல்கிறார்:

  There is one good malayalam movie “Ustad hotel”

 10. selvarajan சொல்கிறார்:

  // பாரம்பரியத்துக்காக மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்க முடியுமா? சுப்ரீம் கோர்ட் கேள்வி //
  Read more at: http://tamil.oneindia.com/news/india/like-jallikattu-child-marriage-also-an-age-old-tradition-sc-258868.தம்ள
  நல்ல கேள்வி — ! கண்ட ” கலர் பவுடர்களை ” — அது கெமிக்கல் கலந்ததாக இருந்தாலும் — மனிதனுக்கு கேடு விளைவிப்பதாக இருந்தாலும் உடலில் பூசியும் — நீரில் கலந்து பீச்சியடித்தும் கொண்டாடும் ஒரு விழா கூட ” பாரம்பரியமான ” ஒன்று தான் — அதுக்கும் இதே கேள்வியை கேட்டு — தடை கொண்டுவர முடியுமா …. ? இதைப் போல நிறைய பாரம்பரிய விளையாட்டு — விழாக்களை என்ன செய்வது … ? சும்மா தெரிந்துக் கொள்ள ஆசை தான் … வேறொன்றும் இல்லை … ஹி … ஹி … ஹி … ?

 11. chandramouly venkatasubramanian சொல்கிறார்:

  salute

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.