பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது …

சென்னை அருங்காட்சியகம்


இன்று மாலை தலைப்புச் செய்தி இது –

” ஜல்லிக்கட்டை அனுமதித்தால்
குழந்தை திருமணங்களையும் அனுமதிக்க வேண்டும்
…………………………………………………….”

நல்ல வேளை – “சதி”யையும் (உடன் கட்டை ஏறுதல்…)
அனுமதிக்க வேண்டி இருக்கும் –
“தேவதாசி” முறையையும் அனுமதிக்க வேண்டி இருக்கும்
என்றெல்லாம் – சொல்லாமல் விட்டார்களே…

தகுதியால்,
அறிவால்,
அனுபவத்தால்,
சட்ட ஞானத்தால் –
கலங்கரை விளக்கமாகத் திகழ வேண்டியவர்கள் ….

அமர்ந்திருக்கும்
” இடம் ” காரணமாக
எதை வேண்டுமானாலும்
கூற முடிகிறது…..

இதையெல்லாம் பதில் பேசாமல்
ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது –
நம் தலையெழுத்து, விதி, சாபம் …..
இந்த நாட்டின் சட்டம்…
என்றால் நாம் என்ன செய்ய முடியும் …..!!!

வாய் மூடி மவுனச்சாமியார்களாகவே
இருப்போம்….

—————-
புழுக்கம் தாங்க முடியவில்லை –
அதன் வெளிப்பாடு இது …
பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே…

Advertisements
Gallery | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது … க்கு 3 பதில்கள்

  1. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

    இது நம் எதிர்பார்ப்பின் தவறு. ராஜா என்பது ஒரு பதவி. அதில் அமர்ந்திருப்பவர்கள் எல்லோரும் ஒரே மாதிரியாகவா வரலாற்றில் இருக்கிறார்கள்? எல்லோரும் மனிதர்களே. அவரவர் சிந்தனைக்கேற்றபடி செயல் இருக்கிறது. அவர்களின் செயல்களுக்கேற்றபடி காலங்கள் கடந்தும் அவர்களின் பெயர் நிலைத்து நிற்கிறது. ஔரங்கசீப் கொடுங்கோலன் என்றே நினைவுகூறப்படுகிறார். ஹூமாயூன் அவருடைய காதல் சின்னத்தாலேயே நினைவுகூரப் படுகிறார். அக்பர் அவரது மிதவாத சிந்தனையினால் நினைவுகூரப்படுகிறார். பதவி ஒன்றே.

  2. Seshan சொல்கிறார்:

    politicians and peoples….similar to banana republic….like this video…https://www.youtube.com/watch?v=NiGfddz_9_g

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.