கலாம் அவர்களின் “ப்ரம்மோஸ்” ஏவுகணை டார்கெட்டை தகர்ப்பதை பார்த்திருக்கிறீர்களா (வீடியோ ..) ….?

.

.

“ப்ரம்மோஸ்” ஏவுகணை இந்த நாட்டிற்கு
டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் அளித்துள்ள
மிகச்சிறந்த பரிசு….

அது செயல்படும் விதத்தை பெரும்பாலானோர்
பார்த்திருக்க வாய்ப்பில்லை. சட்டென்று மேலே கிளம்பி,
திசையை மாற்றி, சீறிப்பாய்ந்து, தொலைதூரத்திலுள்ள
இலக்கை குறிபார்த்து தகர்ப்பது பிரமிப்பூட்டும் காட்சி….

இந்திய நாட்டிற்கு கலாம் சார் ஆற்றிய பணிகள்
எண்ணற்றவை….

மிகச்சாதாரண ஜூனியர் விஞ்ஞானியாக, ராணுவ
ஆராய்ச்சிப் பிரிவில் ( Defence Research and Development
Organisation ) சேர்ந்த டாக்டர் அப்துல் கலாம்,
அந்த இலாகாவின் தலைமைப் பொறுப்பை மட்டுமல்லாமல்

இந்திய நாட்டின் ஜனாதிபதி
பொறுப்பையும் வகிக்கக்கூடிய அளவிற்கு உயர்ந்தார்
என்றால், எப்பேற்பட்ட உழைப்புக்கு சொந்தக்காரராக
அவர் இருந்திருக்க வேண்டும்…?

நாட்டிற்கு அவர் ஆற்றிய பணிகள் அனைவரும்
அறிந்தவையே. அவர் பணியாற்றிய அதே துறையில்
பணியாற்றியவன் என்கிற முறையில் துறை சார்பாக
அவரது சீரிய செயல்பாடுகள் குறித்து எனக்கு
நேரடி அனுபவம் கூட கொஞ்சம் உண்டு.

இது ஒரு பக்கம் இருக்கட்டும்….

கீழே கலாம் சார் பணியில் சேர்ந்த புதிதில் எடுக்கப்பட்ட
ஒரு புகைப்படத்தை கீழே பாருங்கள் –

1960- களில் தும்பா (திருவனந்தபுரம்) ராக்கெட்
ஏவுதளத்தின்,ஆராய்ச்சிக்கூடத்தில் திரு அப்துல் கலாம்
அவர்கள் இளம் விஞ்ஞானியாக தரையில் முட்டி போட்டு
அமர்ந்து – அசெம்பிளி பணியில் ஈடுபட்டிருக்கிறார்…

kalam assembling rkt in thumba 1960s

இது 1960- களில், இந்தியாவில்
தும்பாவிலிருந்து ஏவப்பட்ட இந்தியாவின்
முதல் ராக்கெட் –

first racket from isro thumba 1963

இப்படி 60-களில் விளையாட்டாக ராக்கெட் விட ஆரம்பித்த
நாம் கடைசியாக தயாரித்திருப்பது,
இன்றைய தினத்தில், உலகிலேயே தலைசிறந்த
ஏவுகணையாக மதிக்கப்படும் இந்தியா மற்றும் ரஷ்யாவின்
கூட்டுத்தயாரிப்பான –

“ப்ரம்மோஸ் ” ( பிரம்மபுத்ரா மற்றும் மாஸ்கோ
ஆகிய பெயர்களிலிருந்து உருவான புதுப்பெயர் ….! )

இந்த ஏவுகணை உருவானதன் முழுப்பெருமையும்
திரு.கலாம் அவர்களைச் சாரும்…!!!

We salute you KALAAM SIR…!!!

கீழே – சீறிப்பாயும் “ப்ரம்மோஸ்” …..

BRAHMOS INDO-RUSSIAN SUPERSONIC
CRUISE MISSILE TEST VIDEO –

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to கலாம் அவர்களின் “ப்ரம்மோஸ்” ஏவுகணை டார்கெட்டை தகர்ப்பதை பார்த்திருக்கிறீர்களா (வீடியோ ..) ….?

 1. selvarajan சொல்கிறார்:

  திரு அப்துல் கலாம் அவர்கள் சென்னையில் ஒரு முக்கிய பள்ளியில் உரையாற்றினார் … அப்போது மாணவர்களிடம் பல விஷயங்களை பற்றி பேசி உற்சாகப படுத்தினார் — அதிலிருந்து ஒரு துளி :
  // ” நண்பர்களே… தமிழக மக்களின் உள்ளங்களில் எல்லாம் வாழ்ந்துகொண்டிருக்கும் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் இல்லத்தில், அவர் உருவாக்கிய பேச்சு மற்றும் செவித்திறன் குறைவுடையோர் பள்ளியில் வந்து உங்களை சந்தித்து, உரையாட கிடைத்த வாய்ப்புக்காக நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். 23 ஆண்டுகளை கடந்த பள்ளி என்றால் என்ன ? இந்த பள்ளி பூமியில் உள்ளது. பூமி சூரியனைச் சுற்றி வர ஒரு வருடம் ஆகும். அந்த கணக்கின்படி இந்த பள்ளி 23 முறை சூரியனை சுற்றி விட்டது என்று அர்த்தம்….
  நான் எழுதிய கவிதை ஒன்றை உங்களோடு பகிர்ந்துகொள்ளலாம் என நினைக்கிறேன். நீங்களும் திரும்பச் சொல்லுங்கள்.

  ‘நான் பிறந்தேன் அரும்பெரும் சக்தியுடன்
  நான் பிறந்தேன் நற்பண்புகளுடன்
  நான் பிறந்தேன் கனவுடன்
  நான் வளர்ந்தேன் நல்ல எண்ணங்களுடன்
  நான் பிறந்தேன் உயர; எண்ணங்களை செயல்படுத்த
  நான் பிறந்தேன் ஆராய்ச்சி உள்ளத்துடன்
  நான் பிறந்தேன் ஆகாய உச்சியில் பறக்க
  நான் பூமியில் ஒருபோதும் தவழமாட்டேன்.
  தவழவேமாட்டேன்.
  ஆகாய உச்சிதான் என் லட்சியம்
  பறப்பேன் பறப்பேன்
  வாழ்வில் பறந்துகொண்டே இருப்பேன்.’

  – ( கவிதையை முடித்துக்கொண்டு, மாணவர்களை உற்சாகப்படுத்தும் தொனியில்
  எத்தனை பேர் பறப்பீங்க சொல்லுங்க.? என கலாம் கேட்க, ‘பறப்போம் பறப்போம்’ என மாணவர்கள் மத்தியில் இருந்து முழக்கமாய் கேட்டது பதில். // அதுமட்டுமல்ல கனவு காணுவதை பற்றி அவர் கொடுத்த விளக்கம் : // உறக்கத்தில் வருவதல்ல கனவு
  உங்களை உறங்க செய்யாமல் செய்வதுதான் கனவு. //
  மேலும் ஈரான் நாட்டை சேர்ந்த முஸ்தபா என்ற மாணவனைப் பற்றியும் இங்கே குறிப்பிட்டுள்ளார் … முழுமையாக தெரிந்துக் கொள்ள
  http://www.vikatan.com/news/tamilnadu/66552-abdul-kalam-innovative-speech-in-front-of-visually.art?utm_source=newsletter&utm_medium=content&utm_campaign=4318 இங்கே பார்க்கவும் …. இந்தகட்டுரை வெளியிட்ட விகடனுக்கு — எழுதியவருக்கு நமது நன்றிகள் …. கலாம் என்றால் படிப்பு — உழைப்பு — உயர்வு — கனவு மட்டும் தான் மனதில் நிற்க வேண்டும் …. !!!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி செல்வராஜன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.