நியாயம் தவறாத திரு.ஸ்டாலின்… அடித்தவரையும் கேளுங்கள் – அடி வாங்கியவரையும் கேளுங்கள .!!!

.

.

ஈரோட்டில் இன்று மாலை திரு.ஸ்டாலின் அவர்கள்
பேசியதிலிருந்து –
( http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=170240 )

——————————————-
கடந்த 2 நாட்களாக அடிவாங்கிய செய்தி
ஓடிக்கொண்டிருக்கிறது. அதிலும், இன்று அடிவாங்கியதாக
வந்த செய்தி, பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, நேற்று திமுக எம்பியை
அதிமுக பெண் எம்பி அடித்தார் என்ற செய்தி.

இன்று வந்துள்ள செய்தி – முதலமைச்சர் ஜெயலலிதா
அவர் கட்சியின் எம்பியான சசிகலா புஷ்பாவை அடித்தார்
என்பது.

இதை நான் சொல்லவில்லை.
அந்த பெண் எம்பி ஏதோ வெளியில் கூட்டம் போட்டு
பேசவில்லை. பத்திரிகையாளர்களை சந்தித்து பேசவில்லை.

நாடாளுமன்றத்தில் மைய மண்டபத்தில் சபாநாயகர்
உட்பட அனைத்துக்கட்சி எம்பிக்களும் அவையில்
இருந்தபோது தன்னை முதலைமைச்சர் ஜெயலலிதா
அடித்ததாகவும் சசிகலாவும் அடித்ததாகவும் கண்ணீர்
மல்க, கதறி பேசியுள்ளார்.

இது ஏதோ சாதாரண விஷயமல்ல.
என்னிடம் சென்னையில் விமான நிலையத்தில் இன்று
பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கேட்டபோது, ஒன்றை மட்டும்
சொல்லிவிட்டு வந்தேன்,

நீங்கள் யார் அடித்தார்களோ அவர்களைத்தான்
கேட்க வேண்டும். அதே போல் அடிவாங்கியவரையும்
கேளுங்கள் என்று சொல்லிவிட்டு வந்தேன்.

இப்போது கூறுகிறேன். நாடாளுமன்றத்தில் சபாநாயகரிடம்
அந்த பெண் எம்பி. முதலைமைச்சர் ஜெயலலிதாவும்
உடனிருந்த சசிகலாவும் அடித்தார் என்று கூறியிருக்கிறார்.

ஆகவே இதற்கு ஜெயலலிதா பதில் சொல்லியே
தீரவேண்டும்’’ ….

————————————–

திரு.ஸ்டாலின் சத்தியசந்தன்… நியாயவான்…
தர்மவழியில் நிற்பவர்….
யாரைக் கேட்க வேண்டுமென்று
வழி காட்டி – சொல்லி விட்டார் –

ஆனால், ஒரு பாதியை சொன்னவர்,
இன்னொரு பாதியை மறந்து விட்டாரே….!!!

first come – first serve என்பது போல் –
முன்னால் நடந்தது,
முன்னால் கேட்கப்பட வேண்டும் அல்லவா…?

siva-sasikala pushpa

“நீங்கள் யார் அடித்தார்களோ அவர்களைத்தான்
கேட்க வேண்டும். அதே போல்
அடிவாங்கியவரையும் கேளுங்கள் ”

முதல் மரியாதை யாருக்கு கிடைத்தது…?
முதலில் அறை விட்டவர் யார்….?

அதாவது முதலில் அடித்த ( நாலு அறை விட்ட)
திருமதி சசிகலா புஷ்பா அவர்களையும் –
அடிவாங்கிய மறத்தமிழன் திரு.திரு.திருச்சி சிவா
அவர்களையும் –

முதலில் போய்க் கேட்டு விட்டு,
பிறகு மற்றவரை கேட்பது தானே முறையாக இருக்கும்….?

வரிசைப்படி விசாரிப்பது தானே முறை…?

முதலில் அறை வாங்கிய மறத்தமிழனை
மறந்து விட்டு, யாரையோ சொன்னால் எப்படி…?

——————————-

பின் குறிப்பு –

முதலில் நான் இதைப்பற்றி எல்லாம் எழுத வேண்டாம்
என்று தான் இருந்தேன்.

ஆனால், பிறகு, மறத்தமிழனுக்கு நியாயம்
மறுக்கப்படலாமா…? அதுவும் திரு.ஸ்டாலின்
அவர்களே அதற்கு காரணம் ஆகலாமா…?

எனவே, தர்மத்தை நிலை நாட்ட,
அனைவருக்கும் நீதி கிட்ட, நாம் மறக்காமல்
நம் பணியைச் செய்வோம்
என்று தான் எழுதத் துணிந்தேன்…!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

19 Responses to நியாயம் தவறாத திரு.ஸ்டாலின்… அடித்தவரையும் கேளுங்கள் – அடி வாங்கியவரையும் கேளுங்கள .!!!

 1. பெருவழுதி சொல்கிறார்:

  முதலில் அடி வாங்கியவருக்கு முதலில் நியாயம்
  (மொ) மெத்தச் சரி .
  மறத்தமிழனை மொதல்ல விசாரிங்க பத்திரிக்கைக்காரர்களே
  அவர் ஏன் அறை வாங்கினாரென்று.
  உங்க பத்திரிகைக்கு நல்ல மேட்டரும் கிடைக்கும்.

 2. CHANDRAA சொல்கிறார்:

  JI this stalin must be a dummy piecu
  He had no concern for siva who was slapped by sasi
  all know well that tiruchi siva is not in good books of stalin
  so stalin did not bother about the slapping>>>>
  a goooodddd leeeeaadddeerrrr

 3. kala சொல்கிறார்:

  Should not have sent her to Delhi now.

 4. Srini சொல்கிறார்:

  KM sir, U r becoming like another Cho… in satire…I couldn’t control my laugh….

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   ஸ்ரீநி,

   அது இமயமலை…
   இது பரங்கிமலை…

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 5. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  கட்சி விசுவாசம் பல வருடங்களாக அரசியல்வாதிகளிடம் இல்லை. இதனால்தான் தலைமை, அவர்களை நம்பாமல் இருக்கிறது. காங்கிரஸில் தமிழகத் தலைவர்களிடையே கட்சி விசுவாசம் சுத்தமாகக் கிடையாது. அது ஒரு கவர்ன்மென்ட் கம்பெனி, அந்த விலாசத்தை வைத்துக்கொண்டு தாங்கள் சொந்த வியாபாரத்தை விருத்திசெய்யலாம் என்ற ஒரே நோக்குதான் அங்குள்ள மிகப் பெரும்பான்மையான தலைவர்களுக்கு. அப்புறம் சேர்த்த சொத்தைப் பாதுகாக்க, தன் மகனுக்கு கட்சிப் பதவி வாங்குவதற்கு முயற்சிப்பார்கள். அதனால்தான் தமிழக தலைவர்கள் என்றாலே ராகுல்காந்திக்கு அலர்ஜி. அதேபோன்று, அதிமுகவிலும் சிலர் (பலர்?) இருப்பதனாலேயே, ஜெ. அவர்கள் எல்லா கன்ட்’ரோலையும் தன்னிடமோ, அல்லது தான் நம்புகிறவர்களிடமோ கொடுத்துள்ளார்கள். நம்புகிறவர்களுக்கும் அவரது பதவி, முக்கியத்துவம் நிரந்தரம் கிடையாது. அங்கும் புஷ்பா போன்ற புல்லுருவிகள் நிறைய உண்டு. அதனால்தான் அவர்கள் திமுகவுடன் தொடர்பு வைத்துக்கொண்டதாக உறுதியாகத் தெரியவந்தாலே அவர்களுக்கு அதிமுகவில் சரிவு நிச்சயம். அதே சமயம், ஜெ. வின் இன்னொரு நல்ல குணம் (என்று நான் கருதுவது), ஒருத்தரின் (கட்சி ஆட்களின்) பெர்சனல் ஒழுக்கக்கேட்டை, அவர்களின் மனைவியோ அல்லது கணவரோ தன்னிடம் புகாராகச் சொல்லாதவரை, கண்டுகொள்ளமாட்டார். (உதாரணம். கண்ணப், செங்). அதேபோல், தான் நல்லவர்களாக நினைப்பவர்கள், கட்சியை விட்டுப் போகப்போகிறார் என்று தெரிந்தால் reconcile பண்ண எண்ணுவார் (கம்பெனிகளில், ரெசிக்னேஷன் கடிதம் கொடுக்காமல் இருக்கும் வரை, ஒருவரை Retain செய்ய முயற்சிப்பதுபோல, without compromising company-in this case ADMK/JJ image). உதாரணம். முத்துசாமி.

  அதிமுகவில், ஜெ. அவர்கள் சொல்லுவதுதான் சட்டம். அவர் தவறாகவே முடிவு எடுத்திருந்தாலும் (சூழ்னிலையினால் அல்லது தவறான தகவலால்), பாதிக்கப்பட்டவர் அமைதி காக்கவேண்டும். இதிலும் ஒரு நன்மை உள்ளது. அவருக்கு யார் தன்னுடைய உண்மையான விசுவாசி என்பதை அறிந்துகொள்ளமுடியும். (உதாரணம். நட். சே.பாபுவும் ஜெவின் விசுவாசி. ஆனால், சூழ்னிலையினால் அவர் விலக்கப்பட்டார். அனிதாவும் அதேபோல்தான். எதிர்காலத்தில் வாய்ப்பு ஏற்பட்டு ஜெ. மன்னித்தாரானால், எந்தக் கணமும் எந்தக் கட்சியிலிருந்தும் எந்தப் பதவியிலிருந்தும் அவர்கள் ஜெ.வின் தலைமையில் இணைவார்கள்)

  புஷ்பா செய்த பல விஷயங்களும் சேர்ந்து அவருக்கு இன்றைக்கு இந்த கதி. அவரை ரெக்கமென்ட் செய்தவர்களுக்கும் சிக்கல் வரும். புஷ்பா அதிமுகவுக்கு விசுவாசமாக இல்லாதவர் என்பது அவரது பழைய செய்கைகளினால் தெரிகிறது. இத்துடன் அவரது, அவரது குடும்பத்தினரின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வரும். புஷ்பாவுக்கு உள்ள 20 நிமிட ப்ரகாசிப்பும் முடிவுக்கு வந்துவிட்டது. இத்தனைக்கும் பிறகு, எப்படித்தான் அவருக்கு, ‘நாட்டுக்கு சேவை செய்யும் ஆசை இருக்கிறது’ என்று சொல்ல முடிகிறதோ.

  சிவா, தன் மனைவி இறந்தபின், அவரைப் பற்றி நல்லதனமாக எழுதித் தன் இமேஜை உயர்த்த நினைத்தாலும், அவரது நடத்தை பல்லிளிக்கிறது. அவருக்கு வாய்ப்பு, நேருவை பேலன்ஸ் செய்வதற்காகத்தான் கொடுக்கப்படுகிறது. மற்றபடி, தமிழக எம்பிக்களின் சொந்த நடத்தை மோசமாக இருக்கிறது.

  புஷ்பா, இந்தச் சிறிய விஷயத்துக்காக இப்படி ரியாக்ட் செய்திருக்கமாட்டார். நமக்குத் தெரிந்தது அவருக்குத் தெரியாதா? அவரது அரசியல் வாழ்வை அவர் குழிதோண்டிப் புதைத்துக்கொள்வாரா? அவருக்குத் தெரியாதா? மத்தியிலும் மானிலத்திலும் ஜெ. பவர் என்ன என்று. அதுவும் திமுக எவ்வளவு பவர் இல்லாமல் மத்தியில் இருக்கிறது என்று? ஏதோ வெளியில் வராத வேறு விஷயம் இருக்கிறது. இன்றைக்கு அவரவு ஒரு ஓட்டு, காங்கிரசுக்கு, திமுகவுக்கு முக்கியமாக இருக்கலாம். ஆனால் அது இன்னும் நாலு வருடத்துக்கும் குறைவுதான்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நெல்லைத்தமிழன்,

   எனக்கென்னவோ, வெகு சீக்கிரமே –
   திமுக இந்த தூண்டுதலுக்கு வருத்தப்படக்கூடிய
   சூழ்நிலை உருவாகும் என்று தோன்றுகிறது.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 6. சாமி சொல்கிறார்:

  இது தி.மு.க.வினர் சசிகலா புஷ்பா – சிவா இணைந்து நடத்திய நாடகம். விரைவில் எல்லா உண்மைகளும் வெளிவரும் பாருங்கள். அப்போது கழகத்தை இந்த உலகமே காறித் துப்பும். கேவலம், பதவிக்காக இவர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள்.. சே! அருவருப்பாக இருக்கிறது.

  கருணாநிதியை விட ஜெ 1000 மடங்கு நல்லவர். வல்லவர். தர்மம் என்றும் வெல்லும்.

 7. selvarajan சொல்கிறார்:

  விமான நிலையத்தில் முதலில் நான்கு அறை விட்டதாக பெண்ணின் பேட்டி — உடனே இல்லையில்லை ஒரே ஒரு அறை வாங்கியதாக ஆணின் பேட்டி — ஒரே பரபரப்பு — மீடியாக்கள் வரிந்துக் கட்டிக்கொண்டு செய்திகள் — இது முதல் நாள் — சூடு சொரணைக் கெட்டஇரு ஜென்மங்கள் பேட்டி — ஆஹா .ஓஹோ .. நமது எம் .பி. க்கள் எப்படியெல்லாம் மக்கள் தொண்டு ? ஆற்றுகிறார்கள் என்று வியப்பு … ! வெவ்வேறு கட்சியினராக இருந்தும் — இருவரும் பரஸ்பரம் கூடி — குலாவிய போட்டோக்கள் வாட்ஸ் அப் போன்றவற்றில் வந்து சிரிப்பாய் — சிரித்தது — தனி ட்ரேக் … ?

  அடுத்த நாளே நாடாளுமன்றத்தில் அதே பெண் தன்னுடைய கட்சித் தலைமை தன்னை நாயை அடைப்பது போல அடைத்து வைத்ததாகவும் — அடித்ததாகவும் புகார் போல தெரிவித்து — முன்பு நடந்த ” ஐந்து அறைகள் ” நிகழ்வை ஒன்றும் இல்லாமை ஆக்கியது தான் — வியப்போ – வியப்பு … !!

  முன்னது மறந்து பின்னது மீடியாக்களின் பொழைப்பை தற்போது ஓட்ட வைத்துக்கொண்டு இருக்கிறது — இந்தஇரண்டு கதாபாத்திரங்களின் ” நாடகம் ” சிறப்பாக திட்டமிட்டதைப் போல நடந்து இருக்கிறது — கதை – வசனம் — இயக்குனர் யார் என்று — எல்லோருக்கும் ஓரளவு தெரியும் …அப்படி தானே … ?

  // திரு.ஸ்டாலின் சத்தியசந்தன்… நியாயவான்…
  தர்மவழியில் நிற்பவர்….
  யாரைக் கேட்க வேண்டுமென்று
  வழி காட்டி – சொல்லி விட்டார் –// — இதே சத்தியவான் நமக்கு நாமே பயணத்தின் போதும் — மெட்ரோ ரயிலில் பயணம் போனபோதும் ” விட்ட அறைகளின் ” கதி நம் எல்லோருக்கும் தெரியும் — பாவம் ” …….. மறத்தமிழன் .திரு.திருச்சி சிவாவுக்கும் — திருமதி சசிகலா புஷ்பாவுக்கும் உள்ள நெருக்கத்தைப் பற்றி சந்தி சிரித்துக் கொண்டு இருப்பது தான் — மிகவும் சுவாரஸ்யமான செய்தியாக வளம் வர தொடங்கிவிட்டது என்பது தான் லேட்டஸ்ட்டா இருக்கும் — அப்படி தானே …. ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   மறந்தே போயிற்று ….
   திருவாளர் ஸ்டாலின் அவர்கள் விட்ட அறைகள்…
   சரியான வேளையில் நினைவுபடுத்தினீர்கள்..

   நமக்கு நாமே “ஆட்டோக்காரர்” மாதிரி –
   திருமதி புஷ்பம் – திருச்சி மறத்தமிழனுக்கு
   ஒரு ” செல்பி ” சான்ஸ் கொடுத்து
   சமாதானப்படுத்தி இருக்கலாம்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 8. gopalasamy சொல்கிறார்:

  What is the purpose of upper house, if people like “Pushpam” are M.Ps. Are they “Elites”. I think time has come to stop this nonsense. No need of Rajya Saba.

 9. Antony சொல்கிறார்:

  She has begged pardon from Trichy Siva for slapping him. Will Jeyalalitha beg pardon from Sasikala MP for slapping her? Whatever the reason it may be physically attacking a person cannot be justified.

  • பெருவழுதி சொல்கிறார்:

   Antony,

   சசிகலா புஷ்பாவை நம்புகிற அப்பாவி
   அநேகமாக நீங்கள் ஒருவர் மட்டும் தான் இருக்க முடியும்.
   இணையத்தில் வலம் வரும் இவரது
   திருவிளையாடல்களை எல்லா நீங்கள் பார்க்கவே இல்லையா ?
   இல்லையென்றால் – நீங்கள் கொடுத்து வைக்காதவர்.

   இது ஒரு மலைவிழுங்கி மகாதேவி நண்பா.
   இது சொல்வதை எல்லாம் நம்பாதீர்கள்.
   முதல் நாள் கொஞ்சம் கூட நாகரிகம் இல்லாமல்,
   ஏர்போர்ட்டில் எல்லார் எதிரிலும் ஒரு ஆண்மகனின்
   சட்டையை பிடித்து இழுத்து, கன்னத்தில் அறைந்து விட்டு,
   மறுநாள் பார்லிமெண்டில் he is a gentle fellow என்று
   சொல்லும் ஒரு குடிமகள் …….

   • பெருவழுதி சொல்கிறார்:

    ஞாயிற்றுக்கிழமைகளில் முதல்வர் யாரையும் சந்திக்க மாட்டார். தவிர்க்க முடியாத சந்திப்பு என்றாலும், விரும்பினால் மட்டுமே சந்திப்பு நடக்கும். இது கட்சிக்காரர்கள் அனைவருக்கும் தெரியும். சசிகலா விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது பூங்குன்றனும் தம்பிதுரையும்தானாம். ஞாயிற்றுக்கிழமையன்று போயஸ் தோட்டத்திற்கு அழைக்கப்பட்ட சசிகலா புஷ்பாவை விசாரித்ததே தம்பிதுரையும் பூங்குன்றனும் மட்டும்தானாம். மேடம் ரொம்ப கோபமா இருக்காங்க. ரிசைன் லெட்டர் எழுதிக் கொடுத்துட்டுப் போங்க என்று சொன்னதே தம்பிதுரைதான் என்கின்றனர். என்னுடைய தனிப்பட்ட விவகாரம் வேறு. அரசியல் பாதை வேறு. தவறே செய்யாத நான் எதுக்கு ரிசைன் பண்ணனும்’ என சசிகலா புஷ்பா பதில் சொல்லவே, தம்பிதுரையும் பதிலுக்கு பேசியதோடு, ஒரு வெற்றுத் தாளைக் கொடுத்து வலுக்கட்டாயமாக ராஜினாமா கடிதத்தை எழுதி வாங்கிவிட்டனராம். முதல்வர் ஜெயலலிதாவை சசிகலா புஷ்பா சந்திக்காமலேயே ராஜினாமா கடிதம் எழுதி வாங்கியதற்காக ராஜ்யசபாவில் பேசி தேசிய அளவில் தனக்கு அனுதாபம் ஏற்படும் அளவிற்கு கண்ணீர் விட்டு பேசி அனுதாபத்தை சம்பாதித்துக் கொண்டார் சசிகலா புஷ்பா என்கின்றனர். திருச்சி சிவாவை சசிகலா புஷ்பா அடித்த செய்தி மறைந்து போய்… சசிகலா புஷ்பாவை முதல்வர் அடித்தார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் முன்னிலைப்படுத்தப்பட்டது. ராஜ்யசபாவில் சசிகலா புஷ்பா இப்படி ஒரு குற்றச்சாட்டை முன் வைத்து ஸ்டண்ட் அடிப்பார் என்று முதல்வர் உள்பட யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என்றுதான் பேசிக்கொள்கின்றனர்.

    Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/did-really-sasikala-pushpa-meet-cm-jayalalitha-259355.html

 10. selvarajan சொல்கிறார்:

  // போதைப் பொருள் கொடுத்து 2 மகள்களை அடிமையாக்கிய ஜக்கி வாசுதேவ்- முன்னாள் பேராசிரியர் பரபர புகார் //
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/couple-alleges-daughters-captive-isha-yoga-259331.html —- இந்த ஜக்கி பலே ஆள்தான் போல தெரிகிறது — அவரைப் பற்றி ஏராளமான குற்றசாட்டுகள் வந்தாலும் — அவரை சுற்றி ஒரு கூட்டம் — மீடியாக்களின் சப்போர்ட் — என்று திருந்தும் இந்த பிறவிகள் …..?
  இவரைப்பற்றி நமது தளத்தில் பல இடுக்கைகள் ஆறு வருடங்களுக்கு முன்பிருந்தே வந்துள்ளன — அவைகளை கீழே காணுங்கள் — இந்த வாரம் ஒரே பரபரப்பு வாரமாக இருக்கிறது — கொடுத்த அறை — வாங்கிய அறை என்று ஒரு பக்கமும் — இதுபோன்ற ஏமாற்று யோகா மையங்களின் வண்டவாளமும் வெளிவந்து நம்மை திணறடித்துக் கொண்டு இருப்பது — ” குரு பெயர்ச்சியின் ” மகிமையோ … ?

  // திரு.ஜக்கி வாசுதேவ் அவர்களின் மீதான குற்றச்சாட்டு…
  Posted on பிப்ரவரி 13, 2010 by vimarisanam – kavirimainthan

  ஈஷா மையம் – சற்குருவே சொல்ல வேண்டும் ! வெட்டுகிறார்களா – நடுகிறார்களா ? வெட்டுவது யாருக்காக- நடுவது யார் பணத்தில் ?
  Posted on மார்ச் 25, 2013 by vimarisanam – kavirimainthan

  ஈஷாவில் தொடங்கியது ……
  Posted on செப்ரெம்பர் 27, 2013 by vimarisanam – kavirimainthan //

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி செல்வராஜன்.

   இந்த விஷயத்திற்கு தான் வந்து கொண்டிருக்கிறேன்.
   இடுகை வருகிறது.
   விவரமாக விவாதிப்போம்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 11. விவேக் காயாமொழி சொல்கிறார்:

  பெரியகருப்பனின்ஆனந்த தாண்டவம் வீடியோ வந்த போது சகலத்தையும் மூடிக்கொண்டு இருந்து விட்டு, இப்போது ஒரு கள்ள உறவு அடிதடிக்கு நியாயம் கேட்கிறார் சுடாலின்.
  ஒரு மூன்றாம் தர சாக்கடையை மேயராகவும், ராஜ்யசபா உறுப்பினர் ஆகவும் ஆக்கி, மக்களையும் குற்றவாளி ஆக்கிய ஜெவுக்கு இந்த அவமானம் தேவையே…!!!

 12. seshadri சொல்கிறார்:

  ஒரு மூன்றாம் தர சாக்கடை news (under the belt) ….pl do not waste time on this dirty fellows…..

  Seshan

 13. CHANDRAA சொல்கிறார்:

  JI stalin the dummy piecu had not bothered about the slapping received by his m>p tiruchi siva
  Since siva is not in good books of stalin
  stalin must be happy about this
  slapping incident
  a gooddddu leeeaaaddderrr

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.