ஜக்கி என்றால் …? யாரும் பிடிக்க முடியாத ஃப்ராட் என்று அர்த்தமா..?

நம் அனுபவம் – சிலர், சிலரை, சில காலம்
ஏமாற்ற முடியும். ஆனால், யாராலும் தொடர்ந்து
எல்லாரையும் ஏமாற்ற முடியாது –
பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பார்கள்.

ஆனால், தொடர்ந்து பலரை பல காலமாக ஏமாற்றி,
இளிச்சவாயராக்கிக் கொண்டே இருக்கிறார் ஒருவர் –
மக்கள் இன்னமும் இவரை நம்புகிறார்கள்…
என்று தெளியப்போகிறார்கள்…?

jv

images (2)

images (1)

6015_244570405054_802435054_8023382_1230274_n
jv-2

இன்று வெளிவந்துள்ள செய்தி இது –

உலக அளவில் பிரபலமாக உள்ள ஈஷா மையத்தின் மீது,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில்
பேராசிரியராக பணிபுரிந்த முனைவர் காமராஜ், கோவை
மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் ஒன்றை
அளித்திருக்கிறார். அதில், தனது இரு மகள்களையும்
ஈஷா மையத்தின் பிடியிலிருந்து மீட்டுத் தருமாறு
கோரிக்கை விடுத்திருக்கிறார்.

என்ன விவகாரம் இது?

——————————————————-

முனைவர் காமராஜின் மகள்களான கீதா, லதா இருவரும்
ஈஷா யோகா மையத்தில் சேர்ந்தனர். எம்.டெக்., பி.டெக்
முடித்து பெரிய நிறுவனங்களில் பணி புரிந்த
இவ்விருவரையும், மூளைச் சலவை செய்து,
மொட்டையடித்து, சாமியாராக்கி, நான்தான் கடவுள்
எனச் சொல்லி நயவஞ்சகமாக ஏமாற்றி விட்டார்
ஜக்கி வாசுதேவ் என்று புகாரில் குற்றம்
சாட்டப்பட்டிருக்கிறது.

மேலும், தங்களது சொத்துக்களை அபகரிக்கும் நோக்கில்,
மகள்கள் இருவரையும் அடிமை போல நடத்தி வருகிறார்
ஜக்கி வாசுதேவ் என்றும் கூறியிருக்கிறார் காமராஜ்.

அமாவாசை பவுர்ணமி நாட்களில் ஊக்க மருந்து கொடுத்து,
30 கி.மீ. தூரம் நடக்க வைத்து கொடுமைப்படுத்துகிறார்.
ஈஷா மையத்துக்கு வருபவர்களை கவர்வதற்காக,
தன் மகள்கள் இருவரையும் விற்பனையாளரைப் போல
பயன்படுத்துகிறார்.

ஈஷா பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு
நைட்ரஸ் ஆக்சைடு கொடுப்பதால், பெற்றோரை
பார்க்கும் போது சிரித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
இது தொடர்ந்தால், அந்தக் குழந்தைகள் கோமா
நிலைக்குத் தள்ளப்படுவர் என்று குற்றச்சாட்டுக்களை
அடுக்குகிறார் காமராஜ்.

அபாயகரமான இந்தக் கொடுமைகளைத் தடுத்து,
தனது மகள்களை மீட்டுத் தர வேண்டும் என்று தன்
மனைவியுடன் சென்று கோவை மாவட்ட ஆட்சித்
தலைவரிடம் புகார் கொடுத்திருக்கிறார் காமராஜ்.

தனது மனைவியையும் மகள்களையும் மூளைச் சலவை
செய்து விட்டார் ஜக்கி வாசுதேவ் என கரூரைச் சேர்ந்த
வழக்கறிஞர் பரமேஸ்வரன் சில வருடங்களுக்கு முன்
இதே ரீதியில் காவல் துறையிடம் புகார் கொடுத்தார்.

அந்தப் புகார் ஜக்கியின் செல்வாக்கின் முன்,
செல்லாக்காசு ஆனது….

பேராசிரியர் காமராஜின் மனைவி சத்யஜோதி
வெளியிடும் திடுக்கிடும் தகவல் –

என் மகள்களைப் பார்க்க வாரம் ஒருமுறை ஈஷா யோகா
மையத்துக்குப் போய்க் கொண்டிருந்தேன். என் சின்ன மகள்
என்னைப் பார்க்க வருவது இல்லை. அவளைப்
பொறுத்தவரையில் அம்மா, அப்பாவிடம் கை சோறு இனி
சாப்பிடப் போவதில்லை… ஈஷா யோகா மையத்திலேயே
செத்துவிட்டால் மோட்சம் கிடைக்கும் என
சொல்லியிருப்பதை நம்புகிறாள்…

எங்களிடம் வந்தால் நரகமாம். நீங்கள் மொட்டையடித்து
விட்டால் அம்மா, அப்பா கல்யாணம் செய்ய
வற்புறுத்தமாட்டார்கள் எனக் கட்டாயப்படுத்தி
மொட்டையடித்துவிட்டார்கள்.

என் மகள் 40 பவுன் கொண்டு போயிருந்தாள்.
அதை அப்படியே ஈஷா யோகா மையத்தில் கொடுத்துவிட்டு
சாமியார்களாகிவிட்டார்கள் என் 2 மகள்களும்…
ஈஷா யோகா மையத்தில் காலை 7 மணிக்குள்ளும்
இரவு 7 மணிக்குள்ளும் சாப்பிட்டாக வேண்டும்.

மொட்டையடித்தவர்களுக்கு தனியே ஒரு சாப்பாடு.
மற்றவர்களுக்கு வசிய சாப்பாடு தனியாக கொடுக்கிறார்கள்.
ஈஷா என்கிற யோகா மையமே இருக்கக் கூடாது.
ஈஷா யோகா மையத்தில் 5,000 குழந்தைகளுக்கான
காப்பகம் உள்ளது. அந்த 5,000 குழந்தைகளைக்
காப்பாற்றியாக வேண்டும்.

என் பிள்ளைகளைவிட 5,000
குழந்தைகள்தான் முக்கியம். இல்லையெனில் 5,000
குழந்தைகளுமே நடைபிணமாய் கோமாவுக்கு போய்விடும்.
அப்படி கோமாவுக்கு போகும் பிள்ளைகளின்
கிட்னிகளைத் திருடி விற்கிறார்கள். அங்கு கிட்னி திருடி
விற்பனை செய்வது சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது.

http://www.nakkheeran.in/Users/frmnews.aspx?N=170232

http://tamil.oneindia.com/news/tamilnadu/jaggi-s-isha-yoga-centre-should-be-close-alleges-couple-259351.html

——————————————–

சத்குருவின் புகழ் இவ்வளவு தானா ….?
என்ன தான் நடக்கிறது இவரது ஆசிரமத்தில்….?
இவரது பின்னணி தான் என்ன….?

(தொடர்கிறது -பகுதி-2-ல் )

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

20 Responses to ஜக்கி என்றால் …? யாரும் பிடிக்க முடியாத ஃப்ராட் என்று அர்த்தமா..?

 1. Sanmath AK சொல்கிறார்:

  Dear KM Sir,

  I was of a view, not to post any comment in English in this blog, as the same was pointed out sometime back.(It is not the laziness to type in Tamil, it is the limitation and so).

  Coming to the point about such Swamijis, when Nithyananda was starting his corporate career and was using Kumudham as an initial platform writing “Kathavai Thira Kaatru Varattum”, he started gaining weight. I was able to observe some sudden change in his looks which showed some kind of “poorippu”. I felt something wrong(I was in 2nd year of BTech at that time)……… Have never followed any such Swamijis till date but following till date certain good things I learned from them through the feedback from many, like – Kaayakalpam and daily exercise from Vedhathri Maharishi, SudharshanaKriya from Ravishankar, certain naturo food habits from Jaggi…. Found nothing with Amritananda Maayi nor BrahmaKumaris.

  Out of many corporate Swamijis, it took quiet a long time to realize the Jaggi. The amount of bigwigs who follow him are innumerable. Kumudham which gave platform to Nithyananda, gave the platform for Jaggi too through Priya Kalyanaraman writing about Kailash trip. A visit to his ashram near Coimbatore and having a keen note on what they sell at what price, would open many eyes to see a different picture……. This was in 2007….. Now he grown multifold and watching cricket matches with the topmen of India’s ruling party. Major allegation on him is regarding encroachment of forest land and then with school for kids……Long back Savukku wrote an article reg his encroachments and about the children studying in his schools.

  “Even god is good until get caught”…… To many, he is god, now.

  I believe, god is nothing but a hope for human life and a hold to believe and move on, shedding out our troubles to him thinking he would take care. This is applicable to any religion as there is no religion to the almighty. The problem is not with these guys, but with the people, who do not know where to shed out or who were looking for something to hold on.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Dear Sanmath,

   நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் பின்னூட்டத்தை
   காண்பதில் எனக்கு மகிழ்ச்சி.

   தமிழில் எழுத முடியவில்லை என்பது இங்கு
   கருத்துக்களை பரிமாறிக்கொள்ள ஒரு தடையாக
   இருக்கக்கூடாது என்பது என் எண்ணம்.

   நீங்களே கவனித்திருக்கலாம் –
   இந்த நிமிடம் வரை தமிழில் தான் பின்னூட்டம்
   எழுத வேண்டும் என்று நான் யாரையும்
   வற்புறுத்திச் சொன்னதே இல்லை.
   நண்பர் ELVISS எப்போதும் ஆங்கிலத்தில் தானே
   எழுதுவார்… நான் ஒன்றும் சொன்னதே இல்லையே.

   தமிழில் எழுத வசதிப்படுபவர்கள் தமிழில் எழுதலாம்.
   இயலாதவர்கள் ஆங்கிலத்திலும் எழுதலாம் என்பதே
   என் நிலை. சில நண்பர்கள், சில பின்னூட்டங்கள்
   தொடர்ந்து ஆங்கிலத்திலேயே வந்தபோது, அதைப்பற்றி
   குறை கூறி இருக்கலாம். நீங்கள் இந்த விஷயத்தை
   சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
   உங்கள் கருத்துக்களை, பின்னூட்டத்தை – நான் மிகவும்
   மதிக்கிறேன். எனவே நீங்கள் ஆங்கிலத்தில் தொடர
   எந்த தடங்கலும் இல்லை.

   நீங்கள் உங்கள் பின்னூட்டத்தில் சொல்லி இருக்கும்
   கருத்துக்கள் மிக அருமையானவை. ஆனால், என்ன
   செய்வது – எல்லாரும் ஒரே நிலையில் நின்று
   யோசிக்கிற மாதிரி இல்லையே…
   வாழ்க்கையில் பல சோதனைகளை சந்தித்துக்
   கொண்டிருக்கிறவர்கள் – “எதைத் தின்றால் பித்தம் தீரும்”
   என்கிற நிலையில் தான் இருக்கிறார்கள்.

   அத்தகைய மக்களின் பலவீனம் தான் –
   ஜக்கி போன்றவர்கள் துண்டு விரிக்கும் வியாபாரஸ்தலம்.

   நிறைய பேச வேண்டி இருக்கிறது…
   இன்னும் நிறைய பின்னூட்டங்களை எதிர்பார்க்கிறேன்.
   தொடர்ந்து கருத்துக்களை பரிமாற்றிக் கொள்வோம்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 2. Tamilian சொல்கிறார்:

  I have also come across some allegations. This episode has similarity to Kalki samiar who was highlighted by SunTV.

 3. Surya சொல்கிறார்:

  KM Sir,

  I have been to Isha myself couple of times and they are very much commercialised to sale many stuff, in the name of collecting money for foundation. It has become a fashion nowadays for people like Jaggi to advertise their foundations through events like IPL, which does not reflect a good image.

  Coming to the issue raised by parents, looks like the two girls are associated with Isha for last 8 years (not sure how much it is true).It would be very frustrating for any parents to see their two daughters going to sanyasam at very young age. The obvious question would be what their parents were doing for last 8 years to get their daughters, OR did they only realised it now? May be there is more info which is yet to come out…

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   சூர்யா,

   நான் தனிப்பட்ட முறையில் கூட
   இந்த மாதிரி சில அனுபவங்களைப் பற்றி
   கேள்விப்பட்டிருக்கிறேன்.

   இங்கேயாவது, பெற்றோர்கள் தப்பித்துக்கொண்டு
   விட்டார்கள். எனக்குத் தெரிந்த ஒரு இடத்தில் –
   முழு குடும்பமும், சொத்தை எழுதிக் கொடுத்து விட்டு –
   போய் அங்கேயே செட்டில் ஆகி விட்டார்கள்.

   இதெல்லாம் ஒரு வித மனோவியாதியாகவே தோன்றுகிறது.

   நிறைய பேர் இந்த கட்டுரையை படித்து விட்டு,
   தங்கள் “குரு”வை நான் “தூஷிப்பதாக” நினைத்து
   என்னை திட்டிக் கொண்டிருப்பார்கள்.
   அதையும் உணர்கிறேன்.
   ஆனால், இந்த கட்டுரை எந்தவித சுயநலநோக்குடனும்
   எழுதப்படவில்லை என்கிற ஒரு திருப்தி எனக்கு போதும்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • Surya சொல்கிறார்:

    There are two set of people who surrender themselves at Isha…

    * People who thinks that they have had enough in their life (happiness, work & money), and goes to full time volunteering. These folks are generally 40+, from various locations & I personally have no concerns even if they are giving all their money.
    * People who are young and frustrated in life, and want to go for temporary volunteering at Isha. Since they are already a frustrated sole, it becomes very easy to brainwash & make them a permanent member of Isha. This is simply unacceptable.

    If there is only a few news agencies are reporting this complaint, it tells a lot about what Isha is capable of!

    Since the girls are adults & legally they can take their own decisions, it would be very difficult to get them back to their old life – Unless, they themselves understand their decision was wrong…

 4. Srini சொல்கிறார்:

  KM sir, ellam ok… but poyum poyum..nakheeran link-a refer panringale… edhu ungaluke niyayama..

  regards
  srini

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   ஸ்ரீநி, விவேக் காயாமொழி –

   செய்திக்காக மட்டும் தான் நக்கீரன், ஒன் இண்டியா
   reference கொடுத்திருக்கிறேன்.
   கலெக்டரிடம் மனு கொடுத்த வரையில் உண்மை தான்.
   content – பற்றி செய்தியில் இருப்பதை தான் நம்ப வேண்டும்.

   வேறு எதாவது reference கொடுக்கலாமென்று
   பார்த்தால் – மற்ற எல்லா பத்திரிகைகளிடமும்
   ஜக்கி influence …!! இந்த செய்தியை
   போடுவதை தவிர்க்கிறார்கள்.
   புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 5. விவேக் காயாமொழி சொல்கிறார்:

  நக்கீரன், ஒன் இந்தியா இணைப்பு கொடுத்து இருக்கின்றீர்கள்..
  அவர்களே நம்பகத்தன்மை அற்ற ஆட்கள் தானே?

 6. seshadri சொல்கிறார்:

  sire came to Coimbatore for vacation…next week plan to visit isha ho for more news….

  seshan

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Wish you ALL the Best Seshan …. 🙂 🙂

   Kavirimainthan

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    சேஷன்,

    போய் வந்த பிறகு,
    உங்கள் அனுபவத்தையும் சொல்லுங்கள்…!

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

 7. CHANDRAA சொல்கிறார்:

  JI i firmly believe that the actual fault lies with the parents>>>>
  Who asked this parent to admitt their daughter into this EESHA>>>>
  This proffessor had failed to apply his mind>>> or
  too busy to watch his daughters involvement>>>>>
  ONE could easily infer jakki vasudevs limited knowledge
  even in t v interviews
  I have heard in bangalore many I T people have joined ravishankers
  movement shaved their heads>>> resigned their jobs
  making their parents depressed

 8. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  நம் கஷ்டங்களைத் தைரியமாகச் சொல்வதற்கும், ஆறுதல் பெறுவதற்கும், குற்றங்களை மனதளவில் ஒத்துக்கொண்டு இன்னும் தூய்மையாவதற்கும், moral supportக்காகவும், இறப்பிற்குப் பின் என்ன என்ற கேள்விக்குப் பதிலாகவும் நமக்கு ஏற்படும் நம்பிக்கைதான் மகா சக்தி. அது neutral to everybody என்பதால் நாம் அதைத்தான் நம் கலங்கரை விளக்கமாக நம்பியிருக்கிறோம். அதனை அடையும் வழியாக, அல்லது அதற்கு வழிகாட்டும் பாதையாக, மத நூல்கள், வழிகளில் நிறைந்த அறிவு பெற்றவர்களாக நாம் எண்ணுபவர்கள்தான், ‘நம்மிலும் மேலானவர்களாக உள்ள ஆசான்’கள். இவர்களில் பலர், மடங்களை நிர்வகிப்பவர்கள். பலர் கார்ப்பொரேட் கல்சரைக் கொண்டுள்ளவர்கள். இவர்கள் மடமோ, அல்லது ஆசிரமமோ இல்லாமல் எப்படி அவர்கள் கொள்கைகளையோ அல்லது யோகா, மத நூல்களைப்பற்றிய விளக்கம், நல்வழி காட்டுதல் போன்றவற்றை எப்படி எடுத்துச் செல்லமுடியும்? அதற்காக அவர்கள் திருடவில்லை. யோகா வகுப்பு, தியானம் முதலியவற்றை நடத்துகிறார்கள். ஜக்கி வாசுதேவ் அவர்களும், நித்யா அவர்களும், இன்னும் பிறரும் இதைச் செய்கிறார்கள். அதற்காக அவர்கள் கடவுளாக முடியுமா? ஆனால் அவர்கள் பலருக்கு வழிகாட்டிகள். வழிகாட்டியே ஊராக ஆக முடியாது. மனிதன் என்பவனிடத்தில் குற்றங்கள் இருந்தே ஆகவேண்டும். அதன் % பொறுத்து உயர்வு தாழ்வு உண்டு.

  மக்களுக்குத்தான் இது தெளிவாகத் தெரியவேண்டும். எது நல்லதோ அதை எடுத்துக்கொண்டு, பிறவற்றைத் தள்ளவேண்டும். யோகா கத்துக்கிட்டோமா, தியானம் கத்துக்கிட்டோமா, சொற்பொழிவுகளில் கலந்துகொண்டோமா.. அத்துடன் விலகவேண்டும். இல்லை, அந்த ஆசிரமத்திலேயே தங்கி அவருடனேயே இருப்பது என்று தீர்மானமாக முடிவு எடுத்தால், அதைச் செய்யலாம். இதற்காக, இவர்களைப் (வழிகாட்டிகளை) பழிப்பது சரியானதாகத் தெரியவில்லை. இவர்களிடமும் குற்றங்கள் இருக்கலாம், மனிதர்கள் என்பதால். அதற்காக அவர்களை ‘ஃப்ராடு’ என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

  வசியப் படுத்துகிறார்கள், உணவில் கலப்படம் செய்கிறார்கள் என்பதெல்லாம் கொஞ்சம்கூட ஏற்றுக்கொள்ள இயலாத குற்றச்சாட்டு. சிலருக்குத் தனி உணவு என்பதில் என்ன தவறு இருக்க முடியும்? உணவைப் பொறுத்தே குணம். ஓரளவு disciplined வாழ்க்கைக்காக ஆசிரமத்தையே சார்ந்து இருப்பவர்களுக்கு தனிப்பட்ட உணவு வழங்குவதிலோ, குறிப்பிட்ட நேரத்தில் உணவு வழங்குவதிலோ என்ன குறை காணமுடியும்?

  கைலாசமலை பயணம், கோவில் தரிசனம் போன்றவர்களை நிறைய சமயத் தலைவர்கள் (இந்த மாதிரி ஆசிரமத் தலைவர்கள்) organize செய்கிறார்கள். அதில் கலந்துகொள்பவர்கள் நிறையப் பணம் கொடுக்கிறார்கள் (as fee) இதெல்லாம் பெரிய தவறாகத் தெரியவில்லை. இதேபோன்று, பலவித யோகா, தியான வகுப்புகள், தொடர் சொற்பொழிவுகளுக்கு பணம் வாங்கி நடத்துகிறார்கள். கலந்துகொள்பவர்களும் பணம் கொடுத்துக் கலந்துகொள்கிறார்கள். உலகியல் போல, பெரும் பணக்காரர்கள் கலந்துகொள்வதற்கு வசதியாக நட்சத்திர விடுதி, குளிர் பிரதேசம் என்றெல்லாம் நடக்கும் இத்தகைய நிகழ்வுகள், சாதாரண மக்களுக்கும், அவருக்கு ஏற்ற பணத்தில் சாதாரண இடங்களில் நிகழ்த்தப்படுகின்றன. (யோகி ராம்தேவ் யோகா வகுப்பில், வகுப்பல்ல.. மைதானம். அவர் அருகில் இருக்கும் சில வரிசைகளுக்கு ஏராளமான பணம் செலுத்தவேண்டும். தூரத்தில் உள்ளவர்களுக்கு குறைவான பணம்).. ஆக மொத்தம் இதெல்லாம் ஆசிரமம் நடத்துவதற்குப் பணம் சேர்க்கும் வழி.

  Advertisement, பெரிய மனிதர்கள் தொடர்பு, கொஞ்சம் அரசியல் தொடர்பு – இவைகள், அந்த வழிகாட்டிகள், தன்னுடைய ஆசிரமம் பிரபலமாக வேண்டும், தன் பெயர் பெரிதாகவேண்டும் என்று நினைப்பதனால் விளைவது. இதுதான், இவர்களும் மனிதர்களே என்று காண்பிக்கும் உதாரணம்.

  இந்த காமராஜ் அவர்களும், அவர் மனைவியும் ஆசிரமத்துக்குப் போய், குழந்தைகளைக்கும் அறிமுகப்படுத்தியிருப்பார். நல்லதோ கெட்டதோ, குழந்தைகள் ஆசிரமத்தில் சேர்ந்துவிட்டனர். இப்போது ‘நைட்ரஸ்’ ஆக்ஸைடு அது இது என்று புகார் தெரிவிப்பது ஆச்சரியமாக உள்ளது. “ஊக்க மருந்து கொடுக்கிறார்” என்பதெல்லாம் பொய்யான குற்றச்சாட்டாகத் தோன்றுகிறது.

  ஆசிரமத்தில் தங்கியுள்ளவர்கள், ஆசிரமத்தின் வளர்வுக்காக ஒவ்வொரு வேலை எடுத்துச் செய்வார்கள். அதில், இவர்கள் Receptionist அல்லது ருத்திராட்ச மாலை, புத்தகம் போன்றவற்றை விற்பவர்களாக, அல்லது, யோகா வகுப்பை ஒழுங்குபடுத்துபவர்களாக அல்லது any suitable positionல் வேலை செய்யலாம். இது ஒரு பெரிய குற்றச்சாட்டு அல்ல.

  ஓரளவுக்கு ஆன்மீகத்தையும் கடவுளையும், இயல்பாகவோ அல்லது அனுபவத்தாலோ புரிந்துகொண்டவர்கள், “ஊனுடம்பே ஆலயம்….” என்பதைப் புரிந்துகொள்ளமுடியும். “அன்பே சிவம்” என்றும் வாழ முடியும். மற்றவர்களுக்கு இந்த மாதிரி colorful lifeதான் வாழ்க்கையின் நோக்கத்துக்கு இட்டுச்செல்லும்.

  நாம் தெரிந்துகொள்ளவேண்டியது: ஜக்கி அவர்களுக்கும் ஒரு மகள் உண்டு. அவர் சென்னையில் படித்துக்கொண்டிருக்கிறார் என நினைக்கிறேன். அவர் விகடனில் ஒரு பேட்டியில், எனக்கு அவர் அப்பாதான், எங்கள் relationship அப்பாட்ட எப்படி மகள் பேசுவாளோ அப்படித்தான் இருக்கும் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார். இதைத் தவிர, அவரது ஆசிரம வளர்ச்சிக்காக (இடத்துக்கு) அருகிலிருக்கும் காட்டையெல்லாம் ஆக்கிரமித்துக்கொண்டு வளாகங்களும், கட்டடங்களும் கட்டப்பட்டிருக்கின்றன என்றெல்லாம் பல குற்றச்சாட்டுகள் வந்திருக்கின்றன.

  எனக்கும் இந்த மாதிரியான சாமியார்களுக்கும் சம்பந்தமில்லை. அவர்களின் followerம் இல்லை. ஆனால் இவர்களைப்பற்றி என்னுடைய மதிப்பீடு இதுதான்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நெல்லைத்தமிழன்,

   உங்கள் பின்னூட்டம் எனக்கு வியப்பளிக்கிறது…
   இதை நான் நிச்சயமாக உங்களிடமிருந்து
   எதிர்பார்க்கவில்லை…

   இப்போதைக்கு இதற்கு மேல் நான் எதுவும்
   சொல்ல விரும்பவில்லை.

   தேவைப்பட்டால், இந்த இடுகைத்தொடர்
   முடியும்போது, விளக்கமாக எழுதுகிறேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 9. vijayan சொல்கிறார்:

  jaggi vasudev scam என்று கூகுள் செய்யுங்கள். தகவல் கொட்டும். நெருப்பில்லாமல் புகையாது. ஜக்கியின் பெண் மட்டும் இதற்கெல்லாம் விதிவிலக்கு. அவருடைய பெண் ஆடம்பரமான சொகுசு வாழ்க்கை வாழ்கிறார். ஆனால் மற்றவர்களுக்கு மொட்டை. மனிதர்கள் விசித்திரமானவர்கள். தங்களுடைய நிம்மதியை வாழ்க்கையை வெளியில் அடுத்தவரிடம் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மனிதனின் பலவீனமே அடுத்தவர்களுக்கான பலம்.
  விஜயன்

 10. vijayan சொல்கிறார்:

  ஞானம் தெளிந்தவர்கள் யாருக்கும் கற்றுக் கொடுப்பதில்லை. கற்றுக்கொடுத்து வருவதல்ல ஞானம். சாமியார்கள் ஞானிகள் விளம்பரம் தேடுவதில்லை. இவர் மிக விளம்பரப் பிரியர். இவருடைய பேட்டி எல்லாம் செலிப்ரிடி கூடத்தான். சாதரமானவர்கள் கேலள்வி கேட்டால் நகைச்சுவை என்ற பெயரில் நோகடிப்பார். ஒரு சிலவற்றை பார்த்திருக்கிறேன் யூடூபில். தனக்கு எல்லாம் தெரியும் என்ற மமதை தெரியும் இவர் பேச்சில். ஒரு ஆன்மா இன்னொரு ஆன்மாவை புண்படுத்தாது. ஆகையால் சிடி வெளியில் வராத வரை எல்லோரும் யோக்கியன்களே. விஜயன்

 11. vijayan சொல்கிறார்:

  மொட்டை அடித்தால் ஞானம் வருமான்னு தெரியாது ஆனா பேன் வராது. சந்தோஷம். என்னால முடியல மன்னிக்கவும் KM. vijayan

 12. CHANDRAA சொல்கிறார்:

  very excellent posting by nellai tamizhan iyyah
  i have read his posting for more than ten times
  i request all persons who admire jakki
  or those who condemn jakki
  to read nellai iyyahs posting with an open heart

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.