ஜக்கி என்றால் – (பகுதி-2) இப்போதும் விகடனுக்கு பிசினஸ்…..!!!

எட்டாத உயரத்தில் ஏறி, வெகு உறுதியுடன்
அமர்ந்திருக்கும் – மிகவும் பலம் வாய்ந்த பின்னணிகளை
உடைய ஒரு சக்திமிக்க நபரை –

நம் கட்டுரைகளால் எந்தவிதத்திலும்
அசைத்து விட முடியாது என்பதை நான் அறிந்தே
இருக்கிறேன். அவரையும், அந்த ஸ்தாபனத்தையும்
பொருத்த வரை இது எந்த விதத்திலும் பாதிக்காது.

இவர்களது ஸ்தாபனம் குறித்த விதிமீறல்கள் பற்றிய,
இதுவரை எழுந்துள்ள எத்தனையோ புகார்கள்
எல்லாம் சென்று சேர்ந்த இடங்கள் நாம் அறிந்தவையே.

“சவுக்கு”தளம் படிப்பவர்களுக்கு தெரிந்திருக்கும்.
விலாவாரியாக, ஆவணங்களின் துணையோடு –
எத்தனையோ விதிமீறல்கள் வெளிச்சத்திற்கு கொண்டு
வரப்பட்டன. ஆனால் என்ன ஆயிற்று ……?

எனவே, நம்மாலும் இது குறித்து எதுவும்
செய்ய இயலாது என்பதை நான் அறிவேன்.
அதற்கான முயற்சிகளிலும் நான் இல்லை….!

ஆனால், எத்தனையோ அப்பாவி மனிதர்கள் –
இவர்களது ஆசை வலைகளில், தூண்டில்களில்
சிக்கி இரையாவதைப் பார்த்து –

இவர்களைப் பற்றிய உண்மைகள் முன்கூட்டியே
தெரிந்தால், புதிதாகப் போய் விழக்கூடிய ( prospective
victims ) சில நூறு நபர்களையாவது அது தடுக்கும்
என்று நம்புவதால் தான் இதையெல்லாம் எழுதுகிறேன்.

ஏற்கெனவே, அரைகுறையாக இவர்களுடன் தொடர்பை
துவங்கி இருப்பவர்களை – எந்தவித முன்முடிவும்
இன்றி, திறந்த மனதுடன் இந்த கட்டுரையைப் படிக்கும்படி
நான் கேட்டுக் கொள்கிறேன். எல்லாவற்றையும் படித்த
பிறகு அவர்கள் விரும்பும் முடிவினை எடுக்கலாம்.

ஏற்கெனவே சத்குருவின் சீடர்களாக இருப்பவர்களுக்கு –
என் மீது ஆத்திரமோ, எரிச்சலோ கொள்ளாமல்
இந்த கட்டுரைத் தொடரை படியுங்கள்… இதை எழுதுபவன்
ஒரு நாத்திகன் அல்ல. உண்மையான ஆன்மிகத்தை
நம்புவன் என்பதை மனதில் கொண்டு படியுங்கள்.

————————

நேற்று முதல் பகுதி வெளிவந்ததும், இரண்டு நண்பர்கள் –
செய்தி உண்மையானது தானா ? (கலெக்டரிடம் மனு
கொடுத்த விவகாரம்…)
நம்பகமான தளங்கள் எதிலும் நீங்கள் எழுதியிருக்கும்
செய்தி வரவில்லையே என்று பின்னூட்டத்தில் கேட்டார்கள் …..

kamaraj and his wife

(நேற்றைய தினம் சேலம் கலெக்டரிடம் புகார் மனு கொடுத்த திரு.காமராஜ் அவர்களும், அவரது மனைவியும் )

இன்று அவர்களின் சந்தேகம் தீர்ந்திருக்குமென்று
நம்புகிறேன்… விகடன் செய்தியே இந்த விஷயத்தை
நேற்றிரவு வெளியிட்டு விட்டது.

(ஆமாம் – விகடன் செய்தி
தளம் நம்பகமானது தானே…???!!! ).

முன்பு மிகச் சாதாரணமாக இருந்த ஒரு மனிதரை
சத்குருவாக (!) ப்ரமோட் செய்ததில் விகடனுக்கு பிசினஸ் –
இப்போது நெகடிவ் செய்தியை வெளியிடுவதில் பிசினஸ்…..!!!

இந்த மிகச்சாதாரண மனிதரை
மிகப்பெரிய மகான் ஆக்கிய பாவத்தில் பெரும்பங்கு
விகடனையே சேரும்…

துவக்கத்திலிருந்தே வருவோம் –

இவர் எப்படி இன்றைய நிலைக்கு வந்து சேர்ந்தார் …?

ஜெகதீஷ் என்பது இவரது துவக்ககால பெயர்.
பிற்பாடு – ஜக்கி ஆகி,
ஜக்கி வாசுதேவ் ஆகி,
தன்னைத்தானே சத்குருவாக declare
செய்துக் கொண்டு பரிணமித்தது இவரது சிறப்பு.

மைசூர் அருகில் உள்ள கொம்மட்டகிரி என்ற இடத்தில்
அமைந்துள்ள ரிஷி சம்ஸ்க்ருதி வித்யா கேந்திரா
என்ற யோகா பயிற்சி மையத்தில் ரிஷி பிரபாகர்
என்ற குருவிடம் இவர், துவக்கத்தில் யோகா பயின்றார்.

அந்த குருவிடம் யோகா பயிலும்போது
விஜி என்கிற பெண்ணோடு ஏற்பட்ட நட்பு, பின்பு காதலாக
பரிணமித்து, இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.

பரிணாம வளர்ச்சி –

man-family-f

man-family-2

wife and daughter

man-family-3

RADHE

sadhguru19

puthiya thunai

பிற்பாடு தனக்கென ஒரு ஆசிரமம் துவங்க நினைத்து
1988-ல் கோவையை சுற்றியுள்ள பகுதிகளில்
இடம் தேடலானார்.
கோவையின் சுற்றுப்புறங்களில், ஒரு பாரா க்ளைடிங்
விளையாட்டு மையத்தையும் துவங்கி, அங்கேயே
யோகா சொல்லிக் கொடுப்பதும் இவரது திட்டம்…

அப்போது இவர் சிறிய அளவில் தொடங்கியிருந்த
யோகா வகுப்புகள், படித்த மேல்தட்டு வர்க்கத்தினரிடையே

பிரபலமாகத் தொடங்கியிருந்தது. இதன் பயனை சரியாக
பயன்படுத்திக் கொள்ள, யோகா வகுப்புகளை தொடர்ந்து
ஒரே இடத்தில் பிரபலப்படுத்தி நடத்த ஆரம்பித்தார்.

பணக்கார தொழிலதிபர்கள் அதிகம் வசிக்கக்கூடிய
கோவை, திருப்பூர், கரூர் போன்ற பகுதிகள் அவருக்கு
அற்புதமான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தன.
பல பணக்கார தொழிலதிபர்களின் நட்பையும் ஏற்படுத்திக்
கொடுத்தது அவரது கலை.

பின்னாளில் ஜக்கிஜியுடன் இணைந்து கொண்ட பாரதி என்கிற
பெண்மணியின் கணவர் சுதர்சன் வரதராஜ் நாயுடு, அவரது
சமூகத்தைச் சேர்ந்த செல்வச் செழிப்பு மிகுந்த பல தொழில்
அதிபர்களை ஜக்கிக்கு அறிமுகப்படுத்தினார். இவர்களின்
அறிமுகமும், தொடர்பும், ஜக்கிஜியின் செல்வத்தையும்,
செல்வாக்கையும், அந்தஸ்தையும் உயர்த்தியது.

எந்த அளவிற்கு…..?

(தொடருகிறது – பகுதி-3-ல் )

 

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to ஜக்கி என்றால் – (பகுதி-2) இப்போதும் விகடனுக்கு பிசினஸ்…..!!!

 1. seshadri சொல்கிறார்:

  Jakie – New Version Osho (ultra model / nano technology)

  Same destination – Enlightenment realization through inner journey. by path are completely different.

 2. புது வசந்தம் சொல்கிறார்:

  நீங்கள் இதற்கு முன்னர் எழுதிய பதிவுகளை நண்பர் ஒருவரிடம் பகிர்ந்தேன் (ஈஷா அபிமானி). தற்போது, நட்பு வட்டத்தில் இருந்து வெளியேரிவிட்டார் (முகநூலில்). நம்ப மறுக்கிறார்கள்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப புதுவசந்தம் அன்பு,

   ஒரு முறை ஈஷாவின் தாக்கத்தினுள் வீழ்ந்து விட்டவர்கள்
   அதிலிருந்து வெளிவருவது மிக மிக கடினம்.
   எனவே, உங்கள் நண்பர் உங்களை விட்டு விலகிச்சென்றது
   வியப்பளிக்கவில்லை.

   என்னோடு சேர்த்து, உங்கள் மீதும் அவர் எரிச்சலும்,
   வெறுப்பும் கொண்டிருப்பார்…

   ஏற்கெனவே வீழ்ந்தவர்களை நம்மால்
   வெளிக்கொண்டு வர முடியாது. குறைந்த பட்சம்,
   புதிது புதிதாக அவர்களது மாய வலையில் வீழ்பவர்களை
   முடிந்த வரை குறைக்க முயற்சிப்போம். என் முயற்சியும்,
   எழுத்தும் அதை நோக்கித்தான்.

   உங்களால் முடிந்த வரை – இந்த இடுகைத்தொடரில்
   கூறப்படும் விஷயங்களை உங்கள் முகநூல் பக்கங்கள்
   மூலமாக, உங்கள் நண்பர்கள் மூலமாக – அதிக அளவு
   நபர்களிடம் கொண்டு சேர்க்க உதவுங்கள்.

   புதிதாக ஏமாறுபவர்களின் எண்ணிக்கை
   நம்மால் கொஞ்சமாவது குறையட்டும்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 3. raj சொல்கிறார்:

  பகுதி 3.க்காக காத்துகொண்டுருக்கிறேன்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   ராஜ்,

   பகுதி-3 மற்றும் பகுதி-4
   எழுதி பதிப்பித்து விட்டேன்.
   தமிழ்மணம் தளத்தில் ஏதோ டெக்னிகல் பிரச்சினை.
   எனவே, அங்கே வெளியாகவில்லை.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 4. drkgp சொல்கிறார்:

  இவ்வளவு பெண்களுடன் தொடர்புடைய அந்த பெண் பித்தனை

  இவ்வளவு படித்த பணக்கார மனிதர்கள் சாமியாராக வேதவிற்பன்னராக

  எப்படி ஏற்றுக்கொள்கிறார்கள் என்பது புதிர். இந்த போலி ஆசாமிக்கு தன்னை

  நம்பி வந்தவர்களிடம் பணம் பறிப்பதே குறி. சென்ற ஆண்டு ஸ்வீடன் நாட்டு பெண்மணி

  ஒருவரிடம் ஜக்கி கைபட்ட தாயத்து எட்டு இலட்ச ரூபாய்க்கு விற்கப்பட்டு பின்பு

  போலீஸ் தலையிட்டு பணத்தை திரும்பப்பெற்ற சம்பவம் சிலரை வியக்க வைத்தது.

  எனினும் இந்த நிகழ்வுக்கு பின் இவரது சாம்ராஜ்ஜியம் மேலும் பல கோடிகள்

  விரிவடைந்தது வியப்பல்ல, அவரைப்பற்றி அறிந்தவர்களுக்கு..

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.