( பகுதி-3 ) – ஜக்கி என்றால்…? ஈஷாவால் அவசர அவசரமாக உருவாக்கப்பட்ட வீடியோ – மா மதி-யாம், மா மாயு-வாம்…!!!

.

.

நேற்று திரு.காமராஜ் அவர்களும், அவரது மனைவியும்
கொடுத்த புகார் பரபரப்பை உண்டாக்கியதால்,
ஈஷா நிர்வாகம், அவசர அவசரமாக ஒரு வீடியோவை
தயாரித்து – அனைத்து ஊடகங்களுக்கும் அனுப்பி இருக்கிறது.

அதை ஒவ்வொரு ஊடகமும் தன் சொந்த பேனரில்
தாங்களே தயாரித்தது போல் –
வெவ்வேறு identity யுடன் வெளியிட்டிருக்கிறது.
ஆனால் அத்தனையும் ஈஷாவால் – டைரக்ட் செய்து
தயாரிக்கப்பட்ட ஒரே வீடியோ தான்.

மூத்த மகளான கீதா, எம்.டெக். (லண்டனில்)
முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில்
வேலை பார்த்து வந்திருக்கிறார்…
இளைய மகள் லதா பி.டெக்.
முடித்திருக்கிறார்.
பெற்றோர்கள் செய்த ஒரே பாவம்,
ஜக்கியின் உரைகளில் மயங்கி – குடும்பத்தோடு
அடிக்கடி ஈஷா மையம் சென்று வந்தது தான்….

அதன் விளைவு – பெண்கள் இருவரும்
ஆசிரமத்தில் நிரந்தரமாக சேர்த்துக் கொள்ளப்பட்டு,
தங்கள் இருபதுகளிலேயே –
மொட்டையடிக்கப்பட்டு,
காவி உடை உடுத்தப்பட்டு,
சந்நியாசினி என்று
ஜக்கிஜியால் declare செய்யப்பட்டு –

கீதா – மா மதி, ஆக்கப்பட்டு, –
லதா – மா மாயு – ஆக்கப்பட்டு –

பெற்றோர்களை கதற விட்டிருக்கிறார்கள்.
(மனசாட்சி உள்ள எந்த மனிதனாவது
இத்தனை சிறிய வயதில் இந்த பெண்களுக்கு
இந்த கொடுமையை செய்வானா…?
இந்த படுபாவி செய்திருக்கிறார் …)
இந்த வீடியோவை ஈஷா நிர்வாகத்தால்
அந்தப் பெண்களுக்கு என்ன சொல்ல வேண்டுமென்று
நன்கு சொல்லிக்கொடுக்கப்பட்டு,
நன்கு ஒத்திகை பார்க்கப்பட்டு
பின்னர் படமாக்கப்பட்டுள்ளது.

இது -வீடியோவை இரண்டாவது முறை பார்த்தால் –
நன்கு விளங்கும். கரெக்டாக ஒரு பெண், குறிப்பிட்ட
தூரம் பேசி விட்டு – நிறுத்துகிறார்.
உடனே அடுத்த பெண் ரிலே ரேஸ் போல் இன்னும்
கொஞ்சம் பேசி விட்டு நிறுத்துகிறார் –
மீண்டும் முதல் பெண்….

காமிரா முன்பாக முதல் தடவையாக பேசுபவர்களுக்கு
உண்டாகக் கூடிய அசௌகரியங்கள், தயக்கங்கள்
கொஞ்சம் கூட இல்லை –
சொல்லிக் கொடுத்த வசனமும்,
ரிஹர்சலும் உதவி செய்திருப்பது நன்கு தெரிகிறது….

சுயநினைவுள்ள எந்த பெண்ணும் 20-22 வயது வரை
தாங்கித் தாங்கி பாசமும் நேசமுமாக வளர்த்த –
தங்களது பெற்றோர்களைப்பற்றி
இவ்வளவு விட்டேற்றியாக பேச மாட்டார்கள்.

அயோக்கியர்கள் – மூளைச்சலவை செய்திருப்பது
ஆழ்ந்து நோக்கினால் –
நன்றாகவே புரியும்.

இந்த வீடியோவும்,
இந்த பெண்களிடம் நடத்தப்படும் நேரடி விசாரணையும்
இப்போதைக்கு ஜக்கி அண்ட் கம்பெனியை,
சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப உதவும்…

ஆனால் –
எல்லாவற்றிற்கும் மேலாக,
பொதுவாக ஒருவன் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறான்.
அவன் நிச்சயம் விட மாட்டான்.

இது சன் நியூஸ் –

இது விகடன் நியூஸ் –

இது நக்கீரன் நியூஸ் –

ஊரார் பெண்ணுக்கு மொட்டை அடித்தவர்
தன் சொந்தப் பெண்ணை
எப்படி நடத்துகிறார் பாருங்கள் –

radhe-sandeep narayanan

daughter, s in law 3rdSep2014-1

( தொடர்கிறது பகுதி-4-ல் )

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to ( பகுதி-3 ) – ஜக்கி என்றால்…? ஈஷாவால் அவசர அவசரமாக உருவாக்கப்பட்ட வீடியோ – மா மதி-யாம், மா மாயு-வாம்…!!!

 1. gopalasamy சொல்கிறார்:

  சதுரங்க வேட்டை சினிமாதான் நினைவுக்கு வருகிறது . கெட்டிக்காரன் ஏமாற்றுகிறான் . மக்கள் விட்டில் பூச்சி மாதிரி விழுகிறார்கள் . மக்களைத்தான் குற்றம் சொல்ல வேண்டும் . தங்கள் எழுதுவதினால் ஒருவர் திருந்தினாலும் மகிழ்ச்சியே

 2. பெருவழுதி சொல்கிறார்:

  காவிரிமைந்தன் சார்,

  பார்க்க பார்க்க பற்றி எரிகிறது.
  அந்த பெற்றோர் மனம் என்ன பாடு படும் ?
  நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே.
  இவன் ஒரு புரட்டன். ஃப்ராடு. இவனது பொய் வேஷம்
  உரிக்கப்பட்டு உண்மைரூபம் உலகுக்கு தெரியப்படுத்த
  வேண்டும். நீங்கள் முழுமூச்சுடன் எழுதுங்கள்
  புரிந்தவ்வர்களாவது தப்பிக்கட்டும்.
  நீங்கள் செய்வது மிக உயர்ந்த ஒரு சமுதாயப் பணி.

 3. Antony சொல்கிறார்:

  KM, If there is a correct lawyer for parents, can they request a blood test on both of these girls to check whether are they under influence of any drugs?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப அந்தோனி,

   சம்பந்தப்பட்ட பெண்களின் சம்மதமும்
   ஒத்துழைப்பும் இல்லாமல் இத்தகைய
   டெஸ்டுகளை செய்ய முடியாது.
   அந்த பெண்கள் இவற்றிற்கெல்லாம்
   இணங்க மாட்டார்கள்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.