( பகுதி- 4 ) – ஜக்கி என்றால்…? ” விஜி ” உயிரை விட்டதன் மர்மப் பின்னணி ..?

.

.

கோவையில் தொழில் துவங்கிய பின், ஜக்கிஜியுடன்
இணைந்து கொண்ட பாரதி என்கிற
பெண்மணியின் கணவர் சுதர்சன் வரதராஜ் நாயுடு,
(சில காலம் கழித்து அவர் ” முன்னாள் ” – ஆகி விட்டார்…)
அவரது சமூகத்தைச் சேர்ந்த செல்வச் செழிப்பு மிகுந்த
பல தொழில் அதிபர்களை ஜக்கிக்கு அறிமுகப்படுத்தினார். இவர்களின் அறிமுகமும், தொடர்பும், ஜக்கிஜியின்
செல்வத்தையும், செல்வாக்கையும், அந்தஸ்தையும்
உயர்த்தியது.

எந்த அளவிற்கு…..?

மோட்டார் பைக்கில் வலம் வந்து கொண்டிருந்தவர்,
காரில் வலம் வரத் துவங்கினார்.
அவரது வேகமான வளர்ச்சிக்கு கார் பயணத்தால்
ஈடு கொடுக்க முடியவில்லை என்பதால் முதலில்
ஹெலிகாப்டர் – பின்னர் சொந்தமாக சிறு விமானம் கூட
வாங்கும் அளவிற்கு வளர்ந்தார்….

வளம் கொழிக்கும் செல்வந்தர்கள் பலரின் நட்பு
கிடைத்த பிறகு, சொந்தமாக ஒரு ஆசிரமத்தை நிறுவுவதில்
தீவிரமாக முனைந்தார். தனது விருப்பத்தை தனது
பணக்கார சீடர்களிடம் தெரிவித்ததும் –

கனவு விரைவாக நனவாகத் துவங்கியது.
நன்கொடைகள் குவிந்தன.

ஆசிரமம் அமைப்பது என்று முடிவானதும், கோவையைச் சுற்றியுள்ள இடங்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இடம்தான் வெள்ளியங்கிரி மலை.

கோவை லட்சுமி மில்ஸ் அதிபரான காலம் சென்ற
கரிவரதனுக்கு சொந்தமான 14 ஏக்கர் இடம்
வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் இருந்தது.
பாரதியின் கணவர் சுதர்சன் மூலமாக கரிவரதனின்
அறிமுகம் கிடைத்தது.

ஜக்கியின் பேச்சில் மயங்கிய கரிவரதன் தனது
14 ஏக்கர் நிலத்தையும், இலவசமாகவே ஆசிரமத்திற்காக
எழுதிக் கொடுத்ததாக சரித்திரம் ….

சிறு வயதிலிருந்தே தன் கனவுகளில் அடிக்கடித் தோன்றிய
மலை இந்த வெள்ளியங்கிரி தான் என்று பிற்காலத்தில்
சொன்னார் சத்குரு….(!)

ஆசிரமம் உருவானதன் அடிப்படை என்ன …?
சத்குரு(!)வின் தோற்றம், அவரது ஆகர்ஷண சக்தி,
அத்தனையும் சத்தியம் போல் பேசும் ஆற்றல் –
பொய், புரட்டு, பித்தலாட்டம் –

ஆடற மாட்டை ஆடிக் கறக்கணும்,
பாடற மாட்டை பாடிக் கறக்கணும் என்கிற வகையில் –
அரசு அதிகாரிகளிடமும்,
அரசியல்வாதிகளிடம்,
தொழில் அதிபர்களிடமும் –
தனது அத்தனை சாமர்த்தியங்களையும் முதலாக invest
செய்து, ஒரு மிகப்பெரிய பெரிய சாம்ராஜ்யத்தையே வெள்ளியங்கிரியில் உருவாக்கினார்…..

இன்றைய தினம் இவரது ஆசிரமத்தின் விஸ்தீரணம்
இவர்கள் பெயரில் 200 ஏக்கர் நிலமும், பினாமி பெயர்களில்
சுமார் 270 ஏக்கரும் என்று சொல்லப்படுகிறது.

இந்த அளவிற்கு நிலத்தை எப்படி வளைக்க முடிந்தது….?

ஆசிரமத்தை ஒட்டி அமைந்துள்ள பகுதியில் ஒரே ஒரு ஏக்கர்
நிலத்தைக் கூட இவர்களுக்குத் தெரியாமல் யாரும்
வாங்கவோ விற்கவோ முடியாது. பத்திரப் பதிவு
அலுவலகத்திலேயே பணி புரியும் ஒருவர் இவர்களது
ஏஜெண்டாக இருந்தார். பதிவு செய்யும் பொருட்டு
அலுவலகத்திற்கு வரும் நிலங்களின் விபரத்தை
அவர் ஜக்கிக்கு தெரிவித்து, அந்த பதிவை தடுத்து நிறுத்தி,
ஆசிரமம் அதில் தலையிட்டு, அந்த விற்பனையை
தடுத்து தங்கள் பெயரில் வாங்கிக் கொள்வார்கள்.

—————————

சரி – விஜி என்பவர் யார்….?

ரிஷி பிரபாகரிடம் யோகா ஆசிரியராக ஜக்கி இருந்தபோது,
விஜி என்ற பெண் அங்கு வந்து சேர்ந்தார்.
அவரது முந்தைய வாழ்க்கை அனுபவங்களால்,
மனமுடைந்த நிலையில் யோகா வகுப்பில் கலந்து கொள்ள
வந்த விஜியோடு ஜக்கிக்கு தொடர்பு ஏற்பட்டு அது
திருமணத்தில் முடிந்தது.

இயற்கையாகவே எளிதில் கோபப்படக்கூடியவரும்,
உணர்ச்சிவசப்படுபவருமான விஜி என்கிற பெண்மணி,
இந்த ஆசாமியோடு ஏற்பட்ட பல பிரச்சினைகளுக்கு
இடையேயும் 1998-ம் ஆண்டு வரை அவரோடு தான்
வாழ்ந்து வந்திருக்கிறார்..

கோவையில் பாரம்பரிய மிக்க தொழிலதிபர்
வரதராஜ் அவர்களின் மகன் சுதர்சன் வரதராஜ்.
அவர் ELGI நிறுவனத்தின் செயல் அதிகாரி.
அவருடைய அறிமுகம் ஜக்கிக்கு கிடைக்கிறது.
இருவரும் நல்ல நண்பர்களாகின்றனர்.
தனது மனைவி பாரதி வரதராஜை யோகா
கற்றுக்கொள்ள அறிமுகம் செய்து வைக்கிறார் –
அதோடு விஜியின் வாழ்க்கையில் விபரீதம்
துவங்குகிறது.

ஜக்கி நடத்திய 90 நாள் ‘முழு யோகா’ வகுப்பில்
தனது எல்லா அலுவல்களையும் துறந்து விட்டு,
தனது மனைவி பாரதியுடன் கலந்து கொள்கிறார் சுதர்சன்.
ஏற்கெனவே திருமணமாகி, இரண்டு குழந்தைகளுக்கு
தாயுமான ஒருவருடன் நமது ஹீரோ நெருங்கிப் பழகியது
அவரது இல்லற வாழ்வில் புயலைக் கிளப்பி இருக்கிறது.

விளைவு – விஜி “யோக நிஷ்டையில்” இருந்து
உயிர்த்தியாகம் செய்தார் என்று சொல்லப்பட்டது.

அவர் “அனாகதா” சக்ராவில் இருந்து தனது உயிரை
விட்டாரென்று ஜக்கி சொன்னாலும், அதைப் பார்த்தவர்
யாருமில்லை.

விஜியின் இறப்புக்குப் பின்னர் –
விஜியின் தந்தை கங்கன்னா தன் மகளை ஜக்கி தான்
கொன்று விட்டதாகவும், ஆசிரமத்தில் ஜக்கிக்கு வேறு
ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும்
இவர் மீது பெங்களூர் போலீசில் புகார் கொடுத்தார்.

தன் மீது போலீஸில் புகார் கொடுக்கப்பட்டிருப்பது
தெரிந்ததும், கைதைத் தவிர்க்க இவர் உடனடியாக
” அந்தர்தியானம் ” ஆனார். 6 மாதங்களுக்கும் மேலாக
மறைந்து திரிந்தார்…. ஆசிரமத்தில் பொறுப்பிலிருந்த
சாமியாரால், இவர் ஏற்கெனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகளில்
கலந்து கொண்டு உரை நிகழ்த்த வெளிநாடுகளுக்கு
சென்றிருப்பதாகச் சொல்லப்பட்டது.

அந்த சமயத்தில் வெளியான ஒரு பத்திரிகை செய்தி கீழே –

The following is the Indian Express report as appearing
on October 12, 1997 about Police registering a case of
murder by Jaggi Vasudev:

Coimbatore, Oct, 11: Close on the heels of scandals relating to f
fake godmen getting exposed, yet another ashram from
Coimbatore is in the limelight with Jaggi Vasudev aliash Jagadeesh
of Isha Yoga ashram at Poondi near Coimbatore, being
charged with the murder of his wife Viji alias Vijayakumari.

A team of police personnel recently visited the premises of
Isha Ashram at poondi and interrogated the inmates of the ashram.
Godman Jaggi is away in the US.

According to police, T. S. Ganganna of Bangalore
(father of Viji) had preferred a complaint with the Bangalore
Police suspecting foul play in the death of his daughter Viji.
The complaintant had stated that his daughter left him last on
June 15, 1996. He reportedly received a message on
January 23, 1997, from Jaggi Vasudev, stating that
Viji was no more.

Ganganna said that Jaggi Vasudev had hurriedly completed
the cremation on Jan.24 even before they could rush from
Bangalore, raising suspicion about the nature of death.
He suspected death due to poisoning or strangulation.

According to him, Jaggi Vasudev could have caused the
death of Viji to facilitate his illicit relationship with yet another
inmate of the ashram. Based on the complaint of Ganganna
to the Bangalore City Police on Aug. 12, a case was registered.

The Bangalore City Police transferred it to the
Coimbatore Rural Police.

The Coimbatore Rural Police have registered a case against
Jaggi Vasudev under Section 302 of IPC (murder) and IPC 201
(suppression of evidence).

Later. Isa Yoga Foundatrion has denied reports that
Jaggi Vasudev had fled to USA to avoid investigation of ashram.
Authorised Signatory of Ashram Kiran stated that Guruji had
gone for giving lectures . ENS

———————————

விஜிக்கும் ஜக்கிக்கும் பிறந்த குழந்தை ராதே
தனது தந்தையின் ஆசைப்படி, பள்ளிப்படிப்பை
ரிஷி valley என்ற சிறந்த பள்ளியில்
துவங்கினார்.

விஜியின் மறைவிற்குப் பிறகு பாரதி என்கிற பெண்மணி,
தன் கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளைத்
துறந்து விட்டு, ” ஆசிரமப்பணி “யாற்ற ஜக்கியோடு
வந்து சேர்ந்து கொண்டார்.

puthiya thunai

பாவம் அந்த விஜி, ஆசிரமத்து சுவர்களில்
ஆணியில் படமாகத் தொங்கி எல்லா நிகழ்வுகளையும்
பார்த்துக் கொண்டிருக்கிறார்.

viji-photo

தொடர்கிறது – பகுதி-5-ல்

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

One Response to ( பகுதி- 4 ) – ஜக்கி என்றால்…? ” விஜி ” உயிரை விட்டதன் மர்மப் பின்னணி ..?

  1. Jagannathan chellappa சொல்கிறார்:

    K.M.Sir,

    You have wonderful way of narrating things.
    Your writings should reach a larger section of readers.
    God bless you.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.