பகுதி ( 5 ) – ஜக்கி என்றால்…..? இந்த மெகா ஃப்ராடை வளர்த்து விட்டது யார்….?

.

.

சாதாரணமாக கோவை வட்டாரத்தில் மட்டும்
அறிமுகமாகி இருந்த ஒரு சாமியாரையும் ( ? ), அவரது
ஆசிரமத்தையும் –

அவரது அசகாய சூரத்தனத்தைப் பற்றி எல்லாம்
பள பளா தோற்றங்களுடனும், விளம்பரங்களுடனும்,
தந்து சொந்த எழுத்தாளர்களை வைத்துக்கொண்டு,
வித்தியாசமான தலைப்புகளில்
தொடர் கட்டுரை எழுதி உலக அளவில்
வளர்த்து விட்டது யார்…?

ஆ. வி. தொடரில் இவர் எழுதிய
(இவர் எழுதியதாக சொல்லப்பட்டு,
ஆவியின் ஆஸ்தான வித்வான்கள் எழுதிய )
“அத்தனைக்கும் ஆசைப்படு” என்ற தொடர் மூலம்
தன்னையும் வளர்த்துக் கொண்டு, வியாபார
நோக்கத்துக்காக இவரையும் பிரபலப்படுத்தியது ஆ.வி.

ஒரு மிகப்பெரிய ஃப்ராடை உருவாக்கி,
பூதாகரமாக வளர்த்து விட்ட மிகப்பெரிய
பாவத்தைச் செய்தது ஆ.வி.நிர்வாகம்.

ஆசையே துன்பத்திற்கு காரணம் என்றே
அதுவரை ஞானிகளால் சொல்லப்பட்டு, கேட்டு பழக்கமான
மக்களிடையே வித்தியாசமாக மண்டையில் அடிப்பது போல்,
“அத்தனைக்கும் ஆசைப்படு” என்ற வாதத்தை
இவர் முன்வைத்தார்.

வழக்கமாக சாமியார்கள், ஒரு நீண்ட காவி அல்லது
வெள்ளை ஜிப்பாவை போட்டுக் கொண்டு உபதேசம்
செய்வதை பார்த்து பழக்கப்பட்ட மக்களுக்கு,
ஜீன்ஸ் பேன்டும், கூலிங் கிளாஸும் அணிந்து
ஹம்மர் காரிலும், ஹோண்டா பைக்கிலும்
வலம் வந்து கொண்டு, கூடவே தத்துவமும் பேசிய
சாமியாரைப் பார்க்க வித்தியாசமாகவே இருந்தது.

இந்தத் தொடர் ஜக்கி வாசுதேவ்
என்கிற நபரை சத்குருவாக மாற்றியது.
பக்தி, ஞானம், சக்தி, க்ரியா ஆகியவற்றை கலந்து ஒரு
காக்டெயிலாக தருகிறேன் என்று இவர் விட்ட புருடாவிற்கு
எல்லாம் மேக்கப் போட்டு அழகு படுத்தியது ஆ.வி.

ஆ. வி. தொடருக்குப் பிறகு, இவரின் மதிப்பு
அல்லது வியாபாரம் பல மடங்கு கூடியது.

ஆனந்த விகடன் போன்ற இதழ்களுக்கு (அந்த காலத்தில்)
இருந்த மதிப்பும் மரியாதையும், ஜக்கியின் ஆன்மிக
வியாபாரத்தை, பல மடங்கு உயர்த்தின. அப்படி
வளர்ந்த வியாபாரத்தின் ஒரு பகுதியாகவே தமிழகம்
முழுவதும் துவங்கப்பட்ட யோகா தியான வகுப்புகள்.

படித்த மக்களுக்கு நல்லது கெட்டது தெரியாதா…?
அவர்கள் எப்படி இந்த சாமியாரிடம் போய் விழுகிறார்கள் -?
என்று பல நண்பர்கள் கேட்கிறார்கள்.

அவர்கள் எப்படி வலையில் விழுகிறார்கள் என்பதை
சுருக்கமாக இங்கே விளக்க விரும்புகிறேன்….

இவர்களது விளம்பரங்களையும், கவர்ச்சிகரமான
வீடியோக்களையும் பார்த்து விட்டு,
” எப்படித்தான் இருக்கிறது பார்ப்போமே ” என்று
நினைத்து தான் பலரும் இதனுள் துவக்கத்தில்
நுழைகிறார்கள்.

செய்வதற்கு மிக எளிதானது…
ஒரு நாளைக்கு அரை மணி நேரம் செலவழித்தால்
போதும் – புதிய உலகிற்கே உங்களை அழைத்துச் செல்லும்
என்றெல்லாம் சொல்லி –
இவர்கள் அறிமுகப்படுத்தித் தரும் யோகா பயிற்சிகள்,
உடலுக்கு நன்மை பயப்பவை தான். ஆனால் வெறும்
யோகப்பயிற்சிகளை மட்டும் சொல்லித்தந்தால்,
வியாபாரம் எப்படி விஸ்தரிக்கும்…?
பணம் எப்படி வரும்…?

முதல் இரண்டு நாட்கள் பயிற்சியைச் சொல்லித் தந்து
விட்டு, மூன்றாம் நாள் முக்கிய யோகப்பயிற்சி
செய்வதற்கான பூஜை என்று தொடங்குவார்கள்.
அந்த பூஜையின் போது, ஜக்கியின் பெரிய படத்தை வைத்து,
அரை மணி நேரம் பூஜை செய்வார்கள்.

இந்த இடத்திலிருந்துதான் தொடங்குகிறது மூளைச்சலவை.

இதற்குப் பிறகு, ருத்திராட்ச மாலை அணிவதால் ஏற்படும்
பயன்கள் என்னென்ன என்று சொல்லி விட்டு, இந்த
ருத்திராட்ச மாலைகள் வெளியில் கிடைக்காது
என்றும் சொல்லுவார்கள். வகுப்பு முடிந்ததும்
வெளியே வந்து பார்த்தால் –

1000 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை விலையிருக்கும்
ருத்திராட்ச மாலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும்.
இந்த மாதிரி இன்னும் பலவகை சேல்ஸ்……!
எல்லாமே அவர்களது சொந்த products…

நான்கு நாட்கள் வகுப்பு முடித்தவர்களை உங்களின்
அனுபவங்களைக் கூறுங்கள் என்று பேசச் சொல்லுவார்கள்.
சிலரை இவர்களே தயாரித்து வைத்திருப்பார்கள்.
அவர்கள் –
நான்கு நாட்கள் யோகா பயிற்சி செய்து முடித்ததும்,
எனக்கு உலகமே புதிதாக தெரிகிறது…..
அனைவர் மீதும் அன்பு செலுத்த துவங்கி விட்டேன்…
சிகரெட் பிடிப்பதை குறைத்திருக்கிறேன்….
எப்போதும் ஒரு புதிய புத்துணர்வோடு இருக்கிறேன்…
மனைவியோடு சண்டை போடுவதில்லை –
இந்த மாதிரி நிறைய்யய்ய்ய உண்மைகளை (!)….. கூறுவார்கள்.

தானாகத் தோன்றுகிறதோ இல்லையோ,
பயிற்சி எடுத்த மற்றவர்கள் சொல்லும்போது,
நமக்கும் அந்த உணர்வு தோன்றுவது போல் தோன்றும்.
தோன்றாதவர்கள் ஒரு குற்ற உணர்வுடன்,
தாழ்வு மனப்பான்மையுடன் இருப்பார்கள்…

பின்னர் அடுத்த 2-ம் கட்ட பயிற்சி பற்றி பேச்சு வரும்.
அதற்கான ரெஜிஸ்டிரேஷன் அப்போதே துவங்கும்..
முதல் பயிற்சி பெற்றவர்களுக்கு தாங்கள் பயிற்சி பெற்றது
போதவில்லையோ என்று தோன்றும்…
எனவே அடுத்த advanced course -க்கு book செய்து கொள்வார்கள்…
ஒரு முறை இவர்கள் பிடியில் சிக்கினால் அவ்வளவு தான்…
வெளியே மீண்டு வருவது மிகக்கடினம்.

கொஞ்சம் கொஞ்சமாக மூளைச்சலவை நிகழ்ந்து,
பிறகு அப்படி இப்படி – வாலண்டியராக சேர்த்து விடுவார்கள்….

படித்த மக்களும் ஏமாந்து போய் –
அடிமைக் கிணற்றில் வீழ்வது இப்படித்தான்.

அடுத்தது லிங்க பைரவி….
தியான லிங்கம் கோவில்….

——————————–

இந்த லிங்க பைரவியைப் பற்றி கொஞ்சம் விவரமாகச்
சொன்னால் தான் உங்களுக்கு புரியும் –
உணர்ச்சி வசப்படாமல் படித்தீர்கள் என்றால் – ரசிக்கலாம்.

——————

முன்பொரு தடவை, சில தகவல்களைத் தேடி வலைத்தளங்களில்
அலைந்து கொண்டிருந்தேன்.பாகிஸ்தான் நாட்டின்
ஒரு வலைத்தளத்தை
பார்த்தபோது, எதேச்சையாக அதில் ஒரு
விளம்பரத்தைப்

பார்த்து அதிர்ந்தேன் –.பாகிஸ்தான் வலைத்தளத்தில் விளம்பரம் செய்வது வரை நீள்கிறது
அவர்களின் வியாபார விஸ்தீரணம்…. அந்த விளம்பரத்தைப் பின் தொடர்ந்து சென்றவனை
இங்கெல்லாம் கொண்டு சென்று விட்டது ஜக்கிஜியின்
வலைத்தளம் –

advt.in 

pak website

லிங்க பைரவியின் அருளைப் பெற்றவர்கள்
வாழ்வு,
மரணம்,
ஏழ்மை மற்றும் தோல்வி குறித்து
வருத்தமோ அல்லது அச்சமோ
கொள்ளத் தேவையில்லை.

linga bhairavi-

1

பைரவியின் அருளைப் பெற்றால், எவையெல்லாம் நல்வாழ்வு என ஒரு மனிதர் கருதுகிறாரோ, அவையனைத்தும் அவருக்குக் கிடைக்கும்.

பிள்ளைப் பேறு ஆகட்டும்,
பிள்ளைகளுக்கான வித்யாரம்பம் ஆகட்டும்,
நடக்காத திருமணம் ஆகட்டும்,
தீராத வியாதி ஆகட்டும்,
இறுதிக் கடன்களான காலபைரவ கர்மா ஆகட்டும்,
வாழ்வின் தொடக்கம் முதல் இறுதி வரை
அத்தனை அம்சங்களுக்கும் விடை சொல்லும்
அற்புத தேவி – லிங்கபைரவி.
இந்த செயல்முறையை செய்வதன் மூலம்,
லிங்கபைரவி மற்றுமொரு வடிவில், உங்கள்
இல்லங்களில் குடியிருப்பாள்.

புதுவீட்டில் கிரஹப்பிரவேசம் செய்யும்போதோ,
அல்லது ஏற்கனவே குடியிருக்கும் இல்லங்கள் மற்றும்
அலுவலங்களிலோ இதை செய்து கொள்ள முடியும்.

உங்கள் பெயர், தொலைபேசி எண், விலாசம்
போன்ற விவரங்களை பதிவு செய்யுங்கள்.
தகுந்த நபர் ஒருவர் உங்களை நேரில் வந்து
தொடர்பு கொள்வார்.

Ye-Devi-large-

5
இந்த செயல்முறை முழுவதுமே லிங்கபைரவி
கோவிலை பராமரிக்கும் பைராகினி மா ஒருவர்
நேரடியாக வந்து செய்வார்.

( புகார் கொடுத்த காமராஜ் அவர்களின் மக்கள்
எந்த விதத்தில் பயன்படுத்தப்படுவார்கள் என்று இங்கே
நமக்கு புரியுமே…! )

இதைத் தொடர்ந்து சக்தி வாய்ந்த லிங்கபைரவி மந்திர
உச்சாடனங்கள் செய்யப்படுகின்றன. இதன் மூலம் தேவியின் இருப்பும் (Presence) அருளும்
அந்த இல்லத்தில் நிறைந்திருக்கும்.

அதன் பிறகு தேவிக்கு விசேஷ அபிஷேகங்கள்
செய்யப்படும். சக்தியூட்டப்பட்ட பைரவியின் வடிவங்களை
வீட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளில் வைக்கப்பட்டு

தேவி ஆலயத்தில் இருக்கக்கூடிய திரிசூலத்தில் மட்டுமே
கட்டப்படும் சூத்திரம் இந்த வீட்டிலும் கட்டப்படும்.
இப்பூஜையின் விளைவால் ஏற்பட்ட தீவிரமான சக்தியால்
இரண்டு மணி நேரத்திற்குள் வீட்டிலுள்ள அனைவரும்
தேவியோடு தொடர்பு கொள்வதைக் காண
முடிகிறது.

உங்கள் இல்லங்களிலும் இந்த பூஜை நடைபெற…
2013,டிசம்பர் 16ந்தேதி, பவுர்ணமி இரவு நடக்கும்
புனித யந்திர நிகழ்ச்சியில் கலந்து கொண்டு
நேரிடையாக யந்திரத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

வீடுகளிலோ –
அலுவலகங்களிலோ –
கடைகளிலோ –
தொழில் செய்யும் இடங்களிலோ –
சிறிதாகவோ, பெரிதாகவோ – இடத்தின்
தன்மைக்கேற்ப

எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம். அதன்
பலனைப் பெறலாம்.

பிறப்பிலிருந்து இறப்பு வரை -வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் உங்களுக்கு லிங்கபைரவியின்
அருள் பாலிக்க விசேஷ சடங்குகள் உண்டு.தேவியின் யந்திரம் அதற்குத் தகுந்தவாறு
உருவாக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த தேவியை அலட்சியம் செய்தாலோ, பராமரிக்கத்தவறினாலோ, அவள் உங்கள் இடத்தை விட்டு /strong> அகன்று விடுவாள். அப்படி வெளியேறும்போது –

மிகக்
கோபத்துடன் வெளியேறுவாள். அப்போது நான்
உங்களுக்கு துணை இருக்க மாட்டேன். அந்த கோபத்தின்
விளைவுகளை
நீங்கள் தான் அனுபவிக்க வேண்டி இருக்கும்.

எனவே அவளை பூஜிப்பதில் சிறிதும் அலட்சியம் கூடாது. காலபைரவ கர்மா என்பது இறந்து போன
ஒருவருக்கு
லிங்க பைரவி தேவியின் அருள் கிடைக்கும்
பொருட்டு செய்ய வேண்டிய சடங்குகள்.
இயற்கையாகவோ, துர்மரணமாகவோ இறந்து போனவர்கள்
நல்லபடியாக பயணிக்க தேவியின் கருணை தேவை.

kalabhairava shanthi.2
இயற்கை மரணமாக இருந்தால் –
50 வயதிற்கு மேற்பட்டவராக இருந்தால் –14
நாட்களுக்குள்

50 வயதிற்கு உட்பட்டவராக இருந்தால் –48
நாட்களுக்குள்

துர்மரணமாக இருந்தால் -(விபத்து, தற்கொலை போன்றவை) – 33 வயதிற்கு மேற்பட்டவர்
48 நாட்களுக்குள்
33 வயதிற்கு உட்பட்டவர்
90 நாட்களுக்குள்
ஒருவேளை இந்த குறிப்பிட்ட கால கட்டத்திற்குள்
செய்ய முடியாவிட்டால் – இறந்த ஒருவருக்கு
எப்போது வேண்டுமானாலும் செய்யக்கூடிய சடங்கு
ஒன்று இருக்கிறது –

காலபைரவ சாந்தி !
எந்த மாதமாக இருந்தாலும் சரி -செய்யலாம்.
அமாவாசையன்று செய்ய வேண்டும்.

இதைச் செய்ய தேவையானவை –
இறந்து போனவரின் புகைப்படம்,
பெயர், பிறந்த தேதி, இறந்த தேதி

———-

கோயம்புத்தூர், வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில்,
இருக்கும் லிங்கபைரவி கோவிலில்
கீழ்க்கண்ட சடங்குகளை நிகழ்த்தலாம் –

தஹ நிவாரணம் (நினைத்தவை நடக்க )-
சர்ப்ப சேவா (திருமண உறவு பலப்படவும்,
பிள்ளைப்பேற்றிற்காகவும்) –
க்லேச நஷக்ரியா (சுய பாதுகாப்பிற்காக)
விளக்கு சேவா ( வாழ்வில் வளமும்
வற்றாத செல்வமும்பெற )-
கர்ண வேதா (குறிப்பிட்ட சக்தி இடங்களில்
துளையிட)-

திருமண நிகழ்வுகள் ( விரும்பும் முறைப்படி
திருமணங்கள் நிகழ்த்த, அறுபதாம் கல்யாணம் உட்பட )

—-
லிங்க தேவிக்கு என்ன காணிக்கை கொடுக்கலாம் ?

பவுர்ணமி தினத்தன்று, மேள, நாட்டிய, இசை
நிகழ்வுடன் தேவிக்கு ஊர்வலம் நடத்தலாம்

தேவியின் அருளையும், கருணையையும் வேண்டி,
பசுக்களை தானமாகக் கொடுக்கலாம் –

குடும்ப நலத்துக்காக தாலி அர்ப்பணம் செய்யலாம்-

நல்ல ஆரோக்கியம் வேண்டி – முடி இறக்கலாம்.
தேவி அபய சூத்ரம் – பூஜித்த மங்கல நூலை
ஆண்கள் வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும்
40 நாட்கள் கட்டிக் கொள்ள வேண்டும். பின்னர்
அவற்றை கழற்றி எரித்து விட வேண்டும்
(அறுக்கக்கூடாது)-

தேவி நேத்ர அர்ப்பணா – செம்பிலோ, வெள்ளியிலோ கண் வாங்கி தேவிக்கு சமர்ப்பித்தல்

லிங்க பைரவி வஸ்த்ர அர்ப்பணம் – தேவிக்கு
அணிவித்த ஆடையை பணம் கொடுத்து வாங்கி
விசேஷ நாட்களில் அணிந்து கொள்ளலாம். வீட்டில்
வைத்திருந்தால் நல்லது நடக்கும்.

——————————-

அய்யோ அய்யோ என்று தலையில்
அடித்துக் கொள்ளத்தோன்றவில்லை….?
படித்தவர்கள் எல்லாம் போற்றும்
ஜக்கிஜியின் விளம்பரங்கள் தான் இவை.

பொதுவாக எல்லா மனிதரிடமும் இருக்கக்கூடிய
பலவீனங்கள் தோண்டித் துருவி ஆராய்ந்து,
இது இல்லாவிட்டால் அது என்று –
எதாவதொன்றில் அவனை சிக்க வைக்கும் முயற்சி….

ஜக்கிஜியின் ஆன்மிகப் பயணத்தின் பாதைகள் இவை…
மக்கள் ஆன்மிகத்தின் உச்சத்தை அடைய
ஜக்கிஜி சொல்லிக் கொடுக்கும் வழிகள் இவை…
“தூ ” என்று காரித்துப்பத் தோன்றவில்லை…?

இவற்றிற்கும் ஆன்மிகத்திற்கும் என்ன சம்பந்தம்…?
மக்களை அடிமுட்டாள்களாக்கும் –
பைத்தியக்காரத்தனங்களை அரங்கேற்றி,
அதற்கு கொள்ளை வசூல் வேறு செய்கின்றார்களே –
இவர்களை என்ன செய்தால் தகும் என்று தோன்றுகிறதா ….?
அவசரம் வேண்டாம்…

இன்னும் விஷயம் முடியவில்லை…

இந்த இடுகை மிகவும் நீண்டு விட்டது – எனவே,
அடுத்த பகுதியில் மீண்டும் வருகிறேன் -விவரமாக.

அதற்குள் நீங்களும் தான் கொஞ்சம் இதைப்பற்றி யெல்லாம் யோசித்து !! உங்கள் கருத்துக்களை பின்னூட்டங்களில் எழுதுங்களேன்….

( தொடர்கிறது -பகுதி-6-ல் )

படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

31 Responses to பகுதி ( 5 ) – ஜக்கி என்றால்…..? இந்த மெகா ஃப்ராடை வளர்த்து விட்டது யார்….?

 1. Sanmath AK சொல்கிறார்:

  KM Sir,

  May be bit irrelevant, but I would like to share which I am experiencing. When we are discussing about corporate swamijis, I wanted to share what I learnt……. Exercises taught in “Vaazhga Valamudan”. I realized it when I was suffering with back pain. These exercises are meant for everyone, including “physically” old people. Next comes “kaayakalpa payirchi” for mainly youngsters.This group is not charging anything big.

  PS: Above has nothing to do with promoting those. Just sharing what I feel is good and what I am really experiencing. Fyi, I am 30yrs old.

  Thanks.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   சன்மத்,

   உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்.
   நீங்கள் எந்தவித தயக்கமும் இல்லாமல்
   உங்கள் கருத்துக்களை கூறலாம் –
   நான் புரிந்து கொள்வேன்.

   வேதாத்ரி மகரிஷி அவர்களைப் பற்றி
   இந்த இடுகைத்தொடரில் பின் பகுதியில்
   சொல்ல வேண்டுமென்று நானே நினைத்திருந்தேன்.

   இப்போது நீங்களே அந்த சந்தர்ப்பத்தை உருவாக்கி
   கொடுத்து விட்டீர்கள்…

   பல வருடங்களுக்கு முன்னரே –
   வேதாத்ரி மகரிஷி அவர்களை நேரில் கண்டு,
   இரண்டு முறை அவரது உரையை கேட்கும்
   வாய்ப்பும் எனக்கு கிடைத்தது.
   மன வளக் கலை மன்றத்தை பற்றி
   நான் அறிவேன்.

   சல்லிக்காசு சம்பாதிக்க நினைக்காமல்,
   உண்மையாகவே மக்களுக்கு –
   எளிய, அவசியமான, யோகா பயிற்சிகளையும்,
   நலம்பட வாழும் முறையையும்
   கற்றுக் கொடுக்க வேண்டும் என்று மனதார
   நினைத்து அதற்காக வாழ்நாள் முழுதும்
   உழைத்த ஒரு நல்ல ஆத்மா.

   “வாழ்க வளமுடன்” என்று எல்லாரையும்
   வாழ்த்திய ஒரு நல்ல மனிதர்.

   அவரால் தோற்றுவிக்கப்பட்ட இயக்கம்
   இப்போதும் விளம்பரமின்றி தமிழ்நாட்டின்
   பல பகுதிகளிலும் பணியாற்றிக் கொண்டிருக்கிறது.

   ஆனால், என்ன செய்வது –
   மக்கள் – போலி வேடதாரிகளை தானே
   எளிதில் நம்புகிறார்கள்…?

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 2. sabitha சொல்கிறார்:

  உடலுக்கும், உள்ளத்துக்கும் தேவையான பயிற்சிகள், மிக எளிமை ஆனவை. vedhathri மஹரிஶி அய்யா சொல்லி கொடுததவை அற்புதமானவை. ஆனா, நம்ம ஆட்களுக்கு தேவை எளிமை அல்ல, கவர்ச்சி, ஆடம்பரம். ஆகையால் இந்த ஏமாற்று சக்திகளிடம் அகப்பட்டு கொள்கிறார்கள்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   சபிதா,

   உண்மை.
   நண்பர் சன்மத் அவர்களுக்கு எழுதி இருக்கும்
   பதிலைப் பார்க்கவும்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 3. sabitha சொல்கிறார்:

  ஒரே ஒரு சாம்பவி முத்திரை கற்று கொடுக்க 1000 ரூபாய். அங்கே சென்றால், ஜாக்கியை கடவுள் போல வழிபட செயும் மூளை சலவை. முத்திரை தப்பா செய்தால், ஏற்படும் பின் விளைவுகளை பற்றி ஒரு பயமுறுத்தல், எவனும் செய்யவே மாட்டான்.

 4. செந்தில் - கோவை. சொல்கிறார்:

  அடியேனும் சாம்பவி வகுப்புக்கு சென்று வந்தேன்… நமக்கு தேவையானதை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றவற்றை ஒதுக்கிவிட வேண்டியதுதான்…

 5. drkgp சொல்கிறார்:

  பழனி காளிமுத்து, சேலம் சிவராஜ் வரிசையில் கோவை ஜக்கி .
  அனைவருக்கும் வியாபாரம் அமோகம்.
  எதை தின்றால் பித்தம் தீரும் என்ற மனநிலையில் உள்ள தன்னம்பிக்கை அற்ற
  மானிடர்களின் பலவீனத்தை சுரண்டும் சமூக விரோதி.

 6. Teeding சொல்கிறார்:

  Thank you, though i dont come to your site often because of your illogical Amma puranams, You have boldly posted against this bullshit ………. I am now seeing that he is even competing against traditional poojari services. He should be exposed fully.

 7. selvam சொல்கிறார்:

  KM Sir,

  Jaki Vasu conducted forien country also. 3 days from 6pm to 9pm fees equivalent to Indian Rs 15,000.
  3 years before manny peoples attend. After savukku article, now I saw few peoples only attend.
  Thanks your effort to save unknow about Jakki Vasu

 8. senthil சொல்கிறார்:

  அண்ணா !

  உங்களுக்கு வறட்டு காரண அறிவு(லாஜிக்) மட்டுமே இருக்கிறது.வாழ்கை என்பது வார்த்தைகளால் மட்டும் ஆனதல்ல.வள்ளலார் சொன்னது போல் “மனமில்லா பெருவாழ்வு ” எப்பொழுதும் இங்கே இருக்கிறது.

  சதகுரு அவர்கள் எங்களை போன்ற லட்சக்கணக்கான பேருக்கு ஞானம் அனுபவ பூர்வமாக பெற அருள் செய்தவர். ஞானம் என்பது வாழ்க்கையை அனுபவ பூர்வமாக “வார்த்தைகளாக மாற்றிகொள்ளாமல்” உணர்வது.

  ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது போல் , உங்க; வார்த்தை ஜாலங்கள் உங்கள் வாழ்வு மேன்மை அடைய உதவாது.

  உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ஈஷா தொண்டர்கள் அறியாமையில் உள்ளது போலவும் , நீங்கள் அணைத்தும் தெரிந்தவர் போலவும் எழுதி இருக்கிறீர்கள்.

  என்ன செய்வது ? மனம் உங்களை அப்படி நம்ப வைக்கிறது .
  உங்கள் மனதின் சூழ்ச்சி அப்படி பட்டது.

  “மனமென்னும் மாடு அடங்கில் தாண்டவக்கோனே , முக்தி வாய்த்தது என்று என்னோடே தாண்டவக்கோனே”. என்று ஒரு சித்தர் சொன்னது எங்கள் அனுபவத்தில் நடக்கிறது.அதற்கு நன்றி கூறும் பொருட்டே எங்களை ஈஷாவில் இணைத்துள்ளோம்.

  நமஸ்காரம்
  செந்தில்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   ஈஷா அன்பர் தம்பி செந்தில்,

   நான் துவக்கத்திலேயே சொல்லி விட்டேனே…
   இந்த வலையில் ” ஏற்கெனவே ” விழுந்து
   விட்டவர்களுக்கு நாம் எந்த விதத்திலும்
   இவற்றை புரிய வைக்க முடியாது என்று.

   என் நோக்கம் உங்களைப்போன்றவர்களை
   ஈஷா அடிமைத்தளத்திலிருந்து விடுவிப்பது அல்ல….
   மாறாக, புதிதாகச் சென்று விட்டில்பூச்சிகளை
   போல் அதில் விழக்கூடியவர்களை தடுக்க –
   இயன்ற அளவு அவர்களுக்கு ” ஈஷா ஞானம் ”
   பற்றி எடுத்துக் கூறி விளக்குவதே….

   இந்த இடுகைத்தொடர் ஆரம்பித்த நாளிலிருந்து,
   ஆயிரக்கணக்கில் பெருகி வரும் வாசக நண்பர்களின்
   எண்ணிக்கை எனக்கு இந்த முயற்சி கொஞ்சமேனும்
   பலன் தரும் என்கிற நம்பிக்கையை தருவதாக இருக்கிறது.

   இந்த வயது முதிர்ந்த “அண்ணனுக்கு” அறிவுரை
   கூறி மாற்ற வேண்டுமென்று நீங்கள் நினைத்தால் –

   நான் இந்த தொடரில் இதுவரை
   – எழுப்பியுள்ள கேள்விகளுக்கு,
   – சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு,
   தகுந்த ஆதாரங்களுடன் விளக்கம் கொடுத்து
   “தவறு” அல்லது “பொய் ” என்று நிரூபித்தீர்களேயானால் –
   எதாவது பலன் இருக்கலாம்.

   இந்த தளத்தின் வாசக நண்பர்களும் –
   அதைத்தான் விரும்புவார்கள் – வரவேற்பார்கள்.

   இந்த குற்றச்சாட்டுகளுக்கு –
   நீங்கள் தரும் உருப்படியான எந்த விளக்கத்தையும்
   நான் இங்கே பிரசுரம் செய்யத் தயாராக இருக்கிறேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • Arun Annachi சொல்கிறார்:

    என் நோக்கம் உங்களைப்போன்றவர்களை
    ஈஷா அடிமைத்தளத்திலிருந்து விடுவிப்பது அல்ல….
    மாறாக, புதிதாகச் சென்று விட்டில்பூச்சிகளை
    போல் அதில் விழக்கூடியவர்களை தடுக்க –
    இயன்ற அளவு அவர்களுக்கு ” ஈஷா ஞானம் ”
    பற்றி எடுத்துக் கூறி விளக்குவதே….

    மிகவும் சரி ….

 9. selvarajan சொல்கிறார்:

  ஓக இருக்கை என்பதே —- யோகாசனம் என்று மருவி தற்போது கொள்ளையடிக்கும் கூட்டங்களிடம் சிக்கி — சர்ச்சைகளில் மாட்டி சாந்தி சிரித்துக் கொண்டு இருப்பது — வேதனையானது …

  குடும்பத்தை விட்டு ஓடிப்போவது , தனித்திருக்கிறது, திருமணம் ஆகாமல் { மணம் செயதுக் கொள்ளாமல் } பிரம்மச்சரியாக இருப்பது . அப்படியாக வாழ வேண்டும் என்கிற கோட்பாடு நம்முடைய வழக்கிலேயே இல்லை. யோகம் என்பது பல்வேறு உழைப்பு நிலைகளை கைக்கொண்டு பயில்வது — பயிற்சி செய்வது தான்.

  “யோகக் கலை” எல்லாம் மக்களிடம் எளிமையான — தக்க பயிற்சி முறைகளினால் சேரும்போது மட்டும்தான் அது அறிவியலாக வளர முடியும். அதுவரை அது ” ஜக்கி ” போன்ற கேப்மாரிகள் சிலரின் ஆளுகைக்குள் இருக்கிற கலையாக மாறி ஏமாற்றப்படும் என்பது தான் உண்மை ……

  யோகா என்பது முதன்மையாக உடலைப் பற்றியதுதான். மனதைப் பற்றியது அல்லவே அல்ல…… “உடம்பார் அழியின் உயிரார் அழிவர்” என்பார் திருமூலர். அவரே “உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே”” என்கிறார். எவ்வளவு பெரிய கருத்து … அப்படி வளர்ச்சி பெற்றும் அவைகள் எனக்கு உதவவில்லை… என்று மறைப்பு பொருளாக விளக்கியுள்ளார்

  உடம்பை வளர்த்தேன். உயிர் வளர்ந்தது என்று கூறுவது அந்த உயிரினுடைய கூறுகளைப் பற்றி தான் —– மனம்— அறிவு இன்னும் பல்வேறு நிலைகளும், உடலை ஓம்பும் கலைதான் ” யோக இருக்கைக் கலை.” உடலை விரும்புவதே யோகம் —. உடலைப் போற்றி வாழ்ந்தோமானால் மனம் என்பது தானாகவே சீராக இருக்கும். இது தான் அடிப்படை.

  இதில் யார் யாரெல்லாம் இந்த பயிற்சியை செய்யலாம் என்ற கேள்விக்கு — பதிலாக கிடைப்பது ” உழைப்பு இல்லாமல் சோம்பி இருப்பவர்கள், கருத்தால் உழைக்கிறவர்கள், உட்கார்ந்த நிலையிலேயே பேச்சுப்பணி, எழுத்துப்பணி செய்கிறவர்கள் ” ஆகிய இவர்கள் தான்…… ஆனால் இதில் சில செய்திகளையும் கணக்கிலெடுக்க வேண்டும். இன்றைக்கு சூழல் முழுக்க புதிய ஒருவகை வணிகப்போக்குக்கும் — வடிவத்திற்கு போயிருக்கிறது…… முன்பு விடியலுக்கு வேலைக்குப் போனால் மாலை வரை உடலுழைப்போடு வேலை இருக்கும்…….

  இப்பொழுதெல்லாம் நகர்புறத்திலேயும், நாட்டுபுறத்திலேயும் எல்லாமும் — சில மணிக்குள்ளாகவே வேலையை செய்து விட்டு சும்மா உட்கார்ந்து இருக்கிறார்கள்…. அவர்களுக்கு ஏதாவது ஒரு பயிற்சி தேவை — இதைகாரணியாக வைத்து — ஜக்கி போன்ற ஏமாற்று கூட்டம் — ஒருவாரத்தில் யோகா என்று உசுப்பேத்தி வசூலில் இறங்கிவிட்டார்கள் .

  மனதை ஆளுமை செய்யக்கூடாது . மனதை அடிமை செய்ய நினைத்து — அதை ” தியானம் செய்தல் ” என்று ஒரு முத்திரையைக் குத்தி அதிலேயே ” ஆழ் நிலை தியானம் ” என்றும் அடுத்தக் கட்ட வசூலுக்கு வலை விரிக்கிறார்கள் ….

  வேறு ஒரு கோணத்தில் பார்க்க . “ஒரு பைத்தியத்தை — பித்தனை ” எடுத்துக் கொண்டால் …. அவனுக்குள் ஏதோ ஒன்றைப் பற்றிய எண்ணங்கள் மட்டுமே சுழன்று கொண்டு இருப்பதும் — கீறல் விழுந்த இசைத்தகடு போல ஒரே சொல்லையே திரும்பத் திரும்ப பிதற்றிக் கொண்டிருப்பான்…. இந்த மனப்பயிற்சி எப்படி என்றால்

  ஒரு பொருள் பற்றிய ஒரே நினைவு, சிந்தனை அல்லது ஒரே சொல்லை திரும்பத் திரும்ப சொல்வது. இந்த வகை முயற்சிகளை செய்தால் நீங்களும் ஒன்றைப் பற்றி மட்டுமேயான ஒரே சுழலிலேயே போய் வலம் வருகிறீர்கள்…. என்று அர்த்தம் —- தூக்கம் இல்லாதவர்களுக்கும், போதை பொருளுக்கும் —- குடிக்கும் அடிமையானர்களுக்கும் … ஜக்கியிடம் சிக்கியுள்ளவர்களுக்கும் ஏதோ ஒன்றைப் பற்றியான எண்ணச்சுழல் அதிகமாயிருக்கும். அப்பொழுது பயிற்சி என்று ஒன்றைப் பற்றி மட்டுமேயான எண்ணச் சுழலிலே போய் கொண்டிருந்தீர்கள் என்றால் பேரிடரான (ஆபத்தான) நிலையை நோக்கி போய்கொண்டிருக்கிறீர்கள் என்று பொருள். எவ்வளவு நேரம் தியானத்தில் உட்காருகிறீர்களோ அவ்வளவு நேரமும் பித்தனாக ஆகிறீர்கள் என்று பொருள். எவ்வளவு நாள் இதைச் செய்திருக்கிறீர்களோ அவ்வளவு நாட்கள் அளவிற்கு பித்தனாகிறீர்கள் என்று பொருள். இந்த பயிற்சிகள் செய்பவர்கள் தவ முனிவர்களைப் போல கருதி மாயையில் போய் விழுந்து கொண்டிருக்கிறார்கள். இதை ஏன் செய்கிறார்கள் என்றால் நம்முடைய இளைஞர்களை பேடிகளாக்க வேண்டும்; காயடிக்க வேண்டும் என்றும் தான். இதன் முதல் முனைப்புச் செயல்தான் இது….. அதைத்தான் இந்த பேமானிகள் செயதுக் கொண்டு இருக்கிறார்கள்

  அகத்தியர் ஒரு கேள்வி கேட்பார் — அது “விழி மூடில் ஒளி எங்கே காண்பாய் விளம்புவாயே ” என்று….. இதன் அர்த்தம் புரியாமல் — பலரும் இப்பொழுதெல்லாம் கண்ணை மூடி தவம் பண்ணுகிறேன் என்று சொல்கிறார்கள்….. மனதை காட்டித்தான் மொத்த வழியிலேயும் மக்களை திசை திருப்பி ஏமாற்றுகிறார்கள் — நம்முடைய மனதை கவர்ந்திட்டால் தவறான திசை வழிக்கு கொண்டு போய் ஆளுமை செய்யலாம் …. என்பது தான் அவர்களது நோக்கம் அதுதான் மனதை குறித்து தொடும் முயற்சி…. என்று கூறி பசப்புகிறார்கள் … ” அப்படி மாட்டிக்கொண்டு ” முழிப்பவர்கள் தான் மொட்டை போட்டுக் கொண்ட பல சகோதர — சகோதிரிகள் ….

  நீங்கள் உணர்ச்சிகள் என்பது என்னவென்று சொன்னால், இப்பொழுது எரிச்சல் வருகிறது என்று வைத்துக்கொண்டால் பித்தப்பை மிகையாக பணியாற்றுகிறது என்று பொருள். அதில் சுரப்பு ஏற்பட்டால் எரிச்சல் கொடுக்கும். சினம் அதிகமாக வரும். சினம் அதிகமாக வந்தால் கல்லீரல் மிகையான நிலைக்கு போய்விட்டது என்று பொருள். உங்கள் உறுப்புகள் உள்ளே என்னென்ன ஆகிறதோ, அதுதான் உங்கள் வெளிப்பாடுகள். வெளியில் உணர்ச்சிகளும், உணர்வுகளும் உடலும் மனமுமாக இருக்கிறது. ஆக எளிதாக உடலுக்கும் மனதிற்கும் உறவு போட்டு பார்க்கலாம். ஆக ஓகப் { யோகப் } பயிற்சிகள் மனம் பற்றியது அல்ல. உள்ளொளியியல் பற்றியதல்ல. மாயையாக இருக்கவில்லை. மாறாக உடல் பற்றியது. இயல்பானது. இயற்கையானது.

  திரும்பத்திரும்ப நினைக்காதீர்கள். திரும்பத் திரும்ப ஒலிக்காதீர்கள். அது வேண்டாம். எல்லா மந்திரங்களும் இதே இழிவு நிலையைதான் உருவாக்கும். ” மனமது செம்மை யானால் மந்திரம் துதிக்கவேண்டாம் ” என்று சொல்கிறது அகத்தியர் பாடல். இதுதான் அதற்கான விடை. மனமது செம்மையாக வேண்டும் என்றால் உடலது செம்மையாக வேண்டும்….

  நம்முடைய அகத்தியர் — திருமூலர் — வள்ளலார் போன்றவர்களும் பல உலக நன்மைபயக்கும் செயதிகளை விலாவரியாக எழுதி வைத்துள்ளார்கள் — அதிலும் திருமூலர் தனது திருமந்திரத்தில் இந்த யோகா பற்றி விரிவாக எடுத்துக்கூறி இருக்கிறார் …. அதை ஊன்றி படிக்காவிடினும் — ஒரு மேலோட்டமாக படித்தாலே — இது போன்றவர்களின் பிடியில் சிக்காமல் இருக்கலாம் …

  மேலும் பல ஆண்டுகளாக நடந்து வருகிற ” ஆன்மீக கண்காட்சிக்கு ” சென்றவர்களுக்கு பல உண்மைகள் புரிந்திருக்கும் — செல்லாதவர்கள் தற்போது சென்னையில் – 8-வது கண்காட்சி நடக்கிறது — அங்கே சென்று பார்த்தால் நம் நாட்டில் இருக்கின்ற ” காசுக்கு யோகா ” விற்கும் அனைத்து கோல்மால் கூட்டங்களையும் ஒருசேர சந்தித்திக்கலாம் — அவர்களிடம் நீங்கள் திரு .கா.மை . அய்யா எழுப்புகின்ற கேள்விகளையும் — உங்கள் மனதில் எழும் கேள்விகளையும் ” ஈஷா மையத்தில் ” கேட்டுப் பாருங்கள் — அவர்கள் கொடுக்க திணறுவதை காணலாம்

  அங்கே இந்த ஜக்கியின் கடையில் நீங்கள் சென்றவுடன் உங்களை அவர்கள் ” inner engineering course ” படிக்க தூண்டுவார்கள் — “யோகா பயிற்சி, மூச்சு பயிற்சி, உடற்பயிற்சி போன்றவை தான் இன்னர் என்சினியரிங் கோர்ஸ் , இதை படித்தால் பட்டம் கிடைக்கும்” என்பார்கள் .
  “சரி இதற்கு ஏன் எஞ்சினியரிங் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்” என்று கேட்டால், நமது உடலே ஒரு பொறியியல் அமைவாக இருப்பதால் அந்த பெயரை வைத்து விட்டோம் — என்று அதிரடியாக கூறுவதையும் கேட்டு ரசிக்கலாம் …..

  நம்முடை பண்டைய நூல்களில் இருப்பதை எடுத்து — முலாம் பூசி — ஏதோ இவர்கள் புதிதாக உருவாக்கியதை போல பாவ்லா காட்டி கொள்ளையடிக்கிறார்கள் என்பது தான் உண்மை — எனவே கொஞ்ச நேரமாவது அந்த நூல்களை படிக்கவும் — யோகா தலைப்பில் பல அறிஞர் சொற்பொழிவுகளையும் கேட்கவும் ஒதுக்கி — இதைபோன்றவர்களிடம் — நீங்கள் சிக்காமல் — உங்கள் வாரிசுகளையும் அங்கே ஈடுபடுத்தாமல் இருங்கள் — இல்லையென்றால் திரு காமராஜ் நிலைமை தான் உங்களுக்கும் ….அப்படி தானே ….?

  • Senthil சொல்கிறார்:

   அகத்தியர் , திருமூலர் மற்றும் வள்ளலார் பற்றி எல்லாம் எழுதி உள்ளீர்கள்.மிக நன்று.அவர்களுடைய வழிகட்டுதல் படி வாழ்தல் பெரும் பேறு.
   அனால் இது ஒரு உச்ச நிலை அல்ல.

   அவர்கள் பெற்ற அனுபவதை நீங்களும் பெற முடியும். வள்ளலார் தன்னை சிவலிங்கத்துடன் கரைத்து கொண்டது போல் ஆகி விட முடியும்.De -materialization of human body is quite possible .அந்த உள்நிலை மாற்றத்துக்கான வாய்ப்பை எனக்கு சதகுரு வழங்கி உள்ளார்கள்.

   நீங்கள் உள்நிலை கவனம் இன்றி , பணம் மற்றும் வெளி சூழ்நிலைகளுக்கு மற்றுமே முக்கியத்துவம் கொடுத்தால்…….உங்கள் விருப்பம்.

   ஒரு சிறிய உண்மையை புரிந்து கொள்ளுங்கள் . யார் என்ன சொல்லி இருந்தாலும் , அவர்கள் அனுபவத்தை வார்த்திகளால் எழுதி வைத்தார்கள். வார்ததைகள் ஒரு போதும் அனுபவம் ஆகாது.

   சரி தானே ? சர்க்கரை இனிப்பு என்று இப்பொழுது நான் சொன்னால் , இந்த எழுத்துக்களே உண்மை அல்ல. இது உங்களை கொஞ்சம் சர்க்கரை எடுத்து நாவில் வைத்து நீங்களே அனுபவிப்பதுக்கான தூண்டுதல். அது போல் தான் அகத்தியர் , திருமூலர் மற்றும் வள்ளலார் சொன்னதும். நீங்கள் பூர்ணத்துவ அனுபவத்துக்கு ஏங்குவீர்களானால் , சதகுருவின் அருள் பெற வாய்ப்புண்டு.

   நீங்கள் உங்களை உடம்பு என்று எண்ணுவதனால் , சதகுருவையும் உடம்பு என்று எண்ணுகிறீர்கள்.

   உங்களை உங்கள் உடம்பு தாண்டி உணர்வதே முக்தி. அதட்கு கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள்.

   சதகுருவுக்கும் மற்ற குருமார்களுக்கு மிக்க நன்றிகள் .

   • selvarajan சொல்கிறார்:

    நான் ஆரம்பத்திலேயே எழுதியிருப்பதை மீண்டும் // ” “யோகக் கலை” எல்லாம் மக்களிடம் எளிமையான — தக்க பயிற்சி முறைகளினால் சேரும்போது மட்டும்தான் அது அறிவியலாக வளர முடியும்.” // உற்றுப் பாருங்கள் — படியுங்கள் …. சர்க்கரை என்று சொன்னால் இனிக்காது என்பது அனைவரும் அறிந்ததே — திருமூலர் — வள்ளலார் போன்றோர் கூறியுள்ளதை //அதிலும் திருமூலர் தனது திருமந்திரத்தில் இந்த யோகா பற்றி விரிவாக எடுத்துக்கூறி இருக்கிறார் …. அதை ஊன்றி படிக்காவிடினும் — ஒரு மேலோட்டமாக படித்தாலே — இது போன்றவர்களின் பிடியில் சிக்காமல் இருக்கலாம் …// என்று நான் கூறியது ஒரு விழிப்பு ஏற்படும் என்றுதான் — அதற்கு ஒரு நல்ல ” ஆசாரியன் வேண்டும் ” என்பது அனைவருக்கும் தெரியும் — ஆனால் காசுக்காக உன்னத கலையை விற்கும் கூட்டத்திடம் –மாட்டிக்கொள்ள வேண்டாம் என்பதே எனது எண்ணம் —

    ஊரான் பிள்ளைகளுக்கு ” மொட்டை போட்டு ” தனது இடத்தில் அடக்கித்துவைத்து — பழைய நினைவுகளை மறக்கடித்து அடிமைகளாக்கி இருப்பவர் — தனது சொந்த மகளையும் இதில் ஈடுபடுத்தியிருந்தால் — அவன் யோக்கியன் என்பதே — எனது எண்ணம் — அவரவர் விருப்பு — வெறுப்பு என்பது அவர்களின் மனநிலை என்கிற ” சப்பைக்கட்டு ” எனக்கு தேவையில்லை — நான் பெரும்பாலும் ” மறுமொழி இடுவதை தவிர்ப்பவன் … எனவே இதற்கு பிறகும் உங்களுடைய ஒருநிலை சார்ந்த மறுமொழிதல் எனக்கு தேவையில்லை ….

    நான் கடந்த நான்கு பதிவுள்களுக்கும் எந்த பின்னூட்டமும் இடாது இருந்ததே — திரு .கா.மை .அவர்களின் பதிவுகளை உற்று நோக்கத்தான் — ஏனென்றால் ஆரம்பத்திலேயே ” விவாதம் என்கிற சர்ச்சைகளை ” உண்டாக்கினால் — அவருக்கு ஏற்படும் இடைஞ்சல்களை தவிர்க்கவே …. ” படித்தால் கிடைப்பது அறிவு — நல்லாசிரியரின் பயிற்சியினால் ” கிடைப்பது தெளிவு … !!!

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    தம்பி செந்தில்,

    விளக்கம்… விளக்கம் ….விளக்கம்….

    இங்கு தேவைப்படுவது உங்கள் லெக்சர்கள் அல்ல…
    இந்த இடுகையில் எழுப்பப்பட்டிருக்கும் வினாக்களுக்கு,
    குற்றச்சாட்டுக்களுக்கு – ஆதாரபூர்வமான பதில்.

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

   • சாமி சொல்கிறார்:

    /உங்களை உங்கள் உடம்பு தாண்டி உணர்வதே முக்தி//

    ஐயா ஸத்குரு செந்தில் அவர்களே,

    கீழ்கண்ட வினாக்களுக்கு விடையளிக்க இயலுமா?

    உணர்வது என்றால் என்ன?

    அதை உணர்வது யார்?

    முக்தி என்றால் என்ன?

    அது எங்கே இருக்கிறது?

    அதை அளிப்பது யார்?

    முக்தி என்பது ஒருவர் அளித்துப் பெறக் கூடிய வஸ்துவா?

    விளக்குவீராயின் மகிழ்வேன்!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   நீங்கள் அமைதி காக்கவும் காரணம் இருக்குமென்று
   நினைத்தேன். அதே போல், பொறுத்திருந்து
   அருமையான, மிக விரிவான ஒரு பின்னூட்டத்தை
   தந்திருக்கிறீர்கள்.

   அகத்தியர் — திருமூலர் — வள்ளலார் -எல்லாரும்,
   ஜக்கிஜியைப் போல், கூலிங் கிளாஸ்-தொப்பி போட்டு,
   வேடம் பூண்டு ஆடாததும்,
   மோட்டார் பைக், ஹெலிகாப்டர் சவாரிகள்
   செய்யாததும் தான் அவர்கள் செய்த தவறு.
   அவர்களை சரியாக “மார்கெட்டிங்” செய்யாதது
   நமது சமுதாயத்தின் தவறு.

   பார்ப்போம் – நமது சமுதாயம் விழித்துக்கொள்ள
   இன்னும் எத்தனைக் காலம்தான் தேவைப்படுகிறது என்று.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • Senthil சொல்கிறார்:

    what is our problem? if sadhguru wear cooling glasses and uses helicopter.It is his own personal wish to choose to what to do or not.

    • Senthil சொல்கிறார்:

     There is no cooling glasses,helicopter etc in agasthiya period.So,he not used.He went by walk all along the south Bharat and make yoha available to peoples.

     If these things could have available in past, he may used it on his wish.

    • Jagannathan chellappa சொல்கிறார்:

     why do we need such a bloddy fellow as our guru.
     who kills his wife, lives with otherman’s wife,
     loots and cheats the soceity ?

     • Jagannathan chellappa சொல்கிறார்:

      you fellows are intoxicated adimai’s and
      will never come to sense.
      Instead of blabbering it is better answer
      all the charges made in these blogs
      as suggested by Mr.K.M.

     • Senthil சொல்கிறார்:

      Please see,he is not guru for you.He is guru only for his disciples like me and lakhs and lakhs other sincere practitioners.

      You only think she had been killed.She left her body in front of hundreds of disciples ,volunteers and even public who are at dhyanalinga temple.

      who cheated soceity? is sadhguru compelling any body for money or anything? Our society is wise enough.

 10. Jagannathan chellappa சொல்கிறார்:

  உட்கார்ந்த நிலையில் தியானம் செய்வதாக சொல்லிக் கொண்டு,
  உயிரை விட்டதாகச் சொல்லப்படுவதை நம்பும்
  உலகின் அதி சிறந்த முட்டாள்களை இந்த கூட்டத்தில்
  தான் காண முடியும்.
  இதற்கு முன்னாலும், பின்னாலும் வேறு யாராவது இந்த மாதிரி மரணமடைந்திருக்கிறார்களா ?
  விஞ்ஞஆனபூர்வமாக இது சாத்தியமா ?
  எந்த மடையனாவது இந்த கதையை நம்புவானா ?
  இந்த சாவில் ஏன் போஸ்ட் மார்டம் செய்யவில்லை ?
  ஏன் அவசரமாக இறந்து போனவரின் அப்பா வரும் வரை கூட
  காத்திருக்காமல் எரித்தார்கள் ?
  பத்து நாள் காரியம் செய்யும் வரை கூட காத்திருக்காமல்
  போலீஸ் இன்வெஸ்டிகேஷன் வருகிறது என்று
  வெளிநாட்டுக்கு ஓடிப்போய் ஒளிந்து கொண்டது ஏன் ?
  இந்த கதையை எல்லாம் வேறு எங்கேயாவது போய்
  வைத்துக் கொள் நணபனே.

 11. Arun Annachi சொல்கிறார்:

  நிறைய உண்மை செய்திகளை அறிந்து கொண்டேன் .
  மிக்க நன்றி K.M அய்யா .

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Arun Annachi,

   இதில் நீங்களும் உதவ முடியும்….
   உங்களுக்கு தெரிய வரும் உண்மைகளை
   உங்களுக்கு தெரிந்தவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • Senthil சொல்கிறார்:

    உண்மை / கடவுள் ,/ சிவம் ,/ ஆதி அந்தம் இல்லாத பேரண்டப் பெருவெளி/முக்தி /மோட்சம் எல்லாம் இங்கேயே இருக்கிறது அய்யா.

    ஆனால் , அந்த இரண்டற கலந்த பரமானந்த அனுபவம் நடக்க , நான் என்னும் அகங்கார மனம் விடுவதில்லை. அது வார்ததை களை உட்பத்தி செய்துகொண்டே இருக்கிறது.

    நான் என்னும் அகங்காரம் நீக்கி நீக்கமற நிறைந்திருக்கும் பரவெளியை உணர செய்த சதகுரு பொற்பாதம் சரணடைகிறேன்.

 12. Senthil சொல்கிறார்:

  Please share your whatsapp number, if you like to know life is much much much more than your thoughts

 13. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்பர்களுக்கு,

  சில சாம்பிள்களை மட்டும் வைத்து விட்டு,
  திருவாளர்கள் செந்தில், அருண் அண்ணாச்சி
  ஆகியோரின் மற்ற பின்னூட்டங்களை, வாசக
  நண்பர்களின் நலன் கருதி நீக்கி விட்டேன்.

  எல்லாவற்றையும் படித்தால் –
  பைத்தியமே பிடித்து விடும்.

  இனி பின்னூட்டம் எதுவும் இங்கே போட வேண்டாம்
  என்று இந்த இரண்டு நண்பர்களையும்
  ( திருவாளர்கள் செந்தில், அருண் அண்ணாச்சி )
  கேட்டு கொள்கிறேன்.

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

 14. Senthil சொல்கிறார்:

  Ok

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.