( பகுதி -7 ) ஜக்கி என்றால்….? ஏமாந்தவர்களின் குரு என்று அர்த்தமா…?

jaggi -7-6

jaggi-7-4

நம் நாட்டில் பொதுவாகவே ஆத்திகர்கள் என்றால்
பெரும்பாலும் அப்பாவிகளாகவே இருக்கிறார்கள்.

உண்மைக்கும் பொய்க்கும்,
அசலுக்கும் நகலுக்கும்
மெய்யான ஆன்மிக வழிகாட்டிகளுக்கும்,
போலிச் சாமியார்களுக்கும் –

வித்தியாசம் தெரியாமலே ஏதோ ஒருவித உந்துதலில்
உணர்ச்சி வசப்பட்டு அவர்கள் சொல்வதை எல்லாம்
வேதவாக்காக எடுத்துக் கொள்கிறார்கள்.

அவர்கள் தாங்கள் நம்பும் ஆன்மிகவாதிகள் மீது
எத்தகைய குற்றச்சாட்டு
வெளி வந்தாலும் நம்ப மறுக்கிறார்கள் !

குற்றம் சாட்டுபவர்களை துரோகிகளாக, விரோதிகளாக
( இப்போது சிலர் என்னை பார்ப்பது போல )
கருதுகிறார்கள்….

யோகா கற்றுக்கொடுக்கிறேனென்று சொல்லிக்கொண்டு
ஆசிரியராக வருபவர்கள் எல்லாம் ஆன்மிகவாதிகளாகி
விட முடியுமா ? யோகாவுடன், மெஸ்மெரிசமும்,
ஹிப்னாடிசமும் பயன்படுத்தி தங்களிடம் வருபவர்களை
எல்லாம் இவர்கள் மனோவசியம் செய்து விடுகிறார்கள் !

ஏன் -பிரேமானந்தாவை இன்னும் கூட சாமியாராக
ஏற்றுக்கொள்பவர்களும் இருக்கிறார்களே !

வள்ளலாரையும், விவேகானந்தரையும் தந்த இதே நாடு தான்
இந்த போலிவேடதாரிகளையும் பெற்றிருக்கிறது.

உண்மையையும், போலியையும் வித்தியாசம் கண்டுகொள்ள
மக்கள் தான் பழகிக்கொள்ள வேண்டும்.
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும்
இருந்து கொண்டே தான் இருப்பார்கள்.

கத்தரிக்காய் சொத்தையா என்று பத்து முறை பார்ப்பவர்கள்,
வெண்டைக்காயை முற்றலா என்று முனை உடைத்துப்
பார்ப்பவர்கள் – சாமியார்களை மட்டும் – யாராக இருந்தாலும்
அப்படியே நம்பி ஏற்றுக்கொண்டு விடுகிறார்கள் !

——–

இந்து மதம் மிகப் புராதனமான மதம்.
வேதங்களும்,உபநிஷத்துக்களும்,
ஸ்மிருதிகளும், சாஸ்திரங்களும், புராணங்களும்
நிரம்பியதாக இருக்கிறது. இவை உருவான
காலத்தை இன்னும் யாரும் சரியாக கண்டுணர
முடியவில்லை என்றாலும் குறைந்த பட்சம்
6000 ஆண்டுகளுக்கு முன்னராகவாவது இவை
உருவாக்கப் பட்டிருக்க வேண்டும் என்று சரித்திர
ஆசிரியர்கள் கருதுகின்றனர்.

இவற்றில் நிறைய விஷயங்கள்
புரிந்துக் கொள்ள இயலாததாகவும்,
நம்புவதற்கு இயலாததாகவும்,
கற்பனையை மீறியதாகவும்,
கருதப்படுகின்றன.

சாதாரண மக்களால் இவற்றை புரிந்து கொள்ள
முடியாமல் இருந்ததால், இவற்றை எல்லாம் நன்கு
கற்றறிந்து, தேர்ந்து, தெளிந்து மற்றவர்களுக்கு
எடுத்துச் சொல்பவர்களை மகான்கள்,முனிவர்கள்,
ரிஷிகள் என்று முற்காலத்தில் மக்கள் மதித்தார்கள்.

இந்த மகான்களும், உலகப்பற்றைத் துறந்து,
மிக எளிமையான, சந்நியாச வாழ்வை மேற்கொண்டு
உதாரண புருஷர்களாக வாழ்ந்தார்கள்.
மக்கள் மேன்மை அடைய எல்லா விதங்களிலும்
அவர்கள் வழி காட்டிகளாக இருந்து உதவினார்கள்.

பதஞ்சலி என்கிற முனிவர் மனிதர்களின்
உடலையும், உள்ளத்தையும், ஆன்மாவையும்
பக்குவப் படுத்தும் விஷயங்களை சுருக்கமான
வாக்கியங்களில் உருவாக்கிச் சொன்னார்.

34 சூத்திரங்களில் அமைந்துள்ள இவையே
பதஞசலி யோக சூத்திரம் எனப்படுகிறது.

இந்த யோக சாஸ்திரத்தில் –

உடலை மட்டும் பக்குவப்படுத்த,
வலிமைப்படுத்த வல்லவை –
யோக ஆசனங்கள் ( யோகாசனம் ) –
என்னும் பல்வேறு உடற்பயிற்சி முறைகள்.

உடலையும், உள்ளத்தையும், ஆன்மாவையும்
சேர்த்து பக்குவப்படுத்த வல்லது
அஷ்டாங்க யோகம் என்னும் ராஜயோகம்.

யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம்,
பிரத்தியாஹாரம், தாரணை, தியானம்,
சமாதி என்கிற 8 பகுதிகளைக் கொண்டதால்
இது அஷ்டாங்க யோகம் என அழைக்கப்பட்டது.
(எட்டு அங்கம் – அஷ்டாங்கம் )

கடந்த 40 – 50 ஆண்டுகளாக யோக
ஆசனங்களை மட்டும் கற்று, அவற்றை
மற்றவர்களுக்கு கற்றுத்தருவதை ஒரு
தொழிலாகவே பலர் மேற்கொள்ள ஆரம்பித்தனர்.

யோகாசனம் கற்றுத்தர பணமும் பெற்றுக்கொள்ள
ஆரம்பித்தனர்.இதன் மூலம் ஒரு புதிய
தொழில் துறையே உருவாகி விட்டது.

இந்தியாவிலும், மேற்கத்திய நாடுகளிலும்
இதற்கான மார்க்கெட் மிகப்பெரிய அளவில்
உருவானது.

இந்த நிலை வரை கூட – இதில் தவறேதும் இல்லை.

நமக்கு உபயோகமான,
ஆனால் தெரியாத ஒரு விஷயத்தை
அவர்கள் கற்றுக்கொண்டு நமக்கு சொல்லித் தருகிறார்கள்.
அதற்காக ஊதியம் பெற்றுக் கொள்கிறார்கள்.
இதில் தவறேதும் காண முடியாது.

சாதாரணமாக நாம் வாழ்க்கையில் பல விஷயங்களை
மற்றவர் மூலமாகத் தான் தெரிந்து கொள்ள
வேண்டி இருக்கிறது. அடிப்படைக் கல்வியறிவை
பள்ளிகளில் கற்கிறோம். இவற்றை நமக்கு
கற்றுத்தருபவரை நாம் ஆசிரியர் என்று கூறி
அவருக்கு உரிய மரியாதையையும்,
மதிப்பைபும் தருகிறோம்.

இதற்கு மேலும், இசை, நடனம், ஓவியம்,
சிலம்பம், கராத்தே போன்ற சில குறிப்பிட்ட
விஷயங்களில் தேர்ச்சி பெற விரும்பும்போது
அதற்கேற்ற நபர்களை அணுகி பயிற்சி பெறுகிறோம்.

இவர்களை நாம் பாட்டு வாத்தியார்,
டான்ஸ் மாஸ்டர், கராத்தே மாஸ்டர் என்றெல்லாம்
அழைக்கிறோம்.

இதே நிலையில் தான் இருக்கிறார்கள்
இன்றைய தினத்தில் யோகாசனம் கற்றுக்
கொடுப்பவர்களும். அவர்கள் யோகாசனம் கற்றுக்
கொடுப்பதால் – யோகா மாஸ்டர் – அவ்வளவே !

ஆனால் மற்ற எந்த
ஆசிரியர்களுக்கும் கொடுக்காத
ஒரு அதிகப்படியான
மரியாதையை சிலர் இந்த யோகா மாஸ்டர்களுக்கு
கொடுக்க ஆரம்பித்த விபரீதம் தான் இன்றைய
தினத்தில் இத்தனை போலிச் சாமியார்கள்
உருவாக அடிப்படைக் காரணம் !

சாதாரண யோகா மாஸ்டர்களுக்கும் –

தர்ம சாஸ்திரங்கள் அனைத்தையும் அறிந்து,
தேவைகளைக் குறுக்கிக்கொண்டு,
மிக மிக எளிமையான வாழ்க்கையையும்,
துறவறத்தையும் மேற்கொண்டு,
மக்களின் மேன்மைக்காக உளமாறப் பாடுபடும்
சந்நியாசிகளுக்கும் –

உள்ள மகத்தான வேறுபாடுகளை உணராமல் –

சாதாரண யோகா மாஸ்டர்களை எல்லாம் பெரிய
சாமியார் போல கொண்டாட ஆரம்பித்தார்கள்
நம்மில் சிலர்.

jaggi-7-3

jaggi-7-2

jaggi-7-5

இதில் பெரும் ஆதாயம் கண்ட அவர்களும்
இதையே சுகமாக ஏற்றுக்கொண்டு
எந்த வித உறுத்தல்களும் இன்றி,
தங்களை பெரிய சாமியார்
அளவிற்கு உருவகப்படுத்திக் கொள்ள ஆரம்பித்து
விட்டார்கள்.

வெறும் யோகா மாஸ்டர்களாக இருந்தவர்கள்,
சாமியார்களாகி, பின்னர் – தங்களை
மக்களுக்கும் கடவுளுக்கும் இடையே உள்ள பாலம்
என்று கூற ஆரம்பித்து, பிறகு,
தான் கடவுளின் அவதாரம் எனக்கூறத் துவங்கி,
இப்போது கடைசியாக நான் தான் கடவுள் என்றே
சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

இதில் பாவம் இடையில் அகப்பட்டுக்கொண்டு
தவிப்பவர்கள் ஆன்மிக உரையாளர்கள் தான்.
இந்து மதத் தத்துவங்களை எளிமையான
உரை நடையில், விளக்கமாகவும்,
இலக்கியச் சுவை ததும்பவும் உரையாற்றக்கூடிய
அருமையான பல தமிழ் அறிஞர்கள் கூசிப்போய்
ஒதுங்கி நிற்கும் நிலை இன்று உருவாகியுள்ளது.

நான் இந்த இடுகையில் சொல்லவிருக்கிற செய்திகள்
எந்த விதத்திலும் இந்த தமிழறிஞர்களை
பாதித்து விடக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

நான் எழுதுவது அவர்களைப் பற்றி அல்ல.
இத்தகைய தமிழறிஞர்களின் மீதும்,
உண்மையான துறவிகளின் மீதும் பெரும் மதிப்பும்,
மரியாதையும் எனக்கு என்றும் உண்டு.

ஏற்கெனவே நித்யானந்தா விவகாரம்
உள்ளம் வெறுத்துப்போகும்
அளவிற்கு மிகப்பெரியதொரு
அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி விட்டதால் –

இப்போது நாம் விவாதித்துக் கொண்டிருக்கும் விஷயம்
எல்லாம் பெரிதாக அதிர்ச்சி எதையும் ஏற்படுத்தி விடாது.

சில சமயங்களில் நிஜம் – கற்பனையை விட
ஆச்சரியமாக இருக்கிறது !

ஒரு சின்ன உதாரணத்தைக் கொடுத்து
கோடி காண்பித்து விட்டு, பிறகு மேலும் விவரமாகத்
தொடருகிறேன்.

– 5 நாளில் யோகா கற்றுத்தரும் ஒரு பாடத் திட்டம் !
நபர் ஒருவருக்கு கட்டணம் ரூபாய் ஆயிரத்து ஐந்நூறு !
ஒரு குழுவில் 150 பேர். அப்படியானால் ஒரே ஒரு
இடத்தில், 5 நாள் வகுப்பிற்கு ஆகும் வசூல் எவ்வளவு ?
1500 x 150 = 2,25,000/- ஆம் –
இரண்டு லட்சத்து இருபத்தி ஐயாயிரம் ரூபாய் !!
அதிர்ச்சி அடையாதீர்கள் –
ஒரு ஊரில் ஒரேஒரு இடத்தில் மட்டும்
ஒரு வகுப்பில் மட்டும்
வசூலாகும் தொகை இது.
நாடெங்கும் எவ்வளவு பயிற்சி வகுப்புகள்
நடைபெறுகின்றன. இதில் மாதந்தோரும் எவ்வளவு
வசூல் ஆகும் என்பதை யாரும் யூகித்துக் கொள்ளலாம்.
( இதில் நான் சொல்லும் கட்டணங்கள் எல்லாம்
பழையவை … இப்போது விலைவாசி ஏறிவிட்டது…!!! )

இதில் இன்னும் ஒரு முக்கியமான விஷயம். கட்டணம்
என்று குறிப்பிட்டால் வரி பிரச்னை வரும். எனவே
வசூலிக்கும் பணத்தை நன்கொடை என்றே
கூறுகின்றார்கள். ரசீதிலும் ( ரசீது கொடுக்கிறார்கள் !)
நன்கொடை என்றே குறிப்பிடப்படுகிறது.

நன்கொடை என்றால் மனமுவந்து ஒருவர்
கொடுப்பது. அது எப்படி அத்தனை பேரும் ஒரே
சமயத்தில், ஒரே அளவு தொகையை
நன்கொடையாகக் கொடுப்பார்கள்…?

– என்று அரசாங்கமோ, வரி வசூலுக்குப் பொறுப்பு
வகிப்பவர்களோ கேட்கவே மாட்டார்கள் !

காரணம் ………!!!

————————–

பின் குறிப்பு – இப்படம் நாளையே கடைசி….!!!

அடுத்த 8-வது பகுதியுடன் ஜக்கிஜியின் பெருமைகள்
தொடர் ( இப்போதைக்கு….!!! ) முடிவுக்கு வருகிறது.

jaggi-7-1

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

17 Responses to ( பகுதி -7 ) ஜக்கி என்றால்….? ஏமாந்தவர்களின் குரு என்று அர்த்தமா…?

 1. Senthil சொல்கிறார்:

  Namaskaram Anna

  I really have some experience beyond mind and body by the grace of sadhguru. With that experience and understanding ,it makes me continuous laugh and feel very lightweighted , when read the article.

  Don’t stop it at 8th part.Kindly continue the comedy further Anna.

  Pranam
  Senthil

  • K. Senthil Kumar சொல்கிறார்:

   Dear KM Sir,
   வாழ்க்கையில் பல சோதனைகளை சந்தித்துக்
   கொண்டிருக்கிறவர்கள் – “எதைத் தின்றால் பித்தம் தீரும்”
   என்கிற நிலையில் தான் இருக்கிறார்கள்.
   அத்தகைய மக்களின் பலவீனம் தான் –
   ஜக்கி போன்றவர்கள் துண்டு விரிக்கும் வியாபாரஸ்தலம்.

 2. Senthil சொல்கிறார்:

  Anna

  We see this like this.

  If we go in to a jasmine garden for whatever the reason to pour water or uproot a plant,we can’t escape from the fabulous fragrance of jasmine.

  Same way, your understanding is positive or negative about isha is secondary, somehow you are being connected with isha.

  Let you experience the power of cosmic bliss and all your pleasant desires to be fulfilled more than your expectations .Let this happen by the cosmic cooperations , with out your efforts ,

  Shiva! Shiva! Shiva! Thathasthu!

  Thathasthu

 3. Senthil சொல்கிறார்:

  “Thathasthu” is not from my stupid mind. It is expression from kundalini energy when the desire (“you to experience cosmic support to fulfil your pleasant desires “) is submitted to the energy.

  The “kalabhirava ” the true real present time exists always here,take responsibility you to fulfil your pleasant desies, experience love and joy.

  Then,your mind will change and make you to write about isha and Paramahamsa nithyananda swamiji.

  Shiva ! Thathasthu

 4. K. Senthil Kumar சொல்கிறார்:

  Dear KM Sir,
  ”1990-களில் கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் பஞ்சாயத்து, இக்கரை பொலுவம்பட்டியில் மிகச் சிறிய அளவில் ஜெகதீஷ் என்பவர் ஆசிரமம் தொடங்கினார். பிறகு அவர், சத்குரு ஜக்கி வாசுதேவ் ஆன பிறகு, அவருடைய ஆசிரமத்தை விரிவுபடுத்தத் தொடங்கினார். அடர்ந்த வனப் பகுதியை மொட்டையடித்து, ஆடம்பரமான கட்டடங்களைக் கட்டத் தொடங்கினார். 1994-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை கட்டப்பட்ட பரப்பளவு 37,424.32 சதுர மீட்டர். 2005 முதல் இந்த நிமிடம் வரை படுவேகமாக 55,944.82 சதுர மீட்டரில் கட்டடங்களைக் கட்டி உள்ளனர். ஈஷா தியான மையம் எந்த அனுமதியும் பெறாமல், கட்டடம், விளையாட்டு மைதானம், செயற்கை ஏரி, வாகன நிறுத்துமிடம் என பல வசதிகளை செய்துள்ளது.
  இது தொடர்பாக நான்கு பொது நல வழக்குகள் தொடரப்பட்டும், அரசு ஈஷா மையங்களின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காத்து வருகிறது.
  Published in Savukku by 3 parts.

  • Senthil சொல்கிறார்:

   Dear Senthil Kumar sir,

   Km sir’s posts are from an intension that to do something good to society. Though, matters are fully opposite to my experience, I respect his intension which is to do something help/good to others.

   y our posts from jealousy.

   • K. Senthil Kumar சொல்கிறார்:

    Dear Mr. Senthil,
    This is not Jealousy or my intension to hurt somebody. With out any permission from the concern authority how they build these buildings in the elephant corridor. There are so many complaint against the Isha. Still, no action from the Government side. That means the so called Isha have deep root support from the Government.

 5. Senthil சொல்கிறார்:

  It not matters, you think me good are bad . If your intension is to help others , I help you in all possible ways

  Thathasthu

  • ராமச்சந்திரன் .எஸ். சொல்கிறார்:

   ஜக்கையா ஆசிரமத்தில் சேருபவர்கள் கதி என்ன ஆகும்
   என்பது செந்தில் என்பவரின் பின்னூட்டங்களிலிருந்து
   நன்றாக தெரிகிறது. போதை மண்டையில் ஊறி பித்தம்
   தலைக்கேறி
   கிடக்கிறது. ஒரே உளறல். பைத்தியக்காரத்தனமான பிதற்றல்.
   கே.எம்.சார் இந்த உளறல்களை எல்லாம் ஏன்
   அனுமதிக்கிறீர்கள் ?

 6. 'நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  ஆன்மீகம், தியானம் போன்றவை மனம் சார்ந்தவை. யோகா என்பது உடல் சார்ந்தது. நாம் யோகாவை, ஆன்மீகத்துடன் குழப்பிக்கொள்கிறோம். ஆன்மீக வழியில் செல்பவர்கள், யோகாவைக் கருவியாகப் பயன்படுத்துவதன் காரணம் உடல், ஆன்மீக முன்னேற்றத்திற்கு இன்றியமையாதது. ஆன்மீக வழியோ, தியான மார்க்கமோ எளிதல்ல எளிதல்ல. பத்து புத்தகங்களைப் படித்துவிட்டு, இது விவேகானந்தர் சொன்னார், இது சத்குரு சொன்னார் என்று சொல்லிவிட்டால் நாம் ஆன்மீகப்பாதையில் முன்னேறியிருக்கிறோம் என்பதல்ல. எல்லாவற்றையும் துறந்தவந்தான் துறவி. (சில எக்ஸெப்ஷன்ஸ் உண்டு. விவேகானந்தர் போன்று. அவர் ராஜகுரு என்ற வகையைச் சேர்ந்தவர்). தியான மார்க்கத்தில் முன்னேறுவதற்குப் பல பிறவிகள் எடுக்கும். அது கடையில் வாங்கும் சமாச்சாரம் போன்றதல்ல. காசும், நம் அந்தஸ்தும் அதில் முன்னேறுவதற்கு உதவிகரமாக இருக்க இயலாது. பல மில்லியன் மக்களில் ஓரிருவர்தான் தியான மார்க்கத்தில் முன்னேறி யோகி என்ற நிலையை அடையும் வாய்ப்பை அடைவர். செந்தில் என்பவர் நிஜமாகவே அத்தகைய யோக மார்க்கத்தில் முன்னேறி இருக்கலாம். அவர் ‘ததாஸ்து’ என்றெல்லாம் எழுதியிருப்பதைப் பார்த்து எனக்கு உண்மையாகவே சிரிப்புதான் வருகிறது. ‘ததாஸ்து’ என்பதைப் பொதுவாக மிகப் பெரியவர்கள் ஆசி வார்த்தை கூறிவிட்டு ‘அப்படியே ஆகட்டும்’ என்பதற்காகச் சொல்வது. அவர் அதற்குள், ‘குண்டலினி’ என்றெல்லாம் பெரிய வார்த்தைகள் எழுதியுள்ளார்.

  தியானம் என்று யோகிகள் சொல்வது ஒரு பொருளையே சிந்தித்து, மனதை அலைபாய விடாமல் செய்து, இறையின் அருளைப்பெறுவது. (வெகு சுருக்கமாக). இறையின் அருளைப் பெறுவது என்பது அந்த இறை உணர்வில் தாமும் ஒன்றிப்போவது. ஒரு தடவை அத்தகையவன்(ர்) கோபப்படுவது, 500 பிறவிகளில் தியானம் செய்ததன் பலனை அழித்துவிடும் என்று பெரிய யோகிகள் உரைப்பர். யோக மார்க்கத்தில் எல்லோராலும் செல்ல முடியாது. உட்கார்ந்த நிலையில் (இதுல பத்மாசனம் பெரும்பாலானவர்க்கு முடியாது. அரை பத்மாசனம் ஓகேதான்) முதுகெலும்பு நேராக வைத்து, அரை மணியில் ஆரம்பித்து 1 மணிக்கு மேலாக உட்காரமுடியாதவர்களுக்கும், 1 மணி நேரத்துக்கு மேல் யாருடனும் பேசாமல் மௌனவிரதம் அனுஷ்டிப்பவர்களுக்குமான பாதை இது. (இது குறைந்தபட்சத் தேவை). கோபம், எரிச்சல், அன்பில்லாமை, மற்றவர்களின் தவறுகளைப் பொறுத்துக்கொள்ளாமை (சீடர்களின் தவறை அல்ல), எல்லோரையும் சமமாகப் பாவிக்கும் தன்மையில்லாமை, மற்ற இனத்தின்மீது ஈர்ப்பு (ஆண்/பெண்) இவைகள் உடையவர்கள், தியான மார்க்கத்துக்குத் தகுதி உள்ளவர்கள் அல்லர். தியானத்தைப் பணம் கொடுத்துப் பெற முடியாது. தக்க ஆசான், நமக்குத் தியானம் பழகுவதை ஆரம்பித்துவைத்தாலும், அவரும், எல்லாப் படிகளையும் நமக்குச் சொல்லித்தர பலப் பல ஆண்டுகள் ஆகும். எனக்குத் தெரிந்து, தியானத்தில் (ஒரு வகை) ஏழு படிகள் உண்டு. அதில் முதல் படியிலேயே 10 ஆண்டுகளுக்கு மேல் இருப்பவர்களையும் தெரியும். 5 வருடங்களில் மூன்றாவது படியை அடைந்தவர்களையும் தெரியும். தியானம் பழகுவது சாந்தத்தையும், நமக்கு இறையுணர்வில் முன்னேற்றத்தையும் அளிக்கும். ஒரு இடத்தில் உள்ள அதிர்வை (இறை உணர்வை) அனுபவிப்பதற்கே நமக்குத் தகுதி இருக்கவேண்டும். எல்லோரும் கோவில் செல்கிறோம். எல்லோருக்கும் ஒரே அனுபவம் கிட்டாது. நம் ஆன்மீகத் தகுதியைப் பொறுத்துத்தான் நம் அனுபவமும்.

  ஜக்கி அவர்களின் ஆசிரமத்தில், உப்பில்லாத உணவு, தண்டனையாக எல்லோருக்கும் உணவு பரிமாறுதல், தினமும் உடற்பயிற்சி போன்றவை தண்டனையாகக் கொடுக்கிறார்கள் என்றெல்லாம் புகார் சொல்லுபவர்களைப் பார்த்து நான் பரிதாபப்படுகிறேன். ஆன்மீக வாழ்க்கையின் கடுமை புரியாமல், அதில் நுழைந்தது உங்களின் தவறுதான்.

  பரமாச்சாரியார் பெரிய நிலையை எட்டிய ஆன்மீகவாதி. அவர் சிறு வயதிலிருந்தே கடுமையான நிஷ்டை, பிரம்மசர்யம், எல்லாவிதமான ஆசைகளையும் கடூரமாகத் துறந்த வாழ்க்கை போன்றவற்றைச் செயல்படுத்தியவர். அது சுலபம் கிடையாது. சொல்வது மிக எளிது. ‘நமக்குத் தெரிந்த இந்த 100 வருடங்களில், அவர் போன்று (அல்லது அதற்கு மேலாகவோ) சில 100 பேர்கள்தான் (100க்கும் குறைவு என்று நான் நினைக்கிறேன். ஆனால் அது தவறான அனுமானமாகத்தான் இருக்கும்) இந்தியாவில் இருந்திருப்பார்கள். கோடியில் ஒருவருக்குத்தான் அந்த நிலை கிட்டும். அதற்கு அனேகமாக எல்லாவற்றையும் துறக்கவேண்டும்.

  கா.மை அவர்களின் ‘ஜக்கி சீரியல்’ இடுகைகள், விளக்கை நாடிச் செல்லும் விட்டில் பூச்சிகள்போல், ஒன்றும் தெரியாத பல இளைஞர்கள், சிறுவர்கள் (இருபாலாரும்) வெறும் எக்ஸைட்மென்டில் வாழ்க்கையைத் தொலைக்கிறார்களே என்ற ஆதங்கத்திலும், அவரைப் பொறுத்தவரை ஜக்கி போன்றோர் உண்மைத்தன்மை இல்லாதவர்கள் என்று நம்புவதாலும் இதனை எழுதியுள்ளார். ஜக்கி அவர்களின் பேருரைகளை அவரும் சென்று கேட்டுள்ளதை இயல்பாக எழுதியுள்ளார். அவரைப் பொறுத்தவரையில், ஜக்கி ஆசிரமம் பொய்மையானது.

  என்னைப் பொறுத்தவரையில், காசுக்காக யார் இத்தகைய ஆன்மீக விஷயங்களை விற்பனை செய்தாலும் (mass production) அதில் உண்மைத் தன்மை மிகவும் குறைவு. யோகா (மூச்சுப் பயிற்சி முதல், உடல் பயிற்சிகள் வரை) உடல் சார்ந்தது. தியானம் உள்ளம் சார்ந்தது. கோவிலுக்கு (அவரவர் மதம்)ச் செல்வது நமக்கு ஆன்மீகப் பாதையில் முன்னேற்றம் வரவேண்டும், நமக்கு மேலாக ஒரு சக்தி உள்ளது என்பதைப் புரிந்து இயல்பான, அன்பான வாழ்க்கை வாழவேண்டும் என்பதற்காகத்தான் என்று நான் நம்புகிறேன். “ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தலுக்கு” உதவாத பணம், எளிய மக்களின் துயருக்கு உதவாத பணம், பிறருடைய முன்னேற்றத்துக்கு உதவாத பணம், வேறு எங்கு சென்றாலும் அதன் பயன் மிகவும் குறைவு.

  • Senthil சொல்கிறார்:

   நெல்லை அண்ணா

   கொஞ்சம் சின்ன கமெண்டை போடுங்கண்ணா ! . இவ்வளவு படிச்சு முடிக்கறதுக்குள்ள மூச்சு வாங்குது.

   நான் மெய் மறந்து ஆபீஸ்ல படிக்கறது பார்த்துட்டு , மேனேஜர் வேற திட்டினான் .

   அதனால , அவனையும் கூப்டு படிக்க சொன்னேன். எனக்காச்சும் மூச்சு வாங்குச்சு , அவன் மூச்சு உட மறந்து மயக்கமாயிட்டான் .

   அப்புறம் என்ன ? எனக்கு ஒரு சோடா தெண்ட செலவு.

 7. 'நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  ‘நான் கடைசிப் பகுதிவரை காத்திருக்காமல் என்னுடைய எண்ணத்தை எழுதியுள்ளேன்.

  “குற்றம் சாட்டுபவர்களை துரோகிகளாக, விரோதிகளாக ( இப்போது சிலர் என்னை பார்ப்பது போல ) கருதுகிறார்கள்….” – இது எல்லாவிதக் கருத்துக்களுக்கும் பொருந்தும். பலர், ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து, அவர்களின் அனுபவம், தகுதி, படிப்பு போன்றவற்றின்மூலம் இருக்கும் என்பதை உணர மறுப்பதால் வரும் வினைதான் இது. நீங்கள் திமுகவை ஆதரித்து எழுதினால், மற்றக் கட்சியினர் உங்களை ‘திமுக ஜால்ரா’ என்று எழுதுவதும், அதிமுக குறைகளைச் சொல்லாமல் சென்றால், ‘அதிமுக ஜால்ரா’ என்று எழுதுவதும் இத்தகையதுதான். உங்கள் இடுகையை உங்களின் கருத்து என்ற அளவிலேதான் நான் புரிந்துகொள்கிறேன். அது, நான் இதுவரை அறியாத கோணத்தையோ செய்தியையோ சொல்லுமானால், அதையும் என் கருத்தில் கொள்வதுதான் சரி.

  ஜக்கி அவர்களின் படங்களும், “வாழ்க்கையை அனுபவி. அன்பு செலுத்து. பிறர்க்கு உதவியாக இரு” என்ற செய்திகளைச் சொல்வதாகத்தான் நான் புரிந்துகொள்கிறேன்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நெல்லைத்தமிழன்,

   // உங்கள் இடுகையை உங்களின் கருத்து என்ற
   அளவிலேதான் நான் புரிந்துகொள்கிறேன்.
   அது, நான் இதுவரை அறியாத கோணத்தையோ
   செய்தியையோ சொல்லுமானால், அதையும்
   என் கருத்தில் கொள்வதுதான் சரி.//

   நான் வேண்டுவதும் அவ்வளவே தான்.

   // ஜக்கி அவர்களின் படங்களும், “வாழ்க்கையை
   அனுபவி. அன்பு செலுத்து. பிறர்க்கு உதவியாக இரு”
   என்ற செய்திகளைச் சொல்வதாகத்தான்
   நான் புரிந்துகொள்கிறேன்.//

   இது உங்கள் கருத்து என்று நான் எடுத்துக்
   கொள்கிறேன்.

   என்னைப் பொருத்த வரையில் –

   ஒரு மிகச்சிறந்த நடிகர் …
   நல்ல costume designer …
   மக்களின் அறியாமையை பயன்படுத்தி
   காசு சம்பாதிக்கிறார் –
   ஊரை ஏய்த்து பிழைப்பை நடத்துகிறார்
   பிறர் பணத்தில் உல்லாசமாக வாழ்கிறார்,
   அரசியல்வாதிகளை கைக்குள் போட்டுக்கொண்டு,
   அத்தனை சட்ட விதிகளையும் மீறுகிறார்…..

   -இந்த வகைகளில் யோசிக்கிறேன்.

   உங்கள் கருத்தை நீங்கள் சொல்லி விட்டீர்கள்.
   என் கருத்தை நான் சொல்லி விட்டேன்.
   வாசக நண்பர்கள் –
   தங்கள் சொந்த முடிவிற்கு வருவார்கள்…

   அது தான் இந்த “விமரிசனம்” தளத்தின்
   தனிச்சிறப்பு.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 8. maha சொல்கிறார்:

  நான் செந்தில் தான்.என்னுடைய போஸ்ட்/மெயில் id ஐ பிளாக் செய்து விட்டார்கள்.அதனால் என் மனைவி மெயில் id ல் இருந்து அனுப்புகிறேன்.

  மற்றவர்கள் கருத்துக்களை ஏற்று கொள்ள தைரியம் இல்லாத நீங்க , எதுக்கு மற்றவர்களை பற்றி , அதுவும் அவதூறு கருத்து சொல்கிறீர்கள் ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செந்தில் அவர்களே,

   நீங்கள் செய்தது யோக்கியமான காரியமா…?
   எவ்வளவு கிண்டல்கள் – நக்கல்கள்..
   பொய்கள் – ஏமாற்றுகள் உங்களது பின்னூட்டங்களில்…?

   இருந்தும் பல பின்னூட்டங்களை அனுமதித்திருந்தேன்.
   எல்லை மீறிப் போனதால் நிறுத்தினேன்.

   நான் எழுதுவது
   பொய் என்றாலோ –
   தவறு என்றாலோ –
   யார் வேண்டுமானாலும் தகுந்த ஆதாரத்துடன்
   மறுத்து எழுதலாம் – நான் இங்கேயே அதையும்
   பிரசுரம் செய்யத் தயாராக இருக்கிறேன் என்று
   எழுதி இருந்தேனே..?

   அதை விட்டு விட்டு பொய்ப்பெயரில்
   ஏன் உருப்படாத கேலி, கிண்டல்களில் ஈடுபட்டீர்கள்..?

   செந்தில் என்கிற பெயரில் நீங்கள் எழுதிய
   பல அயோக்கியத்தனமான இடுகைகளை
   சாம்பிளுக்காக இங்கேயே இன்னும் விட்டு வைத்திருக்கிறேன்.
   மறந்து போயிருந்தால் மீண்டும் ஒரு முறை
   பார்த்துக் கொள்ளுங்கள் – என்னவெல்லாம்
   எழுதி இருக்கிறீர்கள் என்று.

   உங்கள் ஜக்கி குரு
   இதைத்தான் உங்களுக்கு சொல்லிக் கொடுத்தாரா..?

   நான் தான் துவக்கத்திலேயே சொல்லி விட்டேனே –
   உங்களை எல்லாம் யாராலும் மாற்ற முடியாது என்று…

   இந்த இடுகைத்தொடர்
   ஜக்கிஜியின் மட(!)வாசிகளுக்காக இல்லை.
   புதிதாக வேறு யாரும் அங்கே சென்று விடாதீர்கள் –
   புதைகுழி காத்திருக்கிறது என்று மற்றவர்களை
   எச்சரிக்கை செய்வதற்காகத்தான் இந்த இடுகைகள்.

   நீங்கள் எப்படிப் போனால் எனக்கென்ன….?

   என் அக்கரை இன்னும் உங்கள் வலையில்
   சிக்காத அப்பாவிகள் மீது மட்டும் தான்..

   -காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.