(பகுதி – 8 ) ஜக்கி என்றால்….? நாம் ஏன் கவலைப்படுகிறோம்….?

jaggi-8-2

images (2)

jaggi-8-7

இந்த நபர் மீதோ, இவர் நடத்தும் நிறுவனத்தின்
மீதோ தனிப்பட்ட முறையில் எனக்கு
எந்த விரோதமுமில்லை.
நான் எந்தக் கட்சியையோ, அமைப்பையோ,
சார்ந்தவனும் இல்லை.

இந்த வலைத்தளைத்தை நான் துவக்கியதே –
என் மனசாட்சிக்கு சரி என்று தோன்றுவதை
எல்லாம் வெளிப்படையாக கூற ஒரு அமைப்பு
(forum) தேவை என்பதால் தான்.

போலி என்றும் மோசடி என்றும், தவறு என்றும்
எனக்குப் புரிவதை வெளிப்படுத்த
வேண்டியது என் கடமை என்று நான் நினைக்கிறேன்.
அதைத்தான் செய்து கொண்டும் இருக்கிறேன்.

இந்த நபரின் தீவிரமான பக்தர்களோ,
ஆதரவாளர்களோ –
இந்தக் கட்டுரையின் மூலம் தங்கள்
நிலையிலிருந்து நிச்சயம் மாறப்போவதில்லை.
அதையும் நான் உணர்கிறேன்.

ஆனால் இது என்னவென்று அறிய வேண்டும்
என்கிற ஒரு ஆர்வத்தினால் மட்டும் உள்ளே
சென்றவர்கள் – உண்மை
அறிந்தால் ஒருவேளை வெளி வரக்கூடும்.

ஆனால் – புதிதாக யாராவது ஒரே ஒருவராவது
ஏமாறுவதை இந்த இடுகையால் தடுக்க முடிந்தால் கூட –
அதுவே எனக்கு மகிழ்வு தரப்போதுமானது.

—————————————————————–

இவரை அறிய வேண்டும் என்கிற ஆர்வத்தில்
பல ஆண்டுகளாக இவரை
நெருங்கி கவனித்த ஆர்வலர்கள் சிலர் கூறிய
கருத்துக்கள் கீழே –
————
“இருபது வருடங்களுக்கு முன் முதன் முதலில்
அவர் எனக்கு அறிமுகமானது சஹஜஸ்திதி யோகா
என்னும் யோகாசனத்தை கற்றுக்கொடுக்கும்
மாஸ்டராக. பங்களூர் ரெஸ்டாரண்ட் ஒன்றில்
கோழி இறைச்சி சாப்பிட்டுக்கொண்டிருந்த
அதே ஜக்கி தான் இவர் என்பதை நினைத்துப்
பார்க்கவே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. “

———–

“தன் மனைவி விஜியின் கொலை அல்லது
தற்கொலைக்கு காரணமாக இருந்தவர் என்று
10 -12 வருடங்களுக்கு முன் இவர் மீது
போடப்பட்டு இருந்த வழக்கு எப்படி
முடிக்கப்பட்டது என்றே வெளியில்
தெரியவில்லையே “

———-

“இவர் நடத்தும் நிகழ்ச்சிகளில்,தப்பித்தவறி யாராவது
கேள்வி கேட்டு விட்டால், கேள்வி கேட்டவரை அதே
நிகழ்ச்சியிலேயே அவமானப்படுத்தாமல் விடமாட்டார்.
மூர்க்கமான (arrogance), குதர்க்கமான
பதில்கள் தான் வரும்.ஏன் தான் கேட்டோமோ என்று
கேட்டவர் நொந்துக்கொள்ளவும், அடுத்தவர் யாரும்
கேள்வி கேட்கத் துணியாமல் இருக்கவும் தான்
இத்தகைய பதில்கள் என்பது எனக்கு புரிந்தது.”

———–

“கலைஞர் தமிழக முதல்வராக இருந்தபோது,
அவருக்கும் – அவரது மகள் கனிமொழிக்கும் இவர் மிக

நெருக்கமானவர் என்பது அநேகருக்குத் தெரியாது.
ஆனால் இவரது இத்தகைய பிரம்மாண்ட வளர்ச்சிக்கு,
அவர்களது நட்பு மட்டும் காரணமில்லை.”

————

“ஆரம்பத்தில், இவர் மிகப்பெரிய பகுத்தறிவாளர்
போலவே பேசுவார்.அறிவுக்கு ஒவ்வாத எந்த
விஷயங்களையும் தன்னால் ஏற்க முடியாதென்றே
கூறுவார். பழகப்பழக, சீடர்களை / பக்தர்களை,
தான் கூறுவதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு
தயார் செய்து விட்டு – பிறகு பிள்ளையார், சிவன்,
பார்வதி, விஷ்ணு என்று புராணங்களை அவிழ்த்து
விடுவார். ஒரு கட்டத்தில் தானும் சிவனும்
வேறு வேறு அல்ல என்று அவர் கூறியதைக்கேட்டு
பிரமித்துப் போய் விட்டேன்.”

————–

“வன விலங்குகள் குறித்த ஆராய்ச்சியை மேற்கொள்ள
விரும்பிய ஒரு அமைப்புக்கு சுற்றுப்புற சூழல்
பாதிக்கப்படும் என்று காரணம் கூறி சிறிய அளவிலான
இடம் கூடத்தர மறுத்த அரசாங்கம் –
ஆயிரக்கணக்கான பசுமரங்களை வெட்டிச்சாய்த்து
நூற்றுக்கணக்கான ஏக்கரில் ஹால்களும், குடியிருப்பு
பகுதிகளும், விருந்தினர் விடுதிகளுமாக
கான்க்ரீட் காடுகளாக இந்த ஆசிரமம் அமைய
வெள்ளியங்கிரி மலைக்காட்டில் அனுமதி கொடுத்தது
எப்படி என்பது ஆச்சரியமாக இருக்கிறது.”

அப்போதைய முதல்வர் கருணாநிதியுடன்
இவருக்கு இருந்த நெருக்கம் காரணமா…?

—————-

“ஆசிரமத்திற்கு போகும் வழியிலும், உள்ளேயும்
ஆயிரக்கணக்கான மின் விளக்குகளும்,
எக்கச்சக்கமான டெசிபல் ஒலிகளுடன் ஒலிபெருக்கிகளை
அமைத்து நிகழ்த்தப்படும் நிகழ்ச்சிகளும் சூழ்நிலையை
மாசுபடுத்துவதும் பசுமை அமைப்புகளுக்கு
தெரியவில்லையா ?”

“வருடந்தோரும் சிவராத்திரி அன்று இங்கு நடக்கும்
நிகழ்ச்சிகளுக்கு ஆயிரக்கணக்கில் வாகனங்கள் வருவதும்,
வனத்தை மாசுபடுத்தும் வகையில் அவை பெட்ரோல்,
டீசல் புகையை வெளியிடுவதும் எப்படி பொறுத்துக்
கொள்ளப்படுகிறது ?”

“லட்சக்கணக்கில் மரக்கன்றுகள் நடுவதாக போலியாக
மிகைப்படுத்தப்பட்ட விளம்பரங்களைச் செய்வதும்,
வெள்ளியங்கிரி மலையை சுத்தப்படுத்துவதாக வரும்
பக்தர்களுக்கு குப்பை பை கொடுப்பதும் எந்த அளவிற்கு
இவர் செயலை நியாயப்படுத்தும் ?”

———–

ஆன்மிகம், கடவுள் நம்பிக்கை என்கிற மக்களின்
நம்பிக்கையை மிகப்பெரிய பலவீனமாக மாற்றி
பணம் பண்ணும் அற்பப் பதர்கள் இவர்கள்.

இவர்களை விட, வெளிப்படையாக சாராயம்,
விபச்சாரம், சூதாட்டம் என்று பணம் சம்பாதிப்பவர்கள்
எவ்வளவோ மேல்.
——————————————–

இந்தத் தொடரை ஒட்டி சில கேள்விகளை
எழுப்ப விரும்புகிறேன். இதற்கான பதில்களை
என்னால் இப்போதைக்கு கொடுக்க முடியாவிட்டாலும்,
இந்த கேள்விகளே இதைப் படிப்பவர்களிடம் தேவையான
எண்ண ஓட்டங்களை உருவாக்கும் என்று
நம்புகிறேன்.

1) இது அவர்களின் வலைத்தளத்திலேயே
உள்ள அறிவிப்பு –

Isha Foundation is registered as a
Charitable Trust in India.
Donations to Isha Foundation are
exempt from Income Tax under
Section 80G of the Income Tax Act.

இந்தப் பிரிவின் கீழ் இந்த நிறுவனம் இதுவரை
பெற்றுள்ள மொத்த தொகை
எவ்வளவு கோடி இருக்கும் ?

அவர்களின் குறிக்கோள்களாக அவர்களது
வலைத்தளத்தில் குறிக்கப்பட்டுள்ளவை –

2) human upliftment to more than
2,500 destitute villages in
rural southern India.

ஆதரவற்ற, கவனிப்பார் இன்றி கிடக்கும்
2500 கிராமங்களை ( கவனிக்கவும் 2500
கிராமங்களை ) தத்தெடுத்து வளப்படுத்தவும்,

3) aiming to plant 114 million
trees, restoring
33% green cover in Tamil Nadu,

அதாவது, 11 கோடியே, 40 லட்சம் மரங்களை நட்டு
தமிழ் நாட்டின் மூன்றில் ஒரு பகுதிய பசுமையாக
ஆக்கவும்,

4) 206 new village schools in
rural southern India

தென்னிந்தியாவில் 206 புதிய கிராமப்புற
பள்ளிக்கூடங்களை நிறுவவும் –

5) ஆக தனது வலைத்தளத்திலேயே கூறியுள்ள
மேற்கூறிய 2,3,4 ஆகிய மூன்று லட்சியங்களுக்காக
மட்டும் இந்த ஈஷா நிறுவனம் உள் நாட்டிலும்,
வெளிநாடுகளிலும் கடந்த 15 வருடங்களாக
பெற்றுள்ள மொத்த நன்கொடை எவ்வளவு ?
அவற்றில் இதுவரை இந்த காரணங்களுக்காக
செலவழிக்கப்பட்ட தொகை எவ்வளவு ?
மீதி இருப்பது எவ்வளவு ?

6) மேற்கூறிய லட்சியங்களில் இதுவரை
அடைந்திருக்கும் முன்னேற்றம் எவ்வளவு ?
எவ்வளவு பணிகள் பூர்த்தியாகி இருக்கின்றன ?
இன்னும் செய்ய வேண்டியவை எவ்வளவு ?

7) இந்த நிறுவனத்தின் சொத்துக்கள், பணம்
அனைத்தையும் நிர்வகிப்பது யார் ?
“சற்குரு” எந்த அளவிற்கு நிதி நிர்வாகத்தில்
பொறுப்பு ஏற்கிறார் ?
இதன் பொறுப்பில் உள்ள மற்ற நிர்வாகிகள்
(டிரஸ்டு டைரெக்டர்கள்) யார் யார் ?

8) இவரது மகளோ, மருமகனோ அல்லது
வேறு எந்த உறவினர்களோ இந்த ட்ரஸ்டில்
அங்கம் வகிக்கிறார்களா..? எத்தகைய பொறுப்பில்..?

9) கடந்த 5 ஆண்டுகளாக, உள்நாட்டிலும்,
வெளிநாடுகளிலுமாக சராசரியாக
வருடத்திற்கு 250 விமானப்பயணங்களை
“சற்குரு”மேற்கொண்டிருக்கிறார் என்பது
சரியான தகவலா ?

10) கடந்த 3 ஜென்மங்களின் நினைவு தனக்கு
இருப்பதாகக் கூறும் இவர் அவற்றைப் பற்றிய
விவரங்கள் எதையாவது ஆதாரத்துடன் –
நம்பும் விதமாகக் கூற முடியுமா ?

11) இவர் கொடுத்துள்ள ஆயிரக்கணக்கான
photo pose களை – இந்த இடுகைத்தொடரில்
கண்டிருக்கலாம்….

இவ்வாறு விதம் விதமாக கவர்ச்சிகரமாகக்
காட்சி அளிக்க, கவர்ச்சிகரமான
உடைகளைத் தேர்ந்தெடுக்கவும், தைக்க
ஏற்பாடு செய்யவும், அவற்றை இவர் செல்லும்
நாடுகளுக்கு எல்லாம் உடன் எடுத்துச்செல்லவும்
இவருக்கு எவ்வளவு நேரமும், பணமும்
செலவழியும் ?

இதற்கான செலவுகள் எல்லாம் எதிலிருந்து
செய்யப்படுகின்றன ? ஈஷாவின் லட்சியங்களாக
மேலே பிரகடனப்படுத்தப்பட்டுள்ளவைகளை
நிறைவேற்றும் பொருட்டு பெறப்படும் –

இந்திய அரசால் வருமான வரியிலிருந்து
விலக்கு அளிக்கப்பட்ட, பல வாலண்டியர்களும்
கொடுத்த நன்கொடைகளிலிருந்தா ?

இனி –

பிரமிக்க வைக்கும் பணவசதிகளும்,
அளவு கடந்த அரசியல் செல்வாக்கும்,
பிரம்மாண்டமான கட்டமைப்பும்,
லட்சக்கணக்கான சீடர்களையும்
கொண்டுள்ள இந்த நபரை -நம்மால்
சுட்டு விரலளவு கூட அசைக்கக்கூட முடியாது.

நமது எழுத்துக்கள் எந்த விதத்திலும்
அவரை பாதிக்காது என்பது நிதரிசனமாக
எனக்குத் தெரிந்தாலும் –

இந்த இடுகைத்தொடருக்கான காரணம் –
சொல்லுவதைச் சொல்லி வைப்போமே !
இன்றில்லா விட்டாலும் நாளையாவது
நிலைமை மாறலாம் அல்லவா ?
– என்கிற நம்பிக்கையில் தான்.

சிலரை சில நாள் ஏமாற்றலாம்.
பலரை பல நாட்கள் ஏமாற்றலாம். ஆனால் –
எல்லாரையும், எப்போதும் ஏமாற்றி விட முடியாது
என்பது உண்மை தானே ?

jaggi8-11

jaggi-8-10

jaggi-8-3

jaggi-8-4

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

18 Responses to (பகுதி – 8 ) ஜக்கி என்றால்….? நாம் ஏன் கவலைப்படுகிறோம்….?

 1. R.Gopalakrishnan சொல்கிறார்:

  KM, why dont you stop these nonsense episodes with this. It is very boring. There is a lot of
  other useful topics. I am not a follower of this man.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப கோபாலகிருஷ்ணன்,

   இருந்தாலும், இந்த வயதில்
   இவ்வளவு பதட்டம் உங்களுக்கு ஆகாது… 🙂 🙂

   உங்களுக்கு சாமியாரின் ரகசியம் எல்லாம்
   ஏற்கெனவே தெரிந்திருக்கிறது….
   எனவே, இந்த கட்டுரை ‘ போர் ‘ அடிக்கிறது.

   இதைப்பற்றி எல்லாம் இப்போது தான்
   முதல் தடவையாக தெரிந்து கொள்பவர்கள்
   எவ்வளவு பேர் இருக்கிறார்கள் தெரியுமா…?

   என் Dash Board- ல் பார்க்கும்போது
   எவ்வளவு பேர் இதை ஆர்வத்துடன் படிக்கிறார்கள்
   என்பதை தெரிந்து கொள்ள முடிகிறதே…

   Anyway – கவலை வேண்டாம்.
   இன்றோடு இப்படம் கடைசி என்பதால்
   நீங்கள் டென்ஷன் அடையாமல் இருக்கும்படி
   நண்பர் என்கிற உரிமையோடு
   கேட்டுக் கொள்கிறென்…. 🙂 🙂

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 2. ராமச்சந்திரன் .எஸ். சொல்கிறார்:

  R.Gopalakrishnan – இது இன்றோடு கடைசி என்று நேற்றே
  கே.எம். சொல்லி விட்டாரே.பார்க்கவில்லையா சார் ?
  இது உங்களுக்கு நான்சென்சாக இருக்கலாம். ஆனால்,
  பலருக்கு மிகவும் உபயோகமான விஷயம்.

  கே.எம்.சார் – இன்று ஒரு செய்தி பார்த்தேன். ஈஷா மையத்திலிருந்து
  அவர்கள் ஆசிரமத்தைப்பற்றி தவறாக பிரச்சாரம்
  பண்ணுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
  போலீசில் புகார் கொடுத்திருக்கிறார்களாம். உங்கள் மீது
  எதாவது வழக்கு போடுவார்களா ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   ராமச்சந்திரன்,

   கவலையே படாதீர்கள்….சட்டப்படி
   நான் “அவதூறு பிரச்சாரம் ” category -யில்
   வர மாட்டேன்.

   ஆசிரமத்துக்காரர்கள் வேண்டுமானால்
   என் மீது, நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம்.
   (private complaint …)
   அப்படி ஒரு நிலை உருவாவதை நான்
   மிகவும் ஆவலுடன் வரவேற்பேன்.

   இந்த தொடர்கதையில் இன்னமும் அவிழாத
   பல முடிச்சுக்கள் இருக்கின்றன.
   அவர்கள் நீதிமன்றம் சென்றால் –
   சட்டத்தின் உதவியுடனேயே
   நான் இன்னும் வெளியுலகுக்கு தெரிய வராத
   பல விஷயங்களை வெளிக்கொண்டு வர முடியும்.

   வழக்கில் சம்பந்தப்பட்டவர்களே,
   வக்கீல் துணையின்றி வாதாடலாம் என்று
   இரண்டு நாட்கள் முன்னர் சென்னை உயர்நீதிமன்றமே
   விளக்கம் தெரிவித்திருக்கிறது.

   எனவே, ஆசிரமத்துக்காரர்கள் நீதிமன்றம்
   செல்வதை ஆவலுடன் வரவேற்போம்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 3. selvarajan சொல்கிறார்:

  2006 – ல் — // பசுமைக் கரங்கள் திட்டம்: கருணாநிதி தொடங்கினார் //
  Read more at: http://tamil.oneindia.com/news/2006/10/16/cm.html//

  // நேற்று காலை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டு முன்பு தொடக்க விழா நடந்தது. தனது வீட்டின்முன்பு இரண்டு மரக் கன்றுகளை கருணாநிதி நட்டு வைத்தார். முதல்வரின் மனைவி தயாளு அம்மாளும் இதில்கலந்து கொண்டு, மரக் கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, ஈஷா அறக்கட்டளை தலைவர் ஜக்கி வாசுதேவ்,தலைமைச் செயலாளர் திரிபாதி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்…. // —- ஜக்கிகலைஞர் அவர்களின் வீட்டு வாசலுக்கே சென்று — அன்றைய முதல்வர் கையால் கன்றுகளை நட சொல்லுகிற அளவுக்கு — இருவரின் இணக்கம் இருந்துள்ளது — வெள்ளியங்கிரி — காடு …. ?

  2007 — ல் …. // மதத்தை வளர்க்காமல் மரங்களை வளர்ப்போம்: கருணாநிதி //
  Read more at: http://tamil.oneindia.com/news/2007/09/24/let-us-grow-trees-not-religion-karunanidhi.html

  // இதில் முதல்வர் கருணாநிதி, திமுக எம்.பி. கனிமொழி, முன்னாள் சிபிஐ இயக்குநர் கார்த்திகேயன், ஈஷா மைய தலைவர் ஜக்கி வாசுதேவ், இசைக் கலைஞர் சுதா ரகுநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  நிகழ்ச்சியில் கருணாநிதி பேசுகையில், நான் துறவிகளிடம் கொண்டுள்ள பாசம், பற்று எத்தகையது என்பதையும், எப்படிப்பட்ட துறுவிகளிடத்தில் பற்றும் பாசமும் கொண்டிருப்பேன் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். உதாரணமாக சொல்ல வேண்டுமானால், நான் இந்து மதத்திலே பெரும் துறவியாக கருதப்படுகிற, மறைந்த குன்றக்குடி அடிகளாரிடம் எனக்கு மிகுந்த அன்பு உண்டு. காரணம் அவரிடத்திலே குடிகொண்டிருந்த தமிழ் மீது, இப்போது இளைய தம்பிரான், இளைய மடாதிபதி குன்றகக்குடி பொன்னம்பல அடிகளாரிடமும் அதே அன்பு தொடர்கிறது. காரணம் அவர்கள் தமிழ் வளர்ப்பதால்.

  நம்முடைய சத்குரு அவர்களிடம் அன்பு பெருக காரணம், அவர்கள் தமிழ் வளர்க்கிறார்கள், இவர்கள் மனிதர்களுக்குத் தேவையான மரம் வளர்க்கிறார்கள் என்பதால்தான். மதத்தை வளர்க்காமல், மரத்தை வளர்ப்பவர்களைத்தான் நான் பெரிதும் நம்புகிறேன் //….. என்னே … ஒரு நம்பிக்கை –பரிவு — பாசம் …. ?

  இதில் நம்பிக்கையுள்ளவர்களுக்கும் — ஊடகங்களுக்கும் இவரை போன்றவர்கள் பிடிபடாதவரை — ” சாமியார்கள் ” — பிடிபட்டவுடன் ” போலி சாமியார்கள் ” இது தான் நிலைமை — திரு .கா. மை . அவர்கள் ஒரு சமூக நலன் கருதி சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டார் …. இனி …. ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   இடுகைத் தொடரை முடிக்கின்ற தருணத்தில் –

   இந்த மாதிரி ஒரு வலுவான, ஆதாரபூர்வமான
   செய்திக்குறிப்பு கிடைத்தால் இடுகைக்கு இன்னும்
   வலு சேர்க்குமே என்று நான் நினைத்தும்
   என்னால் செய்ய முடியாததை –
   மிகச்சரியான நேரத்தில், மிகச்சரியாக
   செய்து விட்டீர்கள்.

   உங்கள் ஆர்வத்திற்கும், உழைப்பிற்கும்
   என் உளமார்ந்த பாராட்டுகளும், நன்றியும்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   ” ஈஷா கிராமோத்சவம் அமைப்பின் சார்பில்
   சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில்
   இரண்டரை கோடி மரக் கன்றுகளை நடும் விழா ”

   Read more at: http://tamil.oneindia.com/news/2007/09/24/let-us-grow-trees-not-religion-karunanidhi.html

   வெறும் 2500 மரங்களையாவது காட்டினால் தேவலை…!!!

   வாய்ச்சொல்லில் வீரரடி ….!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 4. selvarajan சொல்கிறார்:

  அய்யா …. ! இப்போது தான் ஜக்கியைப் பற்றி எழுதி முடித்தீர்கள் — ஒரு வாரத்தில் ” ராஜ யோகா ” என்றும் ” ஹட யோகா ” என்றும் ஏமாற்றும் இவரைப் போன்றவர்களும் — நம்பிப் போய் வளையில் விழுகிறவர்களும் முக்கியமாக ஒன்றை தெரிந்துக் கொள்ளவேண்டும் — அது

  இவற்றின் தீமைகளை சித்தர்கள் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே தங்கள் நூல்களில் பதிவு செய்துள்ளனர்.

  // பாரப்பா தன்மயத்தை அறியாமற்றான்
  பக்தியுடன் அடயோகம் செய்வான் பாவி
  வீரப்பா மூச்சடக்கி செவி வாய் மூடி
  வேகமுடன் பூரிக்கில் மேனி தன்னில்
  சாரப்பா மூலமதில் சொருகிக் கொண்டு
  தலைவலித்து காதடைத்து முகமும் கோணி
  நேரப்பா கண் தெறித்து மதி கலங்கும்
  நேர்மை கெட்ட அடயோகம் தள்ளு தள்ளே // என்று ஒரு பாடலில் அகத்தியர் கூறுகிறார் … அகத்தியர் வாத சௌமியம் – 1200

  இதன் அர்த்தம் : ” வேகத்துடன் மூச்சை இழுத்து [பூரித்து] கண்,வாய் இவைகளை மூடி மூச்சை கும்பகம் செய்து அடக்கினால் தலைவலித்து, காதடைத்து, முகம் கோணி, கண் தெறித்து, மதி என்னும் அறிவு கலங்கி புத்தி பேதலித்து விடும்.ஆதலால் செய்வதற்கு புறம்பான ” நேர்மை கெட்ட ” ஹடயோகத்தை செய்ய வேண்டாம் என அகத்தியர் சித்தர் வலியுறுத்துகின்றார்…… சித்தர்களை விட போதை மருந்தை கொடுத்து — புத்தியை பேதலிக்க வைத்து — ஒரே எண்ண சுழற்சியில் சுற்றவைக்கும் — ஜக்கி தான் தேவை என்பவர்கள் போகட்டும் — ” ஏமாற்றாதே – ஏமாற்றாதே … ஏமாறாதே — ஏமாறாதே ” என்று மட்டும் சொல்லி வைப்போம்

  அடுத்து ஒரு செய்தி :— // இலங்கையில் நடந்தது இனப்படுகொலையே அல்ல… சொல்வது எழுத்தாளர் ஜெயமோகன்! //
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/no-genocide-sri-lanka-says-jeyamohan-259746.html

  என்னதான் ஆச்சு … இந்த ஜெயமோகனுக்கு …. ?
  — //இந்தியாவில் நக்சலைட் இயக்கங்களைச் சேர்ந்தவர்களை இந்திய அரசு கொன்றொழித்தது. ஆயிரக்கணக்கான இளைஞர்களைக் கொன்றுதானே இந்தியாவில் நக்சலைட் போராட்டத்தை ஒழித்தார்கள். அதை எந்த இனப்படுகொலை என்று சொல்வது? // … என்று கேட்கும் இவரை எதில் சேர்ப்பது … ?

 5. gopalasamy சொல்கிறார்:

  Very useful article . It appears a group of people are looting money with political support.

 6. Thyaga சொல்கிறார்:

  Please read this 2011 posting :
  https://ayogesh.wordpress.com/2011/05/13/isha-yoga-just-another-scam/
  regards,
  THYAGA

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   நண்பர் தியாகா கொடுத்துள்ள வெப்சைட் நிறைய தகவல்களை
   தருகிறது. ஆர்வமும், நேரமும் இருப்பவர்கள் நிதானமாக
   படிக்க அங்கே நிறைய விஷயங்கள் இருக்கிறது.

   அதன் சுருக்கத்தை அதிலேயே ஒரு நண்பர் தந்திருக்கிறார் .
   சத்குருவை பற்றியும், ஈஷாவை பற்றியும்
   அனைவரும் அறிந்து “ஞானம்” பெற அந்த தகவல் கீழே அப்படியே –

   here is a very length discussion on Isha and Jaggi,
   http://guruphiliac.lefora.com/2009/03/17/sadhguru-and-the-isha-foundation/

   the user Velliangiri of that forum has summed it up very nicely,

   Was Jaggi accused of killing his wife Viji by her parents? Yes
   Was there another women involved in this matter? Yes
   Did this women divorce and leave her family? Yes
   Was she the closest disciple of Jaggi in a previous life time? Yes
   Is she a Brahmachari/Sanyasi now? No
   Is her life opulent in the ashram just like Jaggi’s? Yes
   Did Jaggi initiate his young daughter into Brahmacharya? No
   Is he initiating other young girls/boys into Brahmacharya? Yes
   Did his daughter ever do volunteering? No
   Did she ever go through long term/permanent ashram life in her teens like Samskrithi kids? No
   Is there any objective proof/witnesses of Jaggi solidifying mercury? No
   Is there an objective proof that he learned and practiced yoga from Malladihalli Swami? No
   Is there an objective proof that he was student of Rishi Prabhakar for more than a year? Yes(1)
   Is Jaggi and his colleagues are teaching the same yoga, meditation and BSP with minor differences? Yes
   Did Jaggi ever gave credit to/confessed about Rishi Prabhakar? No
   Did Jaggi’s contemporary/colleague Ravisankar Mysore Ramakrishna commented about Jaggi’s plagiarism and lies? Yes(1)
   Is there an objective way to confirm Jaggi’s enlightenment before taking his programs? Yes(2)
   Is he a self confessed liar? Yes
   Does Jaggi have political tie-ups? Yes
   Does he shadow celebrities and crave media attention? Yes
   Did Isha ever disclose their social outreach program details/numbers to public? No
   Is Isha a 100% volunteer run organization? No
   Did Isha use/is using immoral tactics to usurp land? Yes
   Are Isha fanatics waiting for an utopian mass enlightenment never explicitly promised by Jaggi? Yes
   Are they dangerously delusional/hypocritical? Yes

   -எனக்கு முன்னே எத்தனையோ பேர்
   “ஈஷா ஞானம் ” பெற்றிருக்கின்றனரே ….!!!

   -நன்றி தியாகா.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • Surya சொல்கிறார்:

    Even though I do not support Isha foundation activities, I don’t think the following point is relevant…
    “Did Jaggi initiate his young daughter into Brahmacharya? No”

    As a person, she can decide what she can do. Why is that Sadhguru’s daughter expected to go for Brahmacharya? This is like expecting a politician’s son/daughter to take the same path as their parents…

 7. D. Chandramouli சொல்கிறார்:

  Such information, as has been provided by KM, would be certainly useful for the public so that they exercise discretion and caution in choosing whom to follow in their quest for spirituality. Kudos to KM.

 8. சாமி சொல்கிறார்:

  வணக்கம் காவிரி மைந்தன் அவர்களே,

  இக்காலத்திற்குத் தேவையான மிக முக்கியமான கருத்துக்கள், நீங்கள் சொல்லியிருப்பது. நன்றி.

  ஒரு விஷயம்…

  ஜக்கி வாசுதேவ் தனது மூன்று பிறவிகளைப் பற்றி பலவாறாகச் சொல்லியிருக்கிறார்.

  ஆனால், அமெரிக்காவில் வசிக்கும் முற்பிறவி பற்றி ஆராயும் இந்த ஆராய்ச்சியாளர் (டாக்டர் வால்டர்) ஜக்கி வாசுதேவ் முற்பிறவியில் தியோசபிகல் சங்கம் நிறுவிய கர்னல் ஆல்காட்டாக இருந்திருக்கிறார் என்கிறார். தோற்றமும் பாவனைகளையும் பார்த்தால்!!! 😉

  அப்பிறவியில் அவரும் ஏதேதோ ஸ்தாபிக்க முயன்றிருக்கிறார். இப்பிறவியில் அது தொடருகிறது போல…

  சுட்டி இங்கே : http://www.iisis.net/index.php?page=reincarnation-henry-steel-olcott-theosophy-jaggi-vasudev-sadhguru-kevin-ryerson-walter-semkiw-past-life-research&hl=en_US

  அதில் இப்படி ஒரு வரி இருக்கிறது.

  //Sadhguru was a successful businessman who had a mystical experience, which made him found his own spiritual organization.// 🙂

  இன்னும் நரேந்திரமோதி, சோனியா, ஸ்ரீ ஸ்ரீ உள்ளிட்ட பலரது முற்பிறவிகளைப் பற்றிய விவரங்கள் அதில் உள்ளன. படிக்க வெகு சுவாரஸ்யமாக உள்ளது.

  இது பற்றி உங்கள் கருத்தறிய ஆவல் திரு.காவிரிமைந்தன் அவர்களே!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப சாமி,

   வணக்கம்.
   மன்னிக்க வேண்டும் நண்பரே.
   இது ஒரு தனி விஞ்ஞானம்…
   இதில் கருத்து சொல்லும் அளவிற்கு
   எனக்கு ஞானம் இல்லை. ஆனால்,
   மறுபிறப்பு என்பது உண்டு என்று
   நான் உறுதியாக நம்புகிறேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 9. Teeding சொல்கிறார்:

  Sir,
  Sadhguru is not a single man, a big mafia is behind him. If you can , pls get his adipodi’s and expose them.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.