200 பேர் காலி – சொல்லியே சுட்டுத்தள்ளிய ரோட்ரிகோ டுடேர்தே-யின் …. Guts…!!!

philliphines president

சில நாட்களுக்கு முன் இதே வலைத்தளத்தில் –

” பதவியேற்ற 24 மணிநேரத்தில் 110 பேர் என்கவுண்டர்..!!! இங்கு ஒரு ரோட்ரிகோ டுடேர்தே உருவாக முடியுமா ..!”

-என்கிற தலைப்பில் ஒரு இடுகை வந்தது நண்பர்களுக்கு
நினைவிருக்கலாம். பிலிப்பைன்ஸ்
ஜனாதிபதியாக பதவியேற்றதிலிருந்து இதுவரை
போதை மருந்து வியாபாரத்தில் ஈடுபட்ட 200 பேரை
சுட்டுத்தள்ளி இருக்கிறார் ஜனாதிபதி டுடேர்தே.

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள நீதிபதிகள்
மற்றும் போலீசார் உடனே அரசிடம் சரணடைய வேண்டும்
என்று கண்டிப்பாக கூறியுள்ள டுடேர்தே-க்கு பயந்து –

இதுவரை 5,00,000 -க்கும் மேற்பட்ட மக்கள்
முறைகேடான போதைப் பொருள் வணிகக் குற்றத்துக்காகச்
சரணடைந்து, அதை நிறுத்துவதாகவும் உறுதிமொழி
எடுத்திருப்பதாக பிலிப்பைன்ஸ் நாட்டின் காவல்துறை
தெரிவித்திருக்கிறது.

இது குறித்து நேற்று வெளியாகியுள்ள மேலதிக
செய்தி விவரங்களை பாருங்களேன் –

—————————–

போதைப் பொருள் கடத்தல்: நீதிபதிகள் சரணடைய
பிலிப்பைன்ஸ் அதிபர் வலியுறுத்தல்!

மணிலா: பிலிப்பைன்ஸில் போதைப்பொருள் கடத்தலில்
ஈடுபட்டுள்ள நீதிபதிகள் மற்றும் போலீசார் உடனே அரசிடம்
சரணடைய வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ரோட்ரிகோ
டியூடெட்ரே வலியுறுத்தியுள்ளார்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் புதிய அதிபராக ரோட்ரிகோ
டியூடெட்ரே பதவி ஏற்றுள்ளார். பதவியேற்றது முதல்,
இவர் போதை பொருள் கடத்தல்காரர்கள் மற்றும்
பயங்கரவாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறார்.

அண்மையில்தான் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் 200க்கும்
மேற்பட்டோரை போலீசார் என்கவுன்ட்டர்
செய்தனர். இது போதைப்பொருள் கடத்தும் நபர்களுக்கு
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில், போதைப் பொருள் கடத்தல்காரர்களைச்
சுட்டுக் கொல்ல பொதுமக்களை அனுமதிப்பதாக சமீபத்தில்
பரபரப்பான அறிவிப்பையும் வெளியிட்டார்.

இதனையடுத்து, நாட்டை சீரழிக்கும் போதைப்பொருள்
கடத்தல், விற்பனை செய்தல் உள்ளிட்ட வழக்குகளில்
சம்பந்தப்பட்ட 160 பேரின் பெயர்களை பகிரங்கமாக
வெளியிட்டார். அவர்களில் நீதிபதிகள், மேயர்கள், போலீஸ்
அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள், எம்.பி மற்றும்
எம்.எல்.ஏக்களும் அடங்குவர்.

அவர்கள் தானாக வந்து சரண் அடைய வேண்டும்.
இல்லாவிடில் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டும்
என்றும் அதிபர் எச்சரித்துள்ளார். மேலும் அவர்களின்
பாதுகாப்பு அதிகாரிகளையும், துப்பாக்கி அனுமதியையும்
ரத்து செய்யவும் உத்தரவிட்டுள்ளார். அதிபரின் இத்தகைய
நடவடிக்கை அங்கு பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

( http://www.vikatan.com/news/world/66942-philippines-president-duterte-accuses-judges-of-drugs-links.art )

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to 200 பேர் காலி – சொல்லியே சுட்டுத்தள்ளிய ரோட்ரிகோ டுடேர்தே-யின் …. Guts…!!!

 1. R.Gopalakrishnan சொல்கிறார்:

  This is what is wanted. Keep it up. Best wishes..

 2. 'நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  அவரை மக்கள் தேர்ந்தெடுத்ததற்கு இதுவும் ஒரு காரணம். நாட்டில் சமூகக் கேடான மாஃபியாக்களை (போதை, திருட்டு, மாஃபியா பிச்சையெடுக்கும் கும்பல் போன்றவை) அழித்தொழிப்பார் என்று. இதற்கு அவருக்கு ஆதரவு உள்ளது. அதுவும் தவிர,அடுத்த ஆறு வருடங்களுக்கு, அவர் நினைக்கும் நல்லவற்றைச் செய்ய அங்கு ஒரு தடையும் கிடையாது. பாராட்டப்படவேண்டிய விஷயம்.

 3. selvarajan சொல்கிறார்:

  160 –பேரின் பெயர்கள் அவர்கள் எவ்வளவு பெரிய ” கொம்பனாக ” இருந்தாலும் — அதைப்பற்றி கவலைப் படாமல் பகிரங்கமாக வெளியிட்ட திரு .ரோட்ரிகோ டுடேர்தே உண்மையான கட்ஸ் உள்ளவர்தான் ….

  ஆனால் இங்கே ” கருப்பு பண பதுக்கல் முதலைகள் — வங்கிகளின் வாராக்கடன் கடன் பேர்வழிகள் — வங்கி ஏய்ப்பாளர்கள் ” போன்றவர்களின் பெயர்கள் அரசுக்கு தெரிந்திருந்தும் — மக்களுக்கு வெட்ட வெளிச்சமாக தெரிவிக்க கூட கையாலாகாதவர்களை — என்னவென்று கூறுவது …. ? மீறி கேட்டால் ” ஜனநாயக நாடு ” என்று சப்பைக்கட்டு காரணம் கூறுவார்கள் … அப்படி தானே … ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   //இங்கே ” கருப்பு பண பதுக்கல் முதலைகள் — வங்கிகளின்
   வாராக்கடன் கடன் பேர்வழிகள் — வங்கி ஏய்ப்பாளர்கள் ”
   போன்றவர்களின் பெயர்கள் அரசுக்கு தெரிந்திருந்தும் —
   மக்களுக்கு வெட்ட வெளிச்சமாக தெரிவிக்க கூட
   கையாலாகாதவர்களை — என்னவென்று கூறுவது …. ?//

   நமக்காக பாரதி அதையும் அன்றே கூறி விட்டார்…
   “வாய்ச்சொல்லில் வீரரடி…”

   டுடேர்தே – எந்த நிமிடமும் கொல்லப்படக்கூடும்
   என்கிற சூழ்நிலை இருந்தாலும் கூட –
   துணிந்து செயல்படுகிறார்…
   நிஜமான அவரது துணிச்சல் பாராட்டத்தக்கது.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 4. CHANDRAA சொல்கிறார்:

  JI unfortunately we have a prime minisater who does not like to issue a warning
  even to the groups who indulged atrocities against dalits in the name of
  COW PROTECTION
  His reported offer of getting beaten by the cow protection groups
  had projected our prime minister as very inefficient >>>>>

 5. ravi சொல்கிறார்:

  http://tinyurl.com/zze2eqn

  இவ்வளவு தான் விஷயம்.. இங்கு சுடப்பட்டவர்களில் எத்தனை பேர் பண முதலைகள்?..
  படங்களை பாருங்கள்.. எல்லாம் கீழ் நிலை ஆட்கள்.. எந்த நாட்டிலும் பெரும் பண முதலைகளை எவனும் நெருங்க முடியாது ..
  அம்பானி, அதானி என்று பேசி கொண்டே நம் ஊரில் அவர்களுடன் மின்சார ஒப்பந்தம் போடுகிறார்கள் .அவ்வளவுதான்..
  மணல் கொள்ளை ,கிரானைட் கொள்ளை என்று பொங்கியவர்கள் எல்லாம் அதே கூட்டத்தோடு ஐக்கியமான கதை !!
  இதே என்கவுண்டர் இங்கே நடந்தால் , ஐயோ அப்பாவிகள் என்று பொங்குவார்கள் ..

 6. Billa சொல்கிறார்:

  Sir, Todays dinamani thalaiangam

  பாவம் விவசாயி! …….
  (மீதி பகுதி தனியே இடுகையில் வெளியிடப்படுகிறது…)

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப பில்லா,

   தினமணி தலையங்கத்தை பார்வைக்கு கொண்டு வந்ததற்கு
   மிக்க நன்றி. மிக முக்கியமான இந்த விஷயத்தை,
   பின்னூட்டத்தில் போடுவதற்கு பதிலாக, தனி இடுகையாக போட்டால்
   இன்னும் அதிக நண்பர்களின் பார்வைக்கு கொண்டு போக முடியும்
   என்பதோடு, கருத்துக்களை திரட்டவும் வசதியாக இருக்கும்.
   எனவே, இதை இங்கிருந்து எடுத்து, தனியே இடுகையில் போடுகிறேன்.

   உங்கள் ஆர்வத்திற்கும், ஈடுபாட்டிற்கும் எனது பாராட்டுகள்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.