டிவி விவாதங்கள் – சாரு நிவேதிதா – பன்றிகளோடு மல்யுத்தம் …!!!

.

.

தமிழில் செய்தி தொலைக்காட்சிகளின் எண்ணிக்கை
மிகவும் அதிகமாகி விட்டது. இவர்களுக்கு 24 மணி நேரமும்
(24 x 365 …!!! ) எப்படி பொழுதை ஓட்டுவது என்கிற
கவலையே பெருங்கவலையாகி விட்டது.

தினமும் மாலைப்பொழுதானால், விவாதத்திற்கான
தலைப்பை கண்டுபிடித்தாக வேண்டும்….
பின்னர் அதில் விவாதம் செய்யக்கூடிய அரிய
மானுடப்பிறவிகளை தேடிப்பிடித்து fix செய்ய வேண்டும்.
( அதுவும், இதே தலைப்பை அடுத்த டிவி போடுவதற்கு
முன்பாக முந்திக் கொள்ள வேண்டும் ).

அப்படி அலைந்து திரிந்து,
தலைப்பை பிடித்து,
அதுக்கேத்த ஆளைப்பிடித்து –
இவர்கள் நடத்தும் விவாதங்கள் எப்படி இருக்கின்றன….?

இதில் என் கருத்தோடு நிற்காமல் –
நண்பர்கள் தங்கள் வயிற்றெரிச்சலை
பகிர்ந்து கொள்வதையும்
பார்க்க விரும்புகிறேன்.

என் கருத்து –

பல சமயங்களில் வெறும் காட்டுகூச்சல் போடும்
இரைச்சல் சந்தையாகி விடுகின்ற
இந்த தொலைக்காட்சி விவாதங்கள் எந்த விதத்திலும்
சுவையாகவும் இருப்பதில்லை….
எந்த புதிய தகவல்களையும் தருவதில்லை…
அறிவுபூர்வமான விவாதங்களாக அமைவதும் இல்லை…

அவரவர் சொல்ல விரும்புவதையே திரும்பத்திரும்ப
சொல்லிக் கொண்டிருக்கிறார்களே தவிர,
உருப்படியாக கருத்து-பதில், எதிர் கருத்து என்று விவாத
வடிவத்திற்கே செல்வதில்லை….

அபூர்வமாக சில சமயங்களில் –
நேருக்கு-நேர், கேள்விக்கென்ன பதில் போன்ற
நிகழ்ச்சிகளில் மட்டும் சில சுவையான பரிமாறல்களை
பார்க்க முடிகிறது.
அதிலும், கேட்பவர், பதில் சொல்பவர் இருவருமே
புத்திசாலிகளாக இருக்கும்போது அது சுவைபட
அமைவதும் உண்டு.

நண்பர்களின் பின்னூட்டங்களுக்குப் போகும் முன்னர்,
எழுத்தாளர்- ( பேச்சாளர்…! ) சாரு நிவேதிதா அவர்களின்
அனுபவக் குமுறலையும் இங்கு கேட்போமா …?

சாரு நிவேதிதா -பன்றிகளோடு மல்யுத்தம்….!!!

charu nivedita

charu-tv-1 001

charu-tv-2 001

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to டிவி விவாதங்கள் – சாரு நிவேதிதா – பன்றிகளோடு மல்யுத்தம் …!!!

 1. KALAKARTHIK சொல்கிறார்:

  four dogs lol lolling
  karthik amma

 2. selvarajan சொல்கிறார்:

  டி , வி. விவாதங்களா …அப்பிடின்னா … நான்கு பேர் குந்திக்கினு ஒருத்தனை – ஒருத்தன் அநாகரிகமாக திட்டிக்கிட்டு — கடிச்சிக்கிட்டு — கத்திக்கிட்டு கிடக்கானுங்களே — அது தானே …? அதையும் வாயில் ஜொள்ளு ஒழுவ ரசிக்க கூட்டம் — உப்புசப்பில்லாத தலைப்புகளில் விவாதம் என்கிற பெயரில் கட்சிகளுக்குள்ளும் — சாதி — மதங்களுக்குள்ளும் மோதலை உருவாக்கும் ஒரு இடமாகவும் — ஒழுங்கான விசாரணைகளை திசைத் திருப்பி மக்களை குழப்பத்தில் தள்ளும் இடமாகவும் தான் இருக்கிறது — தந்தி டி.வி. நிகழ்ச்சியில் ” தோழர் அருணனும் — சீமானும் ” எவ்வளவு அருமையாக நேருக்கு – நேர் திட்டிக் கொண்டார்கள் என்பது ரொம்பவும் உபயோகமான ” விவாதம் ” தானே …? — அதைப் போய் // சாரு நிவேதிதா -பன்றிகளோடு மல்யுத்தம்….!!! // என்று கூறலாமா ….?

 3. drkgp சொல்கிறார்:

  சாரு நல்ல தமிழ் சொற்களை பிரயோகித்தால் நாகரீகமாக இருக்கும்

 4. Srini சொல்கிறார்:

  KM sir, NDTV, CNNIBN, Times now – kathalluku – Inga konjam sound kammi thaan sir…The day u decide to switch off from these debates… for sure u will feel bit relaxed… I have felt that….Jaggi ashram-la oru 10 nimidam ukkandhu dhyanam pannina madhiri oru feeling…. one has to experience that… off late I don’t switch on the tv for any debates.

  Charu -kku – avar prachanai…. its always there… sila peruku.. life full-a kai-endhi thaan sapidanum-nu vidhi… avar thattu eduka arambichu.. romba varusham aachu… bottle-a vittutaar, thatta vida mudiyala paavam…

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   ஸ்ரீநி,

   // I have felt that….Jaggi ashram-la oru 10 nimidam ukkandhu
   dhyanam pannina madhiri oru feeling….//

   ஓ – இது தான் நீங்கள் அந்த ஜக்கிஜி தொடர் முழுவதும்
   பின்னூட்டம் போடாததற்கு காரணமோ …. 🙂 🙂

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 5. LVISS சொல்கிறார்:

  watching tv debates has become a bit intolerable of late —they call reps from opposite political parties who say the same thing on a subject–they cant be expected to say against their own party — if they debate with people not connected with a particular issue it would be interesting –very often in English channels the same subject gets debated many times — how many debates we have seen debates on atrocities on some section of the people —

 6. selvarajan சொல்கிறார்:

  // ஈஷா மையத்தின் மீதான அவதூறுகளுக்கு பின்னால் மதமாற்ற சக்திகள்: ஹெச். ராஜா திடுக் புகார் //
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/h-raja-supports-isha-yoga-centre-260018.html — ஈஷா மையத்தில்நடக்கின்றவற்றை — ஆதரிக்கும் இவரைப் போன்ற மத வெறியர்களை என்ன செய்வது … ? ஒரு பெற்றோர் தங்களின் மகள்களை மீட்டு தர சொல்லி மன்றாடுவதும் — 5000 – சிறார்கள் மூளைசலவை செய்யப்பட்டு சிறுவர் சிறையில் இருப்பது போல உள்ளதைப் பற்றி ஒரு வார்த்தை சொல்ல வக்கில்லாத இவர் — பிரச்சனையை வேறு விதமாக திசைத் திருப்புவது ஏன் …. இந்த செயதியில் இவர் கூறும் வாக்கியங்கள் : // ஈஷா யோகா மையம் மீதான புகார்களின் பின்னணியில் மதமாற்று சக்திகளே உள்ளன. இந்து மத நிறுவனங்களுக்கு எதிரான புகார்கள் வரும்போது இந்துக்கள் வீதிகளுக்கு இறங்கி வர வேண்டும்.// என்று ” கலவரத்தை ” தூண்ட நினைக்கும் செயல் போல உள்ளதை —- கண்டிக்கப் போவது யார் … ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   உயர்நீதிமன்றம் நியமித்த குழு ஆசிரமத்தில்
   விசாரணை நடத்த சென்றபோது, இவர் அங்கே
   போய் influence செய்ய முயன்றிருக்கிறார்.
   இவர் கூடவே இன்னும் சிலரும் கூட…

   போலி சாமியாருடன் தங்களை அடையாளப்படுத்திக்
   கொள்பவர்கள் யாராக இருக்க முடியும்…..!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 7. Sen சொல்கிறார்:

  நீ எப்படி அவரை போலி குரு என்று சொல்கிறாய் ?

  புரிந்து கொள், ஒன்றோ இரண்டோ அல்ல, லட்சோப லட்சம் ஈஷா அன்பர்களுக்கு , ஆண்டுக்கணக்காக சதகுரு வழிகாட்டியாய் இருந்து வருகிறார்.

  எங்கள் அனைவருக்கும் தெரியாத ஒன்று உனக்கு எப்படி தெரியும் ?

  எங்கள் அனைவரையும் விட, உன் விஷ தன்மையுடைய மனதுக்கு அதிகம் தெரியும் என்ற மாயையில் இருக்கிறாயா அல்லது லட்சோப லட்சம் ஈஷா அன்பர்களை முட்டாள்கள் என்கிறாயா ?

  • ராமச்சந்திரன் .எஸ். சொல்கிறார்:

   // எங்கள் அனைவருக்கும் தெரியாத ஒன்று உனக்கு எப்படி தெரியும் ?//

   முட்டாள்களுக்கு, தாங்கள் முட்டாள்கள் என்பது தெரியாது.
   மற்றவர்களுக்கு தான் அதைப்பற்றி தெரியும்.

   // உன் விஷ தன்மையுடைய மனதுக்கு அதிகம் தெரியும் என்ற மாயையில் இருக்கிறாயா அல்லது லட்சோப லட்சம் ஈஷா அன்பர்களை முட்டாள்கள் என்கிறாயா ?//

   இரண்டாவது option தான் சரியாக இருக்கும்.

 8. Karthik சொல்கிறார்:

  நல்ல வேளை நீங்கள் கேட்டதற்கு. டிவியில் வரும் விவாதங்கள் எனக்கு பிடடிக்காத ஒன்று. முக்கிய கருத்துக்களை விட்டு விட்டு ஒருவருக்கு பஜனை செய்வது, முட்டாள்தனமாக பேசுவது. போதிய ஆதாரம் இல்லாமல் அவரவர் கருத்துக்களை நிஜம் என நம்ப செய்வது ….அப்பப்பா என்ன ஒரு பொய் ….

  simply waste of time.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.