கர்ணன் – A.S.நாகராஜன் ஏன் இப்படிச் செய்தார்…?

karnan poster

புராணங்களையும், இதிகாசங்களையும் நம்பி போற்றுவோர்
ஒருபக்கம் – இதெல்லாம் வெறும் கட்டுக்கதை என்று
கூறும் நம்பாதவர்கள் ஒரு பக்கம்.

நடந்தவையா, கற்பனையா –
பாதி நிஜம்-பாதி கற்பனையா..?
என்கிற கேள்விகளுக்குள்
நான் இப்போது செல்லவில்லை.

நிஜமோ, கற்பனையோ – இந்த காவியங்களைப் படைத்தவர்கள்
அருமையான பல கதாபாத்திரங்களை உருவாக்கி விட்டுச்
சென்றிருக்கிறார்கள். இன்று கூட மனிதரில் நாம் எத்தனை
வகைகளை காண்கிறோமோ, அத்தனை சுவாரஸ்யங்களையும்
உள்ளடக்கிய அற்புதமான பாத்திரங்களை மஹாபாரதத்தில்
காணலாம்.

ஆயிரக்கணக்கில் கதாபாத்திரங்கள்….
முதலில் தெரியாது அந்த பாத்திரத்தின் முக்கியத்துவம்.

பின்னொரு நேரத்தில், சரியான சமயத்தில், அந்த
பாத்திரங்கள் கதையினுள் நுழைந்து, வித்தியாசமான
திருப்பங்களை உண்டு பண்ணும் அந்த நயம்.
நிஜமா, கதையா என்கிற கேள்விகளை ஒருபக்கம்
ஒதுக்கி வைத்து விட்டு,
அந்த கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றையும் ரசிக்கத்
துவங்கினால் – பிரமிப்பு ஏற்படுகிறது. எத்தனை ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன்னரே, மனநிலைகளையும்,
வாழ்வியலையும் பற்றி எந்த அளவிற்கு
சிந்தித்திருக்கிறார்கள் இந்த பேரிலக்கியங்களை
உருவாக்கியவர்கள்….

எனக்கு இலக்கியத்தில் மிகுந்த நாட்டமுண்டு.
ஒத்த ரசனையுடையவர்கள் கிடைக்க மாட்டார்களா
என்று ஏங்குவதும் உண்டு… ?
ஆனால், நான் விமரிசனம் தளத்தில் இதுகுறித்தெல்லாம்
எழுதத்துவங்கினால், வருகையில் பாதி குறைந்து விடும்….

இப்போதே அரசியலிலிருந்து சற்றே தடம் மாறினாலும்
கூட, சில வாசக நண்பர்கள் நொந்து கொள்வதை
பின்னூட்டங்களில் பார்க்கலாம்…

இருந்தாலும், அவ்வப்போது, இடையிடையேயாவது
சில முயற்சிகளை மேற்கொள்வோம் என்பது என் எண்ணம்…

————————-

இரண்டு நாட்களுக்கு முன்னர் நமது விமரிசனம்
வலைத்தள நண்பர் செல்வராஜன் எனக்கு தனி மடல்
ஒன்றை அனுப்பி இருந்தார்….

சுவையான சில கருத்துப் பரிமாற்றங்களுக்கு அது
வழி உண்டு பண்ணுகிறது என்பதால் அதை கீழே
பதிப்பிக்கிறேன் –

—————————————————————-

அய்யா … ! என்னுடைய சிறுவயதில் ஏற்பட்ட
ஒரு கேள்வி — இன்றுவரை மனதில் ஒரு ஓரமாக
இருந்துக் கொண்டே இருக்கிறது — திரைப்படங்கள்
எப்படியெல்லாம் மனிதர்களை மாற்றத்திற்கு
உருவாக்குகின்றன என்பதை ஒட்டிய கேள்வி அது ….

1964 –ம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி நடித்து —
சமீபத்தில் கூட டிஜிட்டலில் வெளிவந்த ” கர்ணன் ” படம் —

அப்போது என்னுடைய
வயது சுமார் 13 இருக்கும் —
பி.ஆர். பந்துலு இயக்கத்திலும் — ஏ .எஸ். நாகராஜன்
திரைக்கதையிலும் உருவானது.

— அருமையான படம் — ஓரளவு ” மகாபாரதத்தை ”
தெரிந்துக் கொள்ளவும் — கர்ணனைப் பற்றி நிறைய
அறியவும் செய்த படம் ….

– படம் பார்த்தேன் … கடைசிக் காட்சி :
கர்ணன் அம்பு பாய்ந்து தேரிலிருந்து கீழே விழுந்து —
சக்கரத்தில் சாய்ந்துக் கொண்டு உயிர் பிரியாமல் போராடும்
காட்சி — சிவாஜியின் அருமையான நடிப்பு — இதிலெல்லாம்
ஒரு குறையும் இல்லை — அரங்கில் கண்களில் கண்ணீர் மல்க
பார்த்துக் கொண்டு
அனைவரும் கப் -சிப் என்று இருக்கும் நேரம் அது —
பெண்கள் — மற்றும் ஒரு சில ஆண்களும் விசும்புகின்ற
காட்சி அது ….

– அந்த காட்சியில் கர்ணனிடம்
அவர் உடம்போடு ஒட்டியுள்ள — அணிந்துள்ள கவச
குண்டலங்களை தானமாக பெற்றால் தான் உயிர் பிரியும்
என்பது விதியின் கட்டளை ….

– இதுவரை எல்லாம் சரி — தானம் வாங்க ஒரு அந்தணர்
வருகிறார் — தானமாக கவச குண்டலங்களை கேட்டு
பெறுகிறார் — அருமை — அருமை — அந்தக் காட்சிக்கு ஏற்ப ”

செஞ்சோற்று கடன் தீர்க்க – சேராத இடம் சேர்ந்து — வஞ்சத்தில்
வீழ்ந்தாயடா – கர்ணா.. வஞ்சகன் கண்ணனடா ” என்றும் மறக்க
முடியாத பாடல் ….

– எனக்கு ஏற்பட்ட கேள்வி :

தானம் வாங்க வந்த அந்தணர் —
கண்ணன் என்று திரைப்படத்தில் – காட்டியது
சரியா – தவறா — என்பது தான் — மகாபாரத கதைப்படி
தானம் பெறுபவர் ” இந்திரன் ” தானே — ஏன் கண்ணன்
வாங்குவது போல காட்டினார்கள்
.. என்பது ஒரு வரலாற்று பிழை தானே …

அன்று படம் பார்த்த என்னைப் போன்ற
சிறுவர்கள் மனதில் — கண்ணன்
தான் தானம் பெற்றான் என்பது பசுமரத்து ஆணிப் போல
பதிந்து விட்டு — தற்போது படம் பார்க்கின்ற
அனைவருக்கும் அதே
எண்ணம் தானே மனதில் பதியும் —
இது .. சரியா — தவறா … ?

– எதற்காக இவ்வாறு மாற்றினார்கள் —
இந்திரன் தானம் வாங்குவதைப் போல காட்சி
அமைத்தாலும் ” நடிகர் திலகத்தின் ”

நடிப்பு ஒன்றும் சோடைப் போக போவதில்லையே …
ஏன் இந்ததவறான பதிவு … ?

படம் பார்த்த பின் நான்
என்னுடைய தந்தையிடமும் — மற்றவர்களிடமும் –
இதை வினவிய போது — இனி எப்படி மாற்ற முடியும் —

புராணங்களை பற்றி நன்கு தெரிந்தவர்களே — வாய் திறக்காமல்
இருக்கும் போது நாம் என்ன செய்ய முடியும் என்று கூறியது
இன்றும் — ஏன் நினைவில் இருக்கிறது ….

தற்போது படங்கள் வெளி வருவதற்கு முன்பே
ஒரு பிரச்சனையை கிளப்பி தடை வரை செல்லுகின்ற — மத —
சாதிய — அமைப்புகள் — அப்போது இல்லாமல் இருந்த ” தமிழகமா ” இது … ?
எது எப்படியோ — நடந்து முடிந்து போனது
இதிகாசப் பிழை தானே —
வஞ்சகன் யார் ஏ .எஸ். என் — அவர்களா .. ?
— பி.ஆர் . பந்துலு அவர்களா .. ?

——————————————————————-

நண்பர் செல்வராஜன் போலவே, பலரும் பல ஆண்டுகளுக்கு
முன்னர் இந்த படத்தை பார்த்திருப்பார்கள்….
அந்த காட்சி எப்படி அமைந்திருந்தது என்பது சரியாக
நினைவிலிருக்காது.

உண்மையில், அந்த காட்சியில், கண்ணன் –
கர்ணனிடமிருந்து – கவச குண்டலங்களை
தானம் பெறவில்லை..

( இதற்கு முன்பாகவே, வேறு ஒரு காட்சியில்
இந்திரன் கர்ணனிடமிருந்து அவற்றை தானமாக பெற்று
செல்வதாக சித்தரிக்கப்பட்டிருந்தது என்று நினைவு….)

அம்புகள் பல பாய்ந்து, உயிரும் போகாமல், தொடர்ந்து
சண்டையிடவும் இயலாமல் கர்ணன் தத்தளித்துக்
கொண்டிருக்கிறான். கர்ணனின் உயிர் ஏன் இன்னும்
அவனை விட்டுப் பிரியாமல் இருக்கிறது என்பதை
கண்ணன் அறிகிறான்….

ஆம். கர்ணன் செய்து வந்த தர்மங்களின் புண்ணிய பலன்
உயிர் பிரியாமல் அவனை காத்துக் கொண்டிருக்கிறது
என்பதை அறிகிற கண்ணன் – ஒரு பிராம்மணன்
உருவெடுத்து, அது வரை கர்ணன் செய்த தான,தர்மங்களின்
பலன்கள் அனைத்தையும் யாசகமாக கேட்டுப் பெறுகிறான்….

பின்னர், அர்ச்சுனனின் பாணத்தால் கர்ணன் உயிர் பிரிகிறது…

வாசக நண்பர்கள் அனைவரும் அந்த காட்சியை
மீண்டும் ஒருமுறை காண-
கீழே கர்ணன் படத்திலிருந்து
அந்த அற்புதமான காட்சி –
( முதல் 12 நிமிடங்கள் வரை பார்த்தாலே போதுமானது …)

இப்போது யோசிப்போமா –

கர்ணனை கொன்றது யார்….?

கர்ணன் தனது சகோதரன் – என்று தெரிந்ததும்,
அண்ணனைக் கொன்று விட்டேனே என்று
புலம்பும் அர்ச்சுனனுக்கு பதில் சொல்லும்போது
கண்ணனே விளக்கம் அளிக்கிறான் ….

“விஜயா!

செத்த பாம்பை அடித்து விட்டுப் புலம்பாதே.
கர்ணனை உன்னால் வென்றிருக்கவே முடியாது.
முதலில் ஆற்றில் போட்டு குந்தி கொன்றாள்.
பிறகு சாபம் தந்து பரசுராமர் கொன்றார்.
பிறகு அவை நடுவே அவனை அவமானப்படுத்தி
கிருபர் கொன்றார்.

அதற்குப் பிறகு கவசகுண்டலங்களை
வாங்கி இந்திரன் கொன்றான்.
அதற்குப் பிறகு உன்மேல் இரண்டாம் முறை அஸ்திரம்
போடக்கூடாது என்று வரம் வாங்கி குந்தி கொன்றாள்.

அதற்குப் பிறகு அவனைக் கோபப்படுத்தும்
வகையில் பேசிச் சல்லியன் கொன்றான்.
அதற்குப் பிறகு உன்னைக் காக்க தேரை அழுத்தி
நான் கொன்றேன்.
அதற்குப் பிறகு அவன் புண்ணியங்களையெல்லாம் தானம்
பெற்று மீண்டும் கொன்றேன்.

அதற்குப் பிறகு செத்த பாம்பை அடித்து விட்டு,
நான் கொன்றேன் என்று
புலம்புகின்றாயே!

————————————

இந்த பொருள் குறித்து – எனக்கு,
இன்னும் சொல்ல சில விஷயங்கள் இருக்கின்றன.
ஆனாலும், நண்பர்களின் கருத்துக்களை
கேட்டுக் கொண்ட பிறகு அவற்றை சொல்லலாமென்று
இருக்கிறேன்.

பின்னூட்டங்களில் சந்திப்போம்….

 

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

36 Responses to கர்ணன் – A.S.நாகராஜன் ஏன் இப்படிச் செய்தார்…?

 1. ravikumar சொல்கிறார்:

  Basically Karnan envies Arjun due to Bad quality of Jealous in all aspects. Jealous is the ultimate base for bad quality to lead to disaster. Thiruvalluvar also states as “Azukkaru, Avaa, Veguli, Innachol ” as four bad quality in which “Azukkaru” as the first .thing to lead ruined life. As soon as Jealous enters in human mind , all Positive factors getting eroded. In all All authors version of Mahabharatham it is being specified

 2. selvarajan சொல்கிறார்:

  அய்யா … ! ” கடைசி காட்சியில் கவச குண்டலங்களை தனமாக பெற்றது ” என்று நான் குறிப்பிட்டுள்ளதை என்னுடைய தவறு என்று தங்கள் மூலம் அறிந்துக் கொண்டேன் — ஆனாலும் ” கடைசி காட்சியில் ” — கர்ணன் செய்த தான — தர்மங்களை — கண்ணன் { கிருஷ்ணர் } தானமாக பெறுவது போல காட்டியது — தவறு தானே … ?

  அதுமட்டுமில்லாது — தற்போது இணையத்தில் தேடியபோது — இன்னும் பல குளறுபடிகள் திரைப்படத்தில் இருப்பதும் தெரிய வருகிறது — அதில் சில மட்டும் : // அந்த காட்சியில் கிருஷ்ணர் தனது விஸ்வரூபத்தை கர்ணனுக்குக் காட்டியதாகக் கூறுவதும் —- குந்தி போர்க்களத்திற்கு ஓடிவந்து, மகனே என்று அழுவதெல்லாம் சுத்த பொய். மஹாபாரதத்தின்படி போர் முடிந்த பின்னர், இறந்த உறவினர்களுக்கு யுதிஷ்டிரர் ஈமச் சடங்குகளைச் செய்யும்போது மட்டுமே குந்தி அதனை வெளிப்படுத்துவாள். போர்க்களத்திற்கு வந்து அழுவதாகவும், அதற்காக கர்ணன் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்ததுபோலவும் காட்டியிருப்பதும் வேதனைக்குரியதாகும். // என்றும் இன்னும்திரைப்படத்தில் உள்ள பல குறைகளையும் — பலரும் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள் …

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   நீங்கள் கூறி இருப்பது போல், திரைக்கதையில்
   பல முரண்பாடுகள் இருப்பது உண்மை தான்.

   சில சமயங்களில், கதையின் சுவாரஸ்யம் கருதி,
   கதாபாத்திரத்தின் முக்கியத்தை கூட்டுவதற்காக
   செய்யப்படும் சில விஷயங்களும் உண்டு.
   இவற்றை அந்த வகையில்
   சேர்த்துக் கொள்ள வேண்டியது தான்.

   ஏ.பி.நாகராஜன் எதைச் செய்திருந்தாலும்,
   அவரது sincerity-ஐ நாம் சந்தேகப்பட முடியாது.
   அற்புதமான பல படைப்புகளை
   கொடுத்தவர் அவர்.

   எனவே, திரைக்கதையை சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல்
   ஒட்டுமொத்தமாக படத்தின் சிறப்பை பாராட்டுவோமே.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • selvarajan சொல்கிறார்:

    நண்பர்களே …. ! ஏ.பி. நாகராஜன் என்பது எழுத்து பிழையாகி விட்டது … மன்னிக்கவும் — ஏ. எஸ். நாகராஜன் என்பதே சரியானது … இதைநான் மின்னஞ்சல் மூலமாக திரு கா.மை அய்யா .. . அவர்களுக்கும் தெரிய படுத்தியுள்ளேன் — பெரும்பாலும் இது போன்ற படங்களை திரு ஏ.பி.என் . அதிகமாக எடுத்துள்ளது மனதில் ஆழமாக பதிந்து இருந்ததால் வந்த சிறுவயது தவறு — மீண்டும் ஒருமுறை மன்னிக்க வேண்டுகிறேன் — சரி செய்ய அய்யாவிடம் கேட்டுள்ளேன் — வணக்கமுடன் : செல்வராஜன் …. !!!

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     செல்வராஜன்,

     கவலை வேண்டாம். தவறுதல் இயற்கையே..
     இந்த தவறில் எனக்கும் பொறுப்பிருக்கிறது.
     எனவே நானும் சேர்ந்து நண்பர்களிடம் மன்னிப்பு கோருகிறேன்.
     இடுகையில் தவற்றை சரி செய்திருக்கிறேன்.
     சரி செய்ய உதவிய நண்பர் கோபாலசாமி அவர்களுக்கு நன்றி.

     -வாழ்த்துக்களுடன்,
     காவிரிமைந்தன்

 3. gopalasamy சொல்கிறார்:

  My opinion.
  Karnan screen play is not as per Viyasar; so many imaginary scenes, The picture only glorifies Karnan. It does not show the negative sides. I never read anywhere A.P Nagarajan associated in that picture. Please confirm. I wish to remind “yenna kodutthaan (P.B Srinivas) song to Sri Selvarasan.

 4. Srini சொல்கிறார்:

  KM Sir
  your assessment on your blog readers is wrong….

  // ஆனால், நான் விமரிசனம் தளத்தில் இதுகுறித்தெல்லாம்
  எழுதத்துவங்கினால், வருகையில் பாதி குறைந்து விடும்….

  இப்போதே அரசியலிலிருந்து சற்றே தடம் மாறினாலும்
  கூட, சில வாசக நண்பர்கள் நொந்து கொள்வதை
  பின்னூட்டங்களில் பார்க்கலாம்…//
  we all wait for you to write non-political posts more.. actually u r blog readership will increase… till election was over, you had a reason to write political posts.. atleast now u should get back to posts like this…

  Pranams
  Srini

 5. gopalasamy சொல்கிறார்:

  Correction. The song is ” என்ன கொடுப்பான் , எவை கொடுப்பான் என்று இவர்கள் எண்ணும் முன்பே “. Ramadoss is acting as Indran.
  “எனக்கு இலக்கியத்தில் மிகுந்த நாட்டமுண்டு.
  ஒத்த ரசனையுடையவர்கள் கிடைக்க மாட்டார்களா
  என்று ஏங்குவதும் உண்டு”… Dear KMji, please write. We are waiting.

 6. senthil சொல்கிறார்:

  Oru appan oru aathalukku poranthavan, mathavanga mathikara kuruva pathi mosama pesa mattan.

  Inthe thevidia km oru appan aathalukku poranthana?

 7. senthil சொல்கிறார்:

  Pala sunnikku poranthavam km

 8. senthil சொல்கிறார்:

  Pala sunnikku poranthavam km…..

 9. senthil சொல்கிறார்:

  I’m ready to go jail for abusing who abused my guru

  I hate pala sunnikku perantha km

  I’m individual,,, have no relationship with isha. But admire them for what they did to my born village

 10. senthil சொல்கிறார்:

  I respect whoever do good for my born village…..I hate devidia payan km

 11. senthil சொல்கிறார்:

  I don’t know isha ashram.but they gave medicine to my mother.she is happy now
  I ready to give my soul to isha.i hate devidia pyan km

 12. senthil சொல்கிறார்:

  Enga ammavukku uyir koduthavamga en theivam. Inthe km ,palasunnikku porandhavan ethikku avangalai korai solluren? Ivan oru naikku poramthavam.

  Nee oru atha appamukku poranthavuna, em Mela kesu podura pannadai naye? Sadhhuru oru appavi.nallavar.ithu en suya viruppathinal solkiren

 13. senthil சொல்கிறார்:

  Nan en nanbanoda phonilirunthu ithai solkiren.sadhgurukkaka uyirai kodukkavum thayar. Thevodia magan km I jail la podungafa

 14. senthil சொல்கிறார்:

  Sadghuruva thappunu solra devidia mahane, un adrass solluda, nanga, moonu Gramam, ippave varom un ootukku, nayam kekkurathukku

  Udane sollu, illana nee pala sunnikku ppranthavanuu nenaichu unnai moonu kirama makkalum manmikurom

 15. senthil சொல்கிறார்:

  Nee yaruda pannikku poranthavane enga kuladeivathi korai solla…. guru. Enga koladeivam

 16. senthil சொல்கிறார்:

  Enakku theriyim……. avunga nallavunga….neee avungalai pathi thappa elithi kasu sambarillara nayee…. unakku kasu venumna vere tholil panmuda….

 17. balaji சொல்கிறார்:

  Hello senthil, I. Understood these are the things from u r so called guru? I m reading km Jee post everyday, all r precious. Mind u r words before write.respect others. If u want to support u r guru, but provide valid proofs. Km will publish those but don’t write like ….
  If u dare provide u r address.
  We can share the thoughts but u have to provide proofs otherwise just leave.

 18. Senthil சொல்கிறார்:

  Nan eluthunathukkum guruvukum senthulukum oru sambanthamum illa. …Nan yoha pannala. ….avunga free ya marunthu koduthu enga amma yuir kappathunaanga. ….avunga en theivam

 19. Senthil சொல்கிறார்:

  OK sorry

 20. senthil சொல்கிறார்:

  ———- Forwarded message ———-
  From: Natarasu senthil
  Date: Sunday 14 August 2016
  Subject: complaint to the ciber branch
  To: Kavirimainthan Kavirimainthan

  It is not just a mail reply kaviri sir, really I feel so sad for what happened and respecting your patience. Quietly assuring that this mistake will never be repeated.

  Thanks
  Senthil

  On 14 Aug 2016 08:35, wrote:

  Dear Kaveri mainthan sir,

  Just I gone through the comments posted in your website. Extremely sorry.We were on a beer party last night , where one of my friend wanted to go through your posts through my phone.so,handed over to him.The phone is with him only till now, may give back to me by by 9am. I used to gave my phone earlier also to my friends,and they also posted.

  But,this time they made comments very horrible , and I’m expressing sorry on behalf of all of us.

  Once, I get the phone back,let me post this mail correspondance once again on your website from the same gadget, requesting you and your fans to forgive the mistake happened.

  Extremely sorry again and thanking for your kind patience.

  Senthil

  On 13 Aug 2016 22:09, “Kavirimainthan Kavirimainthan” wrote:
  >
  > >

  >
  >
  >
  >
  >
  > உங்கள் மீது புகார் கொடுப்பதற்கான
  > அனைத்து ஆதாரங்களையும்
  > சேகரித்து வைத்திருக்கிறேன்.
  >
  > நிறைய பொறுத்துப் பார்த்து விட்டேன்.
  > நீங்கள் திருந்துவதாகத் தெரியவில்லை.
  > நீங்கள் திருந்த கடைசியாக ஒரு வாய்ப்பு.
  > கண்டபடி எழுதுவதை உடனடியாக நிறுத்தவும்.
  >
  > இனி ஒரு கடிதம் உங்களிடமிருந்து
  > வந்தாலும், ciber crime -க்கு புகார் போவது
  > உறுதி.
  >
  > நீங்கள் எங்கே இருந்தாலும்,
  > உங்கள் பணி பாதிக்கப்படும் என்பதை
  > உணரவும்.
  >
  > வேலையை இழந்து நடுத்தெருவில்
  > இருக்கத்தயாராக இருந்தால்,
  > தாராளமாகத் தொடருங்கள்.

 21. Sharron சொல்கிறார்:

  KM SIR good to see your patience.

 22. senthil சொல்கிறார்:

  I myself feel so awkward by reading the comments in my name. Really feel very sad for hurt happened to you.

  Extremely sorry sir

 23. gopalasamy சொல்கிறார்:

  When I saw 25 comments, I was so happy that so many readers participated in discussion.
  TOTAL DISAPPOINTMRNT. Thiru. Senthil sir, you got exposed.

 24. senthil சொல்கிறார்:

  Kindly accept the excuses sir

 25. senthil சொல்கிறார்:

  Dear Kaveri sir,

  Once again expressing apologies and thanking for patience

  Really your patience as big as a mountain.

  Let me keep my phone logged out from the website .Hence, further posts will never be posted.Requesting you and all of the readers to forgive for the inconvenience happened from my end.

  After seeing such a ugly posts from our end , you not made complaints, but,sending me a personal warning mail advising that not to do further. From my heart I’m telling , you are GENTLE MAN sir,

  So so so sorry for disturbed you. I will never do this mistake again in life to anybody

  Bye sir

 26. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  கர்ணன் – நிறைய தானம் செய்தான். ஆனால், அதர்மத்தின் பக்கம் இருந்தான். அதுமட்டுமல்ல, துரியோதனனை, அவனுடைய துர்ச்செயல்களை, ‘நட்பின் அடிப்படையில் ஆதரித்தான். நல்லவனாக இருந்தாலும், தர்மத்தின் வழிப்படி ஒழுகாதவன், அப்படிப்பட்டவர்களின் கதியைத்தான் அடைய நேரிட்டது.

  கர்ணன் படத்தில், அவனுடைய பெருமையை உயர்த்திக்கூறும் விதமாக ஏபிஎன் அவர்கள், கொஞ்சம் அதிகமாகவே கர்ணனை உயர்த்தி வசனங்கள் வைத்திருப்பார். இது கதா’நாயகனை ஒரு படி உயர்த்தி எழுதுவதால் ஏற்படும் குறை. ஏபிஎன், அவருடைய வேலையில் ரொம்ப சின்சியர். சிவாஜியை, திருமங்கை மன்னனாக நடிக்கவைக்கும்போது, திருமால் வேடம் பூண்ட சிவகுமாரின், காலின் விரலிலிருந்து மெட்டி போன்றதைத் தன் வாயினால் கடித்து இழுப்பதாகக் காட்சி வைத்திருந்தார். காட்சி எடுத்தது திரிசூலம் கிராமப் பகுதி, அந்த மக்கள் காலைக் கடன் கழிக்கும் பகுதி. ஏபிஎன் நினைத்திருந்தால், கை விரலிலிருந்து மோதிரத்தைக் கழட்டுவதாகக் காட்சி வைத்திருக்கலாம். எத்தனை பேருக்குப் புராணம் தெரியப் போகிறது? சிவாஜியும், நடிப்பு என்று வந்துவிட்டால் சின்சியர். அதனால் காட்சி மிகச் சிறப்பாக அமைந்தது. இதைப் பற்றி சிவகுமார் அவர்கள் எழுதியுள்ளார்கள்.

  கர்ணன், அவன் விதிக்கு அவனே காரணமாக இருந்தான். ஒருவனால் ஒரு குறிக்கோளை மட்டுமே ஒழுகிவாழ இயலும். எல்லோருக்கும் நல்லவனாக இருக்க முடியாது. தானம் செய்வது என்ற குறிக்கோளை உடையவன் கர்ணன். அதுவே அவனது வீழ்ச்சிக்கும் காரணமாக அமைகிறது. கர்ணனுடைய நட்பு மெச்சத்தகுந்த நட்பல்ல. ‘உடுக்கை இழந்தவன் கைபோல்’ உடைய நட்பல்ல. நட்பு என்பது நண்பனைத் திருத்தும்படியாக இருக்கவேண்டும். இங்கு கர்ணன் துரியோதனன் என்ன செய்தாலும் ஆதரிப்பவனாக இருந்தான். துரியோதனனின் நலமே தன் குறிக்கோள் என்றிருந்தால் அவன், தனது தாய் கேட்ட வரங்களைக் கொடுத்திருக்கமாட்டான். தன்னுடைய தேரோட்டியின் (அவனும் பரம்பரை மன்னன் சல்லியன்) ஆலோசனையைத் தட்டியிருக்கமாட்டான். தர்மத்தின் வழி நின்று கண்ணன் அதர்மம் செய்கிறான் (போரில் அந்தக் காலத்தில் தர்மம் அதர்மம் என்று இருந்தது. இப்போதுதான் வெற்றி பெற எது செய்தாலும் அது தர்மம் என்றாகிவிட்டது). கர்ணன், அதர்மம் வழி நின்று தர்மம் ஓரளவு செய்தாலும், அவனுக்கு அது பயன் தரவில்லை. கர்ணன் செய்த அதர்மங்கள்-நட்பு, நண்பன் என்ற பெயரில், துரியோதனனின் நட்பை இழக்க விரும்பாமல் அவன் தவறு செய்தபோதும் அவனைத் திருத்த முயலாமல் ஆதரித்தது. துரியோதனன் பக்கம் நின்று போர் புரியவேண்டும் என்ற கடமை இருந்தபோது, குந்திக்கு வரங்கள் தந்து துரியோதனின் வலிமையைக் குறைத்தது. பீஷ்மர் இருக்கும்வரை, போர் புரிய மாட்டேன் என்றது. அவனுடைய குணம்தான் அவன் அழிவுக்குக் காரணம். (Comparison-செய் நன்றிக்காக, கும்பகர்ணன் ராவணன் பக்கம் நின்று போர் புரிகிறான். ஆனாலும், அரச சபையில் ராவணனின் தவறுகளைத் தைரியமாகச் சொல்லுகிறான். விபீஷனன், ராவணனின் தவறுகளைத் தைரியமாகச் சொன்னபோதிலும், அவனை விட்டு விலகி, தர்மத்தின்பக்கம் நின்று வழுவத் தலைப்படுகிறான். இருவரின் முடிவும் நாம் அறிந்ததே)

 27. selvarajan சொல்கிறார்:

  அய்யா …! நாளை 15 / ஆகஸ்ட் நம்நாட்டின் – நம்முடைய ” சுதந்திர தினம் ” .. ! மீண்டும் ஒரு : ” தண்ணீர் விட்டோ வளர்த்தித்தோம் ,,,? சர்வேசா ! இப்பயிரைக் கண்ணீராற் காத்தோம் ; கருகத் திருவுளமோ … எண்ணமெலாநெய்யாக எம்முயிரினுள் வளர்த்த வண்ண விளக்கிஃது மடியத் திருவுளமோ …

  ஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்தபினர் வாராது போலவந்த மாமணியைத் தோற்போமோ?
  தர்மமே வெல்லுமெனும் சான்றோர்சொல் பொய்யாமோ? கர்ம விளைவுகள் யாம் கண்டதெலாம் போதாதோ? … என்று முண்டாசுக்கவி அன்று பாடினான் ….

  இன்றும் ” எண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கியிரு எண்ணற்ற செய்போற் கலங்குவதுங் காண்கிலையோ? … மாதரையும் மக்களையும் வன்கண்மை யாற்பிரிந்து காத லிளைஞர் கருத்தழிதல் காணாயோ? ” என்று மேலும் பலவற்றை பாடியது — நினைவில் என்றுமே நிலைத்தே இருக்க வேண்டியது தானா ….. ? வாழ்க நம் சுதந்திரம் … !!!

 28. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்பர்களுக்கு,

  நண்பர் செந்தில் அவர்களிடமிருந்து
  ஆபாசமான வசவு வார்த்தைகளுடன் வந்திருக்கும்
  பின்னூட்டங்களை, சில காரணங்களுக்காக,
  நீக்காமல் அப்படியே விட்டிருக்கிறேன்.
  நண்பர்கள் பொறுத்துக் கொள்ளும்படி
  வேண்டுகிறேன்.

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

 29. SENTHILNATHAN COIMBATORE சொல்கிறார்:

  Respected KM Sir.

  Really I feel very so bad about the above communication – some communication.

  These kind of disturbances affects us aswell.

  நாம கோபப்பட்டா எதிரி ஜெயுச்சுருவான் …..

  எதிரி தோக்கனும்னா நாம அமைதியா இருக்கணும் ………

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செந்தில்நாதன்,

   நீங்கள் சொல்வது உண்மையே.
   உங்கள் அக்கறைக்கு நன்றி.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 30. Woraiyur Pugal சொல்கிறார்:

  ஈஷா அடி மாட்டு கூட்டம் இது,,,பெரிய எருமை என்ன செய்கிறதோ அதையே இந்த ஈஷா சின்ன எருமைகளும் செய்யும்..திருந்தாக் கூட்டம்…

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.