வெய்யில் அழகு – முத்துக்குமாரின் கவிதைகள் அதைவிட அதைவிட அழகு…

muthukumar

கவிஞர் கண்ணதாசனுக்குப் பின், கருத்துச்செறிவுடன்
கூடிய, அதே சமயம் மிக எளிமையான தமிழில் பாடல்கள்
எழுதியவர் நா. முத்துக்குமார். இன்னும் எத்தனையோ
உயரங்களுக்கு அவர் செல்வார் என்று எதிர்பார்த்தோம்.

41 வயதில் சாவு என்பது மிகவும் கொடுமையானது.
இந்த இழப்பு, நமக்கெல்லாம் ஒரு வகையில் என்றால்,
அறியாப்பருவத்தில் இருக்கும் அவரது இரண்டு
குழந்தைகளுக்கும், மனைவிக்கும் ஏற்பட்டுள்ளது
எந்த வகையிலும் ஈடு செய்யப்பட முடியாத இழப்பு..

முத்துக்குமார் அவர்களை இழந்து வாடும் அவரது
குடும்பத்து உறுப்பினர்களுக்கு நமது ஆழ்ந்த வருத்தங்களை
தெரிவித்துக் கொள்கிறோம்.

முத்துக்குமார் அவர்களின் நினைவாக ஒரு பாடல் –

பின் குறிப்பு –

இங்கு ஒரு விஷயத்தை நண்பர்களிடையே பதிய வைக்க
விரும்புகிறேன். பொதுவாக “மஞ்சள் காமாலை” என்கிற
விஷயத்தை நாம் சரியான கண்ணோட்டத்துடன்
அணுகுவதில்லை.

தண்ணீராலோ, தவறான பழக்க வழக்கங்களாலோ
வருவது என்றும், இதற்கு ஆங்கில மருத்துவத்தில்
சிகிச்சை எதுவும் இல்லை என்றும் நம்மிடையே
பரவலாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது

கீழாநல்லி வேரை அரைத்து சாறு பிழிந்து மூன்று நாள்,
தினம் மூன்று வேளை ஆட்டுப்பாலில் கலந்து
சாப்பிட்டால்,

உப்பு, புளி, காரம், எண்ணை வகைகள் சேர்க்காமல்
கொஞ்ச நாட்கள் பத்தியமாக உணவு உட்கொண்டால்
தானே சரியாகி விடும் என்கிற நம்பிக்கை
பெரும்பாலானவர்களுக்கு இருக்கிறது.
சில வருடங்கள் முன்பு நானும் இப்படித்தான்
நினைத்திருந்தேன்.

ஆனால் – உண்மை நிலை வேறு.
இது குறித்து நம்மிடையே சரியான விழிப்புணர்வு இல்லை.

ஆங்கில மருத்துவ முறைகளில் மஞ்சள் காமாலை நோயை
பல வகைப்பட்டதாக பிரிக்கிறார்கள்.

“ஹெபடைடிஸ் ஏ, பி, சி, டி’ எனச் சொல்லப்படும்
வகைகளில் “ஏ’, “பி’ வகைகள்
உயிரிழப்பை ஏற்படுத்தாதவை என்கிறார்கள்.

“சி’,”டி’ வகை மஞ்சள் காமாலைகள் உயிரிழப்புக்கான
வாய்ப்புகள் அதிகம் கொண்டவை.

இந்த வகை மஞ்சள் காமாலை நோய்
வைரஸ் பாதிப்பால் ஏற்படுவது…
உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளா விட்டால்,
உயிரிழப்பு வரை கொண்டு போய் விடக்கூடும்.

எனவே, மஞ்சள் காமாலை நோயால் பாதிப்பு ஏற்பட்டால்,
முதலில் அது எந்த வகை / பிரிவைச் சேர்ந்தது என்பதை
அவசியம் கண்டறிய வேண்டும்.
இதற்கு ரத்தப் பரிசோதனை அவசியம் செய்தாக வேண்டும்.

தாமாகவே இது இப்படித்தான் என்று தீர்மானம்
செய்து கொள்ளாமல், மஞ்சள் காமாலை நோயால்
யாருக்கு, எப்போது பாதிப்பு ஏற்பட்டாலும்,
உடனடியாக உரிய மருத்துவரிடம் சென்று காட்டி,
ரத்தப் பரிசோதனை செய்து கொண்டு அது எந்த வகையை
சேர்ந்தது என்று கண்டறிவது மிக மிக அவசியம்.

நண்பர்கள் இந்த செய்தியை மற்றவர்களுக்கும்
தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to வெய்யில் அழகு – முத்துக்குமாரின் கவிதைகள் அதைவிட அதைவிட அழகு…

 1. LVISS சொல்கிறார்:

  Within a short period he made a mark in the industry in the midst of many promising lyricists —

 2. selvarajan சொல்கிறார்:

  அய்யா ..! மகாகவி பாரதி – 38 – வயதிலும் …. கவிஞர் கண்ணதாசன் – 54 – வயதிலும் …. பட்டுக்கோட்டை கல்யாண சுதாரம் – 29 – வயதிலும் — தற்போது நா. முத்துக்குமார் – 41 – வயதிலும் நம்மை விட்டு பிரிந்தது மாபெரும் சோகம் — ஒரு வேளை இவர்களின் கவிதைகளை தான் விரும்பி கேட்க ” இறைவனின் ” விருப்பம் — அதிகமோ … ?

  அவர் ” இது என்ன மாயம் ” என்ற படத்திற்கு எழுதிய பாடல் வரிகள் : // இருக்கிறாய் இல்லாமலும் இருக்கிறாய்
  ஆதலால் இருக்கிறேன்
  இல்லாமலும் இருக்கிறேன்
  எங்கும் உன் முக பிம்பம்
  நெஞ்சில் வந்து அது தங்கும்
  வெற்றிடத்தில் என்னை விட்டு சென்றதேனடி
  கண்ணில் நீர் அது பொங்கும்———-
  சற்று முன்பு புன்னகைத்த முகம் எங்கடி ” என்று கேட்க வைத்து விட்டாரோ … ?

 3. KALAKARTHIK சொல்கிறார்:

  எஸ் .ராமகிருஷ்ணன் பேசும்போது சொன்னார்.”வேகம்.வேகம். எதிலும் வேகம்தான் முத்துக்குமாருக்கு”.
  அதேதான் கார்த்தியும்.வேகம்.வேகம்.1000 கனவுகள்.இதை செய்ய வேண்டும்.அதை செய்ய வேண்டும் என்று ஒரு நிமிடம் கூட சோம்பி இல்லாத குணம்.
  23 வயதில் எத்தனை சாதனை .கார்த்தியின் சாதனைகள்.இன்று இருந்திருந்தால் 35 வயதாக இருந்திருக்கும்.இன்னும் எத்தனை சாதனைகள் செய்திருப்பானோ?
  திட்டமிட்டு நடந்த விபத்தோ அல்லது தற்செயலாக நடந்த விபத்தோ .சாகிற வயதா?காலை 8.30 மணிக்கு என்னுடன் இட்லி சாப்பிட்ட மகன் 9.00 மணிக்கு இல்லை என்பதன் கொடுமை??????????????
  இதயம் இடைவிடாமல் அழுது கொண்டே இருக்கிறது.
  கார்த்திக் அம்மா

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   கார்த்திக் அம்மா,

   கவலை வேண்டாம்.
   அருகே உங்களைச் சுற்றி – பாருங்கள்.
   உங்கள் கார்த்திக் உங்களை விட்டு
   எங்கும் போக மாட்டான்.
   உங்கள் அருகிலேயே மீண்டும் வந்திருப்பான் –
   ஒரு பத்து, பன்னிரண்டு வயது
   பிள்ளையின் வடிவத்தில்.
   அவனை நீங்கள் தான் கண்டு கொள்ள வேண்டும்…

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 4. KALAKARTHIK சொல்கிறார்:

  நன்றி அண்ணா .
  தங்கள் ஆறுதல் வார்த்தைகள் மனதின் பாரத்தை குறைக்கிறது..
  அன்புடன்
  கார்த்திக் அம்மா

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.