“சிவம்” – “சவம்” ஆனது இதற்காகத்தானா….?

.

.

சவம் என்றால் செத்த பிணம் –
சிவம் அய்யா சிவம்….!!!

சிவம் சவமானது இதற்காகத்தானா….?

சமயலறையில் பெண்கள் பயன்படுத்தும்
கரண்டி, ஸ்பூன், கத்தியிலிருந்து,

பள்ளிப்பிள்ளைகள் பயன்படுத்தும் பென்சில்,
ரப்பர், டிபன் டப்பா, கலர் பென்சில், ஜியாமெட்ரி பாக்ஸ், பொம்மைகள் முதற்கொண்டு –

செல்போன், டிவி, ஷூ,
சோப்பு, செண்ட், மது முதற்கொண்டு –

ஏன் சீன தீபாவளி பட்டாசும் கூட –

மறந்து விட்டேனே – ஆப்பிள் கூட
வாஷிங்டனிலிருந்து ….!!!

அத்தனையும் அந்நியப் பொருட்கள் –
இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் தான்
நமது கடைகளிலும்,
மால்களிலும்….

வாங்குபவர்கள் இல்லாமலா
விற்பனைக்கு வருகின்றன…?

இதற்காகவா சிவம் – சவம் ஆனார்…?
வ.உ.சி செக்கிழுத்தார்…?

அரசாங்கத்துக்கு தான் சொரணையே இல்லை….
அந்நிய பொருட்களின் இறக்குமதியை தடுக்க
” சுதந்திர ” இந்திய அரசு எந்தவித
நடவடிக்கையும் எடுக்காது….
காரணம் ..? அரசு “கொள்கை முடிவு”களுக்கு
“அடிமை” யாகி விட்டது தான்…!!!

பயன்படுத்தும் நம் மக்களுக்காவது
சொந்த மண் மீது
அக்கறை இருக்க வேண்டாமா …?

சொந்த சகோதரர்களின்
வேலை வாய்ப்புகள் பறி போக
நாமே காரணமாக இருக்கலாமா…?

இறக்குமதி செய்யப்பட்ட,
அந்நிய கம்பெனி பொருட்களை –
இனி வாங்க மாட்டோம் என்று நாமாவது
இந்நாளில், உறுதி எடுப்போமா நண்பர்களே…?

—————-

பின் குறிப்பு –

” அந்நிய கம்பெனி “கள் தயாரிக்கும்
உபயோகிப்பாளர் பொருட்கள் ( consumer products )
எவையெவை என்று நண்பர்
“யாராவது”
சிரமம் பார்க்காமல், பின்னூட்டத்தில்
“பட்டியல்” போட்டுக் கொடுக்க
வேண்டுமென்று உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன்…!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

16 Responses to “சிவம்” – “சவம்” ஆனது இதற்காகத்தானா….?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   – மிக்க நன்றி செந்தில்குமார்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 1. selvarajan சொல்கிறார்:

  அய்யா … ! காலையில் எழுந்தவுடன் கையில் எடுக்கின்ற பற்துலக்கும் கருவியிலிருந்து — படுக்க போகும் போது பெரும்பாலானவர்கள் அணிகின்ற ஆடைகள் — மற்றும் முகத்துக்கான பசைகள் — எண்ணெய் வகைகள் வரை — எல்லாமே அந்நிய தயாரிப்புகள் தான் — அதில் ஒரு சிலது இங்கே தயாரிக்கப் பட்டாலும் — அதிலும் அவர்களின் கம்பெனி பெயர்களும் — பார்முலாக்களின் அடிப்படையில் தான் என்பதை மக்கள் புரிந்துக் கொள்ளும் நிலைமையில் தற்போது இல்லை — எல்லாமே நம்முடைய ” சுதேசி ” பொருள்கள் தான் என்கிற எண்ணத்தில் தான் வாழ்கிறார்கள்

  அதைப் பற்றிய ஒரு சிறிய பட்டியல் :—
  A True Hindustani .
  For more Details Please visit :
  esnips.com/user/dilhaihindustani

  TOOTH PASTE & DANT MANJAN.
  Foreign Companies Brand Colgate, Hindustan Unilever, Close-up, Pepsodent , Cibaca, Aqua Fresh, Amway, Oral-B, Quantum Etc
  Indian Companies Brand Patanjali MDH, Vicco Vajradanti, Baidyanath, Gurukul Pharmacy ,Choice, Neem, Anchor, Miswak, Babool, Promise Etc
  TOOTH BRUSH.
  Foreign Companies BrandColgate, Close-Up, Pepsodent, Aqua fresh, Cibaca Etc
  Indian Companies Brand Promise, Ajay, Ajanta, , Royal Classic, Etc
  BATHSOAP
  Foreign Companies BrandHindustan Unilever, Lux, Liril, Lifebuoy, Lasance, Denim, Camay, Dove, Revlon, Pears Rexona, Breeze, Hamam,Ok, Pounds, Detol, Clearsil, Pamolive, Amway, Johnsan Baby Etc
  Indian Companies Brand Patanjali, Nirma, Medimix, Neem, Nima, Jasmine, Masoor Sandal, Kuteer, Sahara, Himani, Glycerin, Godrej, (Cinthol, FairGlow, Shikakai, Ganga ) Wipro, Santoor
  SHAMPOO
  Foreign Companies Brand Colgate Pamolive , Hindustan Unilever(Lux, Clinic, Sunsilk, Revlon, Lakme) P&G (Pantene) Ponds, Old Spice, Shower 2 Shower, Head & Shoulders, Johnson Baby Etc
  Indian Companies Brand Patanjali,Wipro, Park Avenue, Swantik, Ayur Herbal, Keshnikhar, Hair & Care, Nycil, Arnika, Welwet, Dabur Vatika, Bajaj, Nile, Levandor, Godrej Etc
  WASHING POWDER SOAP
  Foreign Companies Brand Hindustan Unilever(Surf, Rin, Sunlight, Wheel, Ok, Vim) Arial, Check, Hanko, Reveal, Amway Quantam,
  Wool Cloth :Woolwash,
  Neel :Robin Blue, Tinopal, Skylark Etc.
  Indian Companies Brand Tata Shudh, Neema, Modi, Care, Sahara, Swastik, Vimal, Hipolin, Fena, Sasa, T-Series, Dr. Date, Ghari Detergent
  Wool Cloth- Gentil,
  Neel? Ujala, Ranipal, Nirma, Chamko, Dip Etc.
  SHAVING CREAM
  Foreign Companies Brand Old Spice, Pamolive, Ponds, Gillette, Danim Yardle Etc.
  IndianCompanies Brand Park Avenue, Premium, V-John, Emami, Balsara, Godrej, Etc.
  SHAVING BLADE
  Foreign Companies Brand Gillette ,7 O?clock, Willman, Wiltage Etc.
  Indian Companies Brand Topaz, Gallent, Super Max, Laser, Esquire, Silver Prince,Premium
  CREAM, POWDER BEAUTY COSMETIC PRODUCT
  Foreign Companies Brand Hindustan Unilever(Fair & Lovely, Lakme, Liril, Denim, Revlon) Protector And Gamble ,Clearcil, Cleartone, Charmis, Ponds, Old Spice, Nycil, Charlie, Johnson Baby Etc.
  Indian Companies Brand Patanjli, Borocil Ayur Emami, Viko, Boroplus, Borolin, Himami Gold, Nyle, Levander, Hair & Care, Nivea, Heavans, Cinthol Glory, Etc.
  READY MADE CLOTH
  Foreign Companies Brand Wrangler, Nike, Duke, Adidas, Newport, Puma Etc.
  Indian Companies Brand Cambridge, Park Avenue, Oxemburg, Bombay Dying, Ruf & Tuf, Triglar Jeans Etc…. என்னும் நிறைய இருக்கிறது ….அன்றாட உபயோக பொருட்களின் பட்டியல் — அதுமட்டுமின்றி — தலை வலியிலிருந்து — உயிர் காக்கும் மருந்து வரை எல்லாமே அவர்கள் வசம் தான் .. உரம் – பூச்சி மருந்துகள் — விதை — பயிரிடும் முறை எல்லாமே அவர்கள் பாணியில்தான் — நடந்தாக வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானது — எப்படி … ? யாரால் .. ? ஏன் … ?
  மேலும் உணவு விடுதிகளிலும் தற்போது இந்திய பாரம்பரிய உணவுகள் குறைந்து — அதிலும் அந்நியர் சமையற்கலை புகுந்து — நமது ” ஆயுளை ” குறைப்பதையும் அறியாமல் இருக்கும் நாம் — ” ஆடுவோமே — பள்ளு பாடுவோமே — ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று ” பாடிய பாரதி இப்போ இருந்தால் …. ? ” சிவம் – மட்டுமா … சவம் ” — நாமும் தானே …. ?

  இதே நாளில் அன்று ஆகஸ்ட் 15 2012 – ல் ஒரு இடுகையில் // 80 % க்கு மேல் வருமானம் தரும் விளம்பரதாரர்களுக்கு பிடிக்காத விஷயங்களை நாங்கள் எப்படி எழுத முடியும் – ? கேட்பது கொள்கையாளர் “இந்து- என்.ராம்” !
  Posted on ஓகஸ்ட் 15, 2012 by vimarisanam – kavirimainthan // … இந்து பத்திரிக்கை திரு ராம் அவர்களை பற்றி வந்த புதிய தலைமுறை ” அக்கினி பரீட்சை ” பேட்டியை பற்றி அய்யா … குறிப்பிட்டு எழுதிய பதிவில் திரு இந்து ராம் அவர்கள் ஒரு கேள்விக்கு அளித்த பதில் ஒன்றே போதும் அந்த பதில் : — // பன்னாட்டு நிறுவனங்களின் முறைகேடுகள் பற்றி எல்லாம்
  இந்து பத்திரிகையில் கண்டு கொள்ளுவதே இல்லையே
  என்று கேட்டதற்கு –

  பத்திரிகைக்கு 80 % க்கு மேல் வருமானம் வருவது
  விளம்பரங்களினால் தான். அந்த கம்பெனிகளுக்கு பிடிக்காத
  விஷயங்களை எழுதினால் – விளம்பரமும் போய் விடும்.
  அதன் மூலம் வரும் வருமானமும் போய் விடும் –
  இத்தகைய சூழ்நிலையில் பிராக்டிகலாகத் தான்
  இருக்க முடியும் என்கிறார் !

  அதே போல் – தமிழ் நாடு அரசாங்கத்திலும் அப்படித்தான்..
  கண்டித்து எதாவது எழுதினால்,
  உடனே விளம்பரத்தில் கை வைப்பார்கள்.
  வழக்கு தொடுப்பார்கள். சிவில் வழக்கு என்றாலாவது
  பரவாயில்லை. கிரிமினல் வழக்கு தொடுப்பார்கள்.
  கோர்ட்டில் போய் நிற்கும் கொடுமையை சந்திக்க நேரிடும் –
  என்றார்!

  மொத்தத்தில் – திரு என்.ராம்அவர்கள்
  எப்பேற்பட்ட கொள்கையாளர், அவர் ஈகோ லெவல்
  எப்படிப்பட்டது, அவரது உண்மையான முகம்
  (real personality) என்ன என்பதை
  மிகவும் தெளிவாக எடுத்துக் காட்டுவதாக இருந்தது
  இந்த பேட்டி. ( நாங்கள் வெறும் வியாபாரிகள் தான் – எங்களிடம்
  அநாவசியமாக லட்சியம், கொள்கை, நியாய அநியாயம்
  என்றெல்லாம் எதிர்பார்ப்பது அபத்தம் என்று இதைவிட
  வெளிப்படையாக ஒரு பத்திரிகை முதலாளியால்
  சொல்ல முடியுமா ?)
  இந்து பத்திரிகை சொன்னால் தப்பாக இருக்காது என்று –
  இன்னமும் நம்பிக் கொண்டிருக்கும் வாசகர்களுக்கு –
  இந்த பேட்டியை சமர்ப்பணமாக்கலாம் !
  பேட்டி எடுத்த திரு.குணசேகரனுக்கு பாராட்டுகள் ! // …… நாம் எப்படி அந்நியர்களுக்கு ” மீண்டும் அடிமையாகிப் ” போனோம் என்பது நன்கு புரியும் — அப்படி தானே … ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,
   நெல்லைத்தமிழன் –
   மற்றும் இதர நண்பர்களுக்கு,

   இந்த சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கிடையே,
   இந்த செய்தியை படிக்கும்போது,
   அது படிப்பவர் மனதில் நிச்சயம் ஒரு பாதிப்பை
   உண்டாக்கும். அதன் விளைவாக, சில நூறு பேர் –
   (சில ஆயிரமாகக் கூட இருக்கலாம் )- மனதிலாவது,
   இனி, முற்றாக இல்லாவிட்டாலும், முடிந்த வரையில்
   சுதேசி பொருட்களையே பயன்படுத்த வேண்டும் என்கிற
   ஒரு உறுதி ஏற்படக்கூடும்….

   அத்தகைய சிறிய அளவிலான மாற்றமாவது
   உண்டாகுமேயானால், நான் மிகவும் மகிழ்வேன்.

   நண்பர்களே – முடிந்த வரை இந்த இடுகையின்
   கருத்துக்களை, உங்களது தகவல் தொடர்பு ஊடகங்களின்
   மூலம் ( Facebook, google +, twitter – ect. )
   மற்றவர்களுக்கும் பரப்புங்களேன்.


   -நன்றியுடனும்,
   வாழ்த்துக்களுடனும்,
   காவிரிமைந்தன்

 2. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  படிக்க வருத்தமாக இருந்தாலும் இதுதான் இன்றைய நிலைமை. அரசாங்கம் இந்த விஷயத்தில் எதுவும் செய்யமுடியாது. மக்களிடம் தேசபக்தி இல்லை. மக்கள்கிட்ட கேட்டால், தலைவர்களைக் குறை சொல்லுவார்கள்.

  சொந்த நாட்டுக்கே விஷம் வைக்க வேண்டாம் என்று குறைந்தபட்சம் நாம் எண்ணுவோமானால், சுதேசித் தயாரிப்பான குளிர் பானங்களையும் தண்ணீரையும் பயன்படுத்துவோம். எது சுதேசித் தயாரிப்பு? காளிமார்க், மதுரையில் மாப்பிள்ளை வினாயகர் போன்றவை. சோப்பு (இதன் உண்மையான உபயோகம் என்ன?) மைசூர் சாண்டல், கதர் சோப்புகள், சந்திரிகா போன்றவைகளை உபயோகித்தால் என்ன? கைபேசிகளில்தான் வேறு வழியில்லை. ஒவ்வொருவரும் ஓரிரு பொருட்களில் மாத்திரம் நிச்சயமாக சுதேசித் தயாரிப்பு என்று எண்ணினால், அதுவே மிகப்பெரும் மாற்றத்தைக் கொண்டுவரும்.

  செல்வராஜன் அவர்கள் எழுதியதில், இந்து என். ராமை மட்டும் குறைசொல்லியதில் எனக்கு உடன்பாடு இல்லை. எல்லோருமே, பணம் பண்ணுவது மட்டும்தான் குறி என்று இருக்கிறார்கள். ஆனானப்பட்ட கல்கியே, எது விளம்பரம், எது கட்டுரை என்று தெரியாதபடி, பலவித செய்திகளை, கட்டுரைகளை வெளியிடுகிறார்கள். இவர்கள் (கல்கி, விகடன் போன்றவர்கள்), மற்றவர்களுக்கு அட்வைஸ் பண்ணுகிறார்கள். காந்தி, நேரு சொன்னால் ஏன் கடைசி இந்தியனும் அதை ஏற்றுக்கொண்டார்கள்? அவர்கள் பிறருக்குச் சொன்னதைத் தானும் கடைபிடித்தார்கள். இப்போ 120 கோடி இந்தியர்களில், 140 கோடிப்பேர் அடுத்தவனுக்குத் தான் அட்வைஸ் கொடுக்கிறார்கள். அதனால் ஒருவரும் கடைபிடிப்பதில்லை.

  ஆசை இருந்தால், அடிமையாக வேண்டியதுதான். யாரும் (விதிவிலக்கு இருப்பதுபோல் தெரியவில்லை) மற்றவர்களுக்கு அட்வைசும் பண்ண இயலாது.

  ஒவ்வொருவரும், குறைந்தபட்சம் இரண்டு பொருட்களையாவது, எப்போதும் சுதேசிப் பொருட்களாகவே வாங்கவேண்டும். நான் குளிர்பானம், உணவு, சோப்பு போன்றவற்றில் சுதேசியைத்தான் முடிந்தவரை கடைபிடிக்கிறேன். (உங்க ஊரில் ‘நான் இல்லை)

  • selvarajan சொல்கிறார்:

   நண்பரே … ! தங்களின் பின்னூட்டத்தில் : // செல்வராஜன் அவர்கள் எழுதியதில், இந்து என். ராமை மட்டும் குறைசொல்லியதில் எனக்கு உடன்பாடு இல்லை. // —– என்று குறிப்பிட்டுள்ளீர்கள் —– அது என்னுடைய கருத்து இல்லை……. திரு கா.மை . அவர்கள் ஆகஸ்ட் மாதம் 15 – 2012 – ம் வருடம் பதிவிட்ட இடுகையில் இருந்ததை அப்படியே காப்பி எடுத்து இங்கே போட்டு இருக்கிறேன் — மீண்டும் என்னுடைய பின்னூட்டத்தை பார்க்கவும் — அதே போல் – தாங்கள் குறிப்பிட்டுள்ள பாரதியார் பாடலை ” கர்ணன் ” படம் பற்றிய தங்களின் பின்னூட்டத்தின் — அடுத்துள்ள என்னுடைய பின்னூட்டத்தில் குறிப்பிட்டுள்ளேன் — என்பதையும் தங்களின் மேலான கவனத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன் … நன்றி … !!!

   • நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

    செல்வராஜன் சார்..’நான் உங்கள் மறுமொழியை (கர்ணன் இடுகையில்) படிக்கவில்லை. நீங்கள் எழுதியுள்ளது சரிதான். ஆனால், எல்லாப் பத்திரிகையாளர்களும், பத்திரிகை அதிபர்களும் இப்படி ஆகிவிட்டார்கள். இதையே, (பாப்புலர் வியூ) அரசியல்வாதிகள் செய்தால், இலவசம் கொடுத்து மக்களைக் கெடுக்கிறார்கள் என்று அதே பத்திரிகைகள் எழுதுகின்றன. அவர்களுக்கும் கிரெடிபிலிட்டி போய் ரொம்ப வருஷமாச்சு.

 3. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  இதற்கு சரியான பாடலை கா.மை சார் வெளியிட்டிருக்கலாம். இடுகையின் மதிப்பு இன்னும் கூடியிருக்கும்.

  தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரைக்
  கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   நெல்லைத்தமிழன்,

   நான் இடுகையை பதிவிடும்போதே இந்தப் பாடலையும்
   நினைத்தேன். பதிவிடாததற்கு இரண்டு காரணங்கள் –

   1) ஏற்கெனவே இரண்டு பாடல் ஆகி விட்டதே,
   கொஞ்சம் ஒவர் டோஸ் ஆகி விடுமோ
   என்று தான் தயங்கினேன்…

   2) இந்த காட்சியையும், பாடலையும் பார்க்கும்போதெல்லாம்
   நான் மிகவும் உணர்ச்சி மயமாகி விடுவேன். ஒரு
   இனம் புரியாத சோக உணர்வு ஆட்கொள்ளும். மீண்டு வர
   நிறைய நேரம் பிடிக்கும்.

   இருந்தாலும் உங்கள் விருப்பமே என் விருப்பம் –


 4. LVISS சொல்கிறார்:

  True that foreign goods are dominating our market — Some attempt is being made through Make in India campaign to make and promote our goods — We have to wait and see how far we will succeed in this —
  BTW Patanjali products are available in US —

  http://timesofindia.indiatimes.com/india/Khadi-may-become-Friday-dressing-in-govt-offices/articleshow/51319531.cms

  • Sanmath AK சொல்கிறார்:

   Bro,

   I guess “Make in India” scheme is something like attracting foreign players to manufacture in India – this is what my understanding is. Please correct me if I am wrong and also enlighten how this Make in India could help products developed/manufactured/produced and marketed domestically, by we Indians.

   Thanks Bro.

   • LVISS சொல்கிறார்:

    Mr Sanath It is true that the M I I is intended to make India a global design and manufacturing hub — My hope is that it will push for other products also to be made for India —

    • Sanmath AK சொல்கிறார்:

     Dear LVISS,

     You are right, MII will push for products to be made for India. But what we are speaking is about products by Indians for Indians and profits to be spent in India.

     Hope I am clear.

     Thanks.

     • R KARTHIK சொல்கிறார்:

      We should make India self sustained. Consume what you produce and produce what you are consuming. This will avoid us becoming market for multinationals.

      After that, export can be concentrated. Heard that malaysia has a policy that multinationals cannot take profit out of the country and have to reinvest in malaysia only.

 5. R KARTHIK சொல்கிறார்:

  FMCG is today fully occupied by foreign companies. We have some companies like Patanjali, wipro, vicco, … but still it is very difficult to find Indian alternatives.

  I always want to use swadeshi products. But given the globalization era, cant say any corporations belong to any country.

  The term ‘swadeshi’ must be defined as per the globalization era. There are several products here fully prepared in India, listed in our share market and marked by foriegn company (like most FMCG product of HUL, Glaxo, …). There are Indian companies almost importing parts and assembling here or sometimes just marketing here (like the electric scooters).

  Today i try to buy products prepared locally like getting oil and flour prepared from the neighboring ‘chekku’. Try to buy local grown items. Consuming local things is both good for health and economy.

 6. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  Kartik,

  Exactly this is what I want to say –
  We should produce all what we need / consume.
  Similarly we should consume only from what we produce.

  -with best wishes,
  Kavirimainthan

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.