( பகுதி-2 ) இந்த விளம்பரம் – ஹிந்துவில் ….படிப்பவர் முட்டாளா…?

.

.

முதல் பகுதியில் வெளிவந்த ஏர் இந்தியா
விளம்பரத்தில் உள்ளவற்றை புரிந்து கொண்டவர்கள்
அதிருஷ்டசாலி இந்தியர்கள்…

சரி – அந்த விளம்பரம் தான் புரியவில்லை…
கீழேயுள்ள இந்த விளம்பரமாவது யாருக்காவது
விவரமாகப் புரிகிறதா….?

swachh-3a

swachh-1a

– இரண்டு test -லும் தேறவில்லையா…?

சரி போகட்டும் – அடுத்து கீழே உள்ள தலைப்புகள்
என்ன சொல்கின்றன …? அவை எது குறித்தவை..?
என்பதையாவது உங்களால் புரிந்து கொள்ள
முடிகிறதா….?

தெரிந்தவர்கள் கை தூக்க – மன்னிக்கவும்,
பின்னூட்டங்களில் தெரிவிக்க முடியுமா ….?
முழுவதுமாகத் தெரியாவிட்டாலும் பரவாயில்லை…
ஒரு பாதியாவது தெரிந்தவர்கள்…?

—————

krishi ambani bima yojana

garib kalyan yojana

indradanush

sukanya samridi yojana

beti bachao, beti padhao yojana

sansad adarsh gram yojana

jeeva jyoti bima yojana

suraksha bima yojana

gram sinchai yojana

awas yojana

sansad adarsh gram yojana

PRASAD

Udaan

HRIDAY

swadesh darshan

swachh bharat abhiyan

bal swach abhiyan

deen dayal upadhyaya gram jyoti yojana

deen dayal upadhyaya grameen kausalya yojana

pandit deendayal upadhyay shramdev yojana

pradhan Mantri Fasal Bima Yojana

pradhan Mantri Jan Aushadhi Yojana

pradhan mantri jan dhan yojana

——————————————————————-

முதல் பகுதியில் வெளிவந்துள்ள ஹிந்து விளம்பரம்,
ஏர்-இந்தியா அறிவித்துள்ள 10 வித சலுகைப்பயணங்கள்…
( ஏர்-இந்தியா மத்திய அரசின் ஒரு இலாகா அல்ல…
அது ஒரு பொதுத்துறை நிறுவனம் மட்டும் தான்…)

அது, தமிழ்நாட்டில், ஒரு ஆங்கில பத்திரிகையில் –
ஹிந்தி மொழியில் விளம்பரம் வெளியிட்டால்
அதற்கு என்ன அர்த்தம்….?

முட்டாள்களே – இந்த சலுகைகள் எல்லாம்
இதைப் படித்து புரிந்து கொள்ளத் தெரிந்த
“இந்தி”யர்களுக்கு மட்டும் தான் என்றா….?

இரண்டாவதாக மேலேயுள்ள விளம்பரம்
ஒரு வாரத்திற்கு முன்பாக அதே ஹிந்து ஆங்கில
நாளிதழில், சென்னை பதிப்பில் வெளி வந்தது….

அது என்ன சொல்கிறது….?
ஸ்வச்ச பாரத் – அதாவது தூய்மையான இந்தியா
திட்டங்கள் பலவற்றைப் பற்றி விளக்குகிறது…
அவற்றின் பலன்களை நாம் பெற வேண்டுமானால் –
அதற்கு அடிப்படைத் தகுதி, “இந்தி” தெரிய வேண்டும்
– அப்போது தானே திட்டம் என்னவென்றே தெரிய வரும்…?

( முதலிலேயே ஒரு விஷயத்தை நான் தெளிவுபடுத்தி
விடுகிறேன். இந்தி மொழியை கற்றுக் கொள்வதற்கோ,
கற்றுக் கொடுப்பதற்கோ – நான் எதிரானவன் அல்ல….
எனக்கு இந்தி மொழி – எழுத, படிக்க, பேச – தெரியும்…!!!

என்னிடம் யாராவது இந்தி படிக்கலாமா என்று கேட்டால்,
தாராளமாகப் படிக்கலாம்; சமயத்தில் உதவும்
என்று தான் சொல்வேன்…

“இந்தி” திணிக்கப்படுவதைத் தான் எதிர்க்கிறேன்…
இந்தி தெரியாதவர்கள் இரண்டாம் தர குடிமகன்களாக
நடத்தப்படுவதைத் தான் எதிர்க்கிறேன்….)

பிரதமர் மோடிஜி பதவியேற்ற பிறகு துவக்கப்பட்ட
திட்டங்களுக்கு சூட்டப்பட்டுள்ள பெயர்கள் தான்
மேலே உள்ளவை –

தமிழகத்தில் வாழும் நாமும் – இந்தியர் தானே…?

நம்மில் எவருக்காவது இந்த திட்டங்கள்
எதைக்குறித்தவை என்று புரிகிறதா…?

நம்முடைய சொந்த, தாய்நாட்டிற்கு நம்மையே –
“அந்நியர்” ஆக்குகின்றனவா இந்த திட்டங்கள்…?

உள்ளே “சமாச்சாரம்” எப்படி இருந்தாலும் சரி,
குறைந்த பட்சம், தலைப்பாவது விஷயம்
எதைப்பற்றியது என்பதை
புரிய வைக்க வேண்டுமல்லவா…?

இது நமது விவசாயிகளுக்கானதா…
கர்ப்பிணி பெண்களுக்கானதா….
படிக்கும் பிள்ளைகளுக்கானதா…
கிராமத்தவர்களுக்கானதா…
நகரத்தவர்களுக்கானதா ….
வானிலை பற்றியதா…
சுகாதாரம் பற்றியதா…
விவசாயம் பற்றியதா ..
பயிர் பாதுகாப்பு /காப்பீடு பற்றியதா…
உயிர் பாதுகாப்பு / காப்பீடு பற்றியதா…

அல்லது –

நடிகர் தனுஷைப் பற்றியதா…? ( indradanush )
நடிகை சுகன்யாவை பற்றியதா…?
( sukanya samridi yojana )
அம்பானிக்கு என்ன ஆயிற்று…?
( krishi ambani bima yojana )

– இவையெல்லாம் எதைப் பற்றியது
என்பதை நாம் எப்படி அறிவது…?

– தமிழ் நாட்டில் உள்ளவர்களுக்கு – இவற்றைப் பற்றி
எல்லாம் ஒன்றும் தெரியவேண்டியது அவசியம் இல்லை
என்று மத்திய அரசு கருதுகிறதா…?

அல்லது இதைப்பற்றி எல்லாம் –
மத்திய அரசின் திட்டங்கள் பற்றி எல்லாம் –
தெரிந்து கொள்ள வேண்டுமானால், மரியாதையாக
“இந்தி” கற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்கிறதா…?

“One Nation – One Tax” என்று முழங்கிய பிரதமர்
” also – One Language” என்று வெளியே சொல்லாமலே
நடைமுறையில் அமல்படுத்த துடிக்கிறாரா..?

ஹிந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை
ஆங்கிலமும் மத்திய அரசின் அலுவலக மொழியாக
நீடிக்கும் என்று பாராளுமன்றத்தில் கொடுக்கப்பட்ட
உறுதிமொழியை மீறும் துணிச்சலை இவர்களுக்கு
யார் கொடுத்தது….?

.
.
( தொடர்கிறது – பகுதி-3-ல் )

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to ( பகுதி-2 ) இந்த விளம்பரம் – ஹிந்துவில் ….படிப்பவர் முட்டாளா…?

 1. Srihari சொல்கிறார்:

  கே.எம்.

  காங்கிரஸ் ஆனாலும் சரி, பிஜேபி ஆனாலும் சரி
  மக்களை ஏமாற்றுவதில் ஒருவருக்கு ஒருவர்
  சளைத்தவர் இல்லை. சத்தம் போடாமல் கழுத்தை
  அறுப்பதில் யாரும் குறைவு இல்லை.
  முன்பு மன்மோகன் சிங் பேசாமலே கழுத்தை
  அறுத்தார். இப்போது ந.மோ. பேசிப் பேசி கழுத்தை
  அறுக்கிறார். நீங்கள் சொன்னது போல் பிஜேபி
  ஒன் நேஷன் – ஒன் லாங்குவேஜ் பாலிசியை
  சொல்லாமலே நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.
  பிஜேபி யில் ஜெட்லியை தவிர வேறுஎந்த தலைவராவது
  ஆங்கிலத்தில் பேசுகிறார்களா?
  “சிறுமை கண்டு பொங்குவாய்” இந்த வயதிலும்
  நீங்கள் ஒவ்வொரு சிறுமையைக் கண்டும் சீறுவது
  ஆச்சரியத்தை தருகிறது. உங்களது உடல் நலத்திற்காக
  பிரார்த்திக்கிறேன்.

  ஸ்ரீஹரி

  • Subramanian.K. சொல்கிறார்:

   ஒருவர் இங்கு அடிக்கடி எழுதுவார்;காங்கிரஸ் -பினாமி.
   பாஜக -சுனாமி என்று. அது மிகவும் சரியான கமெண்ட்.
   காங்கிரஸ் மெதுவாக நுழைத்தது. பாஜக வேகமாக
   சத்தமே போடாமல் உள்ளே நுழைத்துக் கொண்டிருக்கிறது.
   தமிழக அரசியல் தலைவர்கள் முட்டாள்தனமாக
   பள்ளிக்கூடங்களில் ஹிந்தி/சம்ஸ்கிருதம் optional subject
   ஆக சொல்லிக் கொடுக்கப்போவதைப் பற்றி கண்டனம்
   செய்து கொண்டிருக்கிறார்கள். பள்ளிக்கூடங்களில்
   வரப்போவது optional தானே. ஆனால் இப்போது ஏற்கெனவே
   பல விதங்களில் பஜக அரசு இந்தியை அதி வேகமாக
   நுழைத்து விட்டது. ஆங்கிலத்தில் பேசுவதில்லை என்று
   பாஜக தலைவர்கள் எல்லாரும் சத்தியம் செய்திருக்கிறார்கள்
   போலும். எவனைப்பார் இந்தி தான்.
   தமிழ்நாடு தூங்கிக்கொண்டிருந்தால் தலையில் மிளகாய்
   அரைத்து விட்டு போய்க்கொண்டே இருப்பான். எப்படியும்
   இங்கிருப்பவர்கள் பஜகவுக்கு ஓட்டு போடப்போவதில்லை
   என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும். கத்தினால் கத்திக் கொண்டே
   இரு என்று அவன் செய்ய நினைத்ததை செய்து கொண்டே போவான்.
   கண்ட கண்ட விஷயத்திற்கெல்லாம் டிவி டிபேட் போடுகிறார்கள்.
   இதை எவனாவது கவனிக்கிறானா ?
   இன்று உண்மையான சமூக அக்கறை எவருக்கும் இல்லை.

  • LVISS சொல்கிறார்:

   Mr Srihari Apart from Jaitley Smriti Irani speaks in English — She also mixes Hindi and English like Jaitley —
   It is not that they dont know English but they mostly stick to Hindi Even Mr Lalu Prasad speaks reasonably good English —

 2. Sanmath AK சொல்கிறார்:

  KM Sir,

  I strongly believe British’s strong presence in Tamil Nadu combined with anti-hindi agitation happened during DMK’s initial days gave South Indians, especially Tamilians a good hold on English(as second language) which has been helping us to grow professionally (especially in IT & ITES industry). English has become a global business plus communication plus bridging language. Though Japanese internally work with Japanese language, to communicate with the outside world they have exclusive companies for communication. What PM doing(in this hindi thing) is highly against his corporate-friendly image. We do not need to worry about this. Those corporate will bite him.

  I have seen, North Indians find it hard in using English(I do not mock that). They realized they lost industrial development because of that(intensity cud be very little). I have seen their hatred towards us in this sense. That hatred should be taken in positive sense in improving their standard of english and then to get mingle with the global business environment. Instead these guys are going back. If TN government take proactive steps, even now we can again reach the top spot of development with increased number of job opportunities.

  Thanks.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Sanmath,

   A very clear way of expressing….
   Fine.
   I had wonderful experience
   in my official life – in handling
   north indians suffering from want of
   knowledge in English.

   -with best wishes,
   Kavirimainthan

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.