( பகுதி-3 ) இந்த விளம்பரம் — சிங்கப்பூரில் முடியுமென்றால் இந்தியாவில் ஏன் முடியாது….?

singapore logo

மேலே தொடரும் முன்னர் ஒரு சின்ன வீடியோவை
இங்கு தர விழைகிறேன். அண்மையில் சிங்கப்பூர் பிரதமர்
அமெரிக்கா சென்றபோது, அவருக்கு வரவேற்பு அளித்த
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அவர்கள் சிங்கப்பூர்
பிரதமரை, அவரது நாட்டின் நான்கு ஆட்சி மொழிகளிலும்
(தமிழையும் சேர்த்து ) வணக்கம் கூறி வரவேற்ற
ஒரு மன நெகிழ்வு தரும் காட்சி….

சின்னஞ்சிறு நாடான சிங்கப்பூர் கூட தன் நாட்டில் வெறும்
ஒன்பது சதவீத மக்களின் மொழியை ஆட்சி மொழியாக

அங்கீகரிக்கும்போது, இவ்வளவு பெரிய தேசமான இந்தியா
எல்லாருக்கும் பொதுவாக இரண்டு மொழிகளை மட்டும்
(ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ) ஆட்சி மொழியாகத்
தொடர்வதில் என்ன சிரமம் இருக்க முடியும்….?

மனம் இல்லை – இந்தியைத் தவிர வேறு எதையும்
ஏற்க அவர்களுக்கு மனம் இல்லை – அவ்வளவே…

விஷயத்தை தொடர்வோம் –

ஆட்சிமொழி தொடர்பாக சட்டபூர்வமான நிலை என்ன…?

விக்கிபீடியாவிலிருந்து சில பகுதிகள் மட்டும் –

———————————-

The Indian constitution, in 1950, declared Hindi in
Devanagari script to be the official language of the union.
Unless Parliament decided otherwise,
the use of English for official purposes was to cease
15 years after the constitution came into effect, i.e.,
on 26 January 1965.
……
…..

In late 1964, an attempt was made to expressly provide for
an end to the use of English, but it was met with protests
from states such as
Maharashtra,
Tamil Nadu,
Punjab,
West Bengal,
Karnataka,
Puducherry and
Andhra Pradesh.
Some of these protests also turned violent.

As a result, the proposal was dropped, and the Act itself was
amended in 1967 to provide that –

the use of English would not be ended
until a resolution to that effect was passed by the
legislature of every state that had not adopted
Hindi as its official language,
and by each house of the Indian Parliament.

The position was thus that the Union government continues
to use English in addition to Hindi for its official purposes
as a “subsidiary official language,”

——————

சட்டபூர்வமான நிலை இவ்வாறு இருக்கும்போது,
அவ்வப்போது மத்திய அரசு ( பினாமி காங்கிரசாக
இருந்தாலும் சரி, சுனாமி பாஜக வாக இருந்தாலும் சரி )
வாலாட்டிப் பார்ப்பது ஏன்…?

நாம் எல்லாரும் இளிச்சவாயர்கள் என்பதால் தானே…?
பின் என்ன, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக
பாஜக அரசு படுவேகமாக இந்தியை எல்லா துறைகளிலும்
திணித்துக் கொண்டே இருக்கிறது…

மேலே இரண்டு ஹிந்து விளம்பரங்களிலும் பார்த்தோம்…
தொடர்ந்து மோடிஜி சர்க்கார் உருவானபிறகு
உருவான திட்டங்கள் அனைத்துக்குமே ஹிந்தி பெயரையும்
பார்த்தோம்… உங்களில் யாருக்காவது, எதாவது புரிந்ததா…?

நீங்கள் எல்லாம் இந்திய குடிமக்கள் இல்லையா …?
உங்களுக்கெல்லாம் மத்திய அரசின் இந்த
அறிவிப்புகள் புரிய வேண்டிய அவசியம் இல்லை
என்று மத்திய அரசு கருதுகிறதா…?

எங்கே போனார்கள் தமிழக அரசியல்வாதிகள்….?
ஏன் இந்த மயான மௌனம்…?

எங்கே போயின அந்த டிவி டிபேட்’வாலாக்கள்…?
இதெல்லாம் விவாதிக்கக்கூடிய பொருளாக
அவர்களுக்கு உறை(?)க்கவில்லையா…?

சம்ஸ்கிருதம் ஒரு வழக்கு மொழி அல்ல…
அது என்றைக்குமே ஆட்சி மொழியாகவோ,
தமிழுக்கு போட்டியாகவோ இருக்க முடியாது.
மத்தியில் ஆட்சி மொழியாக
அதற்கு வாய்ப்பே இல்லை என்பதால் சம்ஸ்கிருதம்
நமக்கு ஒரு பிரச்சினையே அல்ல.

ப்ரென்ச், ஜெர்மனி போன்ற அயல் நாட்டு மொழிகளை
கற்க வசதிகள் ஏற்படுத்தித் தரும்போது, இந்தியும்,
சம்ஸ்கிருதமும் கற்க ( விரும்புபவர்களுக்கு மட்டும் )
வசதி ஏற்படுத்திக் கொடுப்பதை குறை சொல்வதில்
அர்த்தமில்லை. இதையே கட்டாயப்படுத்தினால்,
அது நிச்சயம் ஏற்கப்பட மாட்டாது. அவர்கள்
அத்தகைய உத்தேசம் எதையும் கூறவில்லை.

நாம் எதிர்ப்பது – திணிப்பைத்தான்…
இந்தி திணிப்பைத் தான்….

ஆட்சி மொழியாக இந்தி மட்டுமே இருக்க முடியும்
என்கிற மத்திய அரசின் –
மூர்க்கத்தனமான,
முட்டாள்தனமான,
முயற்சியைத் தான் நாம் எதிர்க்கிறோம்.

இந்தியாவின் 22 அதிகாரபூர்வமான மொழிகளையும்
மத்திய அரசின் ஆட்சிமொழியாக நடைமுறைப்படுத்துவதில்
உள்ள சிக்கல்கள் காரணமாக –

குறைந்த பட்சம் ஆங்கிலமாவது மத்திய ஆட்சி மொழியாக
தொடர வேண்டும் என்பது தான் நியாயமானதும்,
இன்றைய தினத்தில் சட்டபூர்வமான நிலையும் கூட.

இதை மீற முயற்சிப்பது இந்தி வெறி பிடித்த
பாஜக,
காங்கிரஸ்
அரசியல்வாதிகளாக இருந்தாலும் சரி –
மத்திய அரசாக இருந்தாலும் சரி –
தமிழகம் உட்பட இந்தி பேசாத மாநிலங்கள் அந்த
முயற்சிகளை முழு மூச்சுடன் எதிர்த்துக் கொண்டே தான்
இருக்கும் என்பதை அவர்களுக்கு உணற வைக்க வேண்டும்…

நண்பர் ஒருவர் பின்னூட்டத்தில் சரியாகவே
எழுதி இருக்கிறார். பாஜக என்றைக்குமே தமிழ்நாட்டில்
ஆட்சிக்கு வரப்போவதில்லை. எனவே, தமிழ் நாட்டினரின்
உணர்வுகளை அவர்கள் சீரியசாகவே எடுத்துக்
கொள்வதில்லை.

காவிரியாகட்டும்,
மேகதாதுவாகட்டும்,
முல்லைபெரியாறு ஆகட்டும்,
மீனவர் பிரச்சினையாகட்டும்,
கச்சத்தீவு ஆகட்டும்,
ஈழத்தமிழர் பிரச்சினையாகட்டும்,
பாலாறு தடுப்பணை விவகாரமாகட்டும்,
மீதேன் விவகாரம் ஆகட்டும்,
கெயில் குழாய் பதிப்பு விவகாரம் ஆகட்டும்,
ஜல்லிக்கட்டு ஆகட்டும் –

தமிழகத்தின் எந்த பிரச்சினையிலும் மத்திய அரசோ,
பாஜகவோ சீரியசாகவே இல்லை.

நாம் விழித்துக் கொண்டே இருக்கவில்லையென்றால்,
நமது தலையில் மிளகாய், துவையல் எல்லாம்
அரைத்து விட்டுப் போய்க்கொண்டே இருப்பார்கள்…

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

12 Responses to ( பகுதி-3 ) இந்த விளம்பரம் — சிங்கப்பூரில் முடியுமென்றால் இந்தியாவில் ஏன் முடியாது….?

 1. shan சொல்கிறார்:

  வெளிநாட்டு செல்பேசி நிறுவனம் கூட பல இந்திய மொழிகளில் தங்கள் பதிப்பை வெளியிடுகின்றன, ஆனால் மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் மக்கள் இலகுவாக கொள்கைகளை அறிந்துக் கொள்ளும் வகையில் இந்தியை தவிர வேறு மாற்று மொழி இல்லை.

  https://india.gov.in/hi/topics

 2. jksm raja சொல்கிறார்:

  BJP அரசு ஹிந்தியை இவ்வளவு தீவிரமாக திணிப்பதற்கு ஹிந்திமேல் அவர்களுக்கு உள்ள பாசம் அல்ல காரணம். குஜராத்தை சேர்ந்த மோடி வளர்ச்சியை முன் வைத்து பதவிக்கு வந்தார். ஆனால் ஒரு வளர்ச்சியையும் அவரால் கொண்டு வரமுடியவில்லை. வட இந்தியாவில் மோடிமீது அதிருப்தி ஏற்பட்டு குஜராத் வாலா என உணர்வதற்கு முன் அவர் நான் ஹிந்தி வாலா தான் என்னை நிராகரித்துவிடாதீர்கள் என அவர்கள் உணரும் விதமாகவே இப்பிடியான இந்தி திணிப்பை மேற்கொள்கிறார்.

 3. selvarajan சொல்கிறார்:

  இந்தி திணிப்பின் வேகத்தை கட்டுப்படுத்தியது அல்லது இந்தி திணிப்பை தடுத்த வரலாற்றில் மைல் கல்லாக கீழ் காணும் மூன்று நிகழ்வுகளைக் கருதலாம்.
  1.இந்திய அரசியல் நிர்ணய சபையின் முடிவில் மாற்றத்தை ஏற்படுத்தியது.
  2.நேருவின் உறுதிமொழி (சிறுபான்மையினர் விரும்பும் வரை ஆங்கிலத்தை அலுவல் மொழியாக தொடர்வது பற்றியது).
  3.1968ல் நீண்ட போராட்டத்துக்குப் பின் நேருவின் உறுதிமொழியை சட்டமாக்கியது.(லால்பகதூர் சாஸ்திரியின் இந்தி திணிப்பு முயற்சியை முறியடித்தது) —

  இன்று இருக்கின்ற காங்கிரஸ்காரர்கள் போல இல்லாமல் — அன்று காங்கிரஸ் ஆட்சியிலும் — கட்சியிலும் முக்கிய பங்காற்றிய பல மாநிலங்களை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களின் எதிர்ப்பும் பிரதானமாக இருந்ததால் தான் — சட்டமாக்க முடிந்தது ….

  அப்படி இந்தி திணிப்பை எதிர்த்தவர்களில் முக்கியமானவர்கள் — டி. கிருஷ்ணமாச்சாரி — துர்காபாய் — என். ஜி. ரங்கா– கோபலசாமி அய்யங்கார் போன்ற தென்னிந்திய தலைவர்களும் — மேற்கு வங்கத்தை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களும் — அன்று மத்திய அமைச்சராக இருந்த சி. சுப்பிரமணியம் — அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள் திரு காமராஜர் — k சஞ்சீவ ரெட்டி– நிஜலிங்கப்பா– ஹனுமந்தையா போன்றோரும் முதலாவது மொழி கமிஷன் 1954 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டதின் பரிந்துரை { அந்த பரிந்துரை என்னவென்றால் — மத்திய அரசின் சில துறைகளில் ஆங்கிலத்தின் உபயோகத்தை நீக்கிவிடவும், அதற்குப் பதிலாக ஹிந்தியை உபயோகிக்கவும் மொழி கமிஷன் செய்திருந்த பரிந்துரையை அ.இ.கா.க. தீர்மானம் ஏற்றுக்கொள்ளுவதாக இருந்தது. } இதை எதிர்த்து குரல் எழுப்பியதாலும் தான் நேருஜி ஒரு உறுதி மொழியை கொடுத்தார் என்பது வரலாறு …

  அப்போது எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ்கார்களை போல — இன்று ஒரு ஆளும் – இல்லை என்பதும் — பிராந்தியங்களில் உள்ள மத்தியில் ஆளுகின்ற பா . ஜ. க. கட்சியின் தற்போதைய பிரதிநிதிகள் வாய்மூடி மௌனிகளாக — கோழைகளாக இருப்பது ஒன்றும் ஆச்சர்யமில்லை …

  ஆனால் 1965 — மற்றும் 1967 — களில் இந்த” இந்தி திணிப்புக்கு ” தமிழகத்தில் இருந்த எதிர்ப்பும் — எழுச்சியும் இன்று மழுங்கிப்போய் — கிடப்பதன் காரணம் என்ன … ? அன்று பல உயிர்கள் பலியானது — பிற்காலத்தில் மீண்டும் திணிப்பு பிரச்சனை எழுந்தால் — சும்மா வாய்மூடி வேடிக்கை பார்க்க தானா … ?

  தற்போதைய மத்திய பா.ஜ.க .அரசு எப்படியெல்லாம் இந்தியை திணிக்க பாடு படுகிறது என்பதை விலாவரியாக இடுகைகளில் திரு .கா.மை. அவர்கள் கூறியிருக்கிறார் —

  ஜனாதிபதி கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தி மொழியை பாதுகாத்திட அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் இந்தியில் கையெழுத்திட வேண்டும் என்று பேசினார். மத்திய அரசின் இந்த நடவடிக்கைகள், இந்தியை அலுவல் சார்ந்த மொழி என்ற வடிவத்தில் திணிக்க மத்திய அரசு முயல்வது வெட்ட வெளிச்சமாகிறது ….

  மத்திய அரசுப்பணியில் அலுவலக பணிகள் முழுவதையும் இந்தியில் செயதால் சலுகைகள் அதிகம் பெறலாம் என்று ” வியாபார ரீதியிலும் ” ஆசை வார்த்தைகளை கூறி — திணிக்க முயலுவதும் — வேதனையா — வேடிக்கையா … ?

  மத்தியில் ஆட்சிக்கு வருபவர்கள் எந்த தேசிய கட்சியை சேர்ந்தார்களாக இருந்தாலும் — ” தமிழகத்தை ” காலம் – காலமாக புறக்கணிப்பதும் — ஜீவாதார உரிமைகளை பெற தடையாக இருப்பதும் — உச்ச நீதிமன்ற உத்திரவைக் கூட அமுல்படுத்தாமல் பாராமுகமாக இருப்பதும் — ஏன் … பிரிவினையை தூண்ட நினைக்கிறார்களோ … ?

  ஜல்லிக்கட்டு பற்றி பா.ஜ.க.வை சேர்ந்த மேனகாகந்தி ஒரு நிலைப்பாட்டையும் — இங்குள்ள பா.ஜ.க. பிரமுகர்கள் மற்றும் ஒரேயொரு இணை அமைச்சரின் நிலைப்பாடும் வேறு – வேறு விதமாக இருப்பதும் — யாரை ஏமாற்ற … ? ஒரு வேலை ” ஜல்லிக்கட்டு ” என்கிற பெயரை இந்தியில் நல்ல எடுப்பான பெயராகவும் — அம்பானி — அதானி — டாட்டா மற்றும் வெளிநாட்டு குளிர்பான கம்பெனிகள் இந்த வீர விளையாட்டை ” ஸ்பான்சர் ” செய்வதாகவும் இருந்தால் — அனுமதி அளிப்பார்களோ … ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   இவையெல்லாம் –
   சுமார் 50 ஆண்டுகளுக்கும் முன்பாக நடந்தவை….

   என் போன்ற வயதில் உள்ளவர்கள் அநேகமாக
   பாதி விஷயங்களை மறந்திருப்பார்கள்…
   மீதி குறித்து அரைகுறை நினைவில் இருப்பார்கள்….

   இன்றைய தலைமுறைக்கு இதெல்லாம்
   சுத்தமாக தெரிந்திருக்காது…
   தெரியவே வாய்ப்பு இல்லை …

   மிக அருமையாக விவரங்களை தொகுத்து
   தந்திருக்கிறீர்கள். மிக்க நன்றி.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 4. ravi சொல்கிறார்:

  //ஆனால் 1965 — மற்றும் 1967 — களில் இந்த” இந்தி திணிப்புக்கு ” தமிழகத்தில் இருந்த எதிர்ப்பும் — எழுச்சியும் இன்று மழுங்கிப்போய் — கிடப்பதன் காரணம் என்ன … ? அன்று பல உயிர்கள் பலியானது — பிற்காலத்தில் மீண்டும் திணிப்பு பிரச்சனை எழுந்தால் — சும்மா வாய்மூடி வேடிக்கை பார்க்க தானா … ? ///
  இந்த போராட்டத்தில் செத்தவர்கள் பெயரை சொல்லுங்கள் .. இவர்கள் பிள்ளைகள் என்ன ஆனார்கள் ?? குடும்பம் ??
  எங்கள் பகுதியில் ஒருவர் இந்த போராட்டத்தில் இறந்தார்.. அவர் குடும்பம் சின்னாபின்னமானது ஆனது தான் மிச்சம்.. எந்த தலைவரும், தலைவியும் இங்கே வந்து ஒன்றும் செய்யவில்லை ..
  போராட்டங்கள் என்பது இங்கே அப்பாவிகள் சாவதற்கு, அந்த பிணத்தை வைத்து கொண்டு அரசியல் வியாதிகள் அரசியல் செய்வதற்கு மட்டுமே..
  தலைவர்களும், தலைவிகளும் தாராளமாக போராடி உயிரை விடட்டும்..
  தமிழ் மொழி மற்றும் ஈழ போராட்டம் , இவைகள் இரண்டும் வைத்து முடிந்த அளவு அரசியல் செய்தாகி விட்டது ..மக்களும் இனிமேல் இந்த போராட்டங்களை கண்டு கொள்ள போவதில்லை ..

 5. Ramesh சொல்கிறார்:

  அய்யா கா.மை-க்கு வணக்கம்.
  நீங்கள் இந்தி திணிப்பைப் பற்றி எழுதியவுடன் நான் இந்த விஷயத்தைப்பற்றி கண்டிப்பாக எழுத வேண்டும் என்று நினைத்தேன். பல அலுவல் காரணமாக எழுத இயலவில்லை.
  நான் கடந்த 10 வருட காலமாக சிங்கப்பூரில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறேன். இங்குள்ள தமிழ் மக்கள் எந்த அளவு தமிழை பேசுகிறார்களோ இல்லையோ, ஆனால் அரசாங்கத்தின் அனைத்து செயல்பாடுகளிலும் தமிழுக்கு நிச்சயமாக மரியாதை உண்டு. அரசாங்கத்தின் ஒரு வாழ்த்து பேழை அல்லது கட்-அவுட் களில் கூட இங்கே நான்கு அங்கீகரிக்கப்பட்ட மொழியினை காண முடியும். எந்த புதிய அரசாங்கத்தின் திட்டமாக இருந்தாலும் அதனை ஒவ்வொரு குடிமக்களுக்கும் மற்றும் நிரந்தரவாசிகளுக்கும் தனியான அஞ்சல் மூலம் (நான்கு மொழிகளும் உள்ள கையேடு) தெரிவிப்பார்கள். என்னிடம் உள்ள அப்படிப்பட்ட அரசாங்கத்தின் ஒரு தமிழ் பிரதியை உங்களுக்கு தனியாக மின்-அஞ்சலில் அனுப்பி வைக்கிறேன். மேலும், இந்த நாட்டில் உள்ள DBS எனும் வங்கியின் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரத்தில் (ATM-ல்) தமிழை பயன்படுத்த முடியும். என் மகள்கள் இருவரும் இங்கு தமிழ் படிக்கின்றனர். அனைத்து பேருந்து, இரயில், விமான நிலையங்களிலும் தமிழில் பெயர் பலகைகளும், குறியீடுகளும் இருக்கும். உண்மையில், எனக்கு தமிழில் பேசும் அல்லது எழுதும் ஆர்வமோ இந்த ஊருக்கு வந்த பின்பு மேலும் அதிகரித்து உள்ளது. இங்குள்ள ‘உமறு புலவர்’ தமிழ் மொழி நிலையத்தில் குறைந்த பட்சம் மாதத்தின் முதல் இரு சனிக்கிழமைகளில் தமிழ் சம்பந்தமான நிகழ்ச்சிகள் நடைபெறும். சில மாதங்களில் அனைத்து சனிக்கிழமைகளும் தமிழ் நிகழ்ச்சிகளால் நிரம்பி வழியும். http://www.uptlc.moe.edu.sg/
  இந்த நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் இங்குள்ள தமிழ் மக்களின் ஆதரவு மட்டுமல்லாது அரசாங்கத்தின் ஆதரவும் உண்டு. பல நேரங்களில் மற்ற இன மக்களும் இவற்றில் கலந்து கொள்வார்கள். சித்திரையில் ‘தமிழ் மொழி மாத விழா’, ஆடி மாதத்தில் – “திருமுறை மாநாடு”, தை மாதத்தில் ‘பொங்கல் விழா’ மற்றும் இது போன்ற பல நிகழ்ச்சிகள் இங்கு நடைபெறும்.
  இது போன்ற பல காரணங்களாலேயே ஒபாமா அனைத்து மொழிகளிலும் சிங்கப்பூர் பிரதமரை வரவேற்றார். அந்த சடங்கு அவர் சிங்கப்பூர் பிரதமருக்கு வழங்கிய கவுரவம் மட்டுமல்ல, அது இங்கு வாழும் அனைத்து இன மக்களுக்கான கவுரவம். திரு. மோடி அவர்களோ தேர்தல் பிரச்சாரத்தில் மட்டும் அந்தந்த மாநிலத்திற்கு செல்லும்போது மட்டும் அவர்கள் மொழியில் சம்பிரதாயத்திற்கு மட்டும் வணக்கம் வைத்துவிட்டு ஹிந்தியில் பேச தொடங்கி விடுவார். அதற்காவது ஒரு translator வைத்து விடுவார். இப்போ மட்டும் அவர்கள் இந்தியில் விளம்பரம் போடுவதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று பி ஜே பி எதிர்பார்க்கிறது. ‘என்ன கொடுமை சரவணன் இது…??!!@@’

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   ரமேஷ்,

   உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

   சிங்கப்பூரில் தமிழின் நிலை குறித்து நல்ல பல தகவல்களை
   தந்திருக்கிறீர்கள். அறிய மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது…

   உங்கள் தகவல் இங்குள்ள மக்களில் பலருக்கும்
   புதிதாகவே இருக்கும்… தொடர்ந்து எழுதுங்கள்.

   நீங்கள் அனுப்புவதாக எழுதியிருக்கும் தகவல்களையும்
   அனுப்புங்கள். எனக்கு உதவியாக இருக்கும்.
   எனது kavirimainthan@gmail.com -க்கு அனுப்பலாம்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 6. NS RAMAN சொல்கிறார்:

  Anna and his two branches encased anti hindi Agitation for their own benefits. Before that even a small government high school teaching hindi to all public without any additional cost to students. This selfish dmk and admk stopped that benefit and later stage it was a private tuition and later part of education of wealthy people. By learning new language part of school studies no way going to affect Tamil. Thirttu thambi and thalaivi party contribution to Tamil is big zero. Net benefit to Tamil Nadu people is nothing but scams.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப என்.எஸ்.ராமன்,

   நீங்கள் எங்காவது ஒரு இடுகையில் மட்டும் வந்து,
   இடுகையின் மூலக் கருத்து எந்த வகையில்
   சரி அல்லது தவறு
   என்பதைப்பற்றி விவாதிக்காமல் –

   உங்கள் மனம் போனபடி எதையாவது சொல்லி விட்டு
   போய் விடுகிறீர்கள். அது குறித்து நான் எதாவது விளக்கம்
   கேட்டு எழுதினால் – பதிலே எழுதுவதில்லை.

   இந்த இடுகையில், மத்திய அரசு,
   ஹிந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை
   ஹிந்தியோடு – ஆங்கிலமும்,
   மத்திய அரசின் ஆட்சிமொழியாக
   தொடர வேண்டும் என்கிற – ஏற்றுக் கொள்ளப்பட்ட,
   சட்டபூர்வமான நிலைக்கு, விரோதமாக ஹிந்தியை
   முடிந்த விதங்களில் எல்லாம் கட்டாயமாக புகுத்தும்
   முயற்சியை மேற்கொண்டிருப்பதை கண்டித்து
   எழுதப்பட்டிருக்கிறது.

   இது குறித்து உங்கள் கருத்து, நிலை என்ன என்பதை
   கூறாமல் நீங்கள் வேறு எங்கோ பயணிக்கிறீர்கள்.

   மத்திய அரசு ஹிந்தியை மட்டும் ஆட்சிமொழியாக
   தொடர வேண்டும் என்கிற நோக்கில் போவது
   உங்களுக்கு ஏற்புடையதா…?

   மத்திய அரசின் இந்த போக்கை நீங்கள் ஆதரிக்கிறீர்களா…?

   ஹிந்தி பேசாத மக்களை இரண்டாம் தர குடிமக்களாக
   ஆக்கும் இந்த முயற்சியை நீங்கள் வரவேற்கிறீர்களா…?

   நம் தேசத்திற்கு, நம்மையே அந்நியராக்கும் அதிகாரத்தை
   இவர்களுக்கு யார் கொடுத்தது… ?

   பொதுவாகவே, நீங்கள் கருத்து சொல்லும்போது,
   இடுகையின் மையக்கருத்தை முன் வைத்து –
   விவாதித்தால் அதை நிச்சயம் வரவேற்பேன்…..

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • NS RAMAN சொல்கிறார்:

    Mr KM

    Basic issue
    because of anti hindi tamilnadu islotatd from the rest of the country.

    Why no other south states making such issues?

    First Tamil Nadu government should teach hindi, like before 1967 in government schools half of your problem solved. If people start learning basic hindi then no reason to complaint

    Think in the stand point of ordinary citizens if Jaya and Maran can learn hindi from school why not for others

    Central government promoting hindi is not a crime no one stopping TN government for developing Tamil language

    I expect positive and matured posts from you than hatter attitude which any out political leaders are doing

    • B.Venkata Subramanian சொல்கிறார்:

     Blind bjp / modi bakts will never come to sense.
     All chamchas.
     They never mind being a second rated citizen
     in their own country.

     K.M.sir

     please donot waste your time in trying to convince
     this sort of people.

 7. B.Venkata Subramanian சொல்கிறார்:

  mr.raman does not have any answer for this

  //மத்திய அரசு ஹிந்தியை மட்டும் ஆட்சிமொழியாக
  தொடர வேண்டும் என்கிற நோக்கில் போவது
  உங்களுக்கு ஏற்புடையதா…?

  மத்திய அரசின் இந்த போக்கை நீங்கள் ஆதரிக்கிறீர்களா…?

  ஹிந்தி பேசாத மக்களை இரண்டாம் தர குடிமக்களாக
  ஆக்கும் இந்த முயற்சியை நீங்கள் வரவேற்கிறீர்களா…?//

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.