காசு கொடுக்காமல் சினிமா….!!! கொடுத்து வைத்த தமிழர்கள்…

.

நண்பர்கள், தெரிந்தவர்கள், முடிந்தவர்கள்
ஆங்காங்கே எழுகின்ற
சந்தேகங்களை தீர்த்து வைக்க வேண்டுகிறேன்…

“குண்டு கட்டாக” என்று இன்று ( நேற்று…? )
முழுவதும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்களே…
அதற்கு என்ன அர்த்தம்….?
குண்டை கட்டி எடுத்து வருவதா…?
எது குண்டு ..? யார் குண்டு….?
எதற்காக, எந்த குண்டை,
யார் கட்டி எடுத்து வர வேண்டும்…?

———————

இதையா “குண்டு” கட்டாக என்று சொன்னார்கள்..?
பொருத்தமாகவே இல்லையே…!!!

gundu kattu

( திருவாளர் துரைமுருகனை
சொல்லி இருந்தாலாவது
ஒருவேளை பொருத்தமாக இருக்கும் – புரிந்திருக்கலாம்…!!!)

தங்களை யாராவது தூக்கிக் கொண்டு போக வேண்டும்
என்று தலைவர்கள் நினைத்தால் ஏகப்பட்ட
தொண்டர்கள் ரெடியாக காத்திருப்பார்களே…

அதை விட்டு விட்டு, பாவம் வெள்ளை சீருடை
அணிந்தவர்களை எல்லாம் ஏன்
தூக்கி வரச் செய்ய வேண்டும்…?

ஆமாம் – ஒருவரை தூக்கி வந்து வெளியே விட்டால்,
அது அவருக்கு பெருமையா அல்லது சிறுமையா…?

(suppose இறக்கி விடுவதற்கு பதிலாக,
தொம்மென்று போட்டு விட்டால் அப்புறம்
தமிழ்நாடு முழுவதும் நடக்கும் கலவரத்திற்கு
யார் பொறுப்பு – சபாநாயகரா…?
அல்லது தூக்கி வந்தவரா….? )

அவைத்தலைவருக்கு இன்று (நேற்று…? ) ஏகப்பட்ட
பரிசளிப்புகள்… தினமும் வசவு வார்த்தைகள் மட்டும் தான்
கிடைக்கும். இன்றோ – missiles – தண்ணீர் பாட்டில்கள்,
தொப்பி, சுருட்டப்பட்ட கைத்துண்டுகள் ….

எல்லாவற்றையும் ஏலத்தில் விடுவாரா…?
எக்சிபிஷன் வைப்பாரா …?
அல்லது பரிசுப்பொருள் என்று அரசிடம் கொடுத்து விடுவாரா..?

அல்லது நான் பிறர் சொத்துக்கு ஆசைப்படுபவன் இல்லை
என்று சொல்லி எதிர்க்கட்சித் தலைவரிடமே
கொடுத்து விடுவாரா…?

அவர் குடும்பத்தினர் சந்தோஷப்படலாம்… இன்று வரை,
அவர் மீது பட்ட திருஷ்டி முழுவதும் கழிந்திருக்கும் –
தமிழ்நாடு முழுவதும் ஏகப்பட்ட
திருவுருவ பொம்மை (வயக்காட்டு பொம்மை…?)
கொளுத்தப்பட்டதே…!
ரிக்கார்டு எதாவது ப்ரேக் ஆகி இருக்குமா…?

22-ந்தேதி காவல் துறை மீது மான்யக் கோரிக்கை –
விவாதத்தின்போது திமுகவினர் இருக்கக்கூடாது
என்று சதித்திட்டம் தீட்டி வெளியேற்றி விட்டார்கள்….

89 பேரில் இன்று 9 பேர் absent….மறந்து விட்டார்கள்…!
எனவே அந்த 9 பேரும் (தலைவர் உட்பட) 22ந்தேதி
சட்டமன்றத்திற்கு வந்து தங்களது ஜனநாயக கடமையை
அவசியம் ஆற்றுவார்களா அல்லது எஸ்கேப்பா… ???

காவிரியில் தண்ணீர் வரவில்லை…
மேகதாதுவில் அணை கட்டப்போகிறார்கள்…
எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டில் முழு அடைப்பு…

என்று …?
விவசாயத் தொழிலாளர்கள் சங்கங்களின்
சார்பில் 19-8-2016 அன்றும்,

காவிரி டெல்டா மாவட்ட அனைத்து விவசாயிகள்
சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவினர்
25-8-2016 அன்றும் –

அது ஏன் இரண்டு க்ரூப்…?
– எல்லாருக்கும் பதவி வேண்டாமா…?
( எனவே, சீக்கிரத்தில் இன்னும் இரண்டு க்ரூப்
கூட உருவாகலாம்…! )

இரண்டு க்ரூப்களுக்கும்
தனது ஆதரவும், ஆசிர்வாதமும்
உண்டென்று தமிழினக் காவலர் அறிவித்து விட்டார்…

ஏன் அப்படி….?
யார் கண்டது – நாளைக்கு யார், யாருடன் கூட்டு
சேருவார்களோ…? எதற்கும் பாதுகாப்பாக எல்லாருக்கும்
ஆதரவு சொல்லி விடலாமே….!

19-ந்தேதி ஒரு குழுவும், 25-ந்தேதி இன்னொரு குழுவும்
“பந்த்” நடத்தி விட்டால், கர்னாடகாவே கிடுகிடுத்துப்
போய் விடும். உடனே பயந்து போய் சித்தராமய்யா அவர்கள்
கே.ஆர்.எஸ். அணையை மொத்தமாக திறந்து விடுவார்….
வெள்ளம் பாய்ந்து பாய்ந்து வரும்…

அப்புறமென்ன…?
அமர்க்களமாக –
சம்பா விவசாயம் செய்து விடலாம்…!!!

நேற்றைய காட்சி நேற்றோடு முடிந்தது….
புதிய திருப்பங்களோடு,
புதிய காட்சிகளோடு,
அடுத்த அரங்கேற்றத்தை காணத்தயாராவோமா….

இதை கன்னட sub-title களோடு,
live-ஆக காட்ட வேண்டுமென்று
கர்னாடகா தொலைக்காட்சிகள்
துடித்துக் கொண்டிருக்கின்றனவாம்…!!!

.

Gallery | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

காசு கொடுக்காமல் சினிமா….!!! கொடுத்து வைத்த தமிழர்கள்… க்கு 3 பதில்கள்

  1. Subramanian.K. சொல்கிறார்:

    நாடகமே உலகம்….

  2. LVISS சொல்கிறார்:

    Kundu kattaga probably means lock stock and barrel —

  3. selvarajan சொல்கிறார்:

    அவைத்தலைவருக்கு — கிடைத்த அனைத்து பொருட்களையும் — சபை வளாகத்திற்குள்ளேயே — தரம் பிரித்து அடுக்கி — காட்சிக்கு வைத்தால் — தினமும் சபை உறுப்பினர்கள் — மற்றும் அங்கே செல்லும் அனைவரும் கண்டு களிக்கலாம் — வீசியவர்களுக்கும் – நாம் எதை — எதை வீசியிருக்கிறோம் — அடுத்து எதை வீசலாம் என்பதை தெரிந்துக் கொள்ளலாம் அல்லவா … ? இதையெல்லாம் தான் ” அவர்கள் ஜனநாயக கடமை ” என்று பேட்டி கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள் — கொடும்பாவி எரிப்பு — பந்த் — சும்மா பாவ்லாக்கள் தானே … ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.