சிங்கப்பூரில் தமிழுக்கு மரியாதை ….

singapore metro

 

இரண்டு நாட்களுக்கு முன்னர் ஹிந்தி திணிப்பை
பற்றி எழுதியபோது, சின்னஞ்சிறு நாடான
சிங்கப்பூரில் நான்கு ஆட்சிமொழிகளையும்
சம அந்தஸ்துடன் வைத்திருக்க முடியும் என்றால்,
இந்தியாவில் ஹிந்தி, ஆங்கிலம் என்று இரண்டே
இரண்டு மொழிகளை ஆட்சிமொழியாக தொடர்வதில்
என்ன சிரமம் என்று கேட்டிருந்தோம்.

சட்டபூர்வமாக ஹிந்தி, ஆங்கிலம் இரண்டும்
ஆட்சிமொழியாக இருந்தாலும், மத்திய அரசு,
ஆங்கிலத்தை புறக்கணித்து விட்டு, ஹிந்தியில் மட்டும்
ஏன் செயலாற்ற முயல்கிறது என்று கேட்டிருந்தோம்.

நமது இடுகைக்கு துணையாக சிங்கப்பூரிலிருந்து
நண்பர் ரமேஷ் எழுதி இருக்கும் பின்னூட்டத்திலிருந்து
சில பகுதிகள் கீழே –

——————————-

நான் கடந்த 10 வருட காலமாக சிங்கப்பூரில்
குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறேன். இங்குள்ள
தமிழ் மக்கள் எந்த அளவு தமிழை பேசுகிறார்களோ
இல்லையோ, ஆனால்

அரசாங்கத்தின் அனைத்து
செயல்பாடுகளிலும் தமிழுக்கு நிச்சயமாக
மரியாதை உண்டு.

அரசாங்கத்தின் ஒரு வாழ்த்து பேழை அல்லது
கட்-அவுட் களில் கூட இங்கே நான்கு அங்கீகரிக்கப்பட்ட
மொழியினை காண முடியும்.

எந்த புதிய அரசாங்கத்தின்
திட்டமாக இருந்தாலும் அதனை ஒவ்வொரு
குடிமக்களுக்கும் மற்றும் நிரந்தரவாசிகளுக்கும்
தனியான அஞ்சல் மூலம் (நான்கு மொழிகளும்
உள்ள கையேடு) தெரிவிப்பார்கள்.

என்னிடம் உள்ள அப்படிப்பட்ட அரசாங்கத்தின்
ஒரு தமிழ் பிரதியை உங்களுக்கு தனியாக
மின்-அஞ்சலில் அனுப்பி வைக்கிறேன். மேலும்,
இந்த நாட்டில் உள்ள DBS எனும் வங்கியின்
தானியங்கி பணம் வழங்கும் இயந்திரத்தில்
(ATM-ல்) தமிழை பயன்படுத்த முடியும்.

என் மகள்கள் இருவரும் இங்கு தமிழ் படிக்கின்றனர்.
அனைத்து பேருந்து, இரயில், விமான நிலையங்களிலும்
தமிழில் பெயர் பலகைகளும், குறியீடுகளும் இருக்கும்.
……..
……..
இது போன்ற பல காரணங்களாலேயே ஒபாமா
அனைத்து மொழிகளிலும் சிங்கப்பூர் பிரதமரை
வரவேற்றார். அந்த சடங்கு அவர் சிங்கப்பூர் பிரதமருக்கு
வழங்கிய கவுரவம் மட்டுமல்ல, அது இங்கு வாழும்
அனைத்து இன மக்களுக்கான கவுரவம்.

————————————————–

இதனைத் தொடர்ந்து நண்பர் ரமேஷ் அவர்களிடமிருந்து
கிடைக்கப்பெற்ற – சிங்கப்பூர் அரசின்,
நான்கு மொழிகளிலுமான ஒரு ஆவணத்தின்
தமிழ்ப்பகுதியை மட்டும் நண்பர்களின் பார்வைக்காக
கீழே பதிப்பித்திருக்கிறேன் –

20160819_205131

கொஞ்சம் சிங்கப்பூர் மெட்ரோ பக்கம்
தமிழில் போவோமா…?

metro stations board

Admiralty MRT sign

ang mo kiyo

china town

DSC01889

LPS-0611le_2x

nerukkadi nilai

Quadrilingual_danger_sign_-_Singapore_(gabbe)

இந்தியாவில் மொழிப் பிரச்சினையை வெகு
சுலபமாகத் தீர்க்க முடியும். மத்திய அரசின் எல்லா
அறிவிப்புகளிலும் ஆங்கிலம்+ஹிந்தி,

கூடவே அந்தந்த மாநிலங்களில்
அந்தந்த மாநில மொழி சேர்ந்து கொள்ள வேண்டும்.

அனைத்து அறிவிப்புகளும் 3 மொழிகளில்….
இதில் என்ன பிரச்சினை….
சிங்கப்பூர் சுலபமாக 4 மொழிகளை கையாள்கிறதே…!

மனம் இல்லை…. ஆளுபவர்களுக்கு ஹிந்தியைத்தவிர
வேறு எதையும் ஏற்றுக்கொள்கிற மனோபாவம் இல்லை…

தமிழக பாஜக நண்பர்கள் யாராவது, இதைப்பற்றி
எல்லாம் தங்கள் அகில “இந்தி”யத் தலைவர்களிடம்
விளக்கமாக எடுத்துச் சொன்னால் தேவலை…..
செய்வார்களா….? அக்கறையுடன் யாராவது
செயல்படுவார்களா….?

—————————————————————

பின்பு சேர்க்கப்பட்டது — (21/08/2016 – 9.40 pm )

நண்பர் ஷிவா ஆத்ரேயா அவர்களிடமிருந்து
கிடைத்த தகவலையொட்டி நான் தேடியதில்,
வலையிலிருந்தே, தமிழ் எழுத்துக்களும், எண்களும்
அடங்கிய மொரிஷியஸ் நாட்டின் ரூபாய் நோட்டுக்களின்
வடிவங்கள் கிடைத்தன.

அவற்றை கீழே பதிப்பிக்கிறேன்….
மிகவும் பெருமையாக இருக்கிறது…!!!
தமிழன் என்று சொல்லடா -தலை நிமிர்ந்து நில்லடா…!!!

500 rupees

Mauritius 25 Rupees 1954 Queen Elizabeth II

Mauritius 5 Rupees 1954

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to சிங்கப்பூரில் தமிழுக்கு மரியாதை ….

 1. Jagannathan Chellappa சொல்கிறார்:

  இதுக்கு தான் அகில இந்திய கட்சிகளுக்கு
  ஓட்டுப் போடக்கூடாது. தனி மெஜாரிட்டி
  கொடுத்தாலே இதுங்களுக்கு திமிர் ஏறிடும்..

 2. selvarajan சொல்கிறார்:

  தென்கிழக்காசியாவில் உள்ள ஒரு தீவு நாடு சிங்கப்பூர். சிங்கப்பூர் தீவிற்கு வடக்கில் மலேசியாவும், தெற்கில் இந்தோனீசிய ரியாவு (Riau) தீவுகளும் உள்ளன. ….
  சிங்கம் +ஊர் சிங்கப்பூர் அதாவது சிங்கத்தின் ஊர் என்ற தமிழ் பொருளை கொண்டதும் ஆகும் சிங்கப்பூர் என்ற பெயர் சிங்கப்பூரா என்ற மலாய் சொல்லிருந்து மருவியதாகவும் கூறப்படுகிறது. மலாய் சொற்களான சிங்கா (சிங்கம்) மற்றும் பூரா (ஊர்) சேர்ந்து சிங்கப்பூரா என்று அழைக்கப்படுகிறது….
  அங்கே — பிரிட்டனின் ஆதிக்கத்தில் இருந்தபோதும் — பின் மலேசியாவிடம் இருந்து பிரிந்து தனி நாடான போதும் அதனுடைய ” அபிரிதமான ” வளர்ச்சிக்கு பங்காற்றிய அனைவரின் தாய்மொழியையும் “அரசின் ஏற்புடைய மொழியாக ” கொண்டுள்ளதை பார்த்தாவது நாம் திருந்த வேண்டும் ….
  தற்போது வரலாறுகள் தேவையற்றவை என்பது புதிய தலைமுறையின் வாதமாக இருக்கிறது …ஆனால் நமது வரலாற்றை புரிந்துக் கொள்ளும் அறிவு அதனால் கிடைக்கிறது — என்பதை உணர்ந்து செயல்பட்டால் இவ்வாறான கட்டாய ” ஒரு மொழி திணிப்பு ” என்பதெல்லாம் ஏற்படாது … என்பது தான் உண்மை ….
  அடுத்து ஒரு கின்னஸ் சாதனை :– // உலகில் அதிக விலைக்கு ஏலம் போன மோடி கோட் சூட்… கின்னஸ் சாதனை //
  Read more at: http://tamil.oneindia.com/news/india/pm-modi-s-suit-sold-rs-4-31-crore-enters-guinness-records-260690.html ….. எப்பேற்பட்ட செய்தி — // “ஓட்டு” போட்ட மக்களுக்கு “கோட்டு” போட்டு காட்டிய மோடிஜி…!!! // தற்போது அதே கோட் -சூட்டினால் ” நோட்டையும் ” காட்டிவிட்டாரா … ?

  • Yogi சொல்கிறார்:

   Maindhan Sir

   Architect of modern Singapore in his biography mentions about Sri Lankan Tamil problem due to official language policy

   In 1956 sinhala only was implemented against the will of Tamils

   Rest is history

   Later in early sixties when sirimao bandarznaike offered v.r. s to senior Tamil engineers they retired and went to Singapore
   And contributed for a modern Singapore

   Leek wan has thanked tamils contribution at all levels and he was cautious and had the wisdom to use lessons learnt from Sri Lanka to make his country more united by making 4 national languages

   Now hindi wallahs have started this language matter not to unite the country but to get all govt jobs and divide the country as happened in Sri Lanka

   Yogi

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நண்பர் ஷிவா ஆத்ரேயா அவர்களிடமிருந்து
    வந்த தகவல் ஒன்றை இங்கு பதிப்பிக்கிறேன் –

    —————————
    shiva athreya
    3:03 PM (6 hours ago)

    to me
    உலகில் ஒரே ஒரு நாடு மட்டுமே தமிழ் எண்களை நாணயத்தாள்களில் பயன்படுத்துகிறது.
    —————————-
    தமிழ் எண்கள்
    1 – க, 2 – உ, 3 – ங, 4 – ச, 5 – ரு, 6 – சு, 7 – எ, 8 – அ, 9 – கூ, 10 – கo,
    11 – கக, 12 – கஉ, 13 – கங, 14 – கச, 15 – கரு, 16 – கசு, 17 – கஎ, 18 – கஅ, 19 – ககூ, 20 – உo
    21 – உக, 22 – உஉ, 23 – உங, 24 – உச, 25 – உரு, 26 – உசு, 27 – உஎ, 28 – உஅ, 29 – உகூ, 30 – ஙo
    31 – ஙக, 32 – ஙஉ, 33 – ஙங, 34 – ஙச, 35 – ஙரு, 36 – ஙசு, 37 – ஙஎ, 38 – ஙஅ, 39 – ஙகூ, 40 – சo,
    41 – சக, 42 – சஉ, 43 – சங, 44 – சச, 45 – சரு, 46 – சசு, 47 – சஎ, 48 – சஅ, 49 – சகூ, 50 – ருo
    51 – ருக, 52 – ருஉ, 53 – ருங, 54 – ருச, 55 – ருரு, 56 – ருஎ, 57 – ருஎ, 58 – ருஎ, 59 – ருகூ, 60 – சுo
    61 – சுக, 62 – சுஉ, 63 – சுங, 64 – சுச, 65 – சுரு, 66 – சுசு, 67 – சுஎ, 68 – சுஅ, 69 – சுகூ, 70 – எo
    71 – எக, 72 – எஉ, 73 – எங, 74 – ஏசு, 75 – எரு, 76 – எசு, 77 – எஎ, 78 – எஅ, 79 – எகூ, 80 – அo
    81 – அக, 82 – அஉ, 83 – அங, 84 – அச, 85 – அரு, 86 – அசு, 87 – அஎ, 88 – அஅ, 89 – அகூ, 90 – கூo
    91 – கூக, 92 – கூஉ, 93- கூங, 94 – கூச, 95 – கூரு, 96 – கூசு, 97 – கூஎ, 98 – கூஅ, 99 – கூகூ, 100 – கoo
    101 – கoக, 102- கoஉ, 103 – கoங, 104 – கoச, 105 – கoரு, 106 – கoசு, 107 – கoஎ, 108 – கoஅ, 109 – கoகூ, 110 – ககo
    111 – ககக, 112- ககஉ, 113 – ககங, 114 – ககச, 115 – ககரு, 116 – ககசு, 117 – ககஎ, 118 – ககஅ, 119 – கககூ, 120 – கஉo
    121 – கஉக, 122- கஉஉ, 123 – கஉங, 124 – கஉச, 125 – கஉரு, 126 -கஉசு, 127 – கஉஎ, 128 – கஉஅ, 129 – கஉகூ, 130 – கஙo
    131 – கஙக, 132- கஙஉ, 133 – கஙங, 134 – கஙச, 135 – கஙரு, 136 – கஙசு, 137 – கஙஎ, 138 – கஙஅ, 139 – கஙகூ, 140 – கசo
    141 – கசக, 142- கசஉ, 143 – கசங, 144 – கசச, 145 – கசரு, 146 – கசசு, 147 – கசஎ, 148 – கசஅ, 149 – கசகூ, 150 – கருo
    151 – கருக, 152- கருஉ, 153 – கருச, 154 – கருச, 155 – கருரு, 156 – கருஎ, 157 – கருஎ, 158 – கருஅ, 159 – கருகூ, 160 – கசுo
    161 – கசுக, 162- கசுஉ, 163 – கசுங, 164 – கசுச, 165 – கசுரு, 166 – கசுசு, 167 – கசுஎ, 168 – கசுஅ, 169 – கசுகூ, 170 – கஎo
    171 – கஎக, 172- கஎஉ, 173 – கஎங, 174 – கஏசு, 175 – கஎரு, 176 – கஎசு, 177 – கஎஎ, 178 – கஎஅ, 179 – கஎகூ, 180 – கஅo
    181 – கஅக, 182- கஅஉ, 183 – கஅங, 184 – கஅச, 185 – கஅரு, 186 – கஅசு, 187 – கஅஎ, 188 – கஅஅ, 189 – கஅகூ, 190 – ககூo
    191 – ககூக, 192- ககூஉ, 193 – ககூங, 194 – ககூச, 195 – ககூரு, 196 – ககூசு, 197 – ககூஎ, 198 – ககூஅ, 199 – ககூகூ, 200 – உoo
    மொரீசியசு நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் ( ரூ.10 தமிழில் ௧௦) இடம் பெற்றிருக்கிறது. எங்கோ தூரத்தில் ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள மொரிசியசு அரசு தமிழ் எண்களை பயன்படுத்துவது பெருமைக்குரியதே.
    மொரீசியசில் 30000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர்.

    ——————————————————————————-

    மொரீஷியஸ் தீவில் வசிக்கும் தமிழர்கள் யாராவது
    இந்த விமரிசனம் தளத்தை படிக்கிறீர்களா…?
    இந்த தகவலை உறுதி செய்ய முடியுமா…?

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     நண்பர்களே

     நண்பர் ஷிவா ஆத்ரேயா அவர்களிடமிருந்து
     கிடைத்த தகவலையொட்டி தேடியதில்,
     வலையிலிருந்தே, தமிழ் எழுத்துக்களும், எண்களும்
     அடங்கிய மொரிஷியஸ் நாட்டின் ரூபாய் நோட்டுக்களின்
     வடிவங்கள் கிடைத்தன.

     அவற்றை –

     சிங்கப்பூரில் தமிழுக்கு மரியாதை ….
     Posted on ஓகஸ்ட் 20, 2016 –

     இடுகையின் பிற்சேர்க்கையாக
     பதிப்பித்திருக்கிறேன்.
     அங்கே தமிழ் எழுத்துக்கள், எண்களோடு கூடிய
     ரூபாய் நோட்டுக்களின் நகல்களை காணலாம்.

     -வாழ்த்துக்களுடன்,
     காவிரிமைந்தன்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   ” கோட்-பூட் கி சர்க்கார் ” பற்றி மீண்டும் ஒரு முறை
   விவாதம் நடத்த வேண்டிய அவசியத்தை அவர்களாகவே
   உருவாக்கி இருக்கிறார்கள்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 3. ravi சொல்கிறார்:

  அப்படியே கொஞ்சம் தமிழ் நாட்டிற்கு வாருங்கள்..
  தமிழர்கள் தமிழுக்கு என்று உள்ள ஒரே பல்கலைக்கழகத்தை எப்படி வைத்து உள்ளார்கள் !!
  3 வருடம் ஆகி விட்டது .. பெரிய மாற்றம் இல்லை ..

  http://tinyurl.com/j3yg6uw

  இன்னொரு சாம்பிள் … தமிழ் அறிஞர்களின் நிலை..

  http://tinyurl.com/hx3qnhl

  தமிழ் நாட்டிலேயே தமிழுக்கு நிலை இவ்வளவுதான் .. லட்சக்கணக்கான ஆவணங்கள் , கல்வெட்டுகள், உரைகள் ,மொழிபெயர்ப்புகள், வரலாறு ,சிற்பம் ,மருத்துவம்,அரசு தமிழ் அகராதி , அயர் சொல், தொழில்நுட்ப அகராதி … பல வேலைகள் இன்னமும் தொடங்கப்படவே இல்லை/இல்லை அரைகுறை ..
  இந்த வேலை எல்லாம் செய்வது கடினம்.. ஆகவே நாங்கள் இதையெல்லாம் செய்ய மாட்டோம்..
  மீண்டும் உ.வே.சா பிறந்தால் தான் உண்டு..

  • Jagannathan Chellappa சொல்கிறார்:

   ravi ,

   2011, 2013 தி ஹிந்து கதையை எல்லாம்
   மேற்கோள் காட்டுவதை விட்டு விட்டு,
   இன்றைய நிலை என்ன என்று கண்டறிந்து
   கூறுங்கள் தோழர்.

 4. ravi சொல்கிறார்:

  தோழர் , அந்த சுட்டிகளை ஒழுங்காக பாருங்கள்.. அய்யா , திரு கா.மா. வெங்கட்ராமையா , அவர்களின் தாய்மொழி தெலுங்கு .. தன அனைத்து பிள்ளைகளையும் தமிழ் படிக்க வைத்தார் .. அவருக்கான பென்சன் பணத்தை கூட இழுத்தடித்து அலைய வைத்தவர்கள் நம் தமிழர்கள் …. இங்கே தமிழ் , தமிழ் என்று முழங்குபவர்களின் பிள்ளைகள் எவனும் தமிழ் படிப்பதில்லை …
  அடுத்து , தமிழ் பல்கலைக்கழகம்,, இன்றைய நிலை ஒன்றும் பெரும் மாற்றம் இல்லை.. கவலைக்கிடம் தான்..
  இன்னமும் 10 ஆண்டுகள் கழித்து பார்த்தாலும் ஒன்றும் மாற்றம் இருக்காது தோழர்.. கவலைபடாதீர்கள்

 5. Jagannathan Chellappa சொல்கிறார்:

  ravi,

  தோழர், எனக்கு வேறொரு கவலையும் இல்லை.
  ஆனால், யாரோ அவலை நினைத்துக் கொண்டு,
  உரலை இடிக்கிறார்களே அது குறித்து தான்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.