செத்துப் போன பிறகு…..?

.

.

ஆணோ, பெண்ணோ – உயிருடன் இருக்கும் வரை –
சொந்தம் கொண்டாடப்படுகின்றனர் –

கூடு விட்டு ஆவி பிரிந்த பின்
அந்த உடலின் நிலை ( status ) என்ன ஆகிறது ?

அவன், அவள் என்பது மாறி “அது” வென்று
அஃக்ரிணை ஆக்கப்படுவது முதல் சடங்கு….!

எவ்வளவு சீக்கிரம் “அதை” dispose ( அகற்றுவது )
செய்வார்கள் என்று அக்கம் பக்கத்தவரை
யோசிக்க வைப்பது அடுத்த நிலை…

ஒரு இறப்பினை அடுத்து நிகழும் சில சம்பவங்களை
குறித்த எனது அனுபவங்களை ஒரு இடுகையாக எழுத
வேண்டுமென்று நான் நீண்ட நாட்களாகவே
நினைத்திருந்தேன்…

இப்போது சூழ்நிலை அதை எழுதுவதற்கான அவசியத்தை
தானாகவே உருவாக்கி விட்டது…

நான் எழுத நினைத்தவற்றை எழுதும் முன்னர் –

அண்மையில், சுதந்திர தினத்தன்று தமிழக
முதலமைச்சரிடமிருந்து “தைரியமான பெண்”களுக்கான,
“கல்பனா சாவ்லா” விருது பெற்ற ஒரு
பெண்மணியைப் பற்றிய செய்தி கீழே –

——————————————————————

மனிதர்கள் அனைவரும் சமம் என்று, நமக்கு போதிக்கும்
இடங்களுள் ஒன்று சுடுகாடு. ஆனால், அங்கு பிணமாக
போனால் மட்டுமே, இந்த சமத்துவம். ஏனெனில்
சுடுகாடுகளில் வேலை செய்ய ஆண்கள் மட்டுமே துணிவர்.

பெண்களால், இதுபோன்ற கடுமையான வேலைகளை
செய்ய முடியாது என்று, மற்றவர்கள் புறந்தள்ளி விடுவது
ஒரு காரணம் என்றாலும், பெண்களே, எங்களால் இது
மாதிரியான வேலைகளை செய்ய இயலாது என்று,
ஒதுங்கிப் போவதும் காரணம். இந்த காரணங்களை
யெல்லாம் தூக்கி எறிந்து விட்டு, இன்று, தமிழக
முதல்வர் கையால் விருது வாங்கும் அளவிற்கு வந்துள்ளார்,
கிராமத்து தமிழச்சி ஜெயந்தி.

jeyanthi -2

ஆச்சாரமான குடும்பத்திலிருந்து, எப்படி தீட்டு என்று பழிக்கும்
மயானத்தில், பிணங்களை எரிக்கும் தொழிலுக்கு வந்தீர்கள்?

நாமக்கல் அருகிலுள்ள கூலிப்பட்டி சொந்த ஊர். முதுகலை
பொருளாதாரம் வரை படித்துள்ள நான், பிற்படுத்தப்பட்ட
சமூகத்தைச் சேர்ந்த வாசுதேவனை, ஜாதி மறுப்பு திருமணம்
செய்ததால், ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டேன்.
வீட்டின் பொருளாதார தேவைக்காக, தையல் வேலை,
பைனான்ஸ் கம்பெனி வேலை, தோட்ட வேலை என்று,
நிறைய வேலைகளில் இருந்து கஷ்டப்பட்ட காலம் அது.

ஆண் வாரிசு இல்லாத என் அப்பா, மரணமடைந்த போதே,
நான் தான் அனைத்து சடங்குகளையும் செய்து கொள்ளி
போட வேண்டும் என, விரும்பினேன். ஆனால்,
என் அக்காவின் கணவர் தான் கொள்ளி போட்டார்.
பெண்கள், அதை மற்றவர்கள் அனுமதியுடன் செய்வது
எளிதல்ல என்பதால், என்னால் முடியவில்லை.
என் உடல்நிலை பாதிப்பு, அப்பாவின் மரணம் என,
நான் மிக சோர்ந்து போயிருந்த நேரம். அப்போது தான்
நாமக்கலில் நவீன மின் மயான தகன மேடை திறந்திருந்தனர்.

அதில் தோட்ட வேலைக்கு சென்றேன்.
அந்த வேலை முடிந்த பின், நானும், என்னுடன் பணிபுரிந்த
மலர்கொடி என்ற பெண்ணும், ‘யுனைடெட் வெல்பர் டிரஸ்ட்’
தொண்டு நிறுவனத்திடம் அங்கேயே தகனம் செய்யும்
வேலை கேட்டோம். ஆரம்பத்தில் தயங்கினர். பல கட்ட
முயற்சிகளுக்கு பின், நம்பிக்கையில்லாமல் தான், இந்த
பணியை எங்களிடம் ஒப்படைத்தனர். இதுவரை,
2,500 பிணங்களை எரித்து இருக்கிறேன். நான்கு ஆண்டு
உழைப்புக்கு பின், இப்போது மேலாளராக பதவி உயர்வு
அளித்துள்ளனர்.

முதன் முதலில் பிணத்தை எரிக்கும் போது இருந்த மனநிலை?

பதற்றமாக இருந்தது; பயம் என்பதை தாண்டி, பிணத்தை
எரிப்பதற்கு உளவியல் பலம் வேண்டும். முதன் முதலில்
பிணத்தை எரிக்கும் போது, என் அப்பாவை நினைத்துக்
கொண்டேன். என் அப்பாவுக்கு நான் கொள்ளி போட்டிருக்க
வேண்டும்; முடியாமல் போனது. இருந்தாலும், வருகிற

பிணங்களுக்கு நான் செய்யும் சடங்குகளை, என் தந்தைக்கு
செய்ய முடியாமல் போன கடமையாக நினைத்து செய்தேன்.

எல்லாரையும் உறவினர்களாக நினைத்தேன். இப்போது,
மனநிலை இன்னும் மாற்றம் அடைந்திருக்கிறது.
மயான மையத்தை கோவிலாகவே நினைத்து வழிபடுகிறேன்.
வருகிற பிணங்கள் எல்லாம், சிவனாகவே எனக்கு தெரிகின்றன.

கடவுளை வழிபடும் உண்மையான பக்தை, தன் இஷ்ட
தெய்வத்துக்கு, என்ன மாதிரியான சடங்குகள் செய்வாளோ,
அதை எல்லாம் பிணங்களுக்கும் நான் செய்கிறேன்.

உறவினர்களிடமிருந்து என்ன மாதிரியான எதிர்வினைகள்?

ஜாதி மறுப்பு திருமணம் செய்த போது, என்னை ஒதுக்கி
வைத்த சொந்தங்கள், தகன வேலைக்கு சேர்ந்த போது,
ஒட்டுமொத்தமாக என்னை ஒதுக்கி வைத்தனர். எவரோடும்
பேச்சு இல்லை. நான் அதை பெரிதாகவும் கண்டு
கொள்ளவில்லை. ஆனால், மற்ற சமூகத்தினர் எனக்கு
பெரிதும் துணையாக இருக்கின்றனர். ஊடகங்கள்,
என் வேலையை பாராட்டியது, தொடர்ந்து பணிபுரிவதற்கு
ஊக்கமாக இருக்கிறது.

வேலை செய்யும் இடத்தில் வரும் பிரச்னைகள்?

ஒருவர் உங்களை நோக்கி கோபமாக அடிக்க வருகிறார்
என்றால், கை கூப்பி நில்லுங்கள், அடுத்த நொடியே பொட்டிப்
பாம்பாக அடங்கி விடுவார். அது கோழைத்தனம் அல்ல;
சிறந்த ஆயுதம். பின் பொறுமையாக எடுத்துச் சொல்லுங்கள்;
நிச்சயம் கேட்பர். ‘உன் துக்கத்தை என்னால் புரிந்து கொள்ள
முடிகிறது. இருந்தாலும், அதை வெளிப்படுத்தும் முறை
இதுவல்ல. இறந்தவர் மேல் உண்மையான அன்பு இருந்தால்,
இறுதி அஞ்சலியில் அவருக்கு செய்ய வேண்டிய கடமையை
முறையாக செய்’ என்பேன். இத்தொழிலில் பொறுமை
மட்டுமல்ல, உண்மையான அன்பும் முக்கியம்.

உங்களை உறுத்திக் கொண்டே இருக்கும், சம்பவம் ஏதும்?

எதிர்பாராத விதமாக, பிரசவத்தில் இறந்து போன, இளம்
பெண்ணையும், இறந்தே பிறந்த குழந்தையையும் சேர்த்தே
தான் எரிக்க வேண்டும் என, பெற்றோரும், கணவனும்
வேண்டினர். என்ன செய்தாலும், ஒன்றாக எரிப்பதற்கான
சாத்தியக்கூறுகள் இல்லை. எங்களுக்கோ இக்கட்டான நிலை.
என்ன செய்வதென்றே தெரியவில்லை. மனசெல்லாம்
ஒரே பதற்றம். இதற்கு இடையில் ஒரு எண்ணம்
தோன்றியது.

அம்மாவின் மார்பில் குழந்தையை குப்புற படுக்க வைத்து,
கட்டுக்கம்பியால் இருவரையும் கட்டி, குழந்தைக்கு
அதிகளவில் காஸ் சென்று சேர்வது போல் சேர்த்து,
குழந்தையை எரித்து, பின் தாயை தகனம் செய்தோம்.
இந்த சம்பவத்தை இப்போது நினைத்தாலும், என் கண்களில்
கண்ணீர் வந்துவிடும்
.
பிணத்தை எரிப்பவர்கள், பெரும்பாலும் குடிக்கு அடிமையாக
இருப்பார்களே?

அப்படி எல்லாம் இல்லை. நான் இதுவரை, 2,500 பிணங்களை
எரித்து விட்டேன். எனக்கு எதுவும் தோன்றவில்லை.
குடிப்பதற்கு ஒரு காரணம்; அவ்வளவு தான்.
நோய்வாய் பட்டு இறந்து போகிறவர்களின் பிணங்கள்
எரிவதற்கு நிறைய நேரம் தேவைப்படும். அவர்களின்
உடலில் இருந்து, கடும் துர்நாற்றம் வீசும் திரவம் வழியும்.
அதை எல்லாம் தாங்கிக் கொள்ளும் மனபக்குவம் வேண்டும்.

‘கல்பனா சாவ்லா’ விருது வாங்கிய பின்,
உறவினர்களின் மனநிலை?

முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது. முதல்வரிடம் பாராட்டு,
விருது வாங்கியது எல்லாம் சரி தான்; உன் வேலையை
அப்படியே விட்டு விடு. உன்னால், உனக்கு மட்டுமல்ல,
நம் உறவினர்களுக்கும் இனத்துக்குமே பெரிய கேவலம்
என்று, என் முன் பேசினர். நான் என்னுடைய வேலையை
தொடர்ந்து செய்கிறேன்.

jayanthi -kalpana chawla awardee

முதல்வர் ஜெயலலிதா, உங்களை தனியே பாராட்டினாராமே?

எனக்கு, ‘கல்பனா சாவ்லா’ விருது வழங்கும் போது,
‘நீங்கள் பிராமணப் பெண்ணா’ என்று ஆங்கிலத்தில் கேட்டார்.

நானும், ஆம் என்று ஆங்கிலத்திலேயே பதில் சொன்னேன்.
‘இந்த விருதை உங்களுக்கு கொடுப்பதில், உண்மையில்
நான் பெருமைப்படுகிறேன்’ என்று சொன்னார்.
உள்ளன்போடு நன்றி சொன்னேன்.

ஆண்களால் மட்டுமே செய்ய முடியும் என்று நினைத்த, பல
வேலைகளை, எங்களாலும் செய்ய முடியும் என்று, பெண்களும் கடுமையான உழைப்பைக் கொடுத்து, வெற்றியும் பெற்று வருகின்றனர். மகாகவி பாரதியின், ‘பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா…’ என்ற பாராட்டோடு, ஜெயந்தியை வாழ்த்தி விடை பெற்றோம்.

( http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=32735 )

———————————————

பின் குறிப்பு –
இடுகை நீண்டு விட்டதால், நான் சொல்ல நினைத்த
பல விஷயங்களை இந்த பகுதியில் சொல்ல முடியவில்லை.
அடுத்த பகுதியில் சொல்கிறேன்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to செத்துப் போன பிறகு…..?

 1. Appannaswamy சொல்கிறார்:

  பேரன்புமிக்க ஐயா,
  ஒருசில நீண்ட தகவல்களை இங்கு எழுத முடியாததால்,
  தங்களின் மின்னஞ்சல் முகவரியைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
  என்னுடைய மின்னஞ்சல்– appannaswamy @ gmail .com
  அன்புடன்.
  அப்பண்ணசுவாமி.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப அப்பண்ணசுவாமி,

   என் மின்னஞ்சல் முகவரி –
   (உங்கள் முகவரிக்கும் தனியே அனுப்பி இருக்கிறேன்.
   இது மற்ற நண்பர்களுக்கும் சேர்த்து…
   பின்னூட்டம் அல்லாமல், வேறு எதாவது தகவல் குறித்து
   நண்பர்கள் யாராவது எனக்கு எழுத விரும்பினால்,
   இந்த அஞ்சலுக்கு அனுப்பலாம்…)

   kavirimainthan@gmail.com

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 2. 'நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  சமூகத்தில் எந்த வேலையும் குறைவானதல்ல. டாக்டர் வேலையை எல்லோராலும் செய்யமுடியாது (நான் சொல்றது, வெறும் ஜுர டாக்டர் இல்லை). நிறையபேருக்கு, ரத்த சம்பந்தமான உறவினருக்கே, அவருடைய அந்திம காலத்திலோ, உடல் நிலை சரியில்லாதபோதோ எல்லா சிஷ்ருஷைகளும் (இதுக்கு தமிழ் என்ன) செய்ய இயலாது, அதுக்குள்ள மனப்பக்குவம் இராது.

  மின் மயானத்தில் வேலை செய்யும் மனப்பக்குவம் இந்தப் பெண்மணிக்கு இருக்கிறது. “இனத்துக்குக் கேவலம்’ என்பது, இந்த மாதிரிப் பேசுபவர்கள்/நினைப்பவர்களால்தான் மனித இனத்துக்கு ஏற்படுகிறது. பாரதி மணி ஐயா (தில்லி) அவர்கள் தில்லியில் அவருடைய சேவையை எழுதியுள்ளார். எஸ்.வி.சேகர் அவர்களும் அநாதைப் பிணங்களை எரிப்பதில் ஆர்வத்துடன் சேவை செய்துவருகிறார். நல்லது செய்ய முடியவில்லை என்றாலும், இனம், ஜாதி, மதம் என்ற பெயரால், நல்லது செய்பவர்களை discourage செய்யாமல் இருந்தாலே போதும்.

  சென்னையில் வெள்ளம் சூழ்ந்தபோது, யார் சமையல் பண்ணித் தருகிறார்கள் என்றா பாதிக்கப்பட்டவர்கள் பார்த்தனர்?

  நீங்கள் என்ன எழுத நினைக்கிறீர்கள் என்பது ஓரளவு புரிகிறார்ப்போல் இருக்கிறது. ‘வீடுவரை உறவு.. வீதி வரை மனைவி….’. இன்னொன்று, ஔவையின் ‘கூடுவிட்டு ஆவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார் பாவிகாள் அந்தப் பணம்’ இந்த இரண்டு ரெஃபரன்ஸ் வரும் என்று தோன்றுகிறது.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நெல்லைத்தமிழன்,

   நீங்கள் கூறுவது போல் “மனப் பக்குவம்” தான்
   இதில் மிக முக்கியமான விஷயம்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 3. selvarajan சொல்கிறார்:

  // கிராமத்து தமிழச்சி ஜெயந்தி.// போல இன்னொரு பெண்மணியும் : — கோவை சொக்கம்புதூரை சேர்ந்த ” வைரமணி ” என்கிற பெண்மணியும் தன் அப்பா பார்த்து வந்த வெட்டியான் வேலையை அவரது இறப்புக்கு பின் செய்து வருகிறார் — மூன்று குழந்தைகளுக்கு தாய் அவர் … கடந்த 15 – ஆண்டுகளாக இதை செய்யும் அவர் கூறிய செய்தி :
  ஒரு பிணத்தை அடக்கம் பண்ண பேரம் பேசுற ஆளுங்களை நினைத்தாலும் ,…. பிறந்த உடலோடு இருக்கும் பிணத்தின் எதிரவே,, பிணத்து மேல இருக்கும் கால் பவுன் நகைக்காக அடிச்சுக்கும் உறவினர்களை பார்த்தாலும் … சிரிப்பதா — இல்லைஅழுவதா என்று நினைப்பேன் . ராத்திரி நேரங்களில் கூட எரிகிற பிணத்தோடு தனியா இருப்பேன் என்றும் கூறும் இவர்
  அனாதை பிணங்கள் வந்தால் பணத்தை எதிர்பார்க்காம உறவினர்கள் போல சடங்கு சம்பிராதயம் செஞ்சு அடக்கம் செய்வேன் . நான் பிணத்தோடு பிணமாய் இருந்தாலும் என் பிள்ளைகளை நல்லா படிக்க வச்சு நல்ல வேலைக்கு அனுப்பி வைக்கணும் என்கிற — வைராக்கியம் இந்த வைரமணிக்கு — பெண்கள் எந்த பாகுபாடும் பார்க்காமல் அனைத்தையும் செய்யும் — மனோதிடம் மிக்கவர்கள் தான் …. வைரமணி பற்றி http://www.rajfilm.in/video/cwzdaQr8laU
  வைரமணி கூறிய ” கால் பவுன் ” நகைக்காக அடித்துக் கொள்ளும் உறவினர்கள் போன்றோரும் — மற்றும் ஆடாத ஆட்டம் போட்டு — நிரந்தரம் என்று நினைத்து ” அனைத்துக்கும் ஆசைப்பட்டு ” அலையும் மனிதர்களும் — அடிக்கடி கேட்க வேண்டிய பாடல் : ” சமரசம் உலாவும் இடமே .. நம் வாழ்வில் காணா சாமரம் உலாவும் இடமே ” மற்றும் ” உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு – இங்கேகொண்டுவந்து போட்டவர்கள் நாலு பேரு ” என்கிற இரண்டு பாடல்களை கேட்டாவது வாழ்வின் தத்துவத்தை உணர வேண்டும் — கிராமத்து தமிழச்சிகள் — ஜெயந்தி.— வைரமணி போன்றோரை வாழ்த்துவோம் … !!!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   செல்வராஜன்,

   கோவை சொக்கம்புதூர் ” வைரமணி ” என்கிற பெண்மணியையும்
   இங்கு அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 4. R.Gopalakrishnan சொல்கிறார்:

  I requested you to write an article about this matter during 16th or 17th of this month.. But for
  some reasons this detailed article has come now. Well done Mr.KM. Keep it up.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   கோபாலகிருஷ்ணன்,

   எல்லாவற்றிற்கும் உரிய தருணம் ( நேரம்…!!! ) என்று ஒன்று
   இருக்கிறதல்லவா…!
   நான் இத்துடன் இன்னும் சில செய்திகளையும் சேர்த்து சொல்ல
   விரும்பினேன்….அதுவும் ஒரு காரணம்.

   தங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 5. Srini சொல்கிறார்:

  KM sir,

  related to this topic…. one nice song for this topic


  srini

 6. Srini சொல்கிறார்:

  it so happened that between 5.00PM to 8.00PM I received two death news who are so close to my family… and when I opened KM site.. this is the topic…. hmmm

  someone who likes to read a novel related to this topic….
  suggesting “Sorgam Naduvile” by ezthu chithar Balakumaran
  beautifully narrates about human life, after-death, fate, destiny and sins.

  for someone who believes in vedas… kata Upanishad – Maranithirku pinnal – is a tamil book released by Ramakrishna math… talks the pertinent question on what happens after death

  research related : http://www.express.co.uk/news/science/670781/There-IS-life-after-DEATH-Scientists-reveal-shock-findings-from-groundbreaking-study

  Steve jobs quote on death
  “Remembering that I’ll be dead soon is the most important tool I’ve ever encountered to help me make the big choices in life.

  Almost everything–all external expectations, all pride, all fear of embarrassment or failure–these things just fall away in the face of death, leaving only what is truly important.

  Remembering that you are going to die is the best way I know to avoid the trap of thinking you have something to lose. You are already naked. There is no reason not to follow your heart.

  No one wants to die. Even people who want to go to heaven don’t want to die to get there. And yet, death is the destination we all share. No one has ever escaped it, and that is how it should be, because death is very likely the single best invention of life. It’s life’s change agent. It clears out the old to make way for the new.”

  ― Steve Jobs

  What did steve jobs gave as a gift for those who attended his death ceremony

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   ஸ்ரீநி,

   பொருத்தமான நினைவுகளை பின்னூட்டங்களில்
   கொண்டு வந்து தந்திருக்கிறீர்கள். நன்றி.
   ( பாலகுமாரனின் “சொர்கம் நடுவிலே”
   படித்திருக்கிறேன்…)

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.