திருமதி நளினி சிதம்பரத்தின் மீது என்ன புகார்…?

.

.

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் திருமதி நளினி
சிதம்பரத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டிருப்பதாக நேற்று
செய்தி வெளியாகி இருக்கிறது.

தமிழ் ஹிந்துவில் வெளிவந்திருக்கும்
செய்தி முதலில் –

—————————

thirumathi nalini p.c.


சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் முன்னாள் மத்திய
அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்துக்கு
அமலாக்கப் பிரிவு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

செப்டம்பர் முதல் வாரத்தில் கொல்கத்தாவில் விசாரணை
குழு முன்னர் ஆஜராகுமாறு நளினி சிதம்பரத்துக்கு
உத்தரவிடப்பட்டுள்ளது.

புதிய ஆதாரங்கள் சில வெளியாகியுள்ளதையடுத்து நளினி
சிதம்பரத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த
வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

கொல்கத்தாவை மையமாக கொண்டு சுதீப்தா சென்
என்பவர் நடத்திவரும் சாரதா சிட் பண்ட் நிறுவனம் பொது
மக்களிடம் இருந்து ரூ.30 ஆயிரம் கோடி வரை சுருட்டியதாக
குற்றம் சாட்டப்பட்டது. முதலீட்டாளர்கள் அளித்த புகாரின்
பேரில் சுதீப்தா சென் கைது செய்யப்பட்டார்.

இவ்வழக்கில் சிபிஐ நீதிமன்றத்தில் 6-வது துணை குற்ற
பத்திரிக்கையில் நளினி சிதம்பரத்தின் பெயர் சேர்க்கப்பட்டது.

ஆனால், அவர் குற்றவாளியாகவோ, சாட்சியாகவோ
சேர்க்கப்படவில்லை. அதே சமயம், பணப் பரிவர்த்தனையில்
நளினிக்கு தொடர்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக நளினி ஏற்கெனவே அமலாக்கப்பிரிவு,
சிபிஐ அதிகாரிகள் முன் விசாரணைக்கு ஆஜராகி இருக்கிறார்.
இந்நிலையில், அவருக்கு அமலாக்கப் பிரிவு மீண்டும் சம்மன்
அனுப்பியுள்ளது.

——————————————

இந்த சாரதா சிட் பண்ட் விவகாரத்தில்
திருமதி நளினி சிதம்பரம் அவர்கள் தொடர்பு குறித்து
சில மாதங்கள் முன்பாக, ஜனவரியிலேயே வட இந்திய
பத்திரிகைகளில் ஒரு செய்தி வெளியானது;

(அப்போது ஏனோ தமிழ்ப் பத்திரிகைகளில்
இந்த செய்தி வெளியாகவில்லை…..!!! )

அதாவது –

கொல்கத்தாவில் “சாரதா ஊழல்” வழக்கு தொடர்பாக
சிபிஐ தாக்கல் செய்துள்ள சார்ஜ் ஷீட்டில் திருமதி
நளினி சிதம்பரம் அவர்களின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.

சிபிஐ கையாண்டு வரும் “சாரதா ஊழல்” வழக்கில்
குற்றம்சாட்டப்பட்டிருக்கும் மனோரஞ்சனா சிங்
என்பவரின் வழக்கறிஞராக பணியாற்றி இருந்தார்
திருமதி நளினி சிதம்பரம்.

ஆனால், அவருக்கான ஊதியம் சாரதா நிறுவனத்தின்
கணக்கிலிருந்து கொடுக்கப்பட்டிருப்பதால், திருமதி
நளினி சிதம்பரம் அவர்களின் பெயரும் வழக்கில்
சேர்க்கப்பட்டிருக்கிறது.

இந்த வழக்கைப் பற்றி மேற்கொண்டு எதுவும் தெரிவிக்க
விசாரணை ஏஜென்சிக்கள் விரும்பவில்லை.
இந்த வழக்கை CBI, ED and SFIO ஆகிய மூன்று மத்திய
ஏஜென்சிக்களும் புலனாய்வு, விசாரணை நடத்தி
வருகின்றன.

சாரதா நிறுவனத்திற்கும், மனோரஞ்சனா சிங்
அவர்களுக்கும் இடையே போட்டுக்கொள்ளப்பட்ட
ஒப்பந்தத்தை திருமதி நளினி சிதம்பரம் அவர்களின்
நிறுவனமான சென்னையை சேர்ந்த NC Associates தான்
தயாரித்துக் கொடுத்துள்ளது.

இது மனோரஞ்சனா சிங் அவர்களுக்கு சாதகமாக
அமையும்படி தயாரிக்கப்பட்டிருக்கிறதாம். ஆனால்
இதற்கான ஆலோசனை கட்டணம் சாரதா
நிறுவனத்திலிருந்து தான் கொடுக்கப்பட்டிருக்கிறதாம்.

திருமதி நளினி சிதம்பரம் அவர்களுக்கு எவ்வளவு தொகை
கொடுக்கப்பட்டது என்பது குறித்து சரியான தகவல் இன்னும்
வெளியிடப்படவில்லையாம்.

விசாரணை ஏஜென்சிக்கள் வசம் கிடைத்திருக்கும்
வங்கி பரிமாற்றங்கள் சம்பந்தப்பட்ட விவரங்களின்படி –
அவருக்கு ரூபாய் 65.85 லட்சம் ( அறுபத்தி ஐந்து லட்சத்து
எண்பத்தையாயிரம் ) கொடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறதாம்.

ஆனால், சாரதா நிறுவனம் வருமான வரி இலாகாவிற்கு
அளித்துள்ள TDS ரிப்போர்ட்டின்படி திருமதி நளினி
சிதம்பரம் அவர்களுக்கு March-June 2011 -ஆன
காலகட்டத்தில் 1.5 கோடி (ஒன்றரை கோடி) ரூபாய்
கொடுக்கப்பட்டிருப்பதாகவும், அதில் 15 லட்சம் ரூபாய்
வருமான வரியாக பிடித்தம் செய்யப்பட்டிருப்பதாகவும்
கூறப்பட்டிருக்கிறதாம்….!!!.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to திருமதி நளினி சிதம்பரத்தின் மீது என்ன புகார்…?

 1. gopalasamy சொல்கிறார்:

  Father, Mother, son. Nalladhoru kudumbam.

 2. B.Venkata Subramanian சொல்கிறார்:

  பரம்பரை சொத்தே பல கோடி பெறும்.

  வக்கீலாக இருந்து ,
  அரசியல்வாதியாக இருந்து ,
  பிள்ளை பெயரில் பல கம்பெனிகள் ஆரம்பித்து,
  சம்பாதித்தது போதாவோ ?
  இறுதியில் கூடவே வரப்போவதென்ன ?

 3. selvarajan சொல்கிறார்:

  சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இதே வலைத்தளத்தில் // கௌஹாத்தி வழக்கிற்கு சென்னை லாயர் பெண்மணியை ஆலோசனைக்கு அணுகியதன் பின்னணி என்ன ..? – கொல்கத்தாக்காரர் கேட்கும் கேள்வி ….. !!Posted on ஏப்ரல் 29, 2013 by vimarisanam – kavirimainthan // என்று ஒரு இடுகையில் தான் திருமதி நளினி சிதம்பரம் பற்றி ” பிள்ளையார் சுழி ” போட்டு ஆரம்பித்து வைத்தார் திரு .கா.மை … அவர்கள் —- அடுத்து … ” தொழிலாளர் தினமான ” மே 1 — 2013 அன்று அடுத்த பதிவு // திருமதி நளினி சிதம்பரம் குறித்த சர்ச்சை – ஜூனியர் விகடன் சொல்லுவதென்ன ……….. ?Posted on மே 1, 2013 by vimarisanam – kavirimainthan //
  அதன் பிறகு சில விசாரணைகள் என்று கிணற்றில் போட்ட கல் போல இருந்து தற்போது அவருக்கு அமலாக்கப் பிரிவு மீண்டும் சம்மன்அனுப்பியுள்ளது…. அவ்வளவு தான் இன்னும் எத்தனையோ ஆண்டுகள் இந்த ” கலியுகத்தில் ” வந்து போய்க்கொண்டே இருக்கும் — ஆனால் 2 ஜி மஹா ஊழல் — கேடி பிரதர்ஸ் வழக்கு —சொத்துக்குவிப்பு — நிலக்கரி ஊழல் போன்ற வழக்குகளின் வரிசையில் இதுவும்சேர்ந்து கும்மியடிக்கும் என்பது தான் .. நிதர்சனம் … அப்படி .. தானே …. ?

 4. selvarajan சொல்கிறார்:

  // மனசைச் சுடுகிறது இந்தப் படம்..! //
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/siraj-kassim-s-cartoon-on-odisha-man-who-lifted-his-wife-s-b-261169.html … இந்த செய்தி நேற்று முதல் வைரலாகும் போட்டோவாகவும் — மீடியாக்களிலும் வந்தவண்ணம் இருப்பது — நாம் எவ்வளவு பொறுப்பானவர்கள் ஆட்சியில் குப்பைக் கொட்டிக் கொண்டிருக்கிறோம் என்று தெரிகிறது — நளினி சிதம்பரம் போன்றோரும் — 10 கிலோமீட்டர் மனைவியின் சடலத்தை தோளில் சுமந்து கொண்டும் — கதறும் மகளோடும் — ஆம்புலன்ஸ் தர மறுத்ததாலும் — நடந்தே சென்ற ஒரு ” மனிதரும் ” வாழும் நம்நாடு — ஒரு சுதந்திர நாடு … தானே … ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.